Showing posts with label அஷ்டமச்சனி. Show all posts
Showing posts with label அஷ்டமச்சனி. Show all posts

Saturday, June 22, 2013

ராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வேண்டிய பைரவ வழிபாட்டு முறைகளும்!!!



விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          26.6.2012 முதல் 16.12.2014 வரை விருச்சிகராசி
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)
 26.06.2012 முதல் 16.12.2014 வரை துலாம் ராசி
 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)
26.6.2012 முதல் 16.12.2014 வரை கன்னி ராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:
26.06.2012 முதல் 16.12.2014 வரை மீனராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி


விரையச்சனி காலத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும்;வருமானத்திற்கும்,செலவிற்குமான இடைவெளி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்;அவ்வாறு அலைச்சல்கள் வருவதற்கு நமது கவனக்குறைவே காரணமாக அமையும்.


ஜன்மச்சனி காலத்தில் உயிரைத் தவிர அனைத்தையும் இழக்கும்(தற்காலிகமாகத்தான்!) சூழ்நிலை படிப்படியாக உருவாகும்;சேமிப்புகள் கரைந்துவிடும்;கணவன் மனைவிக்குள் தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு பிரியவேண்டியிருக்கும்;அடிக்கடி சண்டைகள் வரும்;நிரந்தரமான பிரிவோ,நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கையோ இருப்பது அரிதாக இருக்கும்;இந்த கால கட்டத்தில் சுயதொழில் துவங்கிடக் கூடாது;ஏற்கனவே செய்துவரும் தொழிலை விரிவு படுத்தாமல் இருப்பதும் அவசியம்;குருப்பெயர்ச்சி ஓரளவு நிம்மதியைத் தரும்;ஆனாலும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவோம்;நிரந்தரமான வேலை அமைவது அரிது;அலைந்து திரிந்து பார்க்கும் வேலையைத் தேர்வு செய்வது நன்று;நமது தனித்திறமை நமது மேலிடத்திற்குத் தெரியாமல்,வேறு யாரோ ஒருவர்/ள் தன்னுடையதாகக் காட்டி முன்னேறுவார்;நம்மால் எதுவுமே செய்ய முடியாது; தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்ளும் குணத்தின் மீது ஆளுமைத்திறன் தாக்குதல் நடைபெறும்;அவமானத்தின் முழுப்பரிமாணத்தையும்,புறக்கணிப்பின் அர்த்தத்தையும் உணரும் சூழ்நிலை இந்தக் கால கட்டம் ஆகும்.பலர் கடனால்/நோயால்/தேவையற்ற எதிர்ப்புகளால் படாத பாடு படுவர்;எப்போதும் அகலக்கால் வைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்;

வாக்குச்சனி காலத்தில் நாம் எதைப் பேசினாலும்,அது பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்;ஜன்மச்சனிகாலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;ஒரு சிறு செயலைக் கூட ஒரே தடவையில் செய்து முடிக்க முடியாமல் 900 நாட்கள் நகர்ந்தால் எப்படி இருக்கும்? அதே போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தொடரும்;பண வரவு கொஞ்சம் அதிகரிக்கும்;

அஷ்டமச்சனி காலமானது ஏழரைச்சனி முடிந்த 13 வது ஆண்டில் துவங்கும்;இரண்டரை ஆண்டுகளில் ஏழரைச்சனிகாலத்தில் தந்த அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும்;இதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.விதி விலக்காக ஒரு சிலருக்கு மட்டும் பொருந்தாது;ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணத்தில் சனி இருக்க ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் நன்மைகளை மட்டுமே செய்யும்.இவர்கள் முற்பிறவிகளில் ஸ்ரீகால பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக வழிபட்டவர்கள் ஆவர்.

ஏழரைச்சனி 26.6.2012 அன்றுடன் சிம்மராசிக்காரர்களுக்கு நிறைவடைந்தாலும்,மறுநாளே அவர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவான் தந்துவிட மாட்டார்;அந்த நாளில் இருந்து குறைந்தது ஒரு வருடம் கழிந்தப் பின்னரே,அவரது வயது,கல்வித்தகுதி,திறமை,தனித்திறமை,பேச்சாற்றல்,யூகிக்கும் சாமர்த்தியம் இவைகளுக்குப் பொருத்தமான வேலை/தொழில் அல்லது இரண்டையும் தருவார்;

