Tuesday, August 28, 2012

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு முன்யோசனை!!!







ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவரவரது ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பது சனிபகவானே! ஏழரைச்சனி முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானே தருகிறார் என்பது எழுதப்பட்ட விதியாகும்.ஏழரைச்சனிகாலத்திற்கும் அஷ்டமச்சனி காலத்திற்கும் இடைப்பட்ட கால அளவு 15 ஆண்டுகள் ஆகும்.அஷ்டமச்சனியின் காலத்தில் (இரண்டரை ஆண்டுகள்) ஏழரைச்சனி காலமான ஏழரை ஆண்டுகளாக பட்ட சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்;மேலும் ஏழரை முடிந்து 15 ஆண்டுகளாக நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கவே அஷ்டமச்சனி வருகிறது என்பது ஜோதிட உண்மை ஆகும்.
1996 முதல் ஏழரை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு ஏழரைச்சனி வந்தது;2003 முதல் 2006 வரை விருச்சிக ராசிக்கு அஷ்டமச்சனி வந்தது;2005 இல் இருந்துதான் மேஷ ராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானின் அருளால் பெற்றார்கள்;2009 லிருந்துதான் விருச்சிக ராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை அடைந்தார்கள்.21.12.2011 முதல் 14.12.2014 வரை சனிபகவான் துலாம் ராசியைக் கடக்கிறார்.இந்த இரண்டரை ஆண்டுகளும் மேஷ ராசிக்கு ஏழாமிடத்து சனியான கண்டகச்சனியாகவும்,விருச்சிக ராசியினருக்கு ஏழரைச்சனியில் முதல் பகுதியான விரையச் சனியாகவும் பரிணமித்திருக்கிறது;

12 ராசிகளிலும் கோபக்காரர்கள் அதிகம் பிறப்பது மேஷ மற்றும் விருச்சிக ராசிகளில் தான்;பிறரை அளவுக்கதிகமாக கேலி செய்வது;தன்னை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களுக்காக எப்பேர்ப்பட்ட உதவிகளையும் செய்பவர்கள் இந்த இரு ராசிக்காரர்களும்! எப்போதும் தம்மோடு பழகுபவர்களுடைய நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்! பண லாபத்தோடு பழகும் ஒரு சில ராசிக்காரர்களைப் போல இவர்கள் இருப்பதில்லை;யோசித்து எந்த ஒரு காரியத்தையும் செய்வது இவர்களுக்கு 25 வயது வரை வராது;30 வயது முதல் திட்டமிட்டும்,சிந்தித்தும் உழைப்பதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது;அளவுக்கு அதிகமாக பேசியே பலரது வெறுப்பை சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்;இவை அனைத்தும் செவ்வாயின் சுபாவங்கள் ஆகும்.
மேஷ ராசிக்காரர்கள் 15.12.2014 முதல் வர இருக்கும் அஷ்டமச்சனியை எதிர்கொள்ளவும்,விருச்சிக ராசிக்காரர்கள் இதே நாளில் இருந்து வர இருக்கும் ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் செய்ய வேண்டியது என்ன?
இன்றிலிருந்தே அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;தேவையில்லாத நட்புக்களையும்,உங்களை கெடுக்கும் உறவுகளையும் விட்டு படிப்படியாக விலகுவது நல்லது;நியாயமான வழியில் வாழ்க்கையை அமைக்கவும்;ஒருபோதும் பிறரை மனதால்,உடலால் புண்படுத்தக்கூடாது;ஏமாற்றக்கூடாது(பெரும்பாலான மேஷ,விருச்சிக ராசியினர் ஏமாற்றுவதில்லை;)

தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை வீட்டில் இருந்து வழிபடத் துவங்க வேண்டும்;தவிர ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்;
இந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று முறையாவது ஸ்ரீகால பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்டவீரட்டானங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த இரண்டரை வருடங்களில் தாங்கள் தர வேண்டிய கடன்களை 1.1.2014க்குள்ளாகவே தீர்த்துவிட முயல வேண்டும்;
அட்டவீரட்டானங்கள் :தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் இருப்பது திருக்கண்டியூர்.இங்கே ஸ்ரீகாலபைரவர் பிரமசிர கண்டீஸ்வரர் என்ற பெயரில் சிவனாக இருந்து அருள்பாலித்துவருகிறார்.இது முதல் வீரட்டானம்ஆகும்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்.இது திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது;இங்கே அந்தஹாசுர சம்ஹார மூர்த்தியாக காட்சியளித்துவருகிறார்.
மூன்றாவது வீரட்டானம் திருவதிகை ஆகும்.பண்ருட்டியிலிருந்து ஒரு  கி.மீ.தூரத்தில் வீரட்டானேஸ்வரர் என்னும் பெயரில் இருந்து அருளாட்சி  புரிந்து வருகிறார்.
நான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் ஆகும்.இது மாயவரம் திருக்கடையூர் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து விசாரித்து சென்றால்,இரண்டு கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்ற தம்பதியராக இருந்து அருள்புரிந்து வருகிறார்கள்.
ஐந்தாவது வீரட்டானத்தின் பெயர் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூர் நாகூர் சாலையில் இருக்கும் திருப்பயந்தங்குடிக்கு வர வேண்டும்.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே மேற்கு நோக்கிய திருக்கோவிலில் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவனாக காட்சியளித்துவருகிறார்.
வழுவூர்  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டு கி.மீ.பயணித்தால் வலதுபுறம் ஒரு சாலை திரும்பும்.அந்த சாலை வழியாக அரை கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது ஆறாவது வீரட்டானமாகிய வழுவூர் ஆகும்.இங்கே கிருத்திவாஸர் என்னும் பெயர் ஸ்ரீகாலபைரவ பெருமான் சிவபெருமானாக அருளாட்சிபுரிந்து வருகிறார்.அட்டவீரட்டானங்களுக்கும் சென்று வழிபட இயலாதவர்கள் இந்த வழுவூருக்கு மட்டும் வந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது;எட்டு சனிக்கிழமைகளுக்கு இங்கே காலையிலேயே வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அர்ச்சனை செய்தாலும் போதுமானது;
மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்னும் இடத்தை வந்தடைய வேண்டும்;இங்கிருந்து திருக்குறுக்கை செல்லும் சாலையை விசாரித்து 3 கி.மீ.பயணித்தால் சென்றடையலாம்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகையாக ஸ்ரீகாலபைரவர் அருளாட்சி புரிந்துவருகிறார்.இதுவேஏழாவது வீரட்டானம் ஆகும்.
எட்டாவது வீரட்டானம் திருக்கடவூர் ஆகும்.இதன் தற்போதைய பெயர் திருக்கடையூர் என்றழைக்கப்படுகிறது.இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமியாக ஸ்ரீகாலபைரவர் வாழ்ந்து வருகிறார்.

அயல் தேசத்தில் இருக்கும் இந்த ராசியினர் தமது குடும்பப் பொறுப்புகளை(வீடு கட்ட விரும்புவது;தங்கை/அக்காவின் திருமண ஏற்பாடுகள்/தம்பியின் படிப்பு/அம்மா அல்லது அப்பாவின் மருத்துவச் செலவுகள்/மகன் அல்லது மகளின் படிப்புச்செலவு) இப்போதே நிறைவேற்றிவிட வேண்டும்;குடும்பத்தில் எவருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட தாமதப்படுத்த வேண்டாம்;
இந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 30 மாதங்கள் இருக்கின்றன;நாட்கள் கணக்கில் சொல்வதாக இருந்தால் 900 நாட்கள் இருக்கின்றன;இந்த 900 நாட்களில் குறைந்தது 500 நாட்களுக்கு தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு முடித்திருந்தால்,குறைந்தது 15 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிக்குச் சென்று வழிபட்டிருந்தால்,சனிபகவானின் தாக்குதல் அவ்வளவாக இராது.
நிம்மதியான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் எவரும் இதை முயற்சி செய்யலாம்.
களத்தில் இறங்குவோமா?                                 வீரட்டானங்கள் பற்றிய தகவல் ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,வெளியீடு காகா ஆஸ்ரமம்,பெரியகுளம்,திருவண்ணாமலை

Monday, August 27, 2012

குறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்!!!



நமது கண்களையும்,காதுகளையும் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால் தியானத்திலும்,தினசரி வாழ்வில் நாமும் ஒரு விஸ்வாமித்ரர் ஆகிவிடமுடியும்.
அதே கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து வைக்க மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதே திரைப்படம் ஆகும்.திரைப்படத் தொழிலில் ஜெயிப்பதற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள்(வீணடித்தவர்கள்?!) பல ஆயிரம் பேர்கள்.
இன்றைய நவீன உலகத்தில் குறும்படங்கள் திரையுலகத்தில் நுழைவதற்கு ஒரு நுழைவுச்சீட்டாக இருக்கிறது.குறும்படம் தயாரிப்பது? இயக்குவது? தொகுப்பது? போன்றவைகளை பயிற்சி வகுப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் நிழல் குழுவினர் நடத்திவருகின்றனர்.
பத்துநாட்கள் கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலமாக நம்மால் சில நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தை எடுக்கவோ,இயக்கவோ,நடிக்கவோ,தொகுக்கவோ முடியும்.இதற்கான இணைய தளம் நிழல் டாட் இன் ஆகும்.

இன்று நமது இந்து தர்மம் பற்றிய விழிப்புணர்வுக்கு ஏராளமான குறும்படங்கள் எடுக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகியிருக்கிறோம்.பொருத்தமான இயக்குநர்,தயாரிப்பாளர் கிடைப்பதில்லை;இந்து தர்மம் பற்றி நாம் அடுத்த பத்தாண்டுகளில் குறும்படங்கள் எடுக்காவிட்டால்,ஹாலிவுட் இதிலும்  ஆக்கிரமிப்பு செய்துவிடும்.ஜாக்கிரதை!!

அஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்!!!




புல்லசுகா திகளுக்கு ளென்று மேன்மை
பொருந்தாத நரகமுடின் சுவர்க்க மாதி
இல்லசுகா திகளூடனே கீழு மேலு
மெய்திநலி வுறனீங்கி யிருக்க வேண்டி
வல்லசுகா தியரெண்ணி வையந் தன்னில்
வளங்குலவு மனோலயமாய் வைகு மாறு
நல்லசுகா தனமதனில் இருக்கும் எங்கள்
நாயகன் அடிமலரை நாடி வாழ்வாம்


இந்த பாடலின் அர்த்தம்: பொருந்திய துன்பம் முதானவைகளுடனே இழிவினை உடைய நரகத்துடன் சுவர்க்க முதலிய தானங்களில் மனைவி மக்களுடன் வாழுகின்ற இன்பம் முதலியவைகளுடன் கீழும் மேலும் சென்று துன்பம் அடைதலை யொழித்துச் சுகமாய் இருக்கக் கருதி,தவத்தில் வல்ல சுகன் முதலியவர்கள் தியானித்து உலகத்தில் வளப்பம் பொருந்திய மனோலயத்துடன் வாழும் வண்ணம்,நல்ல சுகாதனத்தில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கர்த்தா(சிவனின்)
வின் திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டு வாழ்வோமாக!

சீர்காழியில் இருந்து அருள் தரும் சட்டைநாதருக்கு இந்த பாடலின் கருத்துக்கள் பொருந்தும்;இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர்களும்,உள்சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரும் இருந்து அருளாட்சி புரிந்து வருகின்றனர்.


சித்தர்களின் தலைவர் அகத்தியர்,திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இடைக்காடர்,ரோம ரிஷி, மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழும் தன்வந்திரி,கொங்கணர்,கோரக்கர்,கருவூரார்,கமலமுனி,போகர்,   புலஸ்தியர் போன்ற சித்தர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டமாசித்திகள் கிடைத்த இடம் இந்த சீர்காழி ஆகும்.


திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களிலும்,திங்கட்கிழமைகளிலும் இங்கு வந்து வழிபாடு செய்தால் நமது உள்முக வாழ்க்கை ஆரம்பமாகும்.


சித்தராக விரும்புவோர் 11 திங்கட்கிழமைகளுக்கு பலாப்பழத்தால் அபிஷேகம் செய்துவந்தால்,தகுந்த குருவை அடையமுடியும்.இந்த 11 திங்கட்கிழமைகளுமே உரியவர்கள் விரதமிருந்து இந்த கோவிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரை “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்.எந்த திங்கட்கிழமையன்று இங்கே வருகிறோமோ அன்றும் அதற்கு முந்தைய நாளும்,மறு நாளும் தாம்பத்திய நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும்.


இந்த 11 திங்கட்கிழமைகளிலும் கோவில் திறந்திருக்கும் நேரத்தில் மேற்கூறிய மந்திர ஜபத்தை கோவிலுக்குள்ளே இருக்கும் ஸ்ரீகாலபைரவ சன்னதியில் மஞ்சள் பட்டுத்துண்டின் மீது அமர்ந்து கண்களை மூடி ஜபிக்க வேண்டும்.

கோவில் நேரம் தவிர மீதி நேரங்களில் நாம் தங்கியிருக்கும் அறையில் (முதல் நாளே வந்து அந்த அறையை கோமயத்தினால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்;சந்தனப்பத்தி பொருத்தியிருக்க வேண்டும்;சந்தன பத்தி வாசனை திங்கட்கிழமை முழுவதும் அறையில் பரவிக்கொண்டே இருக்க வேண்டும்)இதே மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்.

திங்கட்கிழமையன்று குறைந்தது  5 மணி நேரம் அதிகபட்சம் 12 மணி நேரம் இவ்வாறு ஸ்ரீகாலபைரவ மந்திரத்தை ஜபித்துவருவது அவசியம்.விரத நாளில் அடிக்கடி இளநீர் அல்லது பசும்பால் அல்லது தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்று மட்டும் அருந்திக்கொள்ளலாம்.


இந்த முதல்கட்டமான 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவாறு வழிபாடு முடித்த சில வாரங்களில் உங்களை தகுந்த குரு தேடி வந்து அடுத்த கட்ட வழிபாட்டுக்கு  தயார் செய்வார்;அது வரையிலும் வேறு எந்த தியானப்பயிற்சிக்கும்,ஆன்மீகப்பயிற்சிக்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.நீங்கள் உலகில் எந்த மூலையிலிருந்து வந்து இந்த வழிபாட்டைச் செய்தாலும்,அந்த மூலைக்கு ஸ்ரீகாலபைரவரின் அருளாசி பெற்ற குரு உங்களைத் தேடி வருவார்.மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் சீர்காழிக்குச் செல்வோமா?
ஓம்சிவசிவஓம்

Saturday, August 25, 2012

சிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வலைப்பூ !!!



டிஜிட்டல் கேமிரா இன்று மலிவாகிவிட்டாலும்,பார்த்தாலே பரவசமாக படம்(போட்டோ)எடுக்கும் கலை படிப்படியாகத் தான் வரும்;அப்படிப்பட்ட படங்களை எடுக்க முறையான பயிற்சியை நமது நண்பர் ஒருவர் தமிழிலேயே விளக்கிவருகிறார்.கி.பி.2007 முதல் இதற்கென்றே ஒரு வலைப்பூவைதமிழில் நடத்தி வருகிறார்.நீங்கள் உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Friday, August 24, 2012

திருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தாருங்கள்!!!


நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளின் புராணகால வரலாற்றை வெளிப்படுத்தும், அரிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் நிர்வாகத்தை பராமரித்து வரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும், புகைப்படங்களை வைத்திருக்கும் பக்தர்கள், அவற்றை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் ஒப்படைக்கலாம். தபாலில் அனுப்பி வைக்கவும், பக்தர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் விரைவில் நடைபெறும் ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு இந்த அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். படங்களை, பக்தர்கள் நன்கொடையாக வழங்க, முன் வர வேண்டும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நன்றி:தினமலர் 24.8.12

ஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்!!!


திருச்சி: திருச்சி- கல்லணை சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் விஸ்வநாதர் கோவில், மூலவர் லிங்கத்தின் மீது, சூரியக்கதிர்கள் வழிபாடு நடத்தியது பக்தர்களை பரவசமடையச் செய்தது.திருச்சி- கல்லணை சாலை காவிரி தென்கரை சர்க்கார் பாளையத்தில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட, பழமையான காசி விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலாகும்.ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8, 9ம் ஆகிய தேதிகளில், தொடர்ந்து சூரிய உதயத்தின்போது, மூலவர் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் நேரடியாக படுவது இக்கோவிலின் சிறப்பம்சம். இந்நிகழ்வை சூரிய வழிபாடு என புராணங்கள் தெரிவிக்கின்றன.சிவலிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் சிவலிங்கத்தை வழிபடும்போது பக்தர்கள் வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு கோவிலில் சூரிய வழிபாடு நேற்று துவங்கி நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.நேற்று அதிகாலை சூரிய உதயத்தின்போது சூரியக்கதிர்கள் கோவிலின் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாட்டை தரிசித்து பரவசம் அடைந்தனர்.தொடர்ந்து இரண்டு நாள் சூரிய வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, அர்ச்சகர் சாமிநாதசிவம், உபயதாரர்கள் சுந்தர மீனாட்சி, ராஜாராம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

