Monday, October 1, 2012

வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும்!!!




உங்களுடைய நெருங்கிய நண்பராக உங்கள் ஊர் எம்.எல்.ஏ.இருந்தால்,நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?யோசித்துப்பாருங்கள்!


இன்னும் கொஞ்சம் பெரிதாக கற்பனை செய்து பார்த்தால்,நமது நாட்டின் பிரதமரின் மனதில் நீங்கள் நீக்கமற நிறைந்திருந்தால்,நீங்கள் நினைக்கும்போதெல்லாம் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால்,என்னவெல்லாம் உங்களால் செய்ய முடியும்?

கற்பனை செய்தே பார்க்கமுடியாத அதிகார மையமாக மாறிவிடுவீர்கள்.அரசியல் அதிகாரத்தின் விளைவுகளை நாம் இன்று பார்க்கிறோம்.அரசியல் அதிகாரத்தை விடவும் அதிகமான “செல்வாக்கு” இறைவழிபாட்டின் மூலமாக உங்களுக்கு கிடைக்கவே இந்தப் பதிவு உங்களுக்கு எழுதப்பட்டுள்ளது:

இந்துதர்மத்தின் வரலாறே மிகவும் நீநீநீநீளமானது;சுமார் இருபது லட்சம் வருடங்களையும்,அதையும் விடவும் நீண்ட காலத்தைக்கொண்டது;நாம் இன்று வழிபாடு செய்யும் கணபதி,முருகக்கடவுள்,அம்பிகை,பத்திரகாளி,சுடலை,முனி, கருப்பசாமி,அங்காளபரமேஸ்வரி,மகாலட்சுமி,பெருமாள்,   கல்விக்கடவுளாம் சரஸ்வதி,ஹயக்ரீவர்,குலதெய்வங்கள்,சிவபெருமான்,அழகர்,   மாடசாமி என்று கடவுள்களின் எண்ணிக்கையே சில ஆயிரங்களைத் தொடும்;இந்த தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவரே ஸ்ரீகாலபைரவர் ஆவார்.

ஏன் ஸ்ரீகாலபைரவர் இந்த தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருக்கிறார்? அதுதான் இந்துதர்மத்தின் அடிப்படை ஆதாரமாகும்.
மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது;அப்படிப்பட்ட சாபத்தை அவர் தனது தவற்றினால் பெற்றுவிட்டார்;மஹாவிஷ்ணு நம்மை காக்கும் கடவுள்:நம்மை அவர் காப்பதற்கு உதவி புரிவது அவரது துணைவி மஹாலட்சுமி! அழிப்பவர் ருத்ரன்(சிவன் அல்ல:) இங்கே அழிப்பது என்பது நம்மை அழிப்பது அல்ல;நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன்;இந்த மும்மூர்த்திகளையும் நேரடியாக நிர்வகித்துவருபவரே ஸ்ரீகால பைரவர்!



 காலம் என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் இவருக்கு கால பைரவர் என்று பெயர் வந்தது.எட்டுவிதமான பைரவர்களில் நம்மால் வழிபடக்கூடியவர் இரண்டே இரண்டு பேர்கள் மட்டுமே! ஒருவர் ஸ்ரீகால பைரவர்; மற்றவர்            ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்!! இந்த இருவரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் எட்டு பைரவர்களையும் விடவும் உயர்ந்தவர்;

முருகக்கடவுளின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்களே அறுபடைவீடுகளாக இருக்கின்றன.திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையிலும் தமிழ்நாடெங்கும் முருகக்கடவுளின் அறுபடைவீடுகள் பரவிக்கிடக்கின்றன.அதே போல,அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்தைச் சுற்றிலும் நான்கு வீரட்டானங்களும்,திருவாரூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,பண்ருட்டிக்கு அருகே ஒரு வீரட்டானமும்,தஞ்சாவூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,திருஅண்ணாமலைக்கு அருகே ஒரு வீரட்டானமும் அமைந்திருக்கிறது.சுமாராக நானூறு சதுர கி.மீ.தூரத்துக்குள் அட்டவீரட்டானங்களும் அமைந்திருக்கின்றன.இந்த அட்ட வீரட்டானங்களிலும் ஒன்றிரண்டு மட்டுமே பிரபலமான சிவாலயமாக அமைந்திருக்கிறது.அங்கே தினமும் சில ஆயிரம் பேர்கள் வந்து செல்லும் ஆலயங்களாக இருக்கின்றன.


இந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவப்பெருமான் மூலஸ்தானத்தில் சிவபெருமானாகவே காட்சியளிக்கிறார்.இந்த அட்டவீரட்டானங்களின் வரலாறு பல நூற்றாண்டுகளாக பிரபலமடையவில்லை;இந்த அட்டவீரட்டானங்களுக்கும் செல்ல யாரால் முடியும் தெரியுமா? யார் நீதி,நேர்மையுடன் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார்களோ அவர்கள் மட்டுமே செல்லமுடியும்.மற்றவர்கள் முயற்சி எடுத்தாலும் இந்த ஆலயங்களுக்குச் சென்று வருவது கடினமே!

இந்த அட்டவீரட்டானங்களை முழுமையாக தரிசிக்க நான்கு நாட்கள் தேவைப்படும்;ஒரு நாளுக்கு காலை ஒரு வீரட்டானம்;மாலை ஒரு வீரட்டானம் வீதம் நான்கு நாட்களில் எட்டு வீரட்டானங்களுக்குச் செல்ல முடியும்.இவைகளில் பெரும்பாலானவை பிரதான சாலையிலிருந்து விலகியே இருக்கின்றன.ஸ்ரீகாலபைரவரை சிவனாக தரிசித்தே ஆகவேண்டும் என்ற வேட்கை/தாகம் யாருக்கு வருகிறதோ அவர்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.