ஏழரைச்சனி காலத்தில் சாதாரண வேலை அல்லது தொழிலில் இருக்கலாம்;ஏழரை முடிந்த ஒரு வருடத்துக்குள் சிறந்த வேலையில் சேர வேண்டும்;சேமிக்கத் துவங்க வேண்டும்;தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும்;ஒரு போதும் பிறருக்குத் தீங்கு தரக் கூடாது;ஒரு போதும் பிறர் மனதை நோகடிக்கக்கூடாது;ஒரு போதும் தவறான வழியில் சம்பாதிக்கக் கூடாது;தவறான வழியில் சொத்து சேர்க்கக் கூடாது;தவறான வழியில் பெண்களை(ஆண்களும்)/ஆண்களை(பெண்களும்) அணுகக்கூடாது;அப்படி தவறான வழியில் செல்பவர்களுக்கு தண்டனை அஷ்டமச்சனி காலத்தில் கடுமையாக இருக்கும்;அதுவரையிலும் நம் ஒவ்வொருவரின் செயல்களும்,பேச்சும்,சிந்தனையும் நமது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் பதிவாகிவரும்;

எனவே,அடுத்த 13 ஆண்டுகளுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விதமான சனிப்பெயர்ச்சிகள் வர இருக்கின்றன என்பதை தெரிவித்துவிட்டோம்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானைச் சரணடைந்து நிம்மதியும்,பணக்கஷ்டமும் இல்லாத வாழ்வைப் பெறுவீர்களாக!!!

ஓம்சிவசிவஓம்

Tuesday, August 28, 2012

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு முன்யோசனை!!!







ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவரவரது ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பது சனிபகவானே! ஏழரைச்சனி முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானே தருகிறார் என்பது எழுதப்பட்ட விதியாகும்.ஏழரைச்சனிகாலத்திற்கும் அஷ்டமச்சனி காலத்திற்கும் இடைப்பட்ட கால அளவு 15 ஆண்டுகள் ஆகும்.அஷ்டமச்சனியின் காலத்தில் (இரண்டரை ஆண்டுகள்) ஏழரைச்சனி காலமான ஏழரை ஆண்டுகளாக பட்ட சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்;மேலும் ஏழரை முடிந்து 15 ஆண்டுகளாக நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கவே அஷ்டமச்சனி வருகிறது என்பது ஜோதிட உண்மை ஆகும்.
1996 முதல் ஏழரை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு ஏழரைச்சனி வந்தது;2003 முதல் 2006 வரை விருச்சிக ராசிக்கு அஷ்டமச்சனி வந்தது;2005 இல் இருந்துதான் மேஷ ராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானின் அருளால் பெற்றார்கள்;2009 லிருந்துதான் விருச்சிக ராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை அடைந்தார்கள்.21.12.2011 முதல் 14.12.2014 வரை சனிபகவான் துலாம் ராசியைக் கடக்கிறார்.இந்த இரண்டரை ஆண்டுகளும் மேஷ ராசிக்கு ஏழாமிடத்து சனியான கண்டகச்சனியாகவும்,விருச்சிக ராசியினருக்கு ஏழரைச்சனியில் முதல் பகுதியான விரையச் சனியாகவும் பரிணமித்திருக்கிறது;

12 ராசிகளிலும் கோபக்காரர்கள் அதிகம் பிறப்பது மேஷ மற்றும் விருச்சிக ராசிகளில் தான்;பிறரை அளவுக்கதிகமாக கேலி செய்வது;தன்னை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களுக்காக எப்பேர்ப்பட்ட உதவிகளையும் செய்பவர்கள் இந்த இரு ராசிக்காரர்களும்! எப்போதும் தம்மோடு பழகுபவர்களுடைய நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்! பண லாபத்தோடு பழகும் ஒரு சில ராசிக்காரர்களைப் போல இவர்கள் இருப்பதில்லை;யோசித்து எந்த ஒரு காரியத்தையும் செய்வது இவர்களுக்கு 25 வயது வரை வராது;30 வயது முதல் திட்டமிட்டும்,சிந்தித்தும் உழைப்பதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது;அளவுக்கு அதிகமாக பேசியே பலரது வெறுப்பை சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்;இவை அனைத்தும் செவ்வாயின் சுபாவங்கள் ஆகும்.
மேஷ ராசிக்காரர்கள் 15.12.2014 முதல் வர இருக்கும் அஷ்டமச்சனியை எதிர்கொள்ளவும்,விருச்சிக ராசிக்காரர்கள் இதே நாளில் இருந்து வர இருக்கும் ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் செய்ய வேண்டியது என்ன?
இன்றிலிருந்தே அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;தேவையில்லாத நட்புக்களையும்,உங்களை கெடுக்கும் உறவுகளையும் விட்டு படிப்படியாக விலகுவது நல்லது;நியாயமான வழியில் வாழ்க்கையை அமைக்கவும்;ஒருபோதும் பிறரை மனதால்,உடலால் புண்படுத்தக்கூடாது;ஏமாற்றக்கூடாது(பெரும்பாலான மேஷ,விருச்சிக ராசியினர் ஏமாற்றுவதில்லை;)

தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை வீட்டில் இருந்து வழிபடத் துவங்க வேண்டும்;தவிர ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்;
இந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று முறையாவது ஸ்ரீகால பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்டவீரட்டானங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த இரண்டரை வருடங்களில் தாங்கள் தர வேண்டிய கடன்களை 1.1.2014க்குள்ளாகவே தீர்த்துவிட முயல வேண்டும்;
அட்டவீரட்டானங்கள் :தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் இருப்பது திருக்கண்டியூர்.இங்கே ஸ்ரீகாலபைரவர் பிரமசிர கண்டீஸ்வரர் என்ற பெயரில் சிவனாக இருந்து அருள்பாலித்துவருகிறார்.இது முதல் வீரட்டானம்ஆகும்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்.இது திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது;இங்கே அந்தஹாசுர சம்ஹார மூர்த்தியாக காட்சியளித்துவருகிறார்.
மூன்றாவது வீரட்டானம் திருவதிகை ஆகும்.பண்ருட்டியிலிருந்து ஒரு  கி.மீ.தூரத்தில் வீரட்டானேஸ்வரர் என்னும் பெயரில் இருந்து அருளாட்சி  புரிந்து வருகிறார்.
நான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் ஆகும்.இது மாயவரம் திருக்கடையூர் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து விசாரித்து சென்றால்,இரண்டு கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்ற தம்பதியராக இருந்து அருள்புரிந்து வருகிறார்கள்.
ஐந்தாவது வீரட்டானத்தின் பெயர் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூர் நாகூர் சாலையில் இருக்கும் திருப்பயந்தங்குடிக்கு வர வேண்டும்.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே மேற்கு நோக்கிய திருக்கோவிலில் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவனாக காட்சியளித்துவருகிறார்.
வழுவூர்  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டு கி.மீ.பயணித்தால் வலதுபுறம் ஒரு சாலை திரும்பும்.அந்த சாலை வழியாக அரை கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது ஆறாவது வீரட்டானமாகிய வழுவூர் ஆகும்.இங்கே கிருத்திவாஸர் என்னும் பெயர் ஸ்ரீகாலபைரவ பெருமான் சிவபெருமானாக அருளாட்சிபுரிந்து வருகிறார்.அட்டவீரட்டானங்களுக்கும் சென்று வழிபட இயலாதவர்கள் இந்த வழுவூருக்கு மட்டும் வந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது;எட்டு சனிக்கிழமைகளுக்கு இங்கே காலையிலேயே வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அர்ச்சனை செய்தாலும் போதுமானது;
மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்னும் இடத்தை வந்தடைய வேண்டும்;இங்கிருந்து திருக்குறுக்கை செல்லும் சாலையை விசாரித்து 3 கி.மீ.பயணித்தால் சென்றடையலாம்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகையாக ஸ்ரீகாலபைரவர் அருளாட்சி புரிந்துவருகிறார்.இதுவேஏழாவது வீரட்டானம் ஆகும்.
எட்டாவது வீரட்டானம் திருக்கடவூர் ஆகும்.இதன் தற்போதைய பெயர் திருக்கடையூர் என்றழைக்கப்படுகிறது.இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமியாக ஸ்ரீகாலபைரவர் வாழ்ந்து வருகிறார்.

அயல் தேசத்தில் இருக்கும் இந்த ராசியினர் தமது குடும்பப் பொறுப்புகளை(வீடு கட்ட விரும்புவது;தங்கை/அக்காவின் திருமண ஏற்பாடுகள்/தம்பியின் படிப்பு/அம்மா அல்லது அப்பாவின் மருத்துவச் செலவுகள்/மகன் அல்லது மகளின் படிப்புச்செலவு) இப்போதே நிறைவேற்றிவிட வேண்டும்;குடும்பத்தில் எவருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட தாமதப்படுத்த வேண்டாம்;
இந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 30 மாதங்கள் இருக்கின்றன;நாட்கள் கணக்கில் சொல்வதாக இருந்தால் 900 நாட்கள் இருக்கின்றன;இந்த 900 நாட்களில் குறைந்தது 500 நாட்களுக்கு தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு முடித்திருந்தால்,குறைந்தது 15 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிக்குச் சென்று வழிபட்டிருந்தால்,சனிபகவானின் தாக்குதல் அவ்வளவாக இராது.
நிம்மதியான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் எவரும் இதை முயற்சி செய்யலாம்.
களத்தில் இறங்குவோமா?                                 வீரட்டானங்கள் பற்றிய தகவல் ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,வெளியீடு காகா ஆஸ்ரமம்,பெரியகுளம்,திருவண்ணாமலை

Wednesday, December 21, 2011

அஷ்டமச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய பைரவர் வழிபாடு





21.12.2011 முதல் டிசம்பர் 2014 வரையிலும் மீனராசியினருக்கு அஷ்டமச்சனி வருகிறது.எனது ஜோதிட குரு வத்ராப் சுப.பொன்முடி அவர்கள் அஷ்டமச்சனி பற்றி சொன்னதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.


