Wednesday, December 26, 2012

பற்பசையில் விஷம்!!!

பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும். 

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். எனக்கென்னமோ,இந்த உண்மையை 1970களிலேயே கண்டுபிடித்தாலும்,இப்போதுதான் இந்தியா முழுக்க பரப்ப முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

இந்தியாவிற்கு நாலாபுறமும் ஆபத்து தான்: மோகன்பாகவத் பேச்சு


மீரட்: சீனாவால் மட்டுமல்ல இந்தியாவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து அதிகரித்துவருகிறது என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் கூறினார். உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள மாதவ்கஞ்ச் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மூன்றுநாள் முகாம் நடந்தது.
முகாமில் இறுதிநாளான நேற்று கொண்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது: சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நம் நாட்டிற்கு பெரும் ஆபத்து தான். சீனா மட்டுமல்ல அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் உள்ளிட்ட நாலாபுறங்களிலும் இந்தியா பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை ஒரு போதும் விட்டுவைக்க கூடாது. இந்நாடுகள் இந்தியாவிற்கு எதிராக போர்க்குணத்துடன் உள்ளன.
டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டிற்கு துயரமான ஒன்றை ஏற்படுத்திவிட்டது. தலைநகருக்கு இப்படி களங்கம் ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. இதிலிருந்து டில்லிநகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு ‌மோகன்பாகவத் கூறினார்.

Friday, December 21, 2012

விநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டானத்தின் ரகசியங்கள்!!!








மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் வழியில் எட்டு கி.மீ.தூரம் பயணித்தால் ஒரு கிராமம் வரும்.அந்த கிராமத்தின்பெயர் மங்கநல்லூர்.மங்க நல்லூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வழுவூர் வீரட்டானம் கோவிலுக்குப்பயணிக்கலாம்;அல்லது மங்கநல்லூருக்கு சிறிது தூரம் முன்பாக வழுவூர் என்ற பழைய பலகை இருக்கும்;அந்த பலகை காட்டும் பாதையில் இரண்டு கி.மீ.தூரத்தில் பயணித்தால் வழியில் ஒரு ரயில் தண்டவாளமும்,அதைக்கடந்தால் ஒரு அழகிய கிராமமும் அதையும் கடந்தால் பாழடைந்த ஆனால் மிகப் பிரம்மாண்டமான ஆலயமும் தென்படும்;இந்த ஆலயமே வழுவூர் ஆகும்.சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாலபைரவர் வீரதீரச் செயல் செய்த இடம் இதுதான்;வழுவூர் அட்டவீரட்டானங்களில் ஏழாவது வீரட்டானம் ஆகும்.


பிரம்மாவின் புதல்வர்கள் 48,000 ரிஷிகள் இங்கே பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தனர்;அப்படி தவம் செய்து வரும்போது தாங்களே பெரியவர்கள் என்ற எண்ணத்தில் சதாசிவத்தை வழிபாடு செய்யாமல் இருந்தனர்;இவர்களுக்கு பாடம்புகட்ட வேண்டி சிவபெருமானும்,மஹாவிஷ்ணுவும் இங்கே வருகைதந்தனர்;சிவபெருமான் பிச்சாடனர் வடிவம் எடுத்து வந்தார்;மஹாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து இந்த பகுதிக்கு வந்தார்;இதனால் கோபமுற்ற( கலியுகம் என்பதால் இந்த வரலாற்று உண்மையில் சில விஷயங்களை எடிட் செய்தே வெளியிடவேண்டியிருக்கிறது)மஹாவிஷ்ணுவின் மோகினி வடிவமும்,சிவபெருமானின் பிச்சாடனர் வடிவமும் இணைந்து ஐயப்பன் இங்கே பிறந்தார்;எனவே,ஐயப்பன் பிறந்த இடம் வழுவூர் தான்!

