Friday, August 7, 2015

எதற்கெல்லாம் இந்த கூட்டுப்பிரார்த்தனை சிவமந்திரத்தைப் பயன்படுத்தலாம்?



சதுரகிரி மலை மீது பயணிக்கும் போது பயன்படுத்தலாம்;

அண்ணாமலை கிரிவலத்தின் போது கூட்டாக செல்லும் போது கோஷம் இடலாம்;

தமிழ்நாட்டில் பல மலை சிவாலயங்களில் கிரிவலம் செல்லும் பழக்கம் இருக்கிறது;அப்போது கூட்டாக சிவகோஷம் இடலாம்;

வீட்டில் குடும்பத்தோடு அல்லது கூட்டுக்குடும்பங்களோடு ஐந்தெழுத்து வேள்வியை இந்த சிவநாம ஜபத்தின் மூலமாகச் செயல்படுத்தலாம்;

தொலைதூர தேசங்களில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் பிரதோஷம்,சிவராத்திரி சமயங்களில் கூட்டாக இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;அல்லது கோஷமாக இட்டு வழிபடலாம்;

ஹரே ராம ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்திற்கு இணையான சிவ மந்திரம் இது;


ஓம் நமசிவாய சிவாயநம ஓம்


வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!


கூட்டுப் பிரார்த்தனைக்கு உதவும் சிவமந்திரம்



ஹரே ராம,ஹரே க்ருஷ்ண என்ற மந்திரம் இன்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும்,எல்லா நேரங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது;இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பதன் மூலமாக விஷ்ணுவின் அருளைப் பெற்றவர்கள் பல்லாயிரம் பேர்கள் இன்றும் இருக்கிறார்கள்;


இதற்கு இணையான சிவமந்திரம் இருக்கிறதா? என்று நம்மில் பலர் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்;அந்தத் தவிப்பை ஈசனின் அருள் இன்று தீர்த்துவிட்டது; இதோ:


ஓம் நமசிவாய சிவாயநம ஓம்




வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!

ஒரு முன் உதாரணமான சிவனடியார் சிவ.ஆ.பக்தவச்சலம் ஐயா அவர்கள்!!!



தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்பது கடந்த 200 நூற்றாண்டுகளாக பாரத தேசம் எங்கும் ஒலித்துவரும் யுகங்கள் கடந்த பழமொழி!

இந்த சிவ.ஆ.பக்தவச்சலம் அவர்கள் செய்யும் சிவத் தொண்டு நமக்கு முன் உதாரணமாக,நாமும் அவரைப் போன்றே சிவத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்து சக்தியாக இருந்து வருகிறது;இந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் சுமாராக 120 பாழடைந்த சிவாலயங்களை (தமிழ்நாடு முழுவதும்)புனரமைத்திருக்கிறார்;அதுவும் எப்படி?

ஒரு கிராமத்தில் பாழடைந்த சிவாலயம் இருக்கிறது என அறிந்தால்,அந்த கிராமத்திற்கு முறைப்படி வருகை தந்து,கிராம மக்களை ஒரு பொது இடத்தில் வரவழைப்பார்;பாழடைந்த சிவாலயத்தை புனரமைத்தால் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் புண்ணியம் பற்றியும்,அந்த கிராமத்திற்கு கிடைக்க இருக்கும் எதிர்கால வளர்ச்சி பற்றியும் ஒரு மணிநேரம் பேசுவார்;பிறகு,அங்கேயே தகுதியான கிராம மக்களைக்கொண்டு புனர் நிர்மாணக் குழுவை அமைப்பார்;அந்தக் குழுவிடம் முதல் ஆளாக சிவாலயப் புனரைப்பிற்காக முதல் ஆளாக சில ஆயிரம் ரூபாய்களை அன்பளிப்பாகக் கொடுப்பார்;

அந்தக்கோவிலை புனர் அமைத்து குடமுழுக்கு செய்யும் வரை அந்த குழுவுக்கு வழிகாட்டுவார்;இப்படி கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 120 சிவாலயங்களைச் சீரமைத்திருக்கிறார்;என்னைப் பொறுத்தவரையிலும் இவர் ஒரு சிவகணம் தான்;(இது தொடர்பாக இவர் ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கிறார்;இதில்,எந்த மாவட்டத்தில்,எந்த ஊருக்கு அருகில் இருக்கும் எந்த சிவாலயத்தை புனர் நிர்மாணம் செய்தார்;எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற விபரங்கள் இருக்கின்றன;இந்தப் புத்தகமே எமக்குத் தூண்டுகோலாக இருக்கிறது)

இவர் தமிழ் வேதம் என்ற மாத இதழை நடத்தி வருகிறார்;இதன் ஆண்டுச் சந்தா ரூ.100/- ஆயுள் சந்தா ரூ1000/- இதில் பல ஏராளமான சிவ வழிபாட்டு ரகசியங்களை வெளியிட்டு வருகிறார்;

இந்த இதழைப் பெற: சிவ.ஆ.பக்தவச்சலம்
43,சந்நதி வீதி,நல்லூர்ப்பேட்டை,குடியாத்தம் – 632 602.வேலூர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா. என்ற முகவரிக்கு மணி ஆர்டர் அல்லது டிராப்ட் அனுப்பலாம்;



வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!

நெற்றிக்கண் - ஞானசுரபி - Pineal Gland

மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு சக்தியே இந்த Pineal Gland . சித்தர்கள் , யோகிகள் அந்த காலத்தில் அடைந்த யோகத்தை என் இன்று மனிதானால் அடைய முடியவில்லை ? என்றாவது யோசித்து உள்ளீர்களா ?
அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் .ஏன் இன்று நம்மால் அந்த நிலையை அடைய முடியவில்லை ?
Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி போட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின் நெற்றி கண்ணாகவும் , புத்தினின் ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில் மறைமுகமாக கூறி உள்ளனர் . உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்ற வற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக வேலை செய்ய துடங்கும் .. உடம்பில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே உள்ளது .. ஆங்கிலத்தில் இதை "Soul Seed "என்று அழைப்பார்கள் அதாவது ஆன்மாவின் விதை . இந்த pineal gland உறுப்பின் முலமே நாம் நமது ஆன்மாவை அடைய முடியும் (Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால் மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற பெரிய உண்மையை மறைக்க உருவாக்கப்பட்டவையே .

சித்தர்கள் உணவு உண்ணாமல் , பருகாமல் உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி .. இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் துங்கும் பொழுது நம் உச்சன் தலை மூலம் இறங்கி நம் உடல் முழுவதும் பரவும் .. இது போதிய அளவில் நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும் வழி தான் தியானம் .
நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்காக வந்துள்ளோம் . நமது உண்மையான உடல் நினைவுகள் அனைத்தும் அந்த ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand மட்டுமே நமது திட உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று கூட சொல்லலாம் .. இந்த பாலம் சிதைக்க பட்டால் ?
இந்த Pineal Gland மூலம் தான் நம்மால் அடுத்த பரிணாமத்தை அடையமுடியும் (உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று கூட சொல்லலாம் ) . இது தான் மனித குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி .
என்ன ஆயிற்று இன்றைய மனிதனின் Pineal Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும் இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில் நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி FLuride என்னும் வேதி பொருள் .. உடலில் எந்த இடத்தில் நீங்க Fluride இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை ஈர்த்துகொள்ளும் ..பிறகு Pineal Gland இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக நமது பற்பசையில் (toothpaste ) இல் இது அதிக அளவுகளில் கலக்க படுகிறது .
DMT - Dimethyltryptamine
இது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் .. அதுவும் அமெரிக்க நாட்டில் Class -1 ரக போதை பொருள் .. இதை பயன்படுத்தினால் பேச்சே கிடையாது உங்களை கைது செய்து விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை பொருளா என்று எண்ணாதீர்கள் ..
இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் உள்ளது முக்கியமாக தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி பொருளே இந்த DMT .
ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .
அதே போல் நமது பாரம்பரிய தானியங்களையும் அழித்து மரபணு மாற்றப்பட்ட விதிகளையும் , காய் கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு வரவேண்டிய Dimethyltryptamine யை தடுத்து விட்டார்கள் .
எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும் மனித இனத்துக்கு appendix சதை போல தேவை ஆற்ற பொருளாகி விடும் .
இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால் என்ன நடக்கும் ?
அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans (பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளனர் .
இந்த DMT யை சிலருக்கு கொடுத்து ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள் அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை அடைந்ததாக கூறுகிறார்கள் .
வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும் தவத்தின் முலமே கடவுள்களை உணர்ந்துள்ளனர் .கடம் தவம் இந்த வேதி பொருளை தான் மூலையில் உற்பத்தி செய்கிறது .
இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில் அதிக அளவில் உள்ளது .
இந்த அறிய உறுப்பை கொண்ட கடைசி தலைமுறை நாமாக கூட இருக்கலாம் .. மீடியா வில் காட்டப்படும் பல என்னசிதரல்களை தவிர்த்து தியானத்தை கடை பிடித்து , இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும் அந்த நிலையை அடையலாம் .

தீர்த்தங்களுக்கு சக்தி உண்டா ? எல்லாம் தண்ணீர் தானே ?


 சதுரகிரி, மகேந்திரகிரி, கொள்ளிமலை, அத்திரிமலை போன்ற மலைகளில் பயணம் செய்யும் போது ஒவ்வொரு இடங்களிலும் ஓடும் நீரை ஒவ்வொரு தீர்த்தங்கள் என்று மக்கள் பயன்படுத்தி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். சில தீர்த்தங்களுக்குப் புராணக் கதைகள் உண்டு. வியாதிகளைப் போக்கியதாகவும், பாவங்களைப் போக்கியதாகவும், ஞானம் கொடுப்பதாகவும் பலவாறு புராணங்கள் சொல்லப்பட்டிருக்கும். எனது நண்பர் ஒருவர் சிறு வயதில் சதுரகிரியில் வாழ்ந்த ஒரு வைத்தியருக்கு உதவியாளராக இருந்து, வைத்தியம் கற்றுக் கொண்டார். அந்த வைத்தியரின் மறைவுக்குப் பிறகு ஊருக்கு வந்தவருக்கு திருமணம் செய்து வைத்து விட ஏராளமான குழந்தைகளைப் பெற்று பெரிய குடும்பி ஆகி விட்டார். அவர் குடும்பஸ்தனான காலத்தில் வைத்தியம் அவருக்கு போதிய வருமானத்தை தரவில்லை. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் படித்த வைத்தியர்களுக்கு இருக்கும் வரவேற்பு, மற்றும் வருமானம் இவருக்கு போதவில்லை. பார்த்தார் மனிதர், இப்போது நெல்லையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு சமயம் அவர் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்த போது, அவருடைய மருத்துவ, ஆன்மீக அறிவைக் கண்டு வியந்து போனேன். அன்றிலிருந்து நெருங்கிய நண்பராகிவிட்டார். உயிர் பிழைக்காது என்று கைவிடப்பட்டவர்களைக் கூடகாப்பாற்றியிருக்கிறார். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர் வைத்தியத் தொழிலை முழுமையாகச் செய்ய முடியவில்லை. அவர் சொல்வது என்ன வென்றால் மலைகளில் பாறை இடுக்குகளில், பள்ளங்களில் தேங்கி பிறகு சிறிது சிறிதாக நிரம்பி வரக்கூடிய தண்ணீர் அந்த பாறைகளில் உள்ள தனிமங்களின் குணத்தைப் பெற்றுவிடும். அது ஓடி வரக்கூடிய பாறைகளில் உள்ள தனிமங்களையும் கரைத்து எடுத்துக் கொள்வதால் அதில் தினமும் குளிப்பதாலும் அல்லது குடிப்பதாலும் அந்த தனிமங்களின் சக்தியினால் வியாதிகள் குணமாகும். சில இடங்களில் சில குறிப்பிட்ட மரங்களின் வேர்கள் உள்ள பள்ளங்களில் தேங்கி வரும் தண்ணீரில் அந்த வேரில் உள்ள மருத்துவ குணம் இருப்பதாலும் சில குறிப்பிட்ட வியாதிகள் நீங்கும். ஆனால் ஒரு நாள் குடிப்பதாலோ, குளிப்பதாலோ அது நிகழாது. குறைந்தது ஒரு மண்டலமாவது பயன்படுத்தினால் வியாதியின் தீவிரத்தைப் பொறுத்து குணமாகும். ஆனால் எந்தெந்த நீரைக் குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
எல்லா நீரையும் அப்படியே உபயோகிக்கக் கூடாது என்றார். காடுகளில் உதகநீர் என்று ஒன்று இருக்குமாம் அதைக் குடித்தால் உள் உறுப்புகள் கடினத் தன்மை அடைந்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றார்.
அதாவது மழை நீரைக் குடித்தால் குளிர்ச்சி, நல்லறிவு, சுக்கில சுரோணித உற்பத்தி இவையாவும் ஏற்படும்,
ஆலங்கட்டி மழை நீரைக் குடித்தால் சிலேஷம்ப் பிரமேகப் பெரும்பாடு, கண்களுக்கு புகைச்சல், கைகால் எரிதல், விக்கல், மயக்கம் இவைகள் நீங்கும். குளிர்ச்சி உண்டாகும்.
பனிநீரை சூரியன் உதிக்கும் போது அருந்தினால் சொறி, சிரங்கு, கிரந்தி, குஷ்டம், தாபம், காசம்,கிராணி, தனிவாதம், திரிதோஷம், தேகவறட்சி, நீரழிவு இவையெல்லாம் அடியோடு நீங்கும்.
ஆற்றுநீரைக் குடித்தால் வாதம், பித்தம், கப தோஷம், தாகம இவையெல்லாம் நீங்கும். சுக்கில விருத்தி உண்டாகும்.
குளத்துநீரைக் குடித்தால் வாதநோயை அதிகரிக்கும், மதுப் பிரமேகசலம், சீதளம் போன்ற குற்றங்கள் உண்டாகும்.
ஏரி, சுனைநீரைக் குடித்தால் வாயுவை உற்பத்தி செய்யும். வாத, பித்த தோஷங்களை உண்டாக்கும். ஒருநாள் எடுத்து வைத்திருந்து மறுநாள் அருந்தினால் உடலில் அதிக உஷணத்தை உண்டாக்கும்.
ஓடைநீரை அருந்தி வர தாகம் உண்டாகும், புஜபலம் பெருகும்.
கிணற்றுநீர் தாகம், உஷணம், அழற்சி, சூலை, சரீர வலி, இடுப்பு வலி, மயக்கம், வீக்கம்,பித்தம், போன்றவற்றை போக்கும்.
சுனைநீர் இருமலோடு கூடிய ஜுரம், வாதம், கபவாதம், பயித்தியம் போன்றவற்றை உண்டாக்கும்.
ஊற்றுநீர் மிகுந்த தாகம், அதிகப் பித்தம் போன்றவற்றை உடனே செய்யும்.
பாறை நீர் அதிக குளிர்ச்சி, வாதம், ஜுரம் உண்டாக்கும்.
அருவிநீர் அருந்த ஜலப் பிரமேகம் விலகும், பித்த ரோகம் விலகும், சிலேஷ்மத்தை உண்டாக்கும், தேகபலம் உண்டாகும்.
இவ்வாறாக பலவிதமான நீருக்கு பலவிதமான வியாதியைப் போக்கவோ அல்லது உண்டாக்கவோ கூடிய தன்மைகள் உண்டு என்று விளக்கினார். எனவே மலைகளில் யாத்திரை செய்பவர்கள் நீரைக் கொண்டு செல்வது நல்லது. அது முடியாத பட்சத்தில் காய்ச்சி வடிகட்டியாவது குடிக்கலாம்.

பப்பாளி

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்

உணவு நஞ்சாவதை ( பற்றி நம் தமிழ் மருத்துவம் மூலம் நம் முன்னோர்கள் சொன்னது என்ன..?




1. வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை, செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர், மோர் வைத்திருந்து உண்ணல்நஞ்சாகும் .
2. கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து உண்ணல்.
3. தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு, எண்ணெய் ஆகியவற்றை உண்ணல்நஞ்சாகும் .
4. அழுகிய கனிகள், திரிந்தபால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு, நுரைத்த உணவு, நூல்விட்ட உணவு ஆகியவற்றை உண்டால், கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்கச் செய்து, மரணத்தைத் தரும் நஞ்சாகும்.
5. ஆட்டு, மாட்டிறைச்சியுடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளை கட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோ–பலவோ கலந்து சமைத்தாலும், வெல்லம் சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும்.
6. மீன்கறி, கீரைக்கறி, முள்ளங்கி சேர்ந்த துணைஊண் (கூட்டு, சாம்பார்) ஆகியவையும், அதிக புளிப்புச் சுவையுடைய பழமும், கம்பு, வரகு, கொள், காட்டுப் பயறு (நரிப்பயறு, பாசிப்பயறு) ஆகியவை தனித்தோ சேர்ந்தோ உண்ட உடன், பால் அருந்தினால் நஞ்சாகும்.
7. பன்றி இறைச்சியுடன் முள்ளம் பன்றி இறைச்சியும், மான் இறைச்சியுடன் நாட்டுக் கோழி இறைச்சியும் தனியாகவோ, கலந்தோ தயிர் கூட்டி உண்டால் நஞ்சு.
8. உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும், குசும்பாக் கீரையுடன் செம்மறியாட்டின் இறைச்சி சேர்ந்தாலும் நஞ்சு.
9. கிச்சிலிப் பழத்துடன் பால், நெய், உளுந்து, வெல்லம் இவற்றில் ஒன்றிரண்டு கலந்தாலும் நஞ்சு.
10. மீன் சமைத்த சட்டியில் மணத்தக்காளிக் கீரை சமைத்தல், மீன் பொரித்த நொய்யில் திப்பிலியைப் பொரித்தல், பன்றிக் கொழுப்பில் நாரை இறைச்சி சமைத்தல், நஞ்சாகும்.
11. தேன், பசுவின் பால், நிணம், தண்ணீர் இவை நான்கும் சம அளவாக எடுத்துக் கலக்கி உண்டால் நஞ்சு.
12. சிட்டுக்குருவி, தித்திரிப்புள், காடை, மயில், உடும்பு இவற்றின் இறைச்சியை–ஆமணக்கு விறகு, எண்ணெயில் சமைத்தால் உடனே உடலை எமன் எடுத்துச் செல்வான்.
13. மஞ்சளைக் கடுகெண்ணெயில் வறுத்தல், நாரை இறைச்சியுடன் கள் குடித்தல்நஞ்சாகும் .
14.காராமணியுடன் நாரை சமைத்தல்நஞ்சாகும் .
15.தாமரை விதையுடன் தேனுண்ணல் நஞ்சாகும் .
16.தயிர் மோருடன் வாழைப்பழம் உண்ணல்நஞ்சாகும்.
17.பனம்பழத்துடன் வாழைப்பழம் உண்ணல்நஞ்சாகும்.
18. மணத்தக்காளிக் கீரையை இரவில் சமைத்துக் காலையில் உண்ணல் அனைத்தும் கடும் நோயைத்தரும் குற்ற உணவுகளாகும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல் நலனைப் பாதிப்படையச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்றும், விரிவாக உரைக்கப்பட்டுள்ளது.
19.இவற்றில், வெண்கலம், பித்தளை, தயிர், மோர், பால், முள்ளங்கி, பருப்பு வகைகள், உளுந்து, பழங்கள், இறைச்சி, குசும்பாக்கீரை, மணத்தக்காளிக் கீரை, ஆமணக்கு, வாழைப்பழம் போன்ற உணவுகள் பிற உணவு வகைகளோடு சேர்ந்து உணவாகும் போது, அவ்வுணவு நஞ்சாகும் என்று உரைக்கப் பட்டிருக்கிறது.