கடந்த 15 ஆண்டுகளில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால்,அஷ்டமச்சனியில் படாத பாடுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.இது தற்போது அஷ்டமச்சனியில் சிக்கியிருக்கும் மீனராசிக்கு மட்டுமல்ல;2015 முதல் அஷ்டமச்சனியில் சிக்க விருக்கும் மேஷராசியினருக்கும்,21.12.11 வரை அஷ்டமச்சனியில் சிக்கியிருந்த கும்பராசியினருக்கும் பொருந்தும்.மற்ற அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தும்.


அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லது பைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.


இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.



இந்த வழிபாட்டு முறையை நமக்கு அறிமுகப்படுத்திய ஆன்மீக ஆராய்ச்சியாளர் சிவமயம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி கூகுள் நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம்   ஓம்ஹரிஹரிஓம்







Friday, August 14, 2009

2009 சனிப்பெயர்ச்சி


கால பைரவர் கோயிலின் மகிமை

சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான்.உங்களில் யாரெல்லாம் சிம்மராசியோ, மகர ராசியோ அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.கி.பி.2006 முதல் இன்று வரை அவர்கள் படும் வேதனைகளை சொல்லி மாளாது.

26.9.2009 அன்று சனீஸ்வரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.நவம்பர் 2011 வரை அவர் கன்னி ராசியைக் கடக்கிறார்.

இதனால், உத்திரம் நட்சத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம் இவற்றில் பிறந்தவர்களும்;
கும்பராசியில் ( அவிட்டம் 3,4 ஆம்பாதம்,சதயம், பூரட்டாதி1,2,3 ஆம் பாதம்-இவற்றில் பிறந்தவர்கள்)பிறந்தவர்களும் தன்னையே வெறுக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
இந்த இரண்டரை வருடங்களில் இந்த ராசியினர் எந்த புதுத் தொழில் அல்லது வேலையிலும் செல்லாமல் இருக்கும் இடத்தில்/வேலையில் இருப்பது நன்று.எவ்வளவு உழைத்தாலும் மரியாதை/அங்கீகாரம் கிடைக்காது.
நாமெல்லாம் ஏன் உயிர் வாழணும்? என்ற நிலையை அடிக்கடி உருவாக்கும்.
கையிருப்பை தொடாமல் இருப்பது அவசியம்.ஒரு நாள் என்பது ஒரு வருடமாக நீளும்.யாருமே நம்மை மதிப்பதில்லை என்ற நிலை உருவாகும்.கணவன் மனைவி பிரியலாம்.ராகு திசை நடக்கும் ராசிக்காரர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.(ராகுவும் சனியும் சேர்ந்து செய்யும் லீலை).எனவே, ராகு திசை நடக்கும் கன்னிராசிக்காரர்கள் எவரது காதல்,கள்ளக்காதல் விஷயத்திலும் தலையிடக்கூடாது.மறைமுகமாகக்கூட உதவி செய்யக்கூடாது.
இவர்கள்(கன்னி,கும்பராசியினர்) சனிக்கிழமைதோறும் யாராவது உடல் ஊனமுற்றோருக்கு ஒரு வேளை அன்னதானம் செய்து வரவும்.அதே சமயம், அசைவம் தவிர்க்கவும்.தினசரி இல்லாவிட்டாலும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது வீட்டிலும் வெளியிலும் அசைவம் தவிர்த்தால் ஓரளவு நிம்மதிக்கு வாய்ப்பு.இல்லாவிட்டால் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாகும்.
கன்னி ராசி, கும்பராசியினர் இந்த இரண்டரை வருடத்துக்கு மிக சிம்பிளாக டிரஸ்செய்யவும்.
ஆண்கள் மாதம் ஒரு முறை ஷேவிங் செய்தால் போதும். தரையில் படுத்துத் தூங்கவும்.ஒரு நாளுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடவும்.அதையும் ஒரெ ரொட்டீன் நேரத்தில் சாப்பிடாமல் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடவும்.எப்போதும் அலைந்து திரியும் விதமாக வேலையை வைத்துக்கொண்டால் ஓரளவு நிம்மதி
சனீஸ்வரனின் குரு காலபைரவர் ஆவார்.இவரது கோயில் ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகில் உண்ண குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி ஆகும். இங்கு தேய்பிறை அஷ்டமிதிதி யன்று நடக்கும் சிறப்பு வழிபாட்டில் கன்னி,கும்பராசியினர் கலந்து கொண்டு நிம்மதியைப் பெற்றுச்செல்லலாம்.