Wednesday, June 8, 2011

இந்தியா பற்றி நாஸ்டர்டாமஸ்






















நாஸ்டர்டாமஸின் பாக்களுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயன்றோர் ஏராளம்; இன்னும் முயன்று வருவோரும் ஏராளம். அவரது பாக்களுக்கு விளக்கம் கூறி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இந்த எல்லா நூல்களிலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்து இந்தியா மிகப் பெரும் வல்லரசாகும் என்பதுதான்!



கி.பி, 3797ம் ஆண்டு வருவதற்கு இன்னும் 1787 ஆண்டுகள் உள்ளன. அவர் இந்த ஆண்டுகளுக்காகக் கூறியுள்ள பலன்களோ ஆயிரக்கணக்கானவை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:



ஆறாம் காண்டம் பாடல் 8: இந்தியாவில் ஒரு பெரும் தலைவர் உருவாவார். அவரைக் கொல்லப் பெரும் சதி நடக்கும். அவரைக் காப்பாற்ற மருத்துவர்களால் முடியாமல் போகும். ஆனால் அதிர்ஷ்டத்தினால் அவர் பிழைப்பார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் இந்தியத் தலைவர் என்று நாஸ்டர்டாமஸின் விளக்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

மங்கோலியர் ஆயுதங்களை உபயோகித்து சாவின் ரேகைகளைக் காண்பிக்கும் போது உலகப் போர் துவங்கும். இந்தப் போர் சக்தி மிகுந்த இரண்டு நாடுகளின் மீது கொண்டிருக்கும் நட்பால் இந்தியாவிற்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்!



ஆறாம் காண்டம்; 27ம் பாடல் :-ஐந்து நதிகள் பாயும் இடத்தில் பயங்கரமான பறக்கும் ஆயுதத்தால் நாசம் ஏற்படும். ஆறு பேர் மட்டுமே தப்பிப்பர். (இது பாகிஸ்தானைக் குறிப்பதாக விளக்கம் அளிக்கப்படுகிறது ).



மூன்றாம் காண்டம்;2ம் பாடல்:-தெய்வீக எழுத்து வானம்.பூமி, செல்வம் அனைத்தையும் தரும். (இது ஓம் என்ற அக்ஷரம் உலகில் ஏற்றம் பெறுவதைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது)



மேலும் உலக நாடுகள் பற்றி இவர் கூறியுள்ளவை பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றது.



எட்டாம் காண்டம் 99ம் பாடல் மற்றும் இரண்டாம் காண்டம் 41ம் பாடல்:- போப் ஆண்டவர் ரோமை விட்டு நீங்க நேரிடும். இது குறித்து இங்கிலாந்து புலம்பும். அது வலிமையற்ற நாடாகி விடும்.



ஐரோப்பா தனது மதத்தை இழந்து உலகின் பழமையான மதத்தை ஏற்றுக் கொள்ளும்.



இப்படி நூல் நெடுக இந்தியாவின் ஏற்றத்தை நாஸ்டர்டாமஸ் அள்ளித் தருவது உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.



நுண்மையாக எல்லாப் பாடல்களையும் அலசி ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்த்தால் மட்டுமே நாஸ்டர்டாமஸின் பாடல்களுக்குள் புதைந்திருக்கும் எதிர்கால உண்மைகள் புரியும். ஆகவே செஞ்சுரிஸ் நூலை ஒரு நாளில் கற்றுத் தேற முடியாது. இதற்கான வியாக்யான நூல்களை முதலில் படித்து விட்டு மூலத்தைப் படிக்க வேண்டும்.



ஜெர்மானியக் கவிஞரான கதே (1749-1832) இந்த நூலை ஆழ்ந்து படித்து விட்டு வியந்து போனார். அவர் கூறினார்:-

"செஞ்சுரிஸ் நூலிலிருந்து எதிர்காலத்தை நன்கு அறியலாம்"



அந்தக் கவிஞரின் கூற்று முக்காலும் உண்மை என்பதை நாஸ்டர்டாமஸின் ஆரூடப் பலன்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருவதன் மூலம் அறியலாம்.




