Wednesday, September 9, 2015

ஏன் சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக் கூடாது?

ஏன்னா,சாப்பிடும் நேரம் வந்ததும்,நமது வயிற்றில் இயற்கையான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் சுரக்கும்;நாம் சாப்பிடும் உணவை இதுதான் கூழாக்கும்;

சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்போ அல்லது சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகு வரும் 30 நிமிடம் வரையோ தண்ணீர் குடித்தால்(தண்ணீர் மட்டும் அல்ல;கோக் முதலான எந்த ஒரு திரவத்தை குடித்தாலும்) இந்த ஹைட்ரோகுளோரிக் ஆசிட் நீர்த்துப்போய்விடும்;இதனால் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக அதிகநேரம் ஆகும்;

இதையே தொடர்ந்து (வருடக் கணக்கில்) செய்து வந்தால்,ஜீரண மண்டலம் தனது வேலையைச் செய்யமுடியாமல் ஆயுள் குறைந்துவிடும்;(கோக் டின்னர் என்பது மாநகரங்களில் பிரபலமாக இருக்கிறது; இதுதான் பெருமையாம்;கோக் குடித்துக் கொண்டே சாப்பிடுவதுதான் நம்மை நாகரீகமுள்ளவர்களாகக் காட்டுமாம்;

நம்மை நிரந்தர நோயாளியாக்கிட மேல்நாட்டினர் போட்டிருக்கும் திட்டம் என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை)
ஒவ்வொரு முறையும் சாப்பாட்டை வாய்க்குள் வைத்ததும்,மென்று சாப்பிட வேண்டும்;அப்படி மென்றால் தான் உமிழ் நீர் அதனுடன் கலக்கும்;அப்படி கலந்தால் தான் வாயிலேயே உணவு ஜீரணமாகத் தயாராகிவிடும்;

இதனால்தான் சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;

சாப்பிடும் போது செல்போனில் பேசக் கூடாது;

சாப்பிடும் போது வேக வேகமாக சோற்றை விழுங்கக் கூடாது;

பசிக்காமல் சாப்பிடக் கூடாது;என்று போதிப்பதன் ஆரோக்கிய ரகசியம் இதுதான்;

ஆனால்,நடைமுறையில் வாயில் அரைக்க வேண்டிய உணவை விழுங்கிவிடுவதால்,வயிறு அரைக்கும் என்று நம்பிவிடுகிறோம்;இதனால் தைராய்டு உருவாகி,அதுவே டான்சில் உருவாக இதுதான் காரணம்;

டான்சில் வந்தால்,அதை நமது நாட்டு மூலிகைகள் மூலமாக குணப்படுத்திவிடலாம்;முற்றிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்துவது முடியாத காரியம்;

பாட்டி வைத்தியத்தில் இருந்து,இயற்கை உணவுப் பழக்கம் வரை இருக்கும் அனைத்து வைத்திய முறைகளிலும் உணவு எப்படி நமது உடலுக்குள் பயணிக்கிறது என்பதை இப்படித்தான் சொல்கின்றன;அரசியல் மாமேதை சாணக்கியரும் இதையே தனது அர்த்தசாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்;திருமூலர்,அகத்தியர் முதலான சித்தர் பெருமக்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்;திருவள்ளுவரும் திருக்குறளில் இதைப் பாடியுள்ளார்;

நாம் நமது குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பதைப் பெருமையாக நினைப்போம்;நமது வம்சாவழியை நமது பாரம்பரியத்தில் இருந்தே பிரித்துவிடும் பாக்கியம் பெற்றவர்கள்:

ஜோதிட ஆர்வலர்கள்

பலர் ஜோதிட ஆர்வலர்கள்,சரியான ஜோதிட குரு கிடைக்காமல் புத்தகங்கள் வாசித்தே ஜோதிடத் தொழிலுக்கு வந்துவிடுகிறார்கள்;அஞ்சல் வழி ஜோதிடப் படிப்புகள் படிப்பவர்களுக்கும் இதே நிலைதான் தொடருகிறது;

குரு தொட்டுக்காட்டாத வித்தை குருட்டு வித்தை என்பது ஜோதிடத்திற்கு சரியாகவே பொருந்தும்;

ஜோதிடத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொழிலாகச் செய்பவர்கள்,தன் வாழ்நாளில் 12 பேர்களை ஜோதிடராக ஆக்கியே தீரவேண்டும் என்பது அகத்திய ஜோதிட விதி;சரியான ஜோதிட சீடர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்;

இப்படிக்கு கை.வீரமுனி,ராஜபாளையம்.9092116990

நர்மதா பரிக்ரமா என்றால் என்ன?

