Thursday, September 10, 2015

குடிப்பழக்கத்தை நிறுத்திட இயற்கை உணவு


பள்ளி,கல்லூரி காலங்களில் விளையாட்டுக்கு ஆரம்பிக்கும் குடிப்பழக்கம், சிறு பிரச்சினை என்றாலும் அதை எதிர்கொள்ள முடியாமல் தண்ணியடிப்பதற்குப் போக வைக்கிறது;
ஆல்கஹாலிக் கழிவுகள் அந்த அளவுக்கு ரத்தத்தில் கலந்து கொண்டு, குடிப்பவர்களை மொடாக் குடியர்களாக மாற்றிவிடுகிறது;

இனி இரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலிக் பவரை படிப்படியாக காலி செய்யும் பட்சத்தில் , உடல் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்;அதற்கு நாம் செய்ய வேண்டியது:-

தினசரி காலை வெறும் வயிற்றில் 10 வில்வ இலை,ஒரு கைப்பிடி கறிவேப்பிலை,ஒரு கைப்பிடி மல்லித்தழை,கூடவே சிகப்பரிசி கழுவிய தண்ணீர் ஒரு லிட்டர் இவைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்;

இதை குடிப்பவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கவும்;மேலும் ஆலோசனைகள் பெற:

ஆல்கஹாலிக் அனானிமஸ் :98421 72085,77081 61456

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டிய இயற்கை உணவுகள்


கர்ப்பிணிப்பெண்கள் மாத்திரைகளுக்குப் பதிலாக பின்வரும் இயற்கை உணவு வகைகளைச் சாப்பிட்டால் அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் ஆசிட் கிடைக்கும்;

இந்த இயற்கை உணவுகளில் ஃபோலிக் ஆசிட் அதிகமாக இருப்பதால்,தாயும் சேயும் பூரண நலத்துடன் வாழ்வார்கள்;

முளைகட்டிய உளுந்தம் பயிறு,கடலைப்பருப்பு,பொட்டுக்கடலை,தண்டுக்கீரை,
கறிவேப்பிலை,புதினா,பசலைக்கீரை,எள் துவையல்,வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர்,பிஞ்சு வாழைக்காய் கூட்டு;


நன்றி: இயற்கை நலவாழ்வு இயக்கங்களின் அனுபவக்குறிப்புக்களில் இருந்து. . .

மாதவிடாய் வலியை போக்கும் இயற்கை உணவு


மாதவிடாய் வலி தொடர்ந்து வராம இருக்கணுமா?


சோற்றுக் கற்றாழை மடலுக்குள் இருந்து ஜெல்லை எடுத்து,நல்லா பிசுபிசுப்பு போக கழுவிவிட்டு,அதில் சீரகம்,பூண்டு,பனை வெல்லம் சேர்த்து லேகியமாகக் கிளறிக்கணும்;இந்த லேகியத்தை தினமும் ஒரு ஸ்பூன் ராத்திரி சாப்பிட்டு வந்தால்,அடுத்த பீரியட்ஸ் நேரத்தில் வலி வராது;

வலி எடுக்கும் நேரத்தில் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டு நிவாரணம் பெறலாம்;இந்தக் காலத்தில் புளி,ஊறுகாய்,அசைவம் கண்டிப்பாகத் தவிர்க்கவும்;



நன்றி:பாட்டி வைத்தியக்குறிப்பும்,இயற்கை உணவு பயிற்சியாளர்களும்;

மூட்டுவலியைச் சீக்கிரம் தரும் வெள்ளைச் சீனி



பொதுவாக எந்தப் பொருளையும் சூடுபடுத்தினாலோ,பதப்படுத்தினாலோ,பிளீச்சிங் செய்தாலோ நமது உடலின் சத்துக்கள் அழிந்துவிடுகின்றன;

சீனி அந்த வேலையைத் தான் செய்கிறது;கால்சியம் சத்தை நமது உடலில் இருந்து உறிஞ்சிவிடுகிறது;எலும்பு மஜ்ஜையைப் பாழாக்கிவிடுகிறது;மூட்டுவலியை சீக்கிரம் கொண்டு வந்துவிடுகிறது;வெள்ளைக்காரன் இதை மட்டுமா நம்மிடையே பரப்புனான்?