அனைவருக்கும் பொதுவான சுலப பரிகாரம்





அளவற்ற கடன் அல்லது கடுமையான நோய் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டு/ புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வசிப்போர்களின் எண்ணிக்கை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையளவிற்கு உயர்ந்து கொண்டே செல்லுகிறது.(நமது தமிழ்நாட்டில்)

அவரவர் பிறந்த ஜாதகம் பார்த்து பலன் சொல்லி பரிகாரம் சொல்லி அதிலிருந்து மீள்வதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகலாம்;அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் கூட ஆகலாம்;இந்நிலையில் இரண்டே இரண்டு பரிகாரங்கள் மூலமாக நமது பிறந்த ஜாதகத்திலிருக்கும் தோஷங்களை நீக்கமுடியும்.

அவை :

1.அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 20 முறை (அதிகபட்சம் நூறு முறை)திருஅண்ணாமலை கிரிவலம் செல்லுதல்



2. தினமும் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை/இரவு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தல்



இந்த இரண்டை மட்டும் செய்ய ஆரம்பித்தாலே நமது சிக்கல்கள் தீரத் துவங்கும்.



திரு அண்ணாமலை கிரிவலத்தை பவுர்ணமி அல்லது அமாவாசையில்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;மிகவும் சாதாரண நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.இப்படிச் செல்லுவதாலும் நமது கடுமையான தோஷங்கள்,கடன்கள்,நோய்/கர்மநோய்/எதிர்ப்பு/எதிரி/அரசு சார்ந்த பிரச்னைகள் தீரத் துவங்கும் என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.



அதேபோல, தினமும் இருமுறை (காலை ஒரு மணி நேரம் மாலை/இரவு ஒரு மணி நேரம்) ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.இப்படி ஓராண்டு வரை ஜபித்துவந்தால்,ஒரு மாதம் ஜபித்ததுமுதல் ஓம்சிவசிவஓம் மந்திரம் நமக்கு அற்புதமான அரிய வழிகளைக் காட்டும்.அது பணப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மானப்பிரச்னையாக இருந்தாலும் சரி; போலீஸ் பிரச்னையாக இருந்தாலும் சரி;வம்பு வழக்குகளாக இருந்தாலும்சரி; சொத்துத் தகராறாக இருந்தாலும் சரி; உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் ஜெயிக்கும்;நீண்டகால பிரச்னைகள் தீரும்.



இன்று தமிழ்நாட்டில் 5 க்கு 3 பேர்கள் தீராத மன உளைச்சலில் இருக்கிறார்கள்.கூட்டுக்குடும்பம் சிதைந்தது;அதிகரிக்கும் விலைவாசி; ஜனநாயகமாகும் கள்ளத் தொடர்பு; பணவெறி இன்று செல்போன் அளவுக்கு மலிவாகி விட்ட நிலையால் 100 தமிழ்க்குடும்பங்களில் 80 இந்தப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிவருகின்றன என்பது நிர்வாண நிஜம்.இந்தப் பிரச்னைகளிலிருந்து விலகிட ஓம்சிவசிவஓம் மந்திரமும்,திருஅண்ணாமலைகிரிவலமுமே ஒரே நிரந்தர அதே சமயம் உயர்ந்த தீர்வுகள்!!

தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய ஓம்சிவசிவஓம்




ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் அவர்கள் வசித்துவருகின்றனர்.சிறு சிறு அதிசயங்கள் நிகழ்ந்ததன்மூலமாக அவர்களுக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் குலதெய்வத்திற்குச் சமமாகிவிட்டது.



இந்நிலையில் அவர்களின் குடும்ப உறவினர் ஒருவர் கடன் தொல்லை தாளாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.விளைவு?கடைசி நொடியில் அவரது தற்கொலைமுயற்சி கண்டறிந்து,தடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைக் கேள்விப்பட்ட இந்த ஓம்சிவசிவஓம் தம்பதியினர் தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர்.



மருத்துவர்கள் இந்த தம்பதியை மட்டுமல்ல;யாரையுமே அறைக்குள் அனுமதிக்கவில்லை;

எல்லோரும் வெளியே நில்லுங்க;இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என நர்ஸ்கள் கத்தினர்.





நெருக்கடியான நேரத்தில் ஓம்சிவசிவஓம் மந்திரம் உடனடியாக உதவும் என்ற வரி அந்த ஓம்சிவசிவஓம் தம்பதிக்கு நினைவுக்கு வந்தது.



உடனே விரிப்பு,ருத்ராட்சம் எதுவும் இல்லாமலேயே அந்த நெருக்கடியான சூழ்நிலையில் தனது உறவினர் உயிர் பிழைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்தனர்.சுமார் நான்கரை மணிநேரம் கடந்தது.



