Saturday, July 4, 2009

இந்தியாவின் சுதந்திர ஜாதகம் :


இந்தியாவின் சுதந்திர ஜாதகம் கூறுவது என்ன?

கி.பி.2009 இல் தேச பக்தி மிக்க ஒரு மாவீரன் இந்திய மக்களிடையே பிரபல மடைவான்.அவ்வீரனை தென்னகத்தைச் சேர்ந்த ஒரு துறவி வழிநடத்துவார்.

செப்டம்பர் 2009 வரையிலும் இந்தியாவிற்கு ஏழரைச்சனி நடக்கிறது.இந்தியாவின் சுதந்திரநாள் படி இந்தியாவின் பிறந்த ராசி கடகம் ஆகும்.எதிர்வரும் சனிப்பெயர்ச்சி ஆன உடனே இலங்கைத் தமிழர்களுக்கும்,அவர்களின் இயக்கங்களுக்கும் இந்தியா நேரடியாக ஆதரவு தரும்.

எத்தகைய எதிர்ப்புகள்,சூழ்ச்சிகள் இருந்தாலும் ஆகஸ்டு 2009 இல் அயோத்தியில் ஸ்ரீராமபிரானின் திருக்கோயில் புனர்நிர்மாணம் வெற்றிகரமாக நடைபெறும்.

18.6.2011 வரை மட்டுமே உலகம் நமக்கு தீமை செய்ய முடியும்.இந்த நாள் வரையிலும் தேசபக்தி நிறந்த இந்தியர்களுக்கும் தேச துரோகிகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆங்காங்கே சண்டைகள்,கருத்து யுத்தம் நடக்கும்.

2.3.2014 லிருந்து நம் பாரதம் அதாங்க இந்துயா மீண்டும் வேத பூமியாக தர்ம பூமியாக மாறும்.
இந்தியா சர்வதேச அரங்கில் தனிப்பெரும் வல்லரசாக மாறும்.
ஜெய் ஹிந்த்!!! ஜெய் ஸ்ரீராம்!!!
கணிப்பு:ஏ.எம்.ராஜகோபால் அவர்கள்.
ஆதாரம்:விஜயபாரதம் பக்கம்32-34. 28.10.2005.

ஒரே தமிழ் மாதத்தில் மூன்று கிரகணங்கள்:உணர்த்துவது என்ன?




வரப்போகும் மூன்று கிரகணங்கள்:குறிப்பால் உணர்த்துவது அழிவுகளையா? யதார்த்தமான நிகழ்வுகளா?

7.7.2009 அன்று சந்திரகிரகணமும்

22.7.2209 அன்று சூரிய கிரகணமும்

6.8.2009 அன்று மீண்டும் இன்னொரு சந்திரகிரகணமும் வரப்போகிறது.

இந்த மாதிரி தொடர்ந்து ஒரே தமிழ் மாதத்தில் தொடர்ச்சியாக மூன்று கிரணங்கள் வந்தால் அதைத் தொடர்ந்து போர், வேகமாக பரவும் நோயால் மனித மரணங்கள்,கடல் சீற்றம் என இதற்கு முன்பு வந்திருக்கிறது.
இதனால் மனித உடல்களிலும் மாற்றம் ஏற்படும்.

கடந்த நூற்றாண்டில் 1913 ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் 1946 ஜீன் 29 ஆம் தேதி வரை ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்கள் என்ற கணக்கில் 18 முறை ஏற்பட்டுள்ளது.

முற்கால இதிகாசங்களில் ஆராய்ந்து பார்த்தால் இந்து இதிகாசமான மகாபாரதத்தில் மட்டும் இது பற்றி குறிப்பு உள்ளது.

ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்கள் வந்த பின்பே மகாபாரதப்போர் குருஷேத்திரத்தில் துவங்கியிருக்கிறது.

மகாபாரதப்போர் நிகழ்ந்துமுடிந்து 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் வந்ததால் துவாரகா கடல்கோள் ஏற்பட்டு
அழிந்தது.