நர்மதை நதியின் பிறப்பிடத்தில் இருந்து,அது கடலில் கடக்கும் இடம் வரை நடந்தே சென்று,மீண்டும் அடுத்த கரைவழியாக நர்மதா நதியின் பிறப்பிடத்திற்குத் திரும்புவதே நர்மதா பரிக்ரமா என்று பெயர்;நர்மதா நதியின் நீளம் 1300 கி.மீ.கள்;இருகரைகளையும் சேர்த்து 2600 கி.மீ.தூரத்தைக் கடக்க சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்;தென் கரையில் துவங்கி கடலில் கலக்கும் இடம் வரை பயணித்து,மீண்டும் வடகரை வழியாக நர்மதை நதி பிறக்கும் இடத்திற்கு வரவேண்டும்;

நர்மதா பரிக்ரமாவை முதன் முதலில் துவக்கியவர் ஸ்ரீமார்க்கண்டேய முனிவர்;அதன் பிறகு ஏராளமான ரிஷிகள்,துறவிகள்,சாதுக்கள்,சிவபக்தர்கள் பயணித்துள்ளனர்;

நர்மதா நதியின் உற்பத்திஸ்தானம் மத்தியப் பிரதேசம்,அமர்கண்டக்கில் துவங்கி,கடலில் கலக்கும் இடம் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் விமலேஷ்வர் வரை வந்து மீண்டும் வடக்குக் கரை வழியாகப்பயணிக்க வேண்டும்;

இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மிஷன்,சென்னை பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது;விவேகானந்த கேந்திரத்தில் கல்வித்தொண்டு ஆற்றிய ஒருவர் தனது நர்மதாபரிக்ரமாவின் அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்;புத்தகத்தின் பெயர்: நர்மதை நதி வலம்;

1.இந்த தூரங்கள் முழுவதும் காலணி அணியக் கூடாது;

2.பணம் வைத்துக் கொள்ளக் கூடாது;

3.இந்தப் பயணம் முழுவதும் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும்;ஒருவேளைக்கு மூன்று பேர்களிடம் மட்டுமே பிச்சை கேட்க வேண்டும்;அந்த மூன்றுபேர்களில் எவரும் உணவு தராவிட்டால்,அடுத்த வேளை வரை எதுவும் சாப்பிடக்கூடாது;

4.இந்தப் பயணம் முழுவதும் முகச்சவரம் செய்யக் கூடாது;கோபப்படக்கூடாது;முடிவெட்டிக் கொள்ளக் கூடாது;

5.பாய்,துணியில் மட்டும் படுத்துத் தூங்கலாம்;பிரம்மச்சாரியம் காக்க வேண்டும்;அசைவம் ஒருபோதும் சாப்பிடக்கூடாது;

6.நர்மதா நதியின் பிறப்பிடத்தில் ஒரு பாட்டிலில் நீர் எடுத்துக் கொண்டு,அதைப்பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும்;நர்மதா நதி கடலில் கடக்கும் இடத்தில் அந்த பாட்டிலில் இருக்கும் நீரைக் கொஞ்சம் கடலில் கலந்துவிட்டு,பதிலுக்கு கடல் நீரை அதில் நிரப்ப வேண்டும்;நிரப்பி வடக்கு கரைவழியாக மீண்டும் நர்மதா நதி பிறக்கும் இடத்தை வந்தடையவேண்டும்;பிறகு,அந்த பாட்டில் நீரைக் கொண்டு ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று ஓம்காரேஸ்வரை அபிஷேகம் செய்ய வேண்டும்;

7.ஓம்காரேஸ்வரர் ஆலயம் நர்மதா நதி ஒடும் வழியில் ஒரு தீவுக்குள் இருக்கிறது;தென் கரை வழியாகப் புறப்பட்டு,வடகரை வழியாக மீண்டும் நர்மதா நதி பிறப்பிடத்துக்கு வர வேண்டும்;எனவே,பரிக்ரமாவின் போது இந்த ஆலயத்திற்குப்போகக் கூடாது;

8.இந்த பரிக்ரமாவை முற்காலத்தில் 3 ஆண்டுகள்,3 மாதங்கள்,12 நாட்கள் வரை தொடர்ந்து செய்து முடித்தனர்;

9.நர்மதா நதியில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லுமே பாணலிங்கங்கள்;அரிசி போலவே இருக்கும்;இவைகளே பூமியில் புனிதமான சுயம்பு லிங்கங்கள்;