முதன் முதலில் அப்படி தரிசிக்கும்போது நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மை ஆகும்.நம்ப முடியவில்லையா? டெஸ்ட் செய்து பாருங்கள்:


அட்டவீரட்டானங்களும் அவைகளுக்கான வழித்தடங்களும்:


முதல் வீரட்டானம்=திருக்கண்டியூர்
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.
திருமூலப் பெருமானும்
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)
மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை;


இரண்டாவது வீரட்டானம்:திருக்கோவிலூர்
கோவல்நகர் வீரட்டம்,தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது.திரு அண்ணாமலைக்கு அருகில் திருக்கோவிலூர் அமைந்திருக்கிறது.
கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே(திருமந்திரம் 339)
அலெக்ஸாண்டருக்கு முன்பே இந்த உலகத்தை ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜராஜசோழன் ஆவார்.(வெகு விரைவில் உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்)இன்றைய ஆசியக் கண்டம் முழுவதையும்,ஆஸ்திரேலியா கண்டத்தையும் ஆட்சிபுரியும் அளவுக்கு இவரது சாம்ராஜ்ஜியம் மிகவும் பரந்துவிரிந்து இருந்தது;அப்படி மிகப்பிரம்மாண்டமான அரசை நிறுவுவதற்குக் காரணம்  இங்கே இருக்கும் ஸ்ரீகாலபைரவரை முறைப்படி வழிபாடு செய்து வந்ததால் தான்! இவரது ஆஸ்தான ஆன்மீக குரு யார்தெரியுமா? ஸ்ரீகருவூர் சித்தர்!

மூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி!

மூன்றாவது வீரட்டானம்:திருவதிகை
பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது.  அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமந்திரம் 343)
மூலவர்:வீரட்டானேஸ்வரர்



நான்காவது வீரட்டானம்:திருப்பறியலூர்


மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும்.திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும்.
மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்;
மூலவளின்பெயர்:இளங்கொம்பனையாள்


ஐந்தாவது வீரட்டானம்:திருவிற்குடி என்ற விற்குடி
திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.
எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமந்திரம் 341)
மூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி


ஆறாவது வீரட்டானம்:வழுவூர்

மிக எளிதாகச் செல்லக்கூடிய ஆனால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீரட்டானம் இது.ஏன் இப்படி நமக்கு மெய்சிலிர்க்கிறது என்பதற்கான காரணத்தை அறிய நமக்கு தகுந்த குரு இந்த பிறவியில் அமைந்தால் தெரியும்.இல்லாவிட்டால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான்.இவரை பார்த்த உடனே நமக்குள்ளே இருக்கும் அத்தனை அகங்காரமும் கரைந்து காணாமல் போய்விடும்;


மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது.இந்த நிறுத்தத்தில் இறங்கி,சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம்;இவ்வ்வளவு பெரிய்ய்ய்ய கோவிலாக இருந்தும் கூட ஒரு நாளுக்கு பத்து பக்தர்கள் வருவதே அதிகம் போலும்!அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமிநாட்களில் உள்ளூர் பக்தர்கள் ஓரளவு கணிசமாக வருவதாகக் கேள்வி!!
சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான்;இதுதான்;இதே தான்!!! ஆமாம்! ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.


ஏழாவது வீரட்டானம்:திருக்குறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம் 346)


மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது.
மூலவர்:வீரட்டேஸ்வரர் மூலவள்:ஞானாம்பிகை
காமம் சார்ந்த பிரச்னைகளால் கடந்த சிலபல வருடங்களாக படாத பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் இங்கே வந்து தொடர்ந்து வழிபட,வழிபட மனதில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் காணாமல் போகும்;முதல் தடவை வந்து சென்றதுமே நமது மனது பரிசுத்தமாகிவிடும் என்பதை உணரலாம்.


எட்டாவது வீரட்டானம்:திருக்கடவூர்

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமந்திரம் 345)



எப்போதும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து செல்லும் வீரட்டானம் இது;காரணம் இங்கே 60 ஆம் கல்யாணம் மிகச் சிறப்பாகவும்,காலம் காலமாகவும் நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம்.
மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி
கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,
மான் கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே(தேவாரம்)


ஒருமுறை போய் வரலாமா இந்த அட்டவீரட்டானங்களுக்கு!!!


ஓம்சிவசிவஓம்



அவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல் 13.4.13 வரை) மைத்ர முகூர்த்தங்கள்




நாம் வாங்கியிருக்கும் கடன் தொகை எவ்வ்வ்வளவு பெரியதாக இருந்தாலும்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ,நாம் வாங்கியிருக்கும் கடனில் அசலில் ஒருபகுதியைத் திருப்பித் தர வேண்டும்.அவ்வாறு திருப்பித்தந்தால்,அதன்பிறகு,அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,விரைவாக தீர்ந்துவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் மைத்ரமுகூர்த்தப்பட்டியலை வெளியிட்டுவருகிறோம்;ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இந்த மைத்ர முகூர்த்த நேரப்பட்டியலைப் பயன்படுத்தி,தங்களது கடன்களைத் தீர்த்துவிட்டனர்.இந்த மைத்ர முகூர்த்தப்பட்டியலை கந்துவட்டிக்குப் பயன்படுத்தி,கடனைத் தீர்க்க முடியாது.
பாலன் என்பவர்,சுகுமாரிடம் ரூ.1,00,000/- கடன் வாங்கியிருக்கிறார்.கி.பி.2002 இல் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்;பாலன் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைத்ரமுகூர்த்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து,ரூ.500/- அல்லது ரூ.1000/-ஐ சுகுமாரிடம் கொடுக்க வேண்டும்.இதை அசலில் வரவு வைத்துக்கொள்ளுங்கள்;மீதிக் கடனை விரைவில் அடைத்துவிடுகிறேன் என்ற அர்த்தம் வருமாறு சொல்ல வேண்டும்.சுகுமார் அதை அசலில் வரவு வைக்க வேண்டும்.அவ்வளவுதான்.இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே,மீதி ரூ.99,500/- அல்லது ரூ.99,000/-கடனை பாலனால் தீர்த்துவிடமுடியும்.இதேபோல,வங்கிக்கடனுக்கும் முயற்சி செய்துபார்க்கலாம்;ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கடன்கள் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
கடன் என்பது சிலருக்கு கவனக்குறைவால் ஏற்படும் சுமை;பலருக்கு ஆடம்பரத்தால் உருவாகும் சுருக்குக் கயிறு;எப்படிப் பார்த்தாலும் கடன் என்பது அவரவரின் கர்மவினையின்  விளைவுதான்.இருப்பினும்  இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்தி விரைவாக கடனைத் தீர்ப்பதும்,அவரவர்களின் பூர்வபுண்ணியமே!!! சிலருக்கு அவர்களின் பிறந்த ஜாதகப்படி,வாழ்நாள் முழுக்க கடன் இருக்க வேண்டும்.அப்பேர்ப்பட்ட நேரத்தில் பிறந்திருப்பார்கள்;அவர்கள் ஒரு கடனை அடைத்துவிட்டு,அடுத்த கடனை வாங்கிட வேண்டியதுதான்.அப்பேர்ப்பட்ட ஆத்மாக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 மணிவரை;

27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை;

13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை;

25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை;

9.4.12 திங்கள்  இரவு 8.30 முதல் 10.30பத்து முப்பது வரை;

20.4.12 வெள்ளி இரவு 7.35 முதல் 9.35 வரை;

7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை;

18.5.12 வெள்ளி காலை 4.05 முதல் 6.05 வரை;

3.6.12 ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை;

14.6.12 வியாழன் காலை 5.49 முதல் 6.49 வரை;

15.6.12 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை;

30.6.12 சனி மாலை 3.35 முதல் 4.50 வரை;

7.8.12 செவ்வாய் இரவு 10.35 முதல் 12.35 வரை;

8.8.12 புதன் இரவு 10.40 முதல் 11.50 வரை;

24.8.12 வெள்ளி மதியம் 12.30 முதல் 2.30 வரை;

4.9.12 செவ்வாய் இரவு 8.50 முதல் 10.50 வரை;

21.9.12 வெள்ளி காலை 10.15 முதல் மதியம் 12.15 வரை;

1.10.12 திங்கள் இரவு 7.07 முதல் 9.07 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.19 முதல் இரவு 7.19 வரை;

14.11.12 புதன் காலை 7.45 முதல் 8.15 வரை;

15.11.12 வியாழன் காலை 6.05 முதல் 6.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 4.40 முதல் 6.40 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் 12.41 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த மைத்ர முகூர்த்த நேரங்களின் மைய பாகத்தைப் பயன்படுத்துதல் நன்று;இந்த மைத்ர முகூர்த்த நேரமானது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்னாடகா,லட்சத்தீவு பகுதிகளுக்கும்; இலங்கை,மாலத்தீவு முழுமைக்கும் பொருந்தும். பிற நாடுகளில் இருப்போர் இந்திய நேரத்துக்கும்,அவர்கள் வாழும் நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு பயன்படுத்தலாம்.கடனில்லாமல் வாழ வாழ்த்துகிறேன்.

ஓம்சிவசிவஓம்

Sunday, September 30, 2012

சித்தர்களின் அருளாசியைப்பெறும் வழிமுறை!!!





கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஒரு சித்தவழிபாட்டுமுறையை பின்பற்றலாம்;இந்த சித்தவழிபாட்டுமுறையை பின்பற்றிட முதல் தகுதி:21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இரண்டாம் தகுதி:அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;யார் இந்த சித்தவழிபாட்டுமுறையைப்பின்பற்றுகிறாரோ அவர் மட்டும் (தற்போதைக்கு) அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் போதும்;
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்டிருக்கும் மாலை(இந்த மாலையில் வேறு எந்த ஒரு பூவும் கட்டப்பட்டிருக்கக் கூடாது.இது மிகவும் முக்கியம்)சில நேரங்களில்/சில ஊர்களில்/சில சந்தர்ப்பங்களில் ரோஜாப்பூமாலை கிடைக்காவிட்டால்,ஒரு தடவை மட்டும் இது இல்லாமல் சித்தர் வழிபாடு செய்யலாம்;

 டயமண்டு வடிவிலான கல்கண்டு ஒரு கிலோ , விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழம் குறைந்தது அரைக்கிலோ;                              விதையில்லாத பேரீட்சைபழம் ஒரு பாக்கெட்,           நெய் தீபம் ஏற்றத்தேவையான பொருட்கள்,நாட்டுவாழைப்பழங்கள் ஆறு,வெற்றியும் கொட்டைப்பாக்கும்,ஒரு பத்திபாக்கெட் போன்றவைகளுடன் ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதிக்குச் செல்லவும்.
முதலில் நீங்கள் வாங்கிய ரோஜாப்பூ மாலையை அவருக்கு அணிவிக்கவும்.நெய் தீபம் ஏற்றவும்;டயமண்டு கல்கண்டு மற்றும் பேரீட்சைப்பழங்களின் பாக்கெட்டுகளை கிழித்து வைக்கவும்;நாட்டு வாழைப்பழத்தின் மீது கொண்டு வந்திருக்கும் பத்தியை பொருத்தவும்;சுமார் 30 நிமிடம் வரை உங்களுடைய கோரிக்கை என்ன என்பதை மனதால் பிரார்த்தனை செய்யவும்.
அதன்பிறகு,அவரது சன்னதியின் முன்பாக விழுந்து வணங்கியப்பின்னர் டயமண்டு கல்கண்டுகளையும்,பேரீட்சைப்பழங்களையும் அங்கே இருப்பவர்களிடம் பாதி அளவுக்கு விநியோகம் செய்யவும்;மீதியை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும்;வீட்டுக்குக் கொண்டு சென்று நமது குடும்பத்தாரிடம் விநியோகம் செய்யவும்.
சில ஜீவசமாதிகளுக்கு நாம் செல்லும் நேரத்தில் ஆட்கள் வராமல் இருக்கலாம்;அப்படி இருந்தால் மொத்த இனிப்புகளையும் எடுத்துக்கொண்டு நமது வீட்டுக்கு வந்து நமது அண்டை வீட்டார் அல்லது நட்பு/உறவு வட்டத்திடம் பகிர்ந்து கொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் வழிபாடு செய்யவும்.எட்டு சனிக்கிழமை மட்டும் செய்யவும்;எட்டாவது சனிக்கிழமை வழிபாடு செய்து முடித்து 90 நாட்கள் வரை காத்திருக்கவும்;அந்த 90 நாட்களுக்குள் நமது கோரிக்கைகளில் பெரும்பாலானவை விரைவாக நிறைவேறியிருக்கும்;இந்த வழிபாடு துவங்கிய நாளிலிருந்து இந்த 90 நாட்கள் முடியும் வரையிலும் ஒருபோதும் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் மட்டுமே இந்த வழிபாடு பலன்களைத்தரும் என்பதை மறவாதீர்கள்;
திருப்பதி மலைமீது ஆகாய கங்கைக்கு செல்லும் வழியில் வேணுகோபால் சன்னதி இருக்கிறது.இந்த சன்னதியில் தான் கொங்கணரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;பழனி மலையில் போகரின் ஜீவசமாதி இருக்கிறது;மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சுந்தரரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;நாகப்பட்டிணம் அருகே சுனாமிபாலம் கடந்ததும் கோரக்கரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;திருஅண்ணாமலையில் இருக்கும் கோசாலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;மயிலாடுதுறையில் இருக்கும் மாயூரநாதர் கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் சன்னதியே குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;இதே போல தமிழ்நாடு முழுவதும் சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன;சித்தர்களின் ஜீவசமாதிகளில் மட்டுமல்ல;மற்ற துறவிகளின் ஜீவசமாதிகளிலும் இதேபோல வழிபாடு செய்து நமது பணப்பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
இந்த வழிபாட்டுமுறையை 
ஓம்சிவசிவஓம்

Friday, September 28, 2012

நந்தனவருடத்து புரட்டாசி பவுர்ணமியைப் பயன்படுத்துவோம்!!






ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருமோ,அந்த நட்சத்திரத்தின் பெயரே அந்த தமிழ் மாதத்தின் பெயராக நமது முன்னோர்கள் வைத்துள்ளார்கள்:இந்த புரட்டாசி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.இந்த நந்தன வருடத்தின் பூரட்டாதி நட்சத்திரம் 28.9.12 வெள்ளிக்கிழமை மதியம் 2.25 முதல் 29.9.12 சனிக்கிழமை மதியம் 3.11 வரை உதயமாகிநிற்கும்;அதே சமயம்,பவுர்ணமியானது 29.9.12 சனிக்கிழமை காலை 8.48 முதல் 30.9.12 ஞாயிறு காலை 9.18 வரை அமைந்திருக்கிறது.அதாவது,சனிக்கிழமை இரவில் புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி உதயமாகியிருக்கும்.

ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முழுபலம் பெறுவது பவுர்ணமியன்றுதான்.இந்த பவுர்ணமி நாளில் நாம் ஓம்சிவசிவஓம் ஒரு மணி நேரமாவது ஜபித்தால் நமது ஜபத்தின் சக்தி பல மடங்கு அதிகரித்து,நமது கர்மவினைகளை கரைத்துவிடும்;அப்படிக் கரைவதால் நமது நியாயமான ஏக்கங்கள் நிறைவேறும்;நீண்டகாலப்பிரச்னைகள் தீரும்;நமது ஆத்மபலத்தை அதிகரிக்கவும் இந்த பவுர்ணமி ஜபம் பக்கபலமாக இருக்கும்.
29.9.12 சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும்,இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது.இந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;30.9.12 ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் 12 மணி வரையிலும்  குருஓரை அமைந்திருந்தாலும்,சனிக்கிழமை ஜபிக்க இயலாதவர்கள் இந்த நேரத்தை ஓம்சிவசிவஓம் ஜபிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்;

நமது வீட்டு மாடியில் ஜபிப்பதால் மிக அதிகமான பலன்களை உணரமுடியும்;நமது ஊரில் இருக்கும் மலைக்கோவில்களில்(முடிந்தால்) இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பதால் விரைவான ஜபசக்தி நம்மை வந்து சேரும்;நமது ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பதால்,இந்த மந்திரத்தின் ஆற்றல் அதிகளவில் நம்மை வந்து சேர்வதோடு,அந்த ஜீவசமாதிக்குள் மறைந்திருக்கும் மகானின் அருளாற்றலும் நமக்கு உடனே கிடைக்கும் என்பது ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்.

மேலும் பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாளில் கண்டிப்பாக அன்னதானம் செய்வது மிகமிக நல்லது;இப்படி அன்னதானம் செய்த மறு நாளே சில ப்ரச்னைகள் தீருவதை அனுபவத்தில் உணரலாம்.


செய்வோமா?


விக்ரக ரூபத்தைவிடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது!!!




மஹாபாரதத்தில் ஒரு நாள் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன்;அவரை வெல்வது எளிதல்ல;அவரிடம் உள்ள அஸ்திரங்களில் அக்னி அஸ்திரம் ஒன்று போதும்;மொத்த உலகத்தையே சாம்பலாக்கிவிடமுடியும்;இது பாண்டவர்களுக்கும் தெரியும்! குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார்.

அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார்;மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப்போகிறது என்றே எல்லோரும் நினைக்க,க்ருஷ்ண பரமாத்மா பதிலுக்கு பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும்படி அர்ஜீனனைப் பணித்தார்;சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜீனன் பெற்றதே பாசுபதாஸ்திரம்.அது,அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது.அஸ்வத்தாமனிடம் திகைப்பு!!!

அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா? என்று!!! பின்னர்,அவர் வியாசரிடம் இது தொடர்பாக கேட்க,அவர் பதில் கூறத் தொடங்கினார்: “அஸ்வத்தாமா! நீயும் அர்ஜீனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும்,அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து,பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான்.நீயோ அந்தப்பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய்.லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள்;ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது;எனவே,சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை,வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான்.அதனாலேயே அர்ஜீனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை”என்றாராம்.

மஹாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது;
இதன்படி லிங்கம் என்பது மணியாகும்;மந்திரம் என்பது ‘ஓம்நமச்சிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும்.விபூதியே மருந்தான அவுஷதமாகும்;இதையே ‘மணிமந்திர ஓளஷதம்’ என்பார்கள்;சித்த புருஷர்களும் மிக எளிதாக,மணி மந்திர ஒளஷதமாக லிங்கத்தை பஞ்சாட்சரத்தை விபூதியைக்கொண்டார்கள்.



நன்றி: சக்தி விகடனில் (2.10.2012)வெளிவரும் தொடர்:சித்தம்,சிவம்,சாகசம் தொடர்,பகுதி 2,பக்கம்39.எழுதி வருபவர் இந்திரா சவுந்தரராஜன்
ஓம்சிவசிவஓம்

Thursday, September 27, 2012

நாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற வேண்டும்!!! ஏன் தெரியுமா?






தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கி.பி.1000 வரையிலும் இந்துதர்மம் இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும் மற்றும் ஆஸ்திரேலியக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது;இன்றும் இந்தியாவைத்  தவிர ஆசியா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்துநாடுகளில் இதற்கான இந்துப்பண்பாட்டு மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.இதில் பிரபலமான உதாரணமான கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்தைச் சொல்லலாம்;ஒரேஒரு கேமிராவிற்குள் இந்த முழு ஆலயத்தின் முகப்பையும் இன்று கூட போட்டோ எடுக்க முடியவில்லையாம்;தவிர,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குப்போயிருக்கிறீர்களா? அது பிரம்மாண்டமான சிவாலயம் ஆகும்.சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்குப் போயிருந்தீர்கள் எனில்,அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தே அசந்து போய்விடுவீர்கள்.சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளிப்பிரகாரத்தை ஒரே ஒரு முறை  நீங்கள் சுற்றி வருவதற்குள்ளாக உங்களது கால்கள் வலித்து,ஓரிருமுறையாவது நீங்கள் உட்கார்ந்து தான் சுற்றை முடிக்க முடியும்.

இலங்கைக்கும் தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரத்துக்கு குமரிக்கண்டம் இருந்திருக்கிறது.அங்கே  இன்றைய சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை விட பத்து மடங்கு அதாவது சுமாராக ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு பிரம்ம்மாண்டமான சிவாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.அவை இன்றும் கடலுக்குள் மூழ்கியிருக்கின்றன.யாராவது வான் வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தால் உங்களது செயற்கைக்கோள்கள் மூலமாக போட்டோ எடுத்து அனுப்புங்கள்;அப்போது தெரியும்!!?


அதே அளவுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீகால பைரவரின் கோவில்களும் இருந்திருக்கின்றன;குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் வடக்கே இன்றைய இலங்கை முதல் தெற்கே அண்டார்டிகா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் ஆப்ரிக்கா வரையிலும் பரவியிருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திருவீழிசை என்னும் ஊரில் ஒரு பாறைவடிப்பு இருக்கிறது.என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் நோட்டுப்பக்கத்தின் தடிமன் எவ்வளவு இருக்கும்? இரண்டு மில்லி மீட்டர் இருக்குமா? அந்த அளவுக்கு பாறையை இளக்கி காகிதத் தடிமனுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.இன்று இருக்கும் எம்.டெக்.சிவில் என் ஜினியர்கள் யாராவது ஒரே ஒருவரால் இதே போல காகிதத் தடிமனுக்கு ஒரு பாறையை செதுக்க முடியுமா?

இன்றைய கர்நாடக மாநிலத்தில் பேலூர் ஹளபேடு சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம்;அவையெல்லாம் எப்படி உலகப்புகழ் வாய்ந்தவை என்பதை பாடத்திட்டத்தில் சேர்க்கவே இல்லை;அங்கே ஆயிரம் கால் மண்டபம் ஒன்றுஇருக்கிறது.ஒவ்வொரு தூணின் அடிப்பகுதியும் தரையைத் தொடாமல் இரண்டு செண்டிமீட்டர்கள் மேலே நிற்கின்றன;அதே போல அந்தத் தூணின் மேல்பகுதியும் மேலே இருக்கும் விதானம் அல்லது தளத்தினைத் தொடாமல் (கீழே இருப்பதுபோலவே) இரண்டு செண்டிமீட்டர்கள் இடைவெளிவிட்டு நிற்கின்றன;இந்த இரண்டு செண்டி மீட்டர்கள் இடைவெளியில் ஒரு நோட்டின் காகிதத்தை அந்த தூணுக்கு அடியில் விட்டு எடுக்கலாம்;

நமது பாட்டானார்கள் அனைவருமே 400 வருட வல்லரசாகத் திகழும் அமெரிக்கனைவிடவும்,நமக்குச் சமமாக பொருளாதார வல்லரசாக இருக்கும் நம்ம பங்காளி சீனர்களை விடவும் மிகச் சிறந்த அறிவாளிகளே!அவர்கள் செய்திருக்கும் சாதனைகளை நாம் பாதுகாத்து,நமது அடுத்த தலைமுறைக்குப்போதித்தாலே போதும்;அவர்களின் சாதனையை நாம் முறியடித்ததாக அர்த்தம்.


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.



இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.இதற்காக நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் நூற்றில் ஒரு பங்கினை இவருக்கு நாம் வழங்குவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.



பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)

அது மட்டுமா? சிவபெருமான் உறையும் இடம் திருக்கையிலாயம் இமயமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.வருடம் தோறும் இங்கே செல்லும் பக்தர்களின் குழு அதிகரித்துக்கொண்டே செல்வதை,1960களில் சீனாவுக்கு வியப்பளித்திருக்கிறது;தனது இந்தியப் பிரதிநிதிகள் மூலமாக திருக்கையிலாயத்தின் முக்கியத்துவம்,ஆன்மீகப்பெருமைகளை விசாரித்திருக்கிறது;திருக்கையிலாய மலை யாரிடம்(எந்த நாட்டிடம் இருக்கிறதோ,அந்த நாடு இந்த உலகத்தின் மகோன்னத நாடாக உயர்ந்துவிடும் என்பது சீனாவின் தலைமைக்குத் தெரிந்திருக்கிறது.1964 போர் மூலமாக நமது சிவபெருமானின் இருப்பிடமான திருக்கையிலாயத்தை கைப்பற்றிவிட்டனர்.இன்று?
நமது அப்பா சிவபெருமானின் இருப்பிடமான திருக்கையிலாயத்துக்குச் செல்வதற்கு நாமே பாஸ்போட் எடுத்துக்கொண்டும்,சீனாவின் விசாவுடனும் செல்ல வேண்டுமாம்.இதுவே இந்த திருக்கையிலாயம் ஒரு வேளை இஸ்லாமியரின் புனித இடமாக இருந்திருந்தால்,இந்த காங்கிரஸ் கட்சி சும்மா இருந்திருக்குமா?

நாம் செய்ய வேண்டிய கடமை என்னதெரியுமா? நமது குழந்தைகளின் ஏழு வயதுக்குள் அடிக்கடி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;குடும்பத்தோடு அழைத்துச் சென்று நமக்குத் தெரிந்த அந்த கோவில் வரலாறு,அந்த தெய்வத்தின் பெருமைகள்,வழிபாட்டு முறைகளைச் சொல்ல வேண்டும்;

வீட்டில் நாம் தினமும் சில நிமிடங்களாவது கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
பள்ளிப்படிப்பை முடிக்கும்போது,நமது குழந்தைகளுக்கு ஸ்ரீஇராமக்ருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன்,விவேகானந்த கேந்திரம்,ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம்,ராஷ்டீரிய சேவிகா சமிதி போன்ற ஆன்மீக மற்றும் தேசபக்த அமைப்புகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



பத்தாம் வகுப்பு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகள்,பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறை,டிகிரி அல்லது டிப்ளமோ செமஸ்டர் விடுமுறைகளில் அனுப்பி வைப்பதுடன் முடிந்தால் நாம் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது எதிர்கால சந்ததிக்கும் நமது இந்து தர்மத்தின் பெருமைகள் சென்றடையும்.நான் அப்படிப்பட்ட பயிற்சிமுகாம்களில் அடிக்கடி கலந்து கொண்டதால் தான் நமது இந்துதர்மத்தின் பெருமைகளை உணர்ந்தேன்.அப்படி உணர்ந்த ஒவ்வொரு கணமும் எனக்குள் நமது முன்னோர்களைப்பற்றிய பெருமிதம் உண்டானது;அதே சமயம்,எப்படி இப்பேர்ப்பட்ட சாதனைகளை நமது முன்னோர்கள் செய்தார்கள்? என்று சில நாட்கள் தூக்கம் கூட வரவில்லை;இதைப் பற்றி அறிந்துகொள்ளவே நூலகங்கள்,வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிடர்கள்,மந்திரவாதிகள்,          ஆன்மீகப்பேச்சாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்கள்,நாவல் எழுத்தாளர்கள் போன்றவர்களை சந்திக்க ஆரம்பித்தேன்;சில நேரங்களில் அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன்.நான் கேட்கும் கேள்விகளுக்கு பொருத்தமில்லாத ஆனால் தந்திரமான பதில்களைத் தான் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தந்தார்கள்;மற்றவர்களோ எனது நோக்கத்தை புரிந்து கொண்டபின்னரே முறையான அதேசமயம்  முழுமையான பதில்களையும்,விளக்கங்களையும் தந்தார்கள்.

நிறையப்படித்தால் தான் கொஞ்சம் எழுத முடியும் என்பது எழுத்தாளர்களுக்கான அரிச்சுவடி ஆகும்;எனவே,நிறைய்ய்ய்ய படிக்கத் துவங்கினேன்;சில சமயம்,நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை வெளியிடும் திரைக்கூத்து போன்ற இதழ்களிலிருந்தும்  கூட எனது தேடல்களுக்கான விடை கிடைத்தது;எனவே,அதையும் தற்போதெல்லாம் விட்டு வைக்கவில்லை;



தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும் நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்; இனியும் நாம் நம்முடைய இந்துதர்மத்தின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டால்,இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நமது நாட்டின் நிலை மட்டுமல்ல;நமது அடுத்த தலைமுறையின் சூழ்நிலையும் அதோகதிதான்!!!
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம் 

தினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்=3



31.சினிமாக் காட்சிகளில் நடிகைகள் மற்றும் ஹீரோயின்கள் தொப்புளைக் காட்டுவதைப் போல காட்சிகளை நமது இயக்குநர்கள் வைக்கிறார்கள்.இதை கவனிக்கும் தமிழ் சகோதரிகள் அதே போல தமது தினசரி வாழ்க்கையை மாற்றிக்கொள்வதன் விளைவாக,மாறுபட்ட சிந்தனையுள்ள குழந்தைகள் பிறக்கின்றன;


நமது பூமிக்கு நேர்கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன.அந்த உலகங்களுக்கு ராக்கெட்டில் செல்ல முடியாது;ராக்கெட்டானது நமது அறிவாற்றலால் உருவாக்கப்பட்டது ஆகும்.ஆனால்,அந்த உலகங்களை பார்க்கவோ,தொடர்பு கொள்ளவோ தினசரி தியானம் அல்லது மன சக்தியை அதிகரித்தல் மூலமாகவோ அல்லது ஏதாவது  ஒரு சக்திவாய்ந்த இறைவழிபாடு செய்வதன் மூலமாகவோ மட்டுமே முடியும்.

குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் தொப்புளை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ பொது இடங்களில் காட்டுவதன் மூலமாக முனி அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் அந்த கர்ப்பிணியின் கருவுக்குள் அடைக்கலமாகிவிடுகின்றன.இதனால்,வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள் மனிதர்களாக பிறந்துவிடுகிறார்கள்.இந்த பழக்கத்தால் தான் கடந்த சில நூற்றாண்டுகளாக இங்கே மனிதத்தன்மை நிறைந்தவர்கள் பிறப்பது மிகவும் குறைந்துகொண்டே வருகிறது.இதன் மூலமாக,பலருக்கு ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

32.முன் ஜன்மம் தொடர்பான காதல் சினிமாக்கள் பெரும்பாலும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கின்றன;ஏனெனில்,முன் ஜன்மம் நிஜம் என்பதை அதீத உளவியல் நிரூபித்துவிட்டது;இந்த கொள்கையின் அடிப்படையில் தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயாவின் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன:இரண்டு பேர் தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தால்,அவர்கள் முன் ஜன்ம நண்பர்கள் ஆவர்;அதே போல தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக எதிரிகளாக இருந்தால் அவர்கள் முன் ஜன்ம எதிரிகள் ஆவர்;



33.செவ்வாயும் சுக்கிரனும் ஒருவரது பிறந்த ஜாதகத்தில் இருந்தாலே அது தொடர்பாக சுமார் இருபது ஜோதிடப்பலன்களைச் சொல்லலாம்;இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவர்களுடைய முன் ஜன்மம் தொடர்பான வாழ்க்கை ரகசியத்தை தெரிவிக்கிறது.விடுபட்ட முன் ஜன்ம வாழ்க்கையின் சில பகுதிகள்/ஆட்கள்/தொழில்/குடும்ப உறவுகளை இந்த பிறவியிலும் தொடர வைக்கப்போகிறது என்று அர்த்தம்.இதற்கு மேல் விளக்கம் சொல்ல முயன்றால் அது சில நூறு பக்கங்களுக்கு விரிந்துவிடும்.



