Tuesday, April 12, 2011

சித்ரா பவுர்ணமியன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்





17.4.2011 ஞாயிறு மற்றும் 18.4.2011 திங்களில் சித்ரா பவுர்ணமி வருகின்றது.பஞ்சாங்க வேறுபாடுகளின் படி சிலவற்றில் 16.4.2011 சனிக்கிழமையன்றும் ஆரம்பிப்பதாக சொல்லுகின்றனர்.உங்களது காலண்டர் அல்லது ஜோதிடர்களின் ஆலோசனைப்படி,சித்ரா பவுர்ணமிநாளில் நமது வீட்டு மொட்டை மாடியில் அல்லது அருகிலிருக்கும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில் மஞ்சள் விரிப்பு விரித்து,இரண்டு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து கைகளை மடக்கியவாறு குறைந்தது ஓரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.

(எனது ஊரில் இதோ மின் வெட்டு வந்துவிட்டது.எப்போது வேண்டுமானாலும் இந்த கணினி செயலிழக்கலாம்.எனவே,விவரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்)



15.4.11 முதல் ஒரு நாளுக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் வரையிலும் மின் வெட்டு இருக்குமாம்.ஆன்மீகக் கடலை தொய்வின்றி நடத்திட ஓம்சிவசிவஓம் கூடுதல் நேரமெடுத்து ஜபிக்க வேண்டுகிறேன்.



ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம் மின் மகிமைகள்





மதுரையில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தரக் குடும்பம் அது.கணவர்,மனைவி இருவருமே நமது வலைப்பூ மூலமாக அறிமுகமாகி ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.

இவர்களின் ஆன்மீகப் பாதுகாப்பாக ஓம்சிவசிவஓம் மாறிவிட்டது.இவர்களின் தினசரி வாழ்க்கையை சீராக,மகிழ்ச்சியாக,சிறப்பாக வைத்திருக்க ஓம்சிவசிவஓம் உதவுகிறது.இருவருமே தலா ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.



வாடகை வீட்டில் வாழ்ந்து,இருவருமே வேலைக்குச் சென்று இரு பருவ வயதுக் குழந்தைகளையும் வளர்த்து வருவது,மன்மோகன்சிங் இந்தியாவை ஆள்வதை விட கஷ்டமானது.# ஏன்யா நான் சரியாப் பேசுறேனா?



சரி,விஷயத்துக்கு வருவோம்.ஆண்டுத்தேர்வுகள் நிறைவடைந்துவிட்டன.மகனின் ஒன்பதாம் வகுப்பு முடிந்து,பத்தாம் வகுப்புக்குத் தயார் செய்வதற்காக கணித டியூசனுக்காக சரியான ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தனர்.கட்டணமோ மிக அதிகம்.அங்கே படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையோ ஏராளம்.



இவர்கள் கேள்விப்பட்ட டியூசன்களின் கட்டணமும் பிற விபரங்களும் இவர்களுக்கு திருப்தியில்லை;குடும்ப பட்ஜெட்டுக்கு ஒத்து வரவில்லை;இல்லத்தரசர் தொடர்ந்து மூன்று நாட்களாக ‘எனது மகனுக்கு குறைவான கட்டணத்தில்,நிறைவான கணித டியூசன் அமையவேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.

நான்காவது நாளாக,ஒன்றாம் வகுப்பு ஆசிரியையின் சந்திப்பு பல வருடங்களுக்குப் பிறகு அந்த தம்பதிக்கு மீண்டும் அமைந்தது.


அவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் மிக அருகில்,குறைந்த கட்டணத்திலும்,சிறப்பான பயிற்சி தரும் ஆசிரியரும் அமைந்தது அவர்களுக்கு ஆழ்ந்த மன நிம்மதியைத் தந்தது.

அவர்களின் அனுமதியோடு இந்த வலைப்பதிவு வெளியிடப் படுகிறது.

கர வருடத்தின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.




ஆத்மாக் காரனாகிய ரவி எனப்படும் சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.ஒவ்வொரு ராசியிலும் ரவி நுழையும் நாளில் நாம் நமது வீடு அல்லது கோவில் அல்லது மலையோரக் கோவில்களில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.



ஜோதிடப்படி,ரவி ஒரு ராசியின் ஆரம்ப முனையில் நிற்கும்போது அதன் பலம் பல கோடி மடங்குகளாக இருக்கும்.இதனால்,மனிதர்களின் ஆத்மாவுக்கு அந்த நாளில் (சித்திரை1,வைகாசி 1 முதலான எல்லா தமிழ் மாதங்களிலும் முதல் நாட்கள்) அளவற்ற ஆத்மசக்தி கிடைக்கும்.எதிர்காலத்தில் இந்த துறையில் மேல்நாடுகள் ஆராய்ச்சி செய்வதற்காகவே செயற்கைக் கோள்களை சூரியனை நோக்கி ஏவும்.