உலகத்தின் தலையெழுத்தை மாற்றும் மாறுபட்ட சிந்தனைகள்!!!


நமக்குத் தெரிந்து புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டனை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.ஆனால்,நமது பாரத நாட்டில் பலதுறைகளில் நியூட்டன்கள் உருவாகிக்கொண்டே இருப்பதை நாம் உணரவில்லை.

நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு பழுத்த ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்தது;அப்படி விழுந்த ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியது;பூமிக்கு புவியீர்ப்பு விசை உண்டு என்பதை அந்த சிந்தனையின் இறுதியில் கண்டறிந்தார்.

இந்தியாவைச் சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து பேட்டன் ரக பீரங்கிகளை பாகிஸ்தான் வாங்கிக் குவித்தது;நமக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையில் பேட்டன் பீரங்கிகளைக் கொண்டே இந்தியாவை வீழ்த்திவிடலாம் என்று பாகிஸ்தான் செயல்பட்டது. ஆனால் நடந்ததோ தலைகீழ்!! பேட்டன் பீரங்கியின் முன்புறம் வலுவானது. எப்பேர்ப்பட்ட  பேட்டன் பீரங்கி . தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையுடையது, ஆனால் அதன் பின்புறம் மிகவும் பலவீனம் மிக்கது எனவே நமது இந்திய ராணுவ வீரர்கள் இதைக் கண்டறிந்து, பேட்டன் பீரங்கிகளை முன்னே போக விட்டு பின்னே அடித்து நொறுக்கினர்.பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது  அது மட்டுமா? உலக வல்லரசு அமெரிக்கா பேட்டன் பீரங்கிகள் தயாரிப்பதையே நிறுத்தியது. இந்த சம்பவத்தின் மூலமாக அசல் உத்தர்(நிஜமான பதிலடி) என்ற வீர சகாசம் இந்திய ராணுவத்தின் வரலாறாகிவிட்டது.இந்த வார்த்தையைக்கேட்டால்,பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு கடுப்போ கடுப்பு உண்டாகும்.

பேரீச்சம்பழத்திலிருக்கும் விதைகளை நீக்கி அதை அழகாக 'பேக்' செய்து விற்றால் என்ன? என்று திருச்சியைச் சேர்ந்த ஒருவர் நினைத்தார்.லயன் டேட்ஸ் பிறந்தது;இன்று அவரே இந்தத் தொழிலில் முன்னணியில் வளர்ந்துகொண்டிருக்கிறார்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக்கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில், சாஷேயில் எண்ணெயை தந்தால் என்ன? என்ற சிந்தனையால் இன்று பாராசூட் தேங்காய் எண்ணெயை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்!!

மனித உடலின் வளைவு நெளிவின் தன்மையைக் கொண்டு தயாரிக்கப்படும் செல்போன்களை ஜப்பான் சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தியது; அப்படி அறிமுகப்படுத்தும் முன்பு இது தொடர்பாக எடுத்த சர்வேகுழுவில் இருந்தவர்கள் நமது இந்திய எம்.பி.ஏ மாணவர்கள், அவர்களின் நுணுக்கமான சர்வேயால் இன்று அந்த மாடலில் கிடைக்கும் செல் போன்கள் உலக செல்போன் சந்தையைக் கைப்பற்றத்து வங்கியிருக்கின்றன (கன செவ்வகம்,கன சதுரம் என்ற வடிவில் சில வருடங்களுக்கு முன்பு வந்த செல்போன் மாடல்கள் தற்போது காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன)

இந்தியாவுக்கு வந்த  ஆங்கிலேயன் ஆரம்பத்தில் வர்த்தகம் செய்யத் தான் வந்தான். ஏன் நமது  ஆங்கிலேயனை . நாட்டோடு வர்த்தகம் செய்ய வந்தான்? நம்மில் பலருக்குத் தெரியாது. ஏனெனில்,கி.பி.1800 வரை முடிவடைந்த 2500 ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய, சுயச் சார்புள்ள பொருளாதார வல்லரசாக நமது இந்தியா இருந்தது.(நாம் தற்போது அமெரிக்காவுக்கு வேலை தேடி ஓடுகிறோம்; ஓடுவதை பெருமையாக நினைக்கிறோம் இல்லையா?) எனவே,இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய வந்தவன், மொகலாயர்கள் காலத்தில் (முழுமையாக வாசிக்கவும்: மதன் எழுதிய வந்தார்கள்;வென்றார்கள்) சென்னை, மும்பை,கொல்கத்தாவில் குடோன்கள் கட்டி அதைப் பாதுக்காக்க மொகலாய மன்னரான ஷாஜஹானிடம் அனுமதி கேட்டனர். அனுமதியும் கிடைத்தது அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை ஆள்வதே சிறந்த வியாபாரம்! என்பதை உணர்ந்து,கி.பி. 1850க்குள் ஒட்டு மொத்த இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

முதல் இந்திய விடுதலைப் போர் கி.பி.1857 இல் நிகழ்ந்தது, பல விதமான போராட்டங்களுக்குப் பிறகு கி.பி.1947 இல் நாம் சுதந்திரம் பெற்றோம், இதே கால கட்டத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்த ஒருவர்,வித்தியாசமாக சிந்தித்தார்.

எல்லோரும் ஆங்கிலேயனை எப்படியாவது இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும்? என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால்,இந்த டாக்டர் மட்டும் எப்படி இந்த  ஆங்கிலேயன் நமது நாட்டை அடிமைப்படுத்தினான்? என்று சுமார் 20 ஆண்டுகளாக சிந்தித்தார்.தனது சிந்தனையை பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பலருடைய ஆலோசனைகளையும் கேட்டார்.

ஏனெனில் நமது நாடு ஏராளமான வீரர்களை ஈன்றுள்ளது; கல்வியில் தன்னிறைவு பெற்ற நாடாக கி.பி.1700 வாக்கிலேயே இருந்திருக்கிறது; வான சாஸ்திரம், போர்க்கலை, வைத்தியம், அரசு நிர்வாகம், தியானம் என மனித இனத்துக்குத் தேவைப்படும் அத்தனைத் துறைகளிலும் சாதனை உச்சங்களைத் தொட்டிருக்கிறது. உலகின் செல்வச் செழிப்பான நாடாகவும் இருந்திருக்கிறது.இருப்பினும் எப்படி சில நூறு  ஆங்கிலேயன் 27 கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தினான்? என்பதே அவரது சிந்தனை!

அவருடைய 20 வருட சிந்தனையின் விளைவாக தோன்றிய இயக்கமே ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.ஆகும்.

 ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்து தர்மத்தின் பெருமைகளை அறிய வைப்பதே நோக்கம்; அப்படிச் செய்து விட்டால், எதிர்காலத்தில் இதே போல மீண்டும் காலனியாதிக்கம் வராமல் போய்விடும், இந்தியாவை இந்தியர்களே ஆள முடியும், இந்து தர்மத்தை பாதுகாத்து, பராமரித்து, மேலும் மேலும் மெருகு படுத்திட முடியும் .இந்த நாட்டில் பிறக்கும் கடைசிக்குழந்தைக்கும் இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் உருவானதே ஆர்.எஸ்.எஸ்.

மாறுபட்ட சிந்தனைகளால் மனித குலம் பலவிதமான முன்னேற்றங்களை சந்தித்திருக்கிறது.ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றத்தினால் இந்து தர்மத்துக்கு ஒரு சக்தி மிகுந்த பாதுகாப்புக் கவசம் உண்டாகியிருக்கிறது.இருப்பினும்,நமக்கு இரண்டாவது சுதந்திரப்போர் இன்று அவசியமாக இருக்கிறது.அந்த அளவுக்கு அறிவு சார்ந்த காலனியாதிக்கம் நமது இந்தியாவை உலகமயமாக்கல்,முதலாளித்துவமயமாக்கல் என்ற பெயரில் ஆக்கிரமித்திருக்கிறது.