48,000 ரிஷிகளும்  கோபத்தில் சிவனுக்கு எதிராக அபச்சார யாகம் நடத்தினர்;யாக குண்டத்திலிருந்து எழுந்த பாம்புகள்,மழு,யானை போன்றவைகள் சிவபெருமானின் அணிகலன்களாக மாறின;இந்த சம்பவம் நிகழ்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப்பின்னர்,இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது;


யானை வடிவில் ஒரு அசுரன் தினமும் இங்கே வருகை தந்து சிவபூஜை செய்து வந்தான்;அவ்வாறு தினமும் வழிபட்டதால்,பிறப்புஇறப்பு இல்லாத முக்தியைப்பெற்றான்;அதனாலும் இந்த ஊருக்கு வழுவூர் என்ற பெயர் உண்டானது;


பராசக்தியின் அழுக்கிலிருந்து முழுமுதற்கடவுள் விநாயகர் பிறந்ததாக நாம் காலம் காலமாக கேள்விப்பட்டிருக்கிறோம்;அது வடிகட்டினப்பொய் என்பது இந்த கோவிலின் ஸ்தலபுராணங்களை வாசிக்கும்போது அறியமுடிந்தது;



விநாயகப்பெருமானின் நிஜ புராணம் இங்கேதான் நிகழ்ந்திருக்கிறது;அதைக் கொஞ்சம் பார்ப்போமே! அசுர உடலும் யானை முகமும் கொண்டிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரன் வானவர்களுக்கு மிகுந்த தொல்லைக் கொடுத்தான்;விஷ்ணு முதலான தேவர்கள் சிவபூஜை செய்து வழிபட்டனர்;கஜமுகாசுரனிடமிருந்து தங்களைக் காத்தருளுமாறு சிவப் பரம்பொருளை வேண்டினர்;குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு உருவமும் இல்லாத கயிலைநாதன் யானை வடிவம் கொண்டார்;உமையை பெண்யானையாக உருக் கொளச் செய்தார்;தொழுகின்றவர்களின் துன்பம் தீர்ப்பதற்காக கணபதி என்ற சிவநாமம் கொண்ட யானையை அருள் நோக்கினால் ஈசன் படைத்து அருளினார்;மூன்று கண்களும் ஒற்றைத்தந்தமும் கொண்டு பிறந்த யானைக்குட்டியைக் கண்ட தேவர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தனர்.


பிடி அதன் உரு உமை கொள
மிகு கரி அதன் வடிகொடு
தனது அடிவழிகொடு
தனது அடி வழிபடும் அவர் இடர் கடி
கணபதி வர அருளினன்
மிகு கொடை வடிவினர் பயில்
வலிவலம் உறை இறையே(சம்பந்தர்)

கணபதி என்னும் களிறும்(அப்பர்)
என்று ஈசனை நேரில் வாழ்ந்த அருளாளர்கள் அருளிச் செய்த தெய்வீகத்  தேவாரத்தொடர்கள் கணபதி என்ற யானை பிறந்த முறையைப்பாடுகின்றன.


ஒற்றைச் சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை முக்கண்
மிக்கு ஒவாதே பாய் மாதானத்து உறு புகர் இறையைப்
பெற்றிட்டே(சம்பந்தர்)


ஒற்றை மருப்பின் முக்கண்
நாரைப் பதியுள் சிவ களிறே(நம்பியாண்டார் நம்பி)


என்று தெய்வ மழலை திருஞான சம்பந்தரும் பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியும் ஒரு தந்தமும் மூன்று கண்களும் கொண்டு பிறந்த யானைக் கன்றின் தோற்றத்தைப்போற்றுகின்றனர்.

வழுவூர் செல்லும்போது பூசாரியிடம் இந்தக்கோவிலின் பெருமைகள் என்ன? என்பதை மறவாமல் கேளுங்கள்;கஜசம்கார மூர்த்தி என்ற பெயரில் ஸ்ரீகாலபைரவர் சிவபெருமானாக காட்சியளிக்கிறார்;சிலர் ஸ்ரீகாலபைரவர் தோன்றுவதற்கும் முன்பே சதாசிவனே வீரதீரச் செயல் செய்ததாகக் கூறுகின்றனர்;ஆனால்,இங்கே மூலவராகிய சிவபெருமானின் லிங்கத்திற்குள் இருப்பது சாட்சாத் ஸ்ரீகால பைரவப் பெருமானே!


யானையின் தலை மட்டும் முழுமையாக ஒரு திருவடியின் கீழ் இருக்க மற்றொரு திருவடியின் அடிப்பகுதி(உள்ளங்கால்) வெளிப்புறம் தெரியும் வண்ணம் காலைத் தூக்கி நின்று கைகளை விரித்துப் பின்னாலிருந்து யானையின் தோலைப் போர்த்திக் கொள்ளும் அருமையான திருக்காட்சியைக் காண்பதற்கு கோடி கண்கள் இருந்தாலும் குறைவே! 