அவசர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளிவந்த மருத்துவர்கள்,

“ எல்லாம் கடவுள் அதிசயமே! பிழைச்சிட்டார் போய்ப் பாருங்க” என்று இந்த தம்பதியிடம் வந்து சொன்னார்கள்.



இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.உரிய தம்பதியரின் அனுமதியோடு இந்த சம்பவம் வெளியிடப்படுகிறது.ஓம்சிவசிவஓம் உயிரைக் காக்கும்!!!

பூரண அண்ணாமலை தரிசனம் தந்த ஓம்சிவசிவஓம்





நெல்லைக்கும் திருச்செந்தூருக்கும் அருகில் இருக்கும் ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி அது.அங்கே ஒரு தம்பதி.அவர்களில் கணவனாக இருப்பவர் தை அமாவாசையிலிருந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.தற்போது அவர் ஜபிக்கத் துவங்கி ஐந்துமாதங்கள் ஆகின்றன.

சென்ற வாரம் ஒரு நாள் மலையே சிவமாக இருக்கும் திருஅண்ணாமலைக்குச் சென்றிருக்கிறார்.



அவர் கிரிவலம் முடித்தப்பின்னர்,மூலவரான அண்ணாமலையாரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.இவர் சென்ற போது இலவச தரிசனப் பாதையில் ஒருவர் கூட இல்லை;மூலஸ்தானத்திற்குள்(இலவசமாகவே) சென்று சுமார் 20 நிமிடங்கள் வரையிலும் அண்ணாமலையாரை தரிசனம் செய்திருக்கிறார்.



இந்த சம்பவத்தை எதார்த்தமாகவும் எடுத்துக்கொள்ளலாம்;அதிசயமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.ஏனெனில்,எதையும் நம்பாத யுகமே நமது கலியுகம்!!! இல்லையா?

Friday, June 3, 2011

சீனாவின் பேராசை





தாலிபான்கள் மற்றும் அல் கொய்தாவுக்கு இஸ்லாமிய நாடுகளே ஆதரவளிக்கத் தயங்கும்போது சீனா மட்டும் திருட்டுத்தனமாக ஆதரவளிப்பது ஏன்?



இதுவரை அல் கொய்தாவின் உலகளாவிய குண்டுவெடிப்புக்களுக்கு ஒரே ஒரு கண்டன அறிக்கை சீனா விடாதது ஏன்?



ஆப்கானிஸ்தான் முழுவதும் தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க் அமைப்பதற்காக சீனாவின் ஹீவாவேய் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனம் காண்டிராக்ட் பெற்றது.அதற்கு முன்பாக, அல் கொய்தாவுடன் ரகசிய ராணுவ ஒப்பந்தம் போட்டது சீனா!!



இதுபற்றி இந்தியாவின் பெரும்பாலான பத்திரிகைகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?(பத்திரிகையாளன் என்றால் கம்யூனிஸ்டு என்பது இந்தியாவின் சாபக்கேடோ?)

நன்றி:விஜயபாரதம் மே,2011.

சகல விதமான பாவங்களையும் நீக்கும் ஓம்சிவசிவஓம்





ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,இரண்டு தடவை ஓம்சிவசிவஓம் நமது வீட்டில் அல்லது தங்குமிடத்தில் தினமும் ஜபித்துவருவோம்;அப்படி ஓராண்டு வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது பிறந்த ஜாதகப்படி நமக்கு இருக்கும் சகலவிதமான தோஷங்களும் விட்டு நம்மை நீங்குவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும்.

இந்த தோஷங்கள் நாம் நமது முந்தைய பிறவி அல்லது/மற்றும் ஏழு பிறவிகளில் செய்த பாவச்செயல்களின் விளைவாக உருவானவை.எத்தனை தோஷங்களாக இருந்தாலும் சரி! எத்தனை பாவங்களாக இருந்தாலும் சரி!இந்த கலியுகத்தில் இறைநாம ஜபமே நம்மை நிம்மதியாக இப்பிறவியில் வாழ வைக்கும்;மறுபிறவியில் எந்தக் குறையுமின்றியும் வாழும் விதமாக பிறக்க வைக்கும் என்பது நிச்சயம்.



இந்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்கானக் காரணங்கள் என்ன?



ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் சிவ வழிபாடே இருந்தது.பிற்காலத்தில் தான் விஷ்ணு வழிபாடு வந்தது.(விஷ்ணு வழிபாடு செய்பவர்கள் மன்னிப்பார்களாக.)

விஷ்ணு வழிபாடு துவங்கும் வரையிலும் பிராமணர்களும் சிவ வழிபாட்டையே தொடர்ந்திருக்கிறார்கள் என மிகவும் புராதனமான நூல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான ஆதாரங்கள் மலையாள ஜோதிட ஆன்மீக நூல்களில் இருக்கின்றன.(நான் சிவ விஷ்ணு வழிபாட்டினை பிரித்துப் பார்க்க வில்லை)எதிர்காலத்தில் வேறு ஏதாவது வழிபாடுகள் கூட தோன்றலாம்.



எனவே, உலகில் மிக மூத்த மற்றும் பழமையான வழிபாடு சிவ வழிபாடே ஆகும்.நம்மை ஆள்வது நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப நவக்கிரகங்கள் ஆகும்;

நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள் ஆகும்;

பஞ்சபூதங்களை ஆள்வது மும்மூர்த்திகளான பிரம்மா+கலைவாணி; திருமால்+மகாலட்சுமி; சிவன்+சக்தி ஆவர்.

இந்த மும்மூர்த்திகளை நிர்வாகிப்பது ஆதிசிவன் ஆவார்.ஆதிசிவனின் மேலதிகாரி சதாசிவன் ஆவார்; சதா சிவனுக்கும் மேலே இருக்கும் சர்வ சக்தி மனோன்மணி எனப்படும் ஆதிபரப்பிரம்ம சக்தி ஆவாள்.



இவளே இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொறுப்பு ஆவாள்.அவள் யார்? அவளது மேலதிகாரி யார்? என்பது தெரியவில்லை.



எனவே, சிவனை தொடர்ந்து வழிபட,வழிபட நாம் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபட முடியும்.இந்த ரகசியம் விஷ்ணு பக்தர்களுக்கும் தெரியும்.



எனவே, நாம் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;முக்தி என்னும் பிறப்பற்ற நிலையை அடைவோம்:



(கற்பனை செய்து பாருங்கள்:- இந்தப் பிரபஞ்சத்தில் நமது இருப்பிடம்,தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாடு,கண்டம்,உலகம்

சூரியக்குடும்பம்,மில்கிவே எனப்படும் நமது கேலக்ஸி என விரிந்து கொண்டே சென்றால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது தோன்றும்.

மில்கிவேயின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்ல ஒரு லட்சம் ஒளியாண்டுகள் ஆகும் என இயற்பியல் தெரிவிக்கிறது.அதாவது,விநாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்கள் தூரத்தில் புறப்பட்டால்,மில்கிவேயை ஒரு முறை கடக்க 1,00,000 ஆண்டுகள் ஆகும்.மில்கிவேயே இவ்வளவு பிரம்மாண்டம் எனில்,பிரபஞ்சம் எவ்வ்வ்வ்வ்ளவு பெரிது.இதில் இந்த இணையம் என்னும் வலைப்பின்னலில் ஒரே ஒரு ஓம்சிவசிவஓம் என்னும் வலைப்பூவை ஒரே ஒரு வீரமுனி நடத்திட, அதை எதேச்சையாக நீங்களும் வந்து வாசிக்க,வாசித்தப்பின்னர் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொருவிதமான தாக்கம்,சிந்தனை தோன்ற?

ஓம்சிவசிவஒம் மந்திரத்தை ஒரு ட்ரையல் செய்து பாருங்களேன்)

Thursday, June 2, 2011

மிஸ்டிக் ஐயாவின் ஆசீர்வாதம் தந்த ஓம்சிவசிவஓம்


மிஸ்டிக் ஐயாவின் ஆசீர்வாதம் தந்த ஓம்சிவசிவஓம்






திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது லட்சியத்திற்காக தினமும் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை/இரவு ஒரு மணி நேரம் வீதம் கடந்த ஆறு மாதங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறார்.அப்படி ஜபித்து வருவதை எண்ணிக்கொண்டு வருகிறார்.அவரது ஓம்சிவசிவஓம் மந்திர ஜப எண்ணிக்கை 10,000ஐத் தாண்டியதும், அவரது அதிகாலைக் கனவில் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தினை நமக்கு அறிமுகப்படுத்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் வந்து ஆசிர்வாதம் செய்துள்ளார்.