அந்த நாட்களில் நாம் உயரமான இடத்திலிருந்து ஓம்சிவசிவஒம் ஜபித்துவந்தால்(குறைந்தது ஒரு மணி நேரம்) நமது கர்மவினைகள் குறையும்.தேவைகள் நிறைவேறும்.



இந்த கர வருடம் 14.4.2011 வியாழன் காலை 11.20 வாக்கில் பிறப்பதால்,காலை 11.30 முதல் 12.30 வரையிலும் நமது வீட்டு மாடியில் அல்லது அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குள் அல்லது அருகிலிருக்கும் மலைக்கோவிலில் உயரமான இடத்தில் மரத்து நிழலில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.



கர வருடம் முழுவதும் வெற்றிகர வருடமாக நமக்கு இருக்கும்.

இந்த நாளில் 14.4.11 வியாழன் அன்று ஒரு போதும் நெகடிவ்வான வார்த்தைகளைப் பேச வேண்டாம்;சிந்திக்க வேண்டாம்.

உலகின் முதல் இனமாகிய தமிழ் இனமாகிய நாம் இந்த கர வருட பிறப்பன்று தமிழ் ஈழம் பிறக்க கோவில்களில் வேண்டுவோம்;ஈழத் தமிழ் ரத்தங்களுக்கு விடிவு கிடைக்க நமது குலதெய்வத்தின் கோவில்களில் சங்கல்பம் செய்வோம்.

ஊழலுக்கு எதிரான அறப்போருக்கு ஆதரவு தாருங்கள்;இந்தியா வல்லரசாகுதோ இல்லியோ,இந்தியர்களின் வறுமை நீங்க வேண்டும்.




பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் ஒரே நல்லரசு மற்றும் வல்லரசு இந்தியாவாகிய நமது நாட்டில் ஊழல் செல்போன் அலைகளைப் போல எங்கும் பரவியிருப்பதை எதிர்த்துப் போராட,நமது தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் அரசியல் ஆயுதமான உண்ணாவிரதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

நாடு முழுக்க ஆதரவு குவிவதைக் கண்டு ஊழல் காங்கிரஸ் அரசு நடுங்கிப் போய்விட்டது.

நேற்றோடு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டார்.இருந்த போதிலும் நாமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமா?

02261550789 என்ற எண்ணுக்கு நமது செல்லிலிருந்து ஒரு நழுவிய அழைப்பு கொடுப்போம்;(இதற்குக் கட்டணம் கிடையாது)இந்த ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாக நமது ஊழலுக்கு எதிரான ஆதரவு பதிவாகிவிடும்.இப்படி பதிவாகியதும்,நமது செல்லுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.

எனது கருத்து என்னவெனில்,இந்தியாவை நாசமாக்கிட,சீனாவோ,சீனாவின் வால்களாகிய 12 கம்யூனிஸ்டுகளோ,அமெரிக்காவோ,பங்காளி பாகிஸ்தானோ,தம்பி இலங்கையோ வேண்டாம்.ஊழலில் திளைக்கும் நமது பேராசைத் தலைவர்களே போதும்.இந்த நிலையை மாற்றிட நம்மாலான ஆதரவினை ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாகத் தருவோம்.

இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கும்,சமூக சேவையுடன் கூடிய வியாபாரமும்






ரசாயன உரங்களால் வளர்க்கப்பட்ட அரிசி,காய்கறிகளை நாம் சாப்பிட்டு வருவதால்,தாய்ப்பால் கூட கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகி வருவதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு நம் இந்தியாவில் நிரூபித்தது.

இந்த நிலையை மாற்றிட முழுக்க முழுக்க இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்பட்டு அரிசி,காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நமது தமிழ்நாட்டிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

கிலோ ரூ.35/-,ரூ.45/-க்கு சாதாரண அரிசியும்,ரூ.45/-ரூ.55/-க்கு பொன்னி அரிசியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசியை நாம் தினமும் சோறாக்கி உண்பதால் சர்க்கரை நோய்,மூட்டு வலி முதலான நோய்களின் வேதனை குறைகின்றன.சில காலங்கள் தொடர்ந்து சாப்பிடும்போது நமது மருந்துச்செலவும் குறைகிறது.

படிக்கும் குழந்தைகள் இந்த வகையான உணவுகளைச் சாப்பிட்டு வரும்போது நினைவுத்திறன் அதிகரிக்கிறது;ஞாபக மறதி குறைகிறது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

Sunday, April 10, 2011


பிதுர்கள் உலகமும் நமது கடமையும்
உலகம் படைக்கப்பட்டதோ,அன்றே பித்ருக்களின் உலகத்தில் பசுக்கள்,ருத்திரர்கல்,ஆதித்யர்கள் என்ற 31 பித்ரு தேவதைகளும் சிருஷ்டிக்கப்பட்டனர்.மகத்தான சக்தி பெற்ற இந்த தேவதைகள் பித்ருக்களின் உலகில் எழுந்தருளியுள்ளனர்.

நாம் மறைந்த முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம்,திதி,சிரார்த்தம் ஆகியவற்றின் தெய்வீக சக்தியை அன்னமாக(உணவாக)மாற்றி மறைந்த நமது முன்னோர்களுக்கு இந்த தேவதைகள் அளிக்கின்றனர்.இவற்றைப் பித்ரு தேவதைகளின் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் நமது மூதாதையர்கள் மிகவும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும் அடைந்து நம்மை ஆசிர்வாதிக்கின்றனர்.
இவ்வாறு நமது பித்ருக்கள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன்கலையும்,ஒரு லட்சம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பலன்களையும்,நூறு ஏழை கன்னியர்களுக்கு விவாகம் செய்து கொடுத்த (கன்னிகாதானம் செய்வித்த)புண்ணியத்தையும்,கங்கை நதியில் நீராடும் புண்ணியப்பலன்களையும்,அனாதையாக இறந்தவர்களுக்குச் செய்யும் அந்திமக்கிரியைகளினால் ஏற்படும் புண்ணியப்பலனையும் அளிக்கிறது.
ஆதலால்,மிக எளிய,ஆனால் அளவற்ற புண்ணிய பலன்களை நமக்கு உடனுக்குடன் அளிக்கக் கூடிய பித்ரு பூஜையை நாம் விட்டுவிட்டால் மேற்கூறிய அரிய நற்பலன்களை நாம் இழக்க வேண்டியிருக்கும்.எனவே,திலா ஹோமம் செய்ய வேண்டியவர்கள்(உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்) உடனடியாகச் செய்யவும்.
நன்றி:குமுதம் ஜோதிடம் 28.3.2003,பக்கம்12.
நடைமுறை அனுபவத்தில்,பித்ரு பூஜை,திலா ஹோமம்,சிரார்த்தம்,திதி தொடர்ந்து செய்துவருவதால் நமக்கு திடீரென ஏற்பட இருக்கும் அவமானங்கள்,விபத்துக்கள்,ஏமாற்றங்கள் நம்மை அண்டாமல் சூட்சுமமாக நமது பித்ருக்கள் காப்பாற்றிவிடுகின்றனர்

Saturday, April 9, 2011

ஸ்பருலினாவின் நிரூபிக்கப் பட்ட மருத்துவகுணங்கள்











41 வயதாகும் அவருக்கு குடிப்பழக்கம் மூச்சுவிடும் அளவுக்கு வந்துவிட்டது.24 மணி நேரமும் எதையாவது ஆல்கஹாலை அருந்தாவிட்டால்,கைகால்கள் நடுங்கத்துவங்கும்.மறுவாழ்வு மையத்துக்குச் சென்றும் கூட ஓரளவுக்கு மேல் சரி செய்ய முடியாத நிலை.இந்நிலையில் சும்மா ஒரு பரிசோதனைக்கு ஸ்பருலினா மாத்திரையை காலை 3 மாலை 3 என சாப்பிட வைத்துள்ளனர் அவரது மனைவியும் மகளும்!ஒரு மாதம் ஆனப்பின்னர் மதுவின் போதையிலிருந்து மீண்டுவிட்டார்.அவர்களின் ஆனந்தக் கண்ணீருக்கு அளவே இல்லை.

27 வயதுப் பெண்மணி அவர்.பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்ததால்,முதுகுவலி வந்துவிட்டது.ஓராண்டாகியும் முதுகுவலி தீரவில்லை(அடிக்கடி பேருந்தில் நீண்டதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும்,டூவீலரில் பயணித்தவாறே வாழ்பவர்களுக்கும் இதே நிலையே!)ஒரு நாளுக்கு 4 கிராம் வீதம் 45 நாட்களுக்கு (காலை 2,மதியம் 2,இரவு 2) என ஸ்பைருலினா கடல் பாசி மாத்திரை சாப்பிட்டு வர இன்று முதுவலியைக் காணவில்லை.

5 வருடங்களாக இருந்துவந்த மலச்சிக்கல் பலருக்கு தினமும் ஸ்பைருலினா மாத்திரை ஒரே ஒரு மாதம் சாப்பிட்டதில் தீர்ந்துவிட்டது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.சர்க்கரை நோயால் கைகால்களில் மதமதப்பு வந்துவிட்டது.சுமார் இரண்டாண்டுகளாக எப்போதும் கைகளும் கால்களும் அரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? ஸ்பைருலினா சாப்பிட்டு வந்த ஒரு மாதம்கழிந்து இந்த மதமதப்பு தீர்ந்தது.


தினமும் ஆறு மாத்திரைகள் சாப்பிட்டுவர,உங்களது நோய்கள் குணமாகும்.

ஸ்பைருலினா ஒரு கடல் பாசியாகும்.