அதற்கும் முற்காலத்தில் இலங்கைக்கு தெற்கே இருந்த குமரிக்கண்டம் இதனால் தான் அழிந்தது.அப்போது தன் மக்களைக் காப்பாற்ற ஒரு பாண்டிய மன்னன் மிக பெரும் மனித இடப்பெயர்ச்சி செய்தான் என பழங்கால இலக்கியங்கள் கூறுகின்றன.

கூர்ந்து கவனியுங்கள்.1913லும் 1941லும் தொடர்ந்த மூன்று கிரகணங்கள் நிகழ்ந்த பின்பே உலகப்போர்கள் நிகழ்ந்துள்ளன.

இதுபற்றி விரிவாக ‘வரலாறு திரும்புமா?’ என்ற தலைப்பில் டி.கே.ஹரி, ஹேமா ஹரி சென்னைத் தம்பதியினர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளனர்.
மேலே இருப்பது சூரிய கிரகணம், கீழே இருப்பது சந்திரகிரகணம்.

புத்தன் போதனை

புத்தன் போதனை:ஒரு கவிதை

என் அக்காளின்
மானத்தைத் தின்ற நீ
எப்படி விடுமுறைக்கு
வீடு சென்றாய்?

உன் பார்வைக்கு பயந்து
உன் அம்மாவும் தங்கையும்
ஓடி ஒளிய்ய மாட்டார்களா?

உன் பூட்ஸ் ரேகையில்
இத்தனை தசைபிண்டங்கள்
சிக்கிக் கிடக்க
மிடுக்காக நடக்கிறாயே,,எப்படி?

உணர்ச்சி நரம்பை
அறுத்துவிட்டுத்தான்
இணைத்துக் கொள்கிறார்களா
உங்கள் ராணுவத்தில்?

புத்தன் போதனைக்கு
புது அகராதி உண்டோ
உங்களிடம்?

ஒரு தடவையேனும் போய்
கண்ணாடி பார்
இன்னும் தெரிகிறதா
அங்கே மனித முகம்?

எழுதிய கவிதாயினி: தமிழினி
வெளிவந்தது:ஜீனியர் விகடன் 5.7.2009,பக்கம் 18

Friday, July 3, 2009

உலக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?-4


உலக அரசியலில் அடுத்து என்ன?-4

இந்த நிலையில் எனது யூகங்களை மட்டுமே இங்கு என்னால் சொல்லமுடியும்.

கி.பி.2010 முதல் கி.பி.2310 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள 300 ஆண்டுகளில் இந்த பூமியானது இந்து பூமியாக பரிணமிக்கும்.உலகம் இன மோதல்கள்,மதச்சண்டைகள், எல்லைத்தகராறுகள் ,ஆதிக்கவெறியை மறக்கும்.கி.பி.2100க்குள் உலக அரசாங்கம் உருவாகிவிடும்.
அது எப்படியெனில் டாலரை வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் விழித்துக்கொண்டன.அதன் விளைவுதான் யூரோ என்ற ஐரோப்பிய பொதுப்பணம்.இன்று ஒருடாலரின் விலை ரூ.40/- ஆனால் ஒரு யூரோவின் விலை ரூ.70/-இதே போல சீனா இந்தியா ஜப்பான் மட்டும் ஒன்றிணைந்து ஆசியோ என்ற பொதுப்பணத்தை வெளியிடக்கூடிய நிர்ப்பந்தம் வரும்.அப்போது யூரோ படுபாதாளத்தில் விழும்.டாலர் காணாமல் போகும்.
கி.பி.2050 அல்லது அதன் பிறகு யூரோவும் ஆசியோவும் இணையும்.உலகின் ஒரே பணம் புழங்கத்துவங்கும்.அப்போது இந்தியாவை ஒரு பெண் ஆட்சி செய்வாள்.அவளே உலக அரசாங்கத்தின் முதல் தலைவியாவாள்.அவள் ராமாயணத்தில் சீதைக்குத் துணையிருந்த ஒரு அரக்கி.அவள் பெயர் திரிசடை!
திரிசடை மறுபிறவியில் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியாக பிறந்தாள்.அவளது ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து உலகை ஆண்டது.
இனி திரிசடைக்காக இந்தியா உலகின் ஒரே வல்லரசாகும்.உலகம் பல நூற்றாண்டுகளுக்கு அமைதியான விதத்தில் முன்னேறும்.
இந்துமதம் நவீனமடையும்.கூடுவிட்டு கூடு பாய்வது பிடெக் கிற்குச் சமமாக கல்லூரிகளில் பாடமாகும்.
மனித மூளையில் இது வரை நாம் 1% மட்டுமே பயன்படுத்திவருகிறோம்.இதை 10% அளவுக்குப் பயன்படுத்தத்துவங்குவோம்.
நிலாவில் நாடுகள் உண்டாகும்.செவ்வாய்க்கு சுற்றுப்பயணம் சகஜமாகும்.சித்தர்களின் உலகத்தை நமது விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்போம்.யுரேனஸ் தாண்டி மனித குடியேற்றத்திற்கு ஏற்ற பூமிகளைக்கண்டறிவோம்.