34.தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி,உலகமயமாக்கல், கலியுகம் துவங்கி 5000 ஆண்டுகள் கடந்து போய்விட்ட நிலை போன்றவைகளால் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மனித உணர்வுகள் மழுங்கிக் கொண்டிருக்கின்றன;அன்பு,பாசம்,தனது வாழ்க்கைத்துணையை புரிந்து கொண்டப்பின்னர்,விட்டுக்கொடுக்காமல் இருத்தல்,தியாகம்,தேசபக்தி,தெய்வபக்தி போன்றவைகள் எங்கோ ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன;ஒரு லட்சம் பேர்கள் வாழ்ந்து வரும் ஒரு நகரத்தில் சுமார் நூறுபேர்களிடம் தெய்வபக்தி இருந்தாலே அதிகம்;மற்றவர்கள் தமது கடுமையான கர்மவினை தீராதா என்ற ஏக்கத்தில் வழிபாடுகளை செய்து வருகின்றனர்;இந்த  சூழ்நிலையில் பணம் உடனே கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடிய சமுதாயமாக நமது இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பக்தியையும்,ஆன்மீகச் சிந்தனைகளையும்,இறைவழிபாட்டையும் அந்த வழிபாட்டிற்கான காரணங்கள்,வரலாறு,காரண காரியம் போன்றவைகளை விளக்கி வழிகாட்ட வேண்டியிருக்கிறது.



35.பணம்,அதிகாரம்,காமம் போன்றவைகளே நாம் வாழும் தமிழ்நாட்டையும்,உலகத்தையும் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கின்றன;கோவில் சன்னிதானத்தில் இருப்பவர்களிடமும் பணத்தாசை புகுந்துவிட்டது;கர்மசிரத்தை எனப்படும் பொறுப்புணர்ச்சி இன்று நமக்கு எப்போது வருகிறது தெரியுமா?
ஒரு பேராபத்து வரும்போது அல்லது ஒரு பெரிய அதிர்ஷ்டம் வரப்போவதை உணரும்போது மேலும் சிலபல காரியங்களில் ஈடுபடும்போது!!!


ஒவ்வொரு சராசரி ஆணுக்கும்,பெண்ணுக்கும் அடிப்படைத்தேவையான நிரந்தரமான வேலை அல்லது தொழில்; கடன் இல்லாத வாழ்க்கை,நோய் அல்லது எதிரிகளற்ற தினசரி வாழ்க்கைமுறையை உருவாக்கவே ஆயுள் முடிந்துவிடுகிறது.அப்படி உருவாக்கிடவே ஆன்மீகக்கடல் வழிகாட்டுகிறது.அப்படிப்பட்ட அடிப்படைத் தேவைகளை உருவாக்கியப்பின்னர்,கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வெகு சிலருக்கே உருவாகிறது;


ஒரு உதாரண குடும்பம்: அந்த குடும்பத்தில் அப்பா அரசு ஊழியர்;அம்மா இல்லத்தரசி;இவர்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே! அரசு ஊழியராக இருக்கும் கணவனது ஒழுக்கம் பற்றி விவரிக்கமுடியவில்லை;இதனால் வீட்டுக்கு முழுச்சம்பளம் வருவதில்லை;அந்த இல்லத்தரசி என்ன செய்வாள்? பாவம்! 


தினமும் பக்கத்துவீடுகளிலும் தெருவில் இருக்கும் உறவினர்களிடமும் கடன் வாங்கி மூன்று மகன்களையும் படிக்க வைத்துவிட்டாள்;மூத்தவன் அரசு வேலையில் மிகுந்த போராட்டத்துடன் சேர்ந்துவிட்டான்;அடுத்தவன் வட நாட்டுக்கு போனவன் தகவல்கூட சொல்லவில்லை;மூன்றாமவன் இப்போதுதான் சென்னையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்;காலங்கள் மாறுகின்றன;மூத்தவன் அரசுப்பணியில் சேர்ந்த சில வருடங்களில் பழைய அன்போடும் பாசத்தோடும் இருக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொண்டாள்;அவனுக்கு பெண் பார்க்கும் வேளைகளில் பெண் வீட்டார் தனது மூத்தமகனை முடிக்கும் விதமாக வருவது தெரிந்தால்,ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறாள்;இந்த சூழ்நிலையில் அந்த மூத்தமகனுக்கு வயது 40 ஐத்தாண்டிவிட்டது;ஒவ்வொரு மாதமும் மூத்த மகன் தரும் சம்பளப்பகுதியில் தனக்கென்று ஒதுக்கி வைத்துக்கொண்டே இருந்திருக்கிறாள்;அப்படி ஒதுக்கி வைத்த பணத்திலிருந்து இப்போது அந்த அம்மா மாதாந்திர வட்டி வருகிறது;அதுவும் எவ்வளவு? தாம் எதிர்பார்க்கும் தொகை வரத்துவங்கியிருக்கிறது;இப்போது கர்மசிரத்தையாக மூத்த மகனுக்கு வரன் தேட ஆரம்பித்திருக்கிறாள்;ஆனால்,அவள் எதிர்பார்க்கும் வரன் தான் கிடைக்கவே இல்லை;



இதே சூழ்நிலை சாஃப்ட்வேரில் பணிபுரியும் பல பெண்களுக்கும் உருவாகியிருக்கிறது;இதனால் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொட ஆரம்பித்திருக்கிறது.ஒரு நாட்டில் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கடந்துவிட்டால்,அந்த நாட்டில் அழிவுகள் இயற்கையால் ஏற்படும்;இதை யாருக்கு புரியவைக்க? எந்த சட்டத்தினால் இதை மாற்றியமைக்க?இதிலே பல நகைச்சுவை கலந்த கொடூரங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.பாவம் முதிர்கன்னிகளும்,முதிர் இளைஞர்களும்!!!


37.எனவே,தினமும் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஒரு மணி நேரம் வரை ஜபிப்போம்;


அல்லது


தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;


அல்லது


வாரம் ஒரு நாள் வீதம் எட்டு வாரங்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்வோம்;இதன் மூலமாக நமது கடுமையான சிக்கல்கள் உடனே தீரத்துவங்கும்;


ஓம்சிவசிவஓம்