தீபாராதனை காட்டும் போது ஒளிவிடுகின்ற கஜசம்கார மூர்த்தியின் திருமேனியைக் கண்டால் மனிதப்பிறவி பெற்ற பலனை,தமிழ்நாட்டின் அற்புதத் திருத்தலங்கள் 33,000ஐயும் தரிசித்த பலனை முழுமையாக உணர முடியும்;மஹாவிஷ்ணு தேடித் தேடித் திரிந்தாலும் காணமுடியாத திருப்பாதத்தினைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்களின் புண்ணியத்திற்கு உலகில் ஈடு இணண இல்லை;


இதற்கு மேல் வழுவூர் வீரட்டேஸ்வரர் பற்றி எழுத பக்கங்கள் போதாது; அவ்வளவுப்பெருமைகள் இருப்பதால் பாகங்களாக அடுத்தடுத்து நமது ஆன்மீகக்கடலில் வாசிக்கலாம்;மாசி மகத்தன்று  சிறப்பான பூஜைகளும்,வழிபாடுகளும் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருகின்றன;


காகபுஜண்டரின் அருள் பெற்ற திரு.தருமலிங்க சுவாமிகள் அவர்கள் தமது பைரவ ரகசியம் என்ற நூலில் வழுவூர் பற்றி மிகச் சுருக்கமாக அதே சமயம் நுட்பமான ஒரு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்.ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள்,நமது கடுமையான கர்மவினைகளைத் தீர்க்க விரும்புவோர் இவரது ஆன்மீக வழிகாட்டுதலைப்பின்பற்றினால்,வெகு எளிதாகவும்,விரைவாகவும் ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறலாம்.


யாருக்கெல்லாம் தியானம் கைகூட வில்லையோ? அது எந்த விதமான தியானமாக இருந்தாலும் சரி; அவர்கள் வழுவூர் வீரட்டானத்திற்கு மாதம் ஒரு நாள்  வீதம் பத்து நாட்கள் வர வேண்டும்;மூலவராகிய கஜசம்கார மூர்த்தியின் சன்னதியின் முன்பாக  சுமார் முப்பது நிமிடம் வரையிலும் (அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரையிலும்);தாம் அறிந்த தியான வழிமுறைப்படி தியானம் செய்ய வேண்டும்;மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு நாள் என்று பத்து நாட்கள் வருகை தந்து தியானம் செய்து வர வேண்டும்.இப்படி பத்து நாட்கள் வரையிலும் தியானம் செய்து விட்டால்,அதன்பிறகு அவர்களின் தியானம் சுலபமாகக் கைகூடும் என்று அவர் உபதேசிக்கிறார்.


நாம் என்ன செய்யலாம்? ஸ்ரீகால பைரவரின் அவதார நட்சத்திரமான பரணி நட்சத்திர நாளில் அல்லது ஸ்ரீசதா சிவனின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் அல்லது நமது பிறந்த நட்சத்திர நாளில் அல்லது மாதாந்திர அமாவாசை நாளில் இவ்வாறு வந்து தியானம் செய்வோம்;இந்த ஜன்மத்தையே சுத்தமான பிறவியாக ஆக்கிடுவோம்;

நன்றி:அட்டவீரட்டானங்கள்,பக்கங்கள்157,158,166,172,173.


ஓம்சிவசிவஓம்



நான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்!!!






உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரது சுவாசமே வாக்கிய மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கங்களாக விரிவடைகிறது.ஸ்ரீகால பைரவர் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே விநாயகரும்,முருகக் கடவுளும் தோன்றினார்கள்.அப்படித் தோன்றுவதற்கு முன்பே ஸ்ரீகால பைரவர் தனது சாகசச் செயல்களால் பிரபஞ்சத்தில் மனிதர்கள்,தேவர்கள்,மும்மூர்த்திகளின் துயரங்களைத் தீர்த்துவைத்தார்;அவ்வாறு தீர்த்து வைத்துவிட்டு,தனது தந்தையாகிய சிவலிங்க வடிவத்திலேயே எட்டு இடங்களில் மறைந்திருந்து அருளாட்சி புரிய ஆரம்பித்தார்;அந்த எட்டு இடங்களே அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


அஷ்ட வீரட்டானங்களில் நான்காவதாக இருப்பது திருப்பறியலூர் ஆகும்.இந்த வீரட்டானம் மயிலாடுதுறை என்ற மாயவரம் அருகே பரசலூர் என்ற பெயரில் ஒரு சிற்றூராக இருக்கிறது.இந்த பரசலூரில் இருக்கும் வீரட்டானம் சாலைப்போக்குவரத்திலிருந்து விலகியே அமைந்திருக்கிறது.


அட்டவீரட்டானங்களில் சாலையோரம் அமைந்திருக்கும் வீரட்டானங்கள் திருக்கடையூர்,திருவதிகை,திருக்கண்டியூர்,திருக்கோவிலூர்.      சாலையிலிருந்து விலகி,சற்றுத் தொலைவில் இருக்கும் வீரட்டானங்கள் வழுவூர்,பரசலூர்,திருக்கொறுக்கை,திருவிற்குடி ஆகும்.


மயிலாடுதுறையில் இரண்டு நாட்கள் தங்கினாலே நான்கு வீரட்டானங்களைத் தரிசித்துவிடமுடியும்.அப்படி தரிசிக்க நமக்கு கார் அல்லது ஆட்டோ அல்லது பைக் வசதி இருக்க வேண்டும்;இந்த இரண்டு நாட்களுமே அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும்.விசாரித்து,விசாரித்துச் சென்றால் மட்டுமே இந்த வீரட்டானங்களை குறித்த நேரத்தில் சென்றடைய முடியும்.பெரும்பாலான வீரட்டானங்கள் மிகப்பிரம்மாண்டமான ஆலயங்களாக அமைந்திருக்கின்றன;அப்படி அமைந்திருந்தாலும் சாதாரண நாட்களில் வெறும் பத்து பேர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்தாலே அது அதிகமாம்;பிரதோஷ நாட்களில் ஐம்பது பேர்கள் வருவது அதிகம் என்று கேள்விப்படுகிறோம்.காரணம் கலியுகத்தில் பாவ ஆத்மாக்கள் இந்தக் கோவில்களில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் ஒரே ஒருமுறை வருவதே அபூர்வமாம்!!!


இங்கே மூலவராக சிவலிங்கம் இருந்தாலும்,அந்த சிவலிங்க வடிவத்தில் இருந்து அருளாட்சி புரிபவர் ஸ்ரீகாலபைரவப் பெருமானே! எனவே,  நீங்கள் இந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது ஆர்வக் கோளாற்றினால் மூலவரை போட்டோ எடுக்க முயலாதீர்கள்;எடுத்தப் பின்னர்,கேமிராக்கள் பழுதாகியிருக்கின்றன;பலருக்கு உடல்நிலை சீர்குலைந்து போயிருக்கிறது;மீண்டும் பூரண உடல் ஆரோக்கியம் பெற ஒரு வாரமாவது ஆகும்.எச்சரிக்கை! கம்யூட்டர் யுகம் வந்தாலும் கம்யூட்டரால் நல்ல ஆட்சியாளர்களைத் தர முடிந்ததா? நமது மனநிலையில் மன ஒருமைப்பாட்டை உருவாக்கிட முடிந்ததா? யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத மனநிலையை மட்டுமே தந்திருக்கிறது;நம் ஒவ்வொருவரையும் காமக் கோட்டிகளாக மாற்றியிருக்கிறது.திமிரை நிஜமான ஆன்மீகவாதிகளிடம் காட்டி சீரழியவேண்டாம்.


மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந் தண்புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே(சம்பந்தர்)


மயிலாடுதுறைக்கு அருகில் செம்பொன்னார் கோவில்(திருச்செம்பொன் பள்ளி) என்ற திருத்தலத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது.விசாரிக்காமல் போனால்,வேறு சில கிராமங்களுக்குச் சென்று தடுமாற வேண்டியிருக்கும்.

பிரம்மாவின் மகன் தட்சன் ஆவார்.இவரது மகளாகப் பிறக்க சதாசிவன் தனது மனைவியான பராசக்திக்கு வரமருளினார்;சிவபூஜையும்,தவமும்புரிந்து வளர்ந்த தாட்சாயணியை பரமேஸ்வரன் தனது தேவியாக்கிக்கொண்டு அருளினார்.


வேள்விகளின் நாயகனாக பரம்பொருளான சிவனையே ஆவாஹனம் செய்வது யுகம்,யுகமாக இருந்து வரும் வழக்கம் ஆகும்.கிருதயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம் மற்றும் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்திலும் வேள்விகள் செய்யும் போது அவிர்ப்பாகத்தை முதலில் சதாசிவன் என்ற பரமேஸ்வரனுக்கு தருவதே வழக்கம்;


ஆனால்,சர்வேஸ்வரனின் மாமனார் என்ற அகங்காரத்தினால் தாம் நடத்தும் வேள்விக்கு பிரம்மன் முதலான தேவர்களை அழைத்து வந்து நாத்திக வேள்வி நடத்தினான் தட்சன்.இந்த வேள்வியில் கேட்காமலேயே கலந்து கொண்டாள் பரமனைத் திருமணம் செய்த தாட்சாயணி!
இதனால் கோபமுற்ற பரமேஸ்வரன் தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஸ்ரீகாலபைரவரைத் தோற்றுவித்தது போல வீரபத்திரரையும் தோற்றுவித்தார்;


திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்
ஆயிரம் மணிக்கரத்து அமைத்த வாள் படையுடன்
சயம் பெறு வீரனைத் தந்து அவன் தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த
இருள் மனத் தக்கன் பெருமகம் உண்ணப் புக்க
தேவினர் தம் பொரு கடற்படையினை
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய கூடல் பெருமான்
என்று சங்கப்புலவர் கல்லாட தேவ நாயனார் பாடுகிறார்.
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிரம் முகம் நாசி சிறந்த கை தோள் தாள்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே
என்று திருமந்திரம் அரன் அருள் இல்லாமல் தட்சயாகம் அழிந்ததைப்  பாடுகின்றது.


வீரபத்திரர் தனது படைகளோடு சென்று தட்சனது யாகத்தை அழித்தார்;தட்சனது தலையைத் துண்டித்தார்;இந்த யாகத்தில் கலந்து கொண்ட அனைத்து தேவர்களும் தண்டிக்கப்பட்டனர்;


மிருகத் தலை நினைந்து வருந்திய தட்சன் பல தலங்களையும் தரிசனம் செய்து வழிபட்டு சென்னையை அடுத்துள்ள அரக்கோணம் அருகே உள்ள திருவூறல் என்னும் திருத்தலத்திற்குச் சென்றான்.நந்தியின் வாயிலிருந்து சாதாசர்வ காலமும் நீர் ஊறிக் கொண்டிருப்பதால் திருவூறல் என்று பெயர் உண்டானது;இந்தத்திருத்தலத்திற்கு ஆட்டுத்தலையோடு வந்த தட்சன்,ஓலமிட்டு தனி லிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டான்.

அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை விதித்து வைக்கும் விதி நாயகன் தட்சனுக்கு மீண்டும் பழைய வடிவை வழங்கியருளினார்;ஒப்பில்லாத கருணைக் கடலின் மாபெரும் கருணைக்கு தட்சன் வியந்து மகிழ்ந்தான்;தட்சன் சிவபூஜை செய்து பழைய வடிவம் கொண்ட திருத்தலமே தக்கோலம் எனப்படும் திருவூறல் ஆகும்.தட்சன் ஓலமிட்டு அலைந்து திரிந்ததால் இத்தலம் தக்கன் ஓலம் என்று பெயர் பெற்றது.அதுவே காலப்போக்கில் தக்கோலம் என்று ஆயிற்று.

ஆலகால விஷத்தினால் இளமை நீங்கி முதுமை அடைந்த பராசக்தி பல திருத்தலங்களை வழிபட்டு திருபறியலூரை அடைந்தாள்;திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் பராசக்தியின் முதுமையைப்போக்கி இளமையை அருளச் செய்து பாலாம்பிகை ஆக்கினார்.


சிவபூஜையும் தவமும் புரிந்த அம்மன் திருக்கரங்களில் ருத்ராட்சமாலையும்(பெண்கள் எப்போதும் ருத்ராட்சம்  அணிந்திருக்கலாம் என்ற மரபு இங்கே தான் உருவானது;இப்படித் தான் உருவானது) தாமரைப்பூவும் தாங்கி பாலாம்பாள்,இளங்கொம்பு அணையாள் என்ற பெயர்களுடன் தனிச் சந்நிதியில் இங்கே அருள்பாலித்து வருகிறாள்.


நால்வகைச் சாதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதிமக்களாக அந்தணர்களே இருந்தார்கள்;பல ஊர்களின் பெயர்களின் அந்தணர்கள் என்ற பெயர் இதனாலேயே உண்டானது;தொல்காப்பியத்தில் பார்ப்பன வாகை என்று ஒரு தனித் துறையே கூறப்பட்டுள்ளது.


பசு உண்ணும் புலைச் சமயங்களான முகம்மதிய,கிறுஸ்தவ அந்நிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது மக்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்;தீய பழக்க வழக்கங்கள் தலைவிரித்து ஆடியதாலும் நல்லோர்களின் எண்ணிக்கை குறைந்து போனது;இதனால் அந்தணர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோய்விட்டது.


திருப்பறியலூர் வீரட்டேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு ஆணவம் குறையும்;நாத்திக இருள் மறையும்;ஞான ஓளி பிறக்கும்;பக்தி பெருகும்;பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.


கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே

ஓம்சிவசிவஓம்

பெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டிகள்-5 பாகங்கள்




இந்த உலகின் எந்த ஒரு பண்பாட்டை விடவும் உயர்ந்த பண்பாடு நமது இந்துப் பண்பாடு! ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும்? எப்படி பழக வேண்டும்? என்பதை இந்த உலகிற்குச் சொல்லிக் கொடுத்தது நமது இந்துப் பண்பாடுதான்.இதை  கடந்த 200 ஆண்டுகளாக மேல்நாட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிரூபித்துக்  கொண்டே இருக்கின்றன;திராவிடக் கட்சியோ இந்த ஆராய்ச்சி முடிவுகளை தினசரிகளில் வெளிவராமல் பார்த்துக் கொள்கின்றன;நாமோ அவர்களையே தொடர்ந்து ஆளும்கட்சியாக்கிக் கொண்டே இருக்கிறோம்;300 ஆண்டு கிறிஸ்தவ ஆங்கிலேய ஆட்சியினால் நமது பாரம்பரியமும் பெருமையும் மிக்க வீரவிளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை மறந்து,மட்டையடி என்ற விளையாட்டின் பின்னால் அணிவகுத்தோம்;


சுதந்திரம் வாங்கியப்பின்னர் நமது தேசிய மொழிகளான தமிழையும்,சமஸ்க்ருதத்தையும் மறந்து,ஆங்கிலம் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாக நினைக்கத் துவங்கினோம்;அடிமைபுத்தியை மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலமாக நமக்குத் தெரியாமலேயே நமக்குள் திணித்தான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்!!


தமிழ்த்திரைப்படங்கள்,மெகாத் தொடர்களின் நமது தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்துப்பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தப்படும்போதும்,கேலி செய்யப்படும்போதும் நாம் அதை நினைத்து கொந்தளிப்பதில்லை;மாறாக சிரிக்கிறோம்;இப்படி சிரிப்பதே மெக்காலே கல்வித் திட்டத்தின் வெற்றி! நாம் எப்போது நம்முடைய முன்னோர்களின் சாதனைகளை  உணரப் போகிறோம்?

தற்போது அவனது உணவுப்பழக்கத்துக்கு நம்மை அடிமைப்படுத்திவிட்டான்;இதனால்,பெருமையும்,மதிப்பும் மிகுந்த நமது பெண் இனம் எப்படியெல்லாம் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது? என்பதை நான்கு பாகங்களாக நமது நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் பேசியிருக்கிறார்.கேட்போமா?






இவரது செல் எண்:9894487122 (9AM to 9PM)

இவரது மின் அஞ்சல்:neurovijay@gmail.com

ஓம்சிவசிவஓம்

Thursday, December 20, 2012

தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!



டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.
மனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமே!மேம்பட்ட நிலையில்  உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.

‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.

ஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

ஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.

மகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.

உலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.

மகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை!!!

ஓம்சிவசிவஓம்
ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 20,21;வெளியீடு 4.5.12        இது தொடர்பான பிற ஆன்மீகக்கடல் பதிவுகள்: 1.ஜீவசமாதிகளின் அருளாற்றலைப் பெறும் ஆன்மீக வழிமுறைகள்                                   2.சென்னை மாநகருக்குள் இருக்கும் ஜீவசமாதிகள்                                                             3.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஜீவசமாதிகள்           4.அளவற்ற சக்திவாய்ந்த பாம்புக்கோவில்சந்தை மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,(சங்கரன்கோவில் அருகில்)  5.சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதி ஜீவசமாதிகள்          6.திண்டுக்கல்,பெரியகுளம்,கரூர்,திருச்சி,தஞ்சை,திருவாரூர்,நாகை பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்                       7.திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி(புதுச்சேரி) பகுதி ஜீவசமாதிகள்                                          8.சென்னையின் சுற்றுப்புறங்களில் இருக்கும் ஜீவசமாதிகள்      9.நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை,காரைக்குடி,திருப்பத்தூர்,மானாமதுரை பகுதியில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகள்                

எட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு!!!





அறுபதாம் கல்யாணம் இங்கே காலம் காலமாக செய்யப்பட்டு வருவதன் மூலமாக நாம் திருக்கடையூரை அறிந்திருக்கிறோம்;அதையும் தாண்டி ஏராளமான ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன;என்றென்றும் பதினாறு வயதுடன் வாழும் வரத்தை மார்க்கண்டேயன் இங்கேதான் பெற்றான்;தொடர்ந்த சிவவழிபாட்டின் மூலமாக இந்த வரத்தை சதாசிவனாகிய ஈஸ்வரமூர்த்தியிடமிருந்து பெற முடிந்தது;


மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய்ப் பிறவா உரு ஆனவனே
கண்ணாரும்  மணியே கடவூர்தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே( சுந்தரர்)
திருக்கடவூர் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகே  உள்ளது.


வார்ந்த நஞ்சு அயின்று
வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல்(திருவாசகம்)
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு
ஒரு தோழம் தேவர் விண்ணில் பொலிய
அமுதம் அளித்த விடைசேர் கொடி அண்ணல்(சம்பந்தர்)


என பாற்கடலிலிருந்து வந்த விஷத்தை உட்கொண்டு உலகங்களைக் காத்தருளிய பரமேஸ்வரனது திருவருளால் பெறப்பட்ட அமிர்தம் வைக்கப்பட்ட கடம்(கலசம்)லிங்கமான ஊர் ஆதலால் கடவூர் என்றுபெயர் பெற்றது.


மகேஸ்வரது திருவருளால் மரணத்தைக் கடந்த திருவூர் ஆதலாலும் கடவூர் என்று பெயர் பெற்றது.காலனைக் கடந்த காலசம்காரியின் ஊர் ஆதலாலும் கடவூர் எனப்பட்டது.


பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த
ஆலினில் கீழ் இருந்து ஆரணம் ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே

என்று மார்க்கண்டேயருக்காக மாதவர் நாயகன் காலசம்காரம் செய்ததை திருநாவுக்கரசர் ஒரு பதிகம் முழுவதும் போற்றித் தல வரலாற்றைச் சிறப்பிக்கின்றார்.


திருக்கடையூர் இரண்டு திருக்கோவில்களைக்கொண்டுள்ளது; திருக்கடையூர் எனப்படும் திருக்கடவூர் வீரட்டம் என்ற திருக்கோவிலும்,அதற்கு சற்றுத் தள்ளி உள்ளே திருமெய் ஞானம் எனப்படும் திருக்கடவூர் மாயானம் என்ற திருக்கோவிலும் உள்ளன.


திருக்கடவூர்  மயானப்பெருமான் பிரம்ம விஷ்ணுக்களால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால் பெரிய பெருமான்,பிரம்மபுரீஸ்வரர் என்று திருநாமங்கள்;இரண்டு திருக்கோவில்களுக்கும் தேவார திருப்பதிகங்கள் உள்ளன.
ஜீவராசிகளின் உயிர் பறிக்கும் யமனே உயிர் இழந்து சவமாக இருந்ததால் பூமி தேவி பாரம் தாங்க முடியாமல் தவித்தாள்;திருக்கடவூருக்கு வந்து அமிர்தகடேஸ்வரரையும் காலசம்காரமூர்த்தியையும் வழிபட்டாள்.


திருப்பைஞ்ஞீலியில் பாசத்தை மீண்டும் பெற்ற எமதர்மன் சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் திருவான்மியூருக்கு அருகே உள்ள வேளச் சேரி எனப்படும் வேதசிரேணி என்ற தலத்தில் யமதீர்த்தம் என்னும் திருக்குளம் உண்டாக்கி லிங்கப்பிரதிட்டை செய்து பூஜித்துத் தண்டாயுதத்தை மீண்டும் பெற்றான்.யமனுக்குத் தண்டாயுதத்தை அருளிச் செய்த பரமனுக்குத் தண்டீஸ்வரர் என்று திருநாமம் ஏற்பட்டது;திருக்கோவிலுக்கு தண்டீஸ்வரம் என்றும் பெயர்  உண்டானது.


கடலில் எழுந்த ஆலகால விஷத்தின் காற்றுப் பட்டே மகாவிஷ்ணுவின் மேனி  முழுவதும் கருமையானது;முக்தி பெற்ற முக்தாத்மாவான சுந்தரர் என்ற சிவகணமோ எங்கும் ப்ரவிய ஆலகால விஷத்தை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உருண்டையாகத் திரட்டி எடுத்துக் கொண்டு வந்தார்.இதனால் ஆலகால சுந்தரர் எனப்பட்டார்.சிவலோகத்தில் இருந்த ஆலால சுந்தரர் ஒரு நொடி மகேஸ்வரனை மறந்த போது மலங்களால்(மாயையால்)பற்றப்பட்டதால் பூவுலகில் சுந்தரமூர்த்தி சுவாமிகளாக அவதாரம் செய்தார்.பூவுலகிலும் அவரது வல்லமை மகாவிஷ்ணுவின் வல்லமையை விடப் பலமடங்கு அதிகமாகவே பெரிதும் வியப்பூட்டும் வகையில்  இருந்தது;யானையின்காலைக் கவ்விக்  கொண்டிருந்த முதலையின் வாயிலிருந்து யானையை விஷ்ணு காப்பாற்றினார் என்று பெருமையாகக் கூறுகின்றனர்.
ஆனால் சுந்தரரோ

அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்
சொல்லு காலனையே


 என அவிநாசித் திருத்தலத்தில் முதலை முழுவதும் விழுங்கி உண்டுவிட்ட பிள்ளையை சில ஆண்டுகளுக்குப்பிறகு அவிநாசியப்பரின் திருவருளால் மீண்டும் உயிரோடு தக்கவளர்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்.இத்தகைய அதிசய ஆற்றல் கொண்ட சுந்தரர் எல்லாம் வல்ல பரம்பொருளால் வலிந்து ஆட்கொள்ளப்பட்டார்.


இத்திருத்தலம் இறந்து போன பிரம்மனுக்கு பரமசிவம் மீண்டும் உயிர்கொடுத்துப் படைப்புத் தொழிலை அருளிச் செய்த திருத்தலமாகும்.மயானம் என்ற பெயருடைய திருத்தலங்கள் ஐந்து.அவற்றில் திருமெய்ஞானம் என்று வழங்கப்படுகின்ற திருக்கடவூர் மயானமும் ஒன்று.
திருக்கடவூர் வீரட்டேஸ்வரரை வழிபடுகிறவர்களுக்கு மரணவேதனை இல்லை;ஆயுள் கூடுகிறது;வறுமை நீங்கி செல்வம் சேர்ந்து வளமான வாழ்வு உண்டாகிறது.மறுபிறவி நீங்கி முக்தி உண்டாகிறது;திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் ஆயுஷ் ஹோமம் செய்வது மிகவும் சிறப்பான பலனைத்தரும்.தந்து பூரண ஆயுளை அளிக்கின்றது.


அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு  மான்
கன்றாரும் கரவா கடவூர்த் திருவீரட்டானத்துள்
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீ அலதே
மருவார் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழத்
திருமால் பிரமன்  இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே(சுந்தரர்)


ஆதாரம்:அட்டவீரட்டானங்கள்,பக்கங்கள்176,177,182,188,190,191,204.


ஓம்சிவசிவஓம்