நமது அண்டைநாடு ஒன்று பயங்கரவாதத்தால் கி.பி.2100 க்குள் மூன்று துண்டுகளாக உடையும்.அந்த நாடு உலகிலேயே பயங்கரவாதத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.அந்த நாட்டினை முட்டாள் அமெரிக்கா செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறது இன்று வரையிலும்!!!


கி.பி.2100க்குள் இந்தியாவில் உள்ள எல்லாக் கோவில்களிலும் அமெரிக்கா அல்லது ஐரோப்பியர்களே பூசாரிகளாக இருப்பர்.
கி.பி.2010 முதல் இந்தியாவுக்கு வெள்ளைக்கார மாணவர்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்க அலைகடலென வருவார்கள்.
1.இந்து ஜோதிடம்
2.இந்து பண்பாடு
3.ஆயுர்வேதம்
4.இந்து யோகாசனம்
5.ஜாதி மரபுகள்
6.இந்து உடைகளை உருவாக்கும் விதம்
7.பிராணயாமம்
8.இந்து பூஜை செய்யும் விதங்கள்
9.வேதம் ஓதுதல்
10.இந்து விழாக்களைக் கொண்டாடுதல்

ஏற்கனவே அமெரிக்கப்பல்கலைக் கழகங்கள் இண்டாலஜி(இந்தியவியல்) என்ற துறையை உருவாக்கியுள்ளன.இந்தத் துறை மூலமாக இந்தியாவின் ஜாதிகள், சம்பிராதயங்கள், பண்பாடு,சமையல் அனைத்திற்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் இருப்பது கண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய சீன உலகம் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது.

மறுபுறம் எதிர்வரும் 7.10.2009 முதல் 15.5.2010 வரை ஜோதிடப்படி செவ்வாய்க்கிரகமானது நீசமடையப்போகிறது.ஜோதிடப்படி செவ்வாயானது இந்த பூமிக்கு அதிபதியாகிறார்.அவர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை வெறும் 45 நாட்கள் நீசமடைவார்.அந்தநாட்களில் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் ஏதாவது ஒருவிதத்தில் அவமானப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் இம்முறை சுமார் 9 மாதங்கள் நீசமடையப்போகிறது.விளைவு?
நம் பூமியின் பெரும்பகுதி அழியலாம்; ராணுவம்,காவல் துறையினர் அதிகாரத்தில் இருப்பவர்களின் கட்டளையை செயல்படுத்தாமல் போகலாம்.ஏன் அவர்களே கலகம் செய்யலாம்.பூமியான ரியல் எஸ்டேட் விலை தொபுக்கடீர் ஆகலாம்.ஆப்ரிக்கக்கண்டம் மற்றும் சிறு தீவுகள் கடலுக்குள் மூழ்கலாம்.

முடிவில் தீவிரவாதம், குடும்பத்தீவிரவாதம், எய்ட்ஸ், முதலியன கட்டுப்பாட்டுக்குள் வரலாம்.
பணம் என்பது கம்ப்யூட்டர் திரையில் மட்டுமே இருக்கும்.குடும்பம் என்பது விஞ்ஞானமயமாகும்.மனித ஆயுள் 1200 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
ரோபோக்கள் நம் சார்பாக ஜாதிச்சண்டை போடுவார்கள்.நாடு விட்டு நாடு சென்று திருமணங்கள் நடக்கும்.

உலக அரசியலில் அடுத்து என்ன?-3


உலக அரசியலில் அடுத்து என்ன?-3

இந்த நிலையில்,இந்துக்கள் புனித திருத்தலமான திருக்கையிலாயம்-மானசரோவர் இமயமலையில் இருக்கிறது.இதன் ஆன்மீகப்பிம்புலத்தை நமது முதல் பிரதமர் நேரு உணரவில்லை;சீனா உணர்ந்து கொண்டது.1967 களில் இதைக்கைப்பற்றிக் கொண்டது.
இந்த திருக்கையிலாயம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை சீனா அதிவேகமாக வளர்ந்து கொண்டே செல்லும்.
மறுபுறம், ஒரு குஷ்வந்த்சிங்கின் ஜோக்கை இங்கு சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.
அமெரிக்கா ஏன் உலக வல்லரசாக இருக்கிறது?
ஏன் எனில் அது உலகின் எல்லா உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட்டுக் கொண்டே இருப்பதால்!!!

சரி! இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகவில்லை?(இந்த வலைப்பூவை முழுமையாகப் படிக்கவும்.நாம் எவ்வ்வ்வளவு பெருமைகள் வைத்திருக்கிறோம்.இருந்தும் ஏன் வடிவேல் போல உலக அரங்கில் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறோம்?)
ஏன் எனில் இந்தியா தனது உள் நாட்டு விவகாரங்களில் கூட சிறிதும் தலையிடுவதில்லை.
(எவ்வளவு கேவலமான நிலை.பிறகு எப்படி இந்தியா இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில் தலையிடும்).
ஆனால்,2009 நவம்பர் 18 முதல் 31.12.2011க்குள் நமது இந்தியாவை ஒரு சர்வாதிகாரி ஆட்சிசெய்யத்துவங்கப் போகிறார்.அது யார்? தெரியாது.
2006 சுனாமியானது ஒரு துக்கமான நிகழ்வு.அதற்குப்பின்னால் ஒரு ஆன்மீக நிகழ்வு இருக்கிறது.கி.பி.2006 வரையிலான 100 ஆண்டுகளில் ஆசியா முழுமைக்குமான கடற்கரையோரங்களில் காமரீதியான குற்றங்கள் சொல்லவே கூச்சப்படும்படியாக அரங்கேறிக்கொண்டே இருந்தன.அந்த காமரீதியான துன்புறுத்தல்களின் எண்ணப்பதிவுகளால் கடலுக்குள் தியானம் செய்துகொண்டிருந்த காகபுசுண்டர் என்ற சித்தர் கோபத்துடன் எழுந்தார்.அவரது கோபமே சுனாமியாகும்.26.12.2006 க்குப்பின்பு வெளிவந்த தினத்தந்தி,ராணி,மங்கையர்மலர் மற்றும் பல தமிழ் தினசரிகளில் இது தொடர்பான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
இதைத் தொடர்ந்து கி.பி.2010 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி யில் சித்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.இந்த சதுரகிரியானது சிவபெருமான் வாழும் பூலோக திருக்கையிலாயம் ஆகும்.சித்தர்கள் வாழும் பூமியாகும்.இதுபற்றி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தினத்தந்தியுடன் வரும் இலவச இணைப்பான ஆன்மீக மலரைப்படிக்கவும்.அதில் அதிசய சித்தர்கள் என்ற தொடர் சதுரகிரியின் ஆன்மீகமுக்கியத்துவத்தை விவரிக்கிறது.
வடநாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன், தென்னாட்டை ச்சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான் என பல வருடங்களாக குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபால் அவர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்.
அந்த மாவீரன் 18.11.2009 அன்று அல்லது அதற்குப்பிறகு இந்தியாவின் தலைமைபீடத்தைக் கைப்பற்றுவான்.அன்று முதல் இந்தியாவுக்கும் உலகத்திற்கும் நல்ல நேரம் தொடங்குகிறது.
கி.பி.2011 முதல் கி.பி.2014 க்குள் இந்துமதத்திற்கு உலகளவில் மாபெரும் ஆதரவு கிடைக்கப்போகிறது.(நான் நினைக்கிறேன்.இந்துமதத்தின் உணர்வுகளைச் சீண்டும் விதமாக சீனா அல்லது சோனியா அல்லது இருவரும் பல காரியங்களைச் செய்வார்கள்.அதை உடனுக்குடன் வெளிப்படுத்தும் விதமான பா.ஜ.க.தலைவன் ஒருவன் அல்லது சிலர் வருவர்.அந்த தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடியும் இருக்கலாம்.)
பாபர் மசூதியை இடித்ததற்கு கூச்சல் போட்ட கம்யூனிஸ்டுகளும் பிற கட்சிகளும் காணாமல் போய்விடும்.இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது சீனாவின் உளவுப்படையே தான்.அதுதான் இப்போது உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தை ஆள்கிறது.அதாவது சீனாவின் மாநிலங்களில் ஒன்றாக நேபாளம் மாறிவிட்டது.

உலக அரசியலில் அடுத்து என்ன?-2


உலக அரசியலில் அடுத்து என்ன?-2

சீனா மற்றும் ஜப்பானுக்கு எப்போதுமே ஒரு பேராசை உண்டு.அது உலகை ஆள்வது!!
இன்று உலக மயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்க மயமாக்கல் நடந்துகொண்டிருக்கிறது.அமெரிக்கமயமாக்கல் என்றால் அளவற்ற செக்ஸ் சுதந்திரம், பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்களுக்கு அளவற்ற சுதந்திரம் தருதல்(இதனால் அடுப்படியைத் தவிர கள்ளச்சாராயம் காய்ச்சுவது முதல் நிலாவிற்கு ராக்கெட்டில் பறப்பது வரை எங்கும் பெண்கள் மயமாகிவிடும்),வெட்டி பந்தா(கணினித் தொழிலில் பணிபுரிபவர்களின் நடத்தை),அனாவசியச்செலவுகள்(பெருமைக்கு மாரடித்தல்) என நீநீநீண்டு கொண்டே செல்லும்.இதன் விளைவாக உலக நாடுகளில் ஒழுக்கம் சிதைந்து சமுதாய அமைதி சின்னாபின்னமாகிவருகிறது.
மறு புறம் ஜோதிடமும் தன் பங்குக்கு சில உண்மைகளை உரைக்கிறது.அதை பிறகு பார்ப்போம்.
சீனா இன்று ரஷ்யாவின் இடத்தைப்பிடித்துள்ளது.உலக அரசியலில் அமெரிக்காவிற்கு ரஷ்யாவை உடைத்தது மிகப்பெருந்தவறு என்பதை உணர்ந்திருக்கிறது.காரணம் அந்த அளவிற்கு அமெரிக்காவிற்கு சீனா உலக அரசியல் அரங்கில் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இரண்டே உதாரணங்களைப்பார்ப்போம்:
1.வான் வெளியில் பறக்கும் செயற்கைக்கோள்களை ஏவுகணை ஏவி அழிக்கக்கூடாது என்பது ஐ.நா.சபையின் சட்டம்.உங்களுக்குத்தான் தெரியுமே?ஐ.நா. ஒரு சட்டம் இயற்றுகிறது எனில் அது அமெரிக்காவை மட்டும் கட்டுப்படுத்தாது என்று அர்த்தம்.
2006,2007 ஆம் வருடங்களில் ஒன்றில் சீனாவானது தனது செயலிழந்துபோன செயற்கைக்கோளை ஏவுகணை ஏவி தகர்த்தது.இதற்கு அமெரிக்கா கூப்பாடு போட்டது.
2.அமெரிக்கா ஒரு நாட்டிடம் அதன் எல்லைசார்ந்த பிரச்னையை பேசும்.பேசும்போதே அந்த நாட்டை மிரட்டும்.அதனை செயல்படவிடாமல் தடுக்கும்.
இதை அமெரிக்காவிடமே செயல்படுத்தி அமெரிக்காவை ஸ்தம்பிக்கச்செய்தது.
3.அணுகுண்டு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு சூப்பர்கம்யூட்டரைப்பயன்படுத்தக்கூடாது என்பது ஐ.நால்.வின் சட்டம்.
சிங்கப்பூரைச்சேர்ந்த ஒரு தனியார் கம்பெனி அமெரிக்காவிடமிருந்து ரூ.500 கோடி கொடுத்து ஒரு சூப்பர் கம்யூட்டரை விலைக்கு வாங்கியது.அந்த நிறுவனம் அந்தசூப்பர் கம்யூட்டரை பிரித்துப்பார்க்காமலேயே தைவானுக்கு அனுப்பிவிட்டது.
தைவானில் சீனாவின் ராணுவ மண்டல ஆராய்ச்சிக்கழகத்திற்கு அந்த சூப்பர் கம்யூட்டர் கி.பி.2001 ஆம் ஆண்டிலேயே போய்விட்டது.
4.சீன ஹேக்கர்கள் இண்டர்நெட் மூலமாக அமெரிக்க ராணுவதளங்களையும்,அமெரிக்க அரசு வெப்சைட்களையும் செக்ஸ் வெப்சைட்களாக மாற்றியிருக்கின்றனர்.
இதற்கு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே சீன அரசுதான் இதற்குக்காரணம் என அறிவித்தது.அந்த அறிவிப்பைப்பார்த்து அமெரிக்காவிடம் சீன அரசு மறுத்திருக்கிறது.”யாரோ சில ஹேக்கர்களின் செயலால் சீன-அமெரிக்க உறவு சீர்குலையும் என சில நாடுகள் விரும்புகின்றன”(எவ்வளவு அட்டகாசமாக சீனா அறிக்கை விடுகிறது பார்த்தீர்களா?)

உலக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?-1


உலக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?

1990 வருடம் வரை கம்யூனிசக்கொள்கையைப் பின்பற்றி வந்த சோவியத் ரஷ்யாவும், முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றிவந்த அமெரிக்காவும் சரிக்குசரியாக மல்லுக்கட்டின.

அமெரிக்கா ஒரு முடிவு செய்தது.அதன் படி, சோவியத் ரஷ்யாவின் உலகளவிலான உளவாளிகள் என சந்தேகப்பட்ட அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிவந்து சோவியத்தின் முதுகெலும்பை உடைத்தது.
அதே சமயம்,சோவியத் ரஷ்யாவானது சுமார் 20 நாடுகளை ஒருங்கிணைத்து சர்வாதிகார ஆட்சிசெய்துவந்தது.அந்த 20 நாடுகளிலும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ஊடுருவியது.தனிநாடு கோரிக்கையைத் தூண்டியது.
சோவியத் சிதைந்தது.

சிதைந்துபோன பின்னர் சோவியத் அரசு சக்திகளுக்கு ஒரு உண்மை புரிந்தது.”வெறும் அரசியல் உறவுகளால் ஒருமைப்பாட்டை உருவாக்கமுடியாது.இந்தியாவைப் போல ஆன்மீக ரீதியான உணர்வு ஒருமைப்பாடு மட்டுமே ஒருங்கிணைந்த ரஷ்யாவை உருவாக்கிட முடியும்.ஆனால் அதற்கு 1000 வருடங்களாகுமே”