எனவே நர்மதாபரிக்ரமா பயணத்தின் போது ஓம் நமசிவாய என்றோ அல்லது ஓம் வராகி சிவசக்தி ஒம் என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தவாறு பயணிக்க வேண்டும்;

Wednesday, September 2, 2015

அன்னை அரசாலையின் 12 பெயர்களுக்கான விளக்கங்கள்

பிரபஞ்சத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்னை வாராகியின் 1000 பெயர்களில் ஒன்றுதான் அரசாலை;இந்தப் பெயரில் அன்னையின் ஆலயம் காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்திற்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது;

அன்னை அரசாலையை வழிபட பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்;முற்பிறவிகள் மூன்றில் முழுமையாக பைரவ வழிபாடு செய்திருக்க வேண்டும்;அல்லது ஒரு பிறவி முழுக்க பைரவப் பெருமானிடம் சரணடைந்திருக்க வேண்டும்;யாருக்கும் மாந்தீரீகத்தால் தீங்கு செய்திருக்கக் கூடாது;அவர்களுக்கு மட்டுமே இப்பிறவியில் அன்னை அரசாலை(வாராகி)யைச் சரணடையும் எண்ணம் தோன்றும்;

எதிரிகள் மற்றும் நவக்கிரகங்களால் ஏற்படும் துயரங்களை ஒரே நேரத்தில் தீர்த்துவைக்கும் தாய்மை சுபாவம் இவளுக்கு உண்டு;இவளுக்கு மட்டுமே உண்டு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்;

நமது வாழ்க்கையில் இருந்து வரும் துக்கங்கள்,சோகங்கள்,அவமானங்களைத் துடைத்து நம்மை அமைதியாகவும்,நிம்மதியாகவும் வாழ வைக்கும் ஒரே தெய்வம் அன்னை அரசாலை மட்டுமே!(அனுபவம் பேசுகிறது)

பஞ்சமீ = பஞ்சமீ திதியில் ஆதிபராசக்தியிடம் இருந்து தோன்றியவள் என்று அர்த்தம்;

தண்டநாதா = கையில் உலக்கை,கலப்பை என்ற இருவிதமான தண்டங்களை வைத்திருப்பவளே என்று அர்த்தம்;

விவசாயமே மனித இனத்தை உயிரோடு வாழ வைக்கிறது;அந்த விவசாயம் செய்ய அடிப்படைத் தேவை கலப்பை;விவசாயிகளின் தெய்வமாக பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வழிபடப்பட்டு வந்த அன்னை இவளே!

தன்னை வழிபடும் தனது பக்தர்களை தனது செல்லம் மிகு மகனாகவும்,மகளாகவும் நினைத்துப் பாதுகாப்பவள் அன்னை அரசாலை(வாராகி);அவர்களுக்கு எதிராக யாராவது ஏதாவது பில்லி,ஏவல் சூனியம் வைத்தால் அவர்களுக்குரிய தண்டனை இந்த உலக்கை மூலமாக கிடைக்கும் என்பதை சூட்சுமமாக விளக்குகிறாள்:

சங்கேதா = தன்னைப் படைத்த ஆதிபராசக்தி என்ற லலிதா பரமேஸ்வரியின் முகக்குறிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல செயல்படுபவள் என்று அர்த்தம்;

சமேஸ்வரி = தனது பக்தர்களின் கஷ்டநேரம் பார்த்து எதிர்பாராத விதத்தில் உதவிகளைச் செய்பவள் என்று அர்த்தம்;

சமய சங்கேதா =தன்னைப் படைத்த லலிதாபரமேஸ்வரியிடம் மன நிலையை அறிந்து அவளிடம் சமமான முறையில் உரையாடுபவள் என்று அர்த்தம்;(அன்னையைச் சரணடைந்தவர்களுக்கு இந்த சுபாவம் இயல்பாகவே கைகூடிவிடும்;இந்த ஒரு குணம் இருந்தாலே நாம் எந்தத் துறையில் இருந்தாலும் முன்னுக்கு வந்துவிடலாம்)

வராகீ =சம்ஸ்க்ருதத்தில் வாராகி என்று கூறுவர்;எப்படி அழைத்தாலும் நமது மனோபாவத்தை மட்டுமே அன்னை கவனிப்பாள்;

போத்ரிணீ =சபையில் கூறமுடியாத அளவுக்கு சக்திவாய்ந்த விளக்கம் இந்த வார்த்தைக்கு இருக்கிறது;

சிவை = சிவனும் சக்தியும் இணைந்த வடிவமாக இருக்கும் ஒரே தெய்வம் வராகி (ஓம் வராகி சிவசக்தி ஓம் என்பது கூட ஒரு மந்திரமே:நன்றி:வராகி பரணி)

வார்த்தாளீ = விவசாயத்துக்குரிய வராகி,ஆரோக்கியம் தரும் வராகி என்று இரு செயல்களுக்கும் ஒரே தெய்வமாக விளங்குபவள்;இவளை ப்ருஹத் வாராகி என்று அழைப்பர்;

மகாசேனா = ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவள்;லலிதாபரமேஸ்வரி என்ற ஆதிபராசக்தியின் படைகளை நடத்தும் தகுதி இவளுக்கு மட்டுமே உண்டு;

ஆக்ஞாசக்ரேஸ்வரீ = நமது புருவமத்திக்குள் இருக்கும் சக்கரத்தை இயக்குபவள் என்று அர்த்தம்;

அரிக்நீ = இதுவும் ரகசிய விளக்கமே!

ஓம் வராகி சிவசக்தி ஓம்

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

அன்னை அரசாலையை வழிபட ஆரம்பிக்க ஏற்ற நாள்

ஸ்ரீவித்யா உபாசனை என்பது மனோன்மணியை தரிசனம் செய்ய முயற்சி செய்வதே ஆகும்;மனோன்மணி தரிசனம் செய்வதே சித்தர்களின் யுகலட்சியம் ஆகும்;(சாதாரண மனிதர்களுக்குத் தான் வாழ்நாள் லட்சியம்!)
இதன் ஆரம்ப நிலையே அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது!

தான் உண்டு;தனது வேலை உண்டு என்று வாழ்ந்து வருபவர்களுக்கு பொறாமையால் சக ஊழியரோ,உறவினரோ மாந்திரீகம் வைத்து முடக்குவது இந்தியாவில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது;

இதில் இருந்து மீள விரும்புவோர் அசைவம் தவிர்க்க வேண்டும்;மது அருந்தக் கூடாது;போதைப் பொருட்கள்(பீடி,சிகரெட்,பாக்கு வகைகள்) பயன்படுத்துவதை கைவிடவேண்டும்;

குறைந்த பட்சம் அசைவம்,மதுவைக் கைவிட வேண்டும்;அதன் பிறகு,பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,மாலையில் 15 நிமிடமும் ஜபித்து வர வேண்டும்;குறிப்பாக காலை 6 மணிக்கு முன்பு ஏதாவது 15 நிமிடமும்,மாலை 6 மணிக்குப் பிறகு ஏதாவது 15 நிமிடமும் ஜபித்து வர வேண்டும்;

வீட்டில் மஞ்சள் துண்டு விரித்து,அதன் மீது அமர்ந்து கொண்டு கிழக்கு நோக்கி ஒரு தீபம் ஏற்றிக் கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஜபிக்கவும்;

ஓம் நமச்சிவாய நமக என்று ஒருமுறையும்
ஓம் (உங்கள் குலதெய்வம்$) நமக என்று ஒருமுறையும் ($குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தைக் கூறலாம்)
ஓம் கணபதி நமக என்று ஒருமுறையும் ஜெபித்துவிட்டு,இந்த 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;வாய்விட்டுச் சொல்லக் கூடாது;

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவா
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
இப்படி குறைந்த பட்சம் 180 நாட்கள் ஜபித்து வரவேண்டும்;அதன் பிறகே,தினமும் வராகி மாலையை பாடத் துவங்கலாம்;

இன்று 2.9.2015 புதன் கிழமை மதியம் 3.40 முதல் நாளை 3.9.2015 வியாழன் மதியம் 1.26 வரை பஞ்சமீ திதி வருவதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் ஏதாவது ஒரு 15 நிமிடத்தில் அன்னை அரசாலையை வழிபடத் துவங்கலாம்;

ஏற்கனவே,அன்னை அரசாலையை வழிபடத் துவங்கியவர்கள்,இன்று முதல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் வழிபடத் துவங்குவது அவசியம்;

உதாரணமாக,வேலை முடிந்து வீட்டு வரும் நேரம் இரவு 8 மணி எனில்,இன்று முதல் தினமும் இரவு 9 முதல் 9.15க்கு தினமும் இந்த 12 பெயர்களை ஜபிக்கத் துவங்கிடலாம்;ஒரே நேரம் தினமும் ஜபிக்கத் துவங்குவதால்,மூன்றாவது நாளில் இருந்தே அன்னை அரசாலையின் அருள் கிட்டும்;யாராலும் நமக்கு கெடுதி செய்ய முடியாது;

நாமும் நமது குடும்பமும் பத்திரமாக அன்னை அரசாலையின் அருட்பார்வைக்குள் இருப்போம்;

இந்த அன்னை அரசாலையின் வழிபாட்டுமுறை பற்றி மேலும் அறிய நேரில் சந்திக்கவும்;

ஒம் வராகி சிவசக்தி ஓம்

ஏன் சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தக் கூடாது?

ஏன்னா,சாப்பிடும் நேரம் வந்ததும்,நமது வயிற்றில் இயற்கையான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் சுரக்கும்;நாம் சாப்பிடும் உணவை இதுதான் கூழாக்கும்;

சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்போ அல்லது சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகு வரும் 30 நிமிடம் வரையோ தண்ணீர் குடித்தால்(தண்ணீர் மட்டும் அல்ல;கோக் முதலான எந்த ஒரு திரவத்தை குடித்தாலும்) இந்த ஹைட்ரோகுளோரிக் ஆசிட் நீர்த்துப்போய்விடும்;இதனால் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக அதிகநேரம் ஆகும்;

இதையே தொடர்ந்து (வருடக் கணக்கில்) செய்து வந்தால்,ஜீரண மண்டலம் தனது வேலையைச் செய்யமுடியாமல் ஆயுள் குறைந்துவிடும்;(கோக் டின்னர் என்பது மாநகரங்களில் பிரபலமாக இருக்கிறது; இதுதான் பெருமையாம்;கோக் குடித்துக் கொண்டே சாப்பிடுவதுதான் நம்மை நாகரீகமுள்ளவர்களாகக் காட்டுமாம்;
 நம்மை நிரந்தர நோயாளியாக்கிட மேல்நாட்டினர் போட்டிருக்கும் திட்டம் என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை)

ஒவ்வொரு முறையும் சாப்பாட்டை வாய்க்குள் வைத்ததும்,மென்று சாப்பிட வேண்டும்;அப்படி மென்றால் தான் உமிழ் நீர் அதனுடன் கலக்கும்;அப்படி கலந்தால் தான் வாயிலேயே உணவு ஜீரணமாகத் தயாராகிவிடும்;

இதனால்தான் சாப்பிடும் போது பேசக் கூடாது;
சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;
சாப்பிடும் போது செல்போனில் பேசக் கூடாது;
சாப்பிடும் போது வேக வேகமாக சோற்றை விழுங்கக் கூடாது;
பசிக்காமல் சாப்பிடக் கூடாது;என்று போதிப்பதன் ஆரோக்கிய ரகசியம் இதுதான்;

ஆனால்,நடைமுறையில் வாயில் அரைக்க வேண்டிய உணவை விழுங்கிவிடுவதால்,வயிறு அரைக்கும் என்று நம்பிவிடுகிறோம்;இதனால் தைராய்டு உருவாகி,அதுவே டான்சில் உருவாக இதுதான் காரணம்;

டான்சில் வந்தால்,அதை நமது நாட்டு மூலிகைகள் மூலமாக குணப்படுத்திவிடலாம்;முற்றிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்துவது முடியாத காரியம்;

பாட்டி வைத்தியத்தில் இருந்து,இயற்கை உணவுப் பழக்கம் வரை இருக்கும் அனைத்து வைத்திய முறைகளிலும் உணவு எப்படி நமது உடலுக்குள் பயணிக்கிறது என்பதை இப்படித்தான் சொல்கின்றன;அரசியல் மாமேதை சாணக்கியரும் இதையே தனது அர்த்தசாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்;திருமூலர்,அகத்தியர் முதலான சித்தர் பெருமக்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்;திருவள்ளுவரும் திருக்குறளில் இதைப் பாடியுள்ளார்;

நாம் நமது குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பதைப் பெருமையாக நினைப்போம்;நமது வம்சாவழியை நமது பாரம்பரியத்தில் இருந்தே பிரித்துவிடும் பாக்கியம் பெற்றவர்கள்:

மூலிகைகளின் பெற்றோர்கள்

மூலிகைகளின் அப்பாவாக இருப்பது வில்வமும்,வில்வரகங்களும்!

மூலிகைகளின் அம்மாவாக இருப்பது
வேம்பும்,வேம்பு ரகங்களும்!!!

மனிதகுலத்தை உய்விக்க வந்திருப்பது சிவ அம்சமான வில்வமும்;சக்தி அம்சமான வேம்பும் என்பது இந்தச் செய்தியின் சூட்சும சாரம்!!!

ஓம் வராகி சிவசக்தி ஓம்