இயற்கை விளை பொருட்களால் செய்யப்படும் நாப்கின்


அதிக அதிகமான பூச்சிக்கொல்லி இரசாயன விஷங்களை உள்வாங்கி வளர்க்கப்படுவது பருத்திப் பயிராகும்;(பரான் என்ற ரசாயனமும்,பருத்தியை வெண்மையாக்க குளோரினும் பயன்படுத்தப்படுகிறது;இதன் மூலமாக டையாக்சின் உண்டாகிறது)
இந்தப் பருத்தியை எடுத்து நாப்கின் தயாரிக்கிறார்கள்;நாப்கினின் வெளிப்புறம் உலர்வாக இருப்பதற்கு ரேயான் பயன்படுத்தப்படுகிறது;இது போதாது என்று நறுமணத்திற்காக பல்வேறு செயற்கை இரசாயனங்கள் டையாக்சினால் உடலின் வெப்பம் அதிகமாக ஏற்படுகிறது;மேலும் நாப்கினை அதிகநேரம் உபயோகப்படுத்துவதற்காக அதில் ஜெல் பொதிக்கப்படுகிறது;இதனால் கர்ப்பப் பையில் நீர்த்தன்மை உறிஞ்சப்பட்டு வறட்சித்தன்மை ஏற்படுத்துகிறது;

6 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்;இது வேலைக்குப் போகும் பெண்களுக்குச் சாத்தியமா?

அதிகமான நேரம் நாப்கினை உபயோகப்படுத்துவதால், பாக்டீரியா தொற்று,அரிப்பு,எரிச்சல்,கர்ப்பப்பையில் யூரின் ட்ராக் இன்ஃபெக்ஷன்,பெல்விக் இன் ப்ளமென்ட்டரி நோய்,ஒவரியில் கட்டி என கேன்சர் வரை கொண்டு வந்துவிடுகிறது;

பெண்கள் பயன்படுத்தும் இரசாயனத் தன்மை கலந்த இந்த நாப்கினால் மேலும் ஹார்மோன் களில் குறைபாடு,குழந்தையின்மை,கருச்சிதைவு,தைராய்டு குறைபாடு,மன அழுத்தம்,மார்பகப்புற்று நோய் போன்ற நோய்களும் வர வாய்ப்புகள் அதிகம்;

இது போன்ற பக்கவிளைவுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்துக் கொண்டிருக்கும் ஒரு டாக்டரேட் ஆராய்ச்சி மாணவி பாரம்பரிய மூலிகைச்சாறுகளைக் கொண்டு ஆர்கானிக் பருத்தியுடன் கூடிய துணியில்,மருத்துவ ரீதியான ஆயத்த ஆடைகளின் தயாரிப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்;

வேப்பம் பூ,ஆர்கானிக் கஸ்தூரி மஞ்சள் தூள்,அரச இலைக்குறுத்து, பச்சைத் தேயிலை;ஆவாரம்பூவும் இலையும்,காய்ந்த எலுமிச்சைத் தோல்,கற்றாழைச் சாறு இவைகளைக் கொண்டு பக்கவிளைவுகளற்ற நாப்கின் பேடு தயாரிக்ககமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது;

இயற்கை இயல் ஆசான் நம்மாழ்வாரின் சுதேசி தற்சார்பு சார்ந்த பாரம்பரியம் காக்கும் இவ்வாறான மருத்துவக் குறுந்தொழில்கள் நாடெங்கும் பரவட்டும்;

மேலும் விபரமறிய:sumathisri@gmail.com      sivakasimarang7@gmail.com


Wednesday, September 9, 2015

மூலிகைகளின் பெற்றோர்கள்


மூலிகைகளின் அப்பாவாக இருப்பது வில்வமும்,வில்வரகங்களும்!

மூலிகைகளின் அம்மாவாக இருப்பது
வேம்பும்,வேம்பு ரகங்களும்!!!

மனிதகுலத்தை உய்விக்க வந்திருப்பது சிவ அம்சமான வில்வமும்;சக்தி அம்சமான வேம்பும் என்பது இந்தச் செய்தியின் சூட்சும சாரம்!!!


ஓம் வராகி சிவசக்தி ஓம்

ஏன் சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக் கூடாது?



ஏன்னா,சாப்பிடும் நேரம் வந்ததும்,நமது வயிற்றில் இயற்கையான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் சுரக்கும்;நாம் சாப்பிடும் உணவை இதுதான் கூழாக்கும்;

சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்போ அல்லது சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகு வரும் 30 நிமிடம் வரையோ தண்ணீர் குடித்தால்(தண்ணீர் மட்டும் அல்ல;கோக் முதலான எந்த ஒரு திரவத்தை குடித்தாலும்) இந்த ஹைட்ரோகுளோரிக் ஆசிட் நீர்த்துப்போய்விடும்;இதனால் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக அதிகநேரம் ஆகும்;

இதையே தொடர்ந்து (வருடக் கணக்கில்) செய்து வந்தால்,ஜீரண மண்டலம் தனது வேலையைச் செய்யமுடியாமல் ஆயுள் குறைந்துவிடும்;(கோக் டின்னர் என்பது மாநகரங்களில் பிரபலமாக இருக்கிறது; இதுதான் பெருமையாம்;கோக் குடித்துக் கொண்டே சாப்பிடுவதுதான் நம்மை நாகரீகமுள்ளவர்களாகக் காட்டுமாம்;

நம்மை நிரந்தர நோயாளியாக்கிட மேல்நாட்டினர் போட்டிருக்கும் திட்டம் என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை)
ஒவ்வொரு முறையும் சாப்பாட்டை வாய்க்குள் வைத்ததும்,மென்று சாப்பிட வேண்டும்;அப்படி மென்றால் தான் உமிழ் நீர் அதனுடன் கலக்கும்;அப்படி கலந்தால் தான் வாயிலேயே உணவு ஜீரணமாகத் தயாராகிவிடும்;

இதனால்தான் சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;

சாப்பிடும் போது செல்போனில் பேசக் கூடாது;

சாப்பிடும் போது வேக வேகமாக சோற்றை விழுங்கக் கூடாது;

பசிக்காமல் சாப்பிடக் கூடாது;என்று போதிப்பதன் ஆரோக்கிய ரகசியம் இதுதான்;

ஆனால்,நடைமுறையில் வாயில் அரைக்க வேண்டிய உணவை விழுங்கிவிடுவதால்,வயிறு அரைக்கும் என்று நம்பிவிடுகிறோம்;இதனால் தைராய்டு உருவாகி,அதுவே டான்சில் உருவாக இதுதான் காரணம்;

டான்சில் வந்தால்,அதை நமது நாட்டு மூலிகைகள் மூலமாக குணப்படுத்திவிடலாம்;முற்றிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்துவது முடியாத காரியம்;

பாட்டி வைத்தியத்தில் இருந்து,இயற்கை உணவுப் பழக்கம் வரை இருக்கும் அனைத்து வைத்திய முறைகளிலும் உணவு எப்படி நமது உடலுக்குள் பயணிக்கிறது என்பதை இப்படித்தான் சொல்கின்றன;அரசியல் மாமேதை சாணக்கியரும் இதையே தனது அர்த்தசாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்;திருமூலர்,அகத்தியர் முதலான சித்தர் பெருமக்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்;திருவள்ளுவரும் திருக்குறளில் இதைப் பாடியுள்ளார்;

நாம் நமது குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பதைப் பெருமையாக நினைப்போம்;நமது வம்சாவழியை நமது பாரம்பரியத்தில் இருந்தே பிரித்துவிடும் பாக்கியம் பெற்றவர்கள்: