Thursday, March 17, 2011


கேள்வி:ஆன்மீகத்தால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வெறுப்பு?

தமிழ் திரைப்பட இயக்குநர் பாலா:ஆன்மீகத்தை நான் வெறுக்கல.நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி.என்ன வேணாலும் சேவை பண்ணுங்க.எதுக்காக பட்டையை அடிச்சுகிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க.மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்குத் தெரியல.

அதே சமயம் சமீப காலமா ஆன்மீகத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.அதுக்குக் காரணம் ரெண்டு சம்பவம்.ஒரு கோயில்ல ஷீட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது.அதுல ஒரு இடத்துல, ‘சாமி! எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’னு ஒரு சின்னப்பையன் எழுதியிருந்தான்.இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா?

இன்னொரு சம்பவம்.நான் தேனியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பக்கத்துல ஒரு கோயில்ல ஐம்பதுபேர் சேர்ந்து, ‘என் தாலியை காப்பாய் சிவசக்தி. . .’ன்னு உருகிப் பாடிக்கிட்டிருந்தாங்க.அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு.அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படி சொல்ல முடியும்.தப்புன்னு சொல்ல நான் யாரு.இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேசவே மாட்டேன்.
நன்றி:குமுதம் பக்கம் 54,16.3.11

திருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்கவுரையுடன் இலவச வெளியீடு


சென்னையைச் சேர்ந்த திரு.கு.அறிவுநிதி என்பவர் திருமூலரின் திரு மந்திரத்தில் அரியக் கருத்துக்களைக் கொண்ட 100 பாடல்களுக்கு மதிப்புரை எழுதி அன்பே சிவம் என்ற 64 பக்க புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் திருமந்திர விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கிறது.தமிழ் வேதம் எனப்படும் திருமந்திரம் தமிழ் நெஞ்சங்களிடையே பரவும் நோக்குடன் இதை இலவசமாக வெளியிட்டுள்ளார்.விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
திரு.கு.அறிவுநிதி,
H/4/2 ஹபீப் காம்ப்ளக்ஸ்
என்:2-3,டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை,
ராஜாஅண்ணாமலைபுரம்,சென்னை-28.
செல்:9382155577,9380155577.
நன்றி:குமுதம் ஜோதிடம்,பக்கம் 27;18.3.11;

Monday, March 7, 2011

ஸ்பைருலினாவின் மருத்துவ குணங்கள்




கி.பி.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமலியா மக்களைப் போல மெலிந்து போயினர்.இருந்தபோதிலும்,சார்டு என்ற என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்(மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும்,அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்க வில்லை;வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்திருந்தனர்.இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்களின் ஆய்வுமுடிவுப்படி,சார்டு பகுதி மக்கள் குடித்த தண்ணீரில் பெருமளவு கடல்பாசி எனப்படும் ஸ்பைருலினா கலந்திருந்தது தெரிய வந்தது.அப்போது துவங்கிய ஆராய்ச்சிகள் இன்று நாம் அனைவரும் தினசரி சாப்பிட்டால்,நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக ஐ.நா.சபை அங்கீகரிக்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது.

முனைவர் எம்.பாபு ,1995 ஆம் ஆண்டில் சத்துக்களும் புற்றுநோயும் தொகுப்பு 24 எஸ்.2;பக்கம் 197 முதல் 202 வரை.ஆய்வு மேற்கொண்ட இடம் கேரளாமாநிலம்.ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் இருக்கும் கிராமப்புறமக்கள்.இதில் ஸ்பைருலினாவை சாப்பிடுவதால் நோயெதிர்ப்புத்திறன் மேம்பாடு 45% அளவுக்குக் கிடைத்தது.

அடுத்ததாக,டாக்டர் V.அன்னபூரணா,1991,தேசிய சத்துணவு ஆய்வகம்,ஹைதாரபாத்.வெளியீடு.பயோகெம்.சத்துக்கள் தொகுப்பு 10;பக்கம் 151 முதல் 165 வரை.இந்த ஆய்வில் பள்ளிசெல்வதற்கு முந்தைய பருவகுழந்தைகள் .தாவர உணவுகள் மற்றும் கீரை இனங்களில் இருப்பதை விட கரோட்டின் சத்து ஸ்பைருலினாவில் அதிகம் இருப்பதாக அறியப்பட்டது.

சென்னையில் எ.எம்.எம்.முருகப்ப செட்டியார் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தவர் முனைவர்.சி.வி.சேஷாத்திரி,1993.ஆய்வு 150 நாட்கள் நடத்தினார்.ஆய்வு 5000 பள்ளி சிறுவர்கள்,சிறுமிகளுக்கு நாளென்றுக்கு ஒரு ஸ்பைருலினா மாத்திரை வீதம் 150 நாட்கள் தரப்பட்டன.வைட்டமின் ஏ சத்து அபரிதமாக ஸ்பைருலினா மூலமாக அந்த பள்ளிச்சிறார்களுக்குக் கிடைத்தது.ஏற்பாடு இந்திய அரசு.

ஸ்பைருலினாவில் இருக்கு சத்துக்கள்:

வேறெந்த உணவுப்பொருளையும் விட 60 முதல் 70 சதவீதம் புரதம் ஸ்பைருலினாவில் இருக்கிறது.இந்த புரதம் 90 சதவீதம் ஜீரணத்திறன் கூடியது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது.

பீட்டா கரோட்டின்: அனைத்துவிதமான புற்று நோய் அபாயத்தினைக் குறைக்கிறது.பார்வை கூர்மையை அதிகரிப்பதுடன் உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.செயற்கையான பீட்டா கரோட்டினைப்போல இராமல்,ஸ்பைருலினாவில் இயற்கையான பீட்டா கரோட்டின் இருக்கிறது.

காமாலினோலெனிக் அமிலம்:ஸ்பைருலினாவைத் தவிர தாய்ப்பாலில் மட்டுமே இந்த அமிலம் இருக்கிறது.இந்த அமிலமானது கொழுப்புத்தேக்கம்,உடல்பருமன்,மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.மேலும் மாதவிடாய்க்கு முன் தோன்றும் பிரச்னைகளின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.

வைட்டமின்கள்:வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அதுவும் முழுமையாகவும் சமச்சீராகவும் நமது உடலுக்கு அதிக சக்தியளிப்பதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.ஊட்டச்சத்துகுறைந்த குழந்தைகளுக்கு உகந்தது.வைட்டமின் பி12 உள்ள ஒரே சைவ மூலப்பொருள்.

தாதுச்சத்துக்கள்:தாதுச்சத்துக்களின்றி வைட்டமின்களின் முழுப்பயனைப் பெற இயலாது.இரும்பு,துத்தநாகம்,கால்சியம்,மக்னீசியம்,செலினியம் உட்பட அனைத்து தாதுச்சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது ஸ்பைருலினா.இதில் இருக்கும் இரும்புச்சத்து எளிதில் ஜீரணிக்கப்படுவதுடன் ஒவ்வாமை போன்ற எந்த பக்கவிளைவுமற்றது.இரத்த சோகையை அடியோடு நீக்கும்.கர்ப்பிணிப்பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு ஸ்பைருலினா எனப்படும் நீலக்கடல் பாசி.

பாலிசாக்ரைடுகள்:ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.எனவே,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

உடலை தூய்மைப்படுத்தவும்,விஷத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் காரணமான குளோரோபில் இதில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்சைம்கள்:ஸ்பைருலினாவில் இருக்கும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் என்ற என்சைம் உடலில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து,இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.

பாலி அமைன்கள்:செல் ஜவ்வை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.



பலவீனமான, அமிலத்தன்மை கொண்ட உடலை ஆரோக்கியமான உடலாக மாற்றுவதற்கு உதவுகிற சிறந்த ஆல்கலின் உணவு.

80% ஆல்கலினும் 20% அமிலத்தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு.

80% ஆல்கலின் உணவு:பழங்கள்,காய்கறிகள்,பாசிகள் போன்றவை.

20% அமில உணவு:இறைச்சி, கடல் உணவுகள்,கோதுமை போன்றவை.

ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப்பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமம்.



Sunday, March 6, 2011

கேமத்துவ தோஷம் என்றால் என்ன?





பெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்ன?எப்படி வாழ வேண்டும்? என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.அப்படி உருவாகும் முன்பே,திடீரென சொத்துக்கள்,வசதிகள்,யோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் அவர்களுக்கு கேமத்துவ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.

இதனால்,இவர்களின் தினசரி வாழ்க்கை ஏழ்மையில் இருக்கும்.பலருக்கு வேலை,திருமணம்,காதல்,அரசுப்பணி,நல்ல தொழில் வாய்ப்பு போன்றவை கடைசி நிமிடத்தில் கைகூடாமல் போய்விடும்.ஒரு வேளை உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.சோற்றுக்காக போராடுவதே வாழ்க்கையாகப் போய்விடும்.

இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குருவை சனியோ,சனியை குருவோ பார்க்கும் விதமாக கிரகநிலை அமைந்திருக்கும்.சிலருக்கு குருவும் சனியும் ஒரே ராசியில் இருக்கும்.தற்போது 2008,2009,2010,2011 ஆம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிரக நிலை அமைந்துகொண்டே இருக்கிறது.இந்த நான்கு ஆண்டுகளிலும் சனியை குருவும் குருவை சனியும் நேர் ஏழாம் பார்வையாகப் பார்த்துவருகின்றனர்.

இவர்கள் முற்பிறவியில் ரகசியா,டிஸ்கோ சாந்தி,சிலுக்கு ஸ்மிதா,குத்துப்பாட்டு நடிகைகளின் வேலையைப் பார்த்திருப்பர்.

முற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்.

ஜாக்கிரதை:இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.

தவிர ஷகீலா போன்றவர்களுக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என நினைக்காதீர்கள்.உங்களின் சொந்த காம அனுபங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்;நீங்கள் கேள்விப்பட்ட காம கிசுகிசுக்களையும் மறந்துவிடுங்கள்;உங்கள் தெருவில் நடைபெற்ற காம அவமானங்களை தெருவையும் கடந்து யார் யாருக்கோ இறக்கை முளைத்து பறக்கும்;உங்கள் அலுவலகத்தில் நடக்கும் முறையற்ற காம கூத்துக்களும் இதே நிலைதான்.இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைவிட இவர்களைப் பற்றி தமது கற்பனையையும் கலந்து உரியவர்களை அசிங்கப்படுத்துவதில் ஒரு பரமசுகம் என நம்பும் தமிழ் மக்கள் அதிகம்.இவர்கள் அனைவருக்கும் கேமத்துவ தோஷம் ஏற்படும்.

மிகவும் கடுமையான கேமத்துவ தோஷம் ஒருவருக்கு காமத்துணையை வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல்,ஏங்கியே சாக வைக்கும்.

கடுமை குறைந்த கேமத்துவ தோஷம் சில ஆண்டுகளுக்காவது கணவன் மனைவி பிரிவினையை உருவாக்கும்.

மிகக் குறைந்த கேத்துவ தோஷம்,எந்த வித காமக் குற்றங்கள் செய்யாமலேயே ஒழுக்கமற்றவர் என்ற பெயரை உருவாக்கும்.நான் கேள்விப்பட்டவரையில்,தனது மகனையும்,மகளையுமே ஒழுக்கங்கெட்டவன்/ள் என எல்லோரிடமும் தூற்றும் அம்மா,அப்பாக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இப்படி தரங்கெட்ட அம்மா,அப்பா உருவாக பல காரணங்கள் உண்டு.அதில் ஒரு முக்கிய காரணம் டிவியில் வரும் பிரபல நெடுந்தொடர்கள் தான்.எப்படி எல்லாம் ஒருவரது பெயரைக் கெடுப்பது? என்பதை சொல்லித்தருகின்றன.

Saturday, March 5, 2011

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி

திண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.




விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில் பி.ஏ., முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம் எக்ஸெல் பயிற்சி நிலையத்திலும், மெயின் தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்திலும் படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள் குவியத் துவங்கியுள்ளன.



வெற்றி குறித்து சுஜிதா கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனது தாய் அடிக்கடி, உன்னால் இந்த உலகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், இந்த உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்று கூறியதுடன், செய்தித் தாள்களைப் படித்து காட்டுவது உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தளவு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன். ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள

"ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்' என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன், என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்காக, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.
thanks:www.dinamalar.com

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு. பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெரு பத்திர காளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுட்டு வழிபாடு நடத்துவது, கடந்த 48 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
thanks:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=199071

நேற்று (மாசி அமாவாசை 4.3.11)ஓம்சிவசிவஓம் ஜபித்தீர்களா?




ஒரே நாளில் நாம் நமது பிரச்னைகள் தீர வேண்டும் என ஆசைப்படுகிறோம்.ஆனால்,நமக்கு வரும் பிரச்னைகள்,நாம் முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள்,பொறாமை,திமிரின் விளைவுகளே! எனவே, ஒரே நாளில் நமது பிரச்னைகள் தீராது.

எப்படி எறும்புகள் ஒரு பாறையின் மீது நடந்து,நடந்து அந்த பாறை தேய்கிறதோ,அதேபோல்,நாம் தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது பிரச்னைகள் படிப்படியாக மட்டுமே தீரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

உதாரணமாக,நாம் செய்திருக்கும் முற்பிறவிக் கர்மங்களின் விளைவு 450 கோடி டன் என வைத்துக்கொள்வோம்.இதன் விளைவாக,37 வயது வரை நமக்கு திருமணம் ஆகாமலிருக்கும்;அல்லது 100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தாலும் குடும்பமே கோர்ட்,கேஸ்,என சுமார் 14 ஆண்டுகள் அலைய வேண்டியிருக்கும்;அல்லது தொழில் பார்த்து 1 கோடி ரூபாய் கடன் உருவாகும்;அல்லது திருமணமாகி ஓரிரு குழந்தைகள் பிறந்து அவைகளுக்கு 10 வயதாகும் முன்பே,கணவன் ஓரிடம்,மனைவி ஓரிடம்,குழந்தைகள் ஓரிடம் என தனித்தனியே சுமார் 7 ஆண்டுகள் வரையிலும் வாழ வேண்டியிருக்கும்;அல்லது உங்களது முற்பிறவிகர்மாவைப் பொறுத்து கர்ம நோய் அல்லது கடன் அல்லது எதிரி அல்லது அரசாங்க விரோதம் என ஏதாவது ஒரு தொல்லை நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.

கொஞ்சம் சீக்கிரமாக தீருவதற்காகத் தான்,தமிழ்மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,சிவராத்திரி,பிரதோஷம் முதலான நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்படி வலியுறுத்துகிறோம்.

நேற்று மாசி மாத அமாவாசை,வெள்ளிக்கிழமை,ராகுவின் நட்சத்திரமாகிய சதயம் இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருந்தது.4.3.11 மாசி அமாவாசையாகிய நேற்று நீங்கள் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்திருந்தால்,நீங்கள் எவ்வளவு தடவை ஓம்சிவசிவஒம் ஜபித்தீர்களோ,அந்த எண்ணிக்கை பெருக்கல் ஆயிரம் கோடி மடங்காக பெருகியிருக்கும்.

ஜோதிட அறிவியலின் படி,ஒவ்வொரு தமிழ்மாதமும் சூரியன் அடுத்த ராசியில் நுழைந்திருப்பார்.அப்படி நுழைந்த நாளில் அந்த ராசியில் நமது ஆத்மாக்காரனாகிய சூரியனின் பலம் பலமடங்கு அதிகமாக செயல்படும்.

அமாவாசையன்று ஆத்மாக்காரன் எனப்படும் சூரியனும்,மனக்காரன் எனப்படும் சந்திரனும் ஒன்று சேரும் நாள்.இந்த நாளில்,நாம் ஒருமுறை ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் பல கோடிமடங்கு ஜபித்தமைக்கான பலனைத் தரும்.இந்த நாளில்,நாம் முடிந்தவரையிலும் காலையில் ஒரு மணிநேரமும்,மாலையில் ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிப்பது நன்று.

பவுர்ணமி நாளன்று சூரியனுக்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் நிற்கும்.சூரியனும் சந்திரனும் முழு சக்தியைப் பெறுவர்.எனவே,இந்த நாளிலும் நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மிகுந்த உற்சாகத்தோடு பல மடங்காக அதிகரிக்கும்.ஏனெனில்,மனக்காரனகிய சந்திரன் முழுபலத்தோடு இருப்பதால்,நாம் தெளிவான மனநிலையோடு இருப்போம்.

சூரியக் கிரகணம்,சந்திரக்கிரகணம் அதிக பட்சமாக இரண்டு மணிநேரமும் குறைந்த பட்சமாக 7 நிமிடமும் நாம் வாழும் பகுதியில் தெரியும்.அந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்துப்பாருங்கள்.உங்களை அறியாமலேயே வேகமாக ஓம்சிவசிவஓம் ஜபிப்பீர்கள்.இந்த கிரகண நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஒரு முறை ஜபித்தாலோ ஆயிரம் கோடி தடவை ஜபித்தமைக்கான பலன்கள் நமக்குக் கிடைக்கும்.



கலிகாலத்தில் பூஜைகள்,யாகங்கள் இவற்றினை செய்யும் போது பல மனிதர்களின் ஆதரவோடு செயல்பட வேண்டியிருக்கும்.அப்படிப்பட்ட சூழலில் அந்த பல மனிதர்களில் ஒரு சிலராவது உள்ளன்போடு,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செயல்பட முடியாத நிலை இருக்கும்.எனவே,அவை ஓரளவுக்கு மேலாக நன்மைகளை ஒரே தடவையில் தருவதில்லை.(இது எனது சொந்தக் கருத்து அல்ல;ஆன்மீகப்பெரியவர்களின் கூற்று)

மந்திர ஜபத்துக்கும்,இறை நாமத்தை ஜபிப்பதற்குமே உடனடி பலன் கிடைக்கும் என கீதையில் துவங்கி,திருமூலர் வரை ஏராளமானவர்கள் விவரித்துள்ளனர்.எனவே, தினமும் ஒரு மணிநேரமும் முக்கிய நாட்களில் இரண்டு மணிநேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கவும்.

இப்படி நல்ல நாட்களில் அதிகமான நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக நமது முற்பிறவிகர்மாவின் அளவு 450 கோடி டன் என்பது 50 கோடி டன் என்ற அளவுக்கு குறைய நாம் குறைந்தது ஒராண்டு வரையாவது தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

இந்த 450 கோடி டன் என்பது சும்மா உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு அளவீடு மட்டுமே!



பாவம் என்றால் என்ன?

பிறரை மனதால்,உடலால் நோகடிப்பது;ஏமாற்றுவது;வெறுப்பேற்றுவது;காயப்படுத்துவது;

இதுவே விரிவாக கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.கலிகாலத்தில் காமம் அல்லது பணம் அல்லது சொத்து சார்ந்த பாவங்களைத் தான் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது.