Showing posts with label மந்திரஜபம். Show all posts
Showing posts with label மந்திரஜபம். Show all posts

Friday, February 3, 2012

ANCHESTOR'S POOJAI "S POWER



ANCHESTOR'S POOJAI "S POWER

அவர்கள்:1)இறைவன்,2)பித்ரு தேவதைகள்,3)எமதர்மராஜன்,4)பித்ருக்கள்.
பித்ரு பக்திக்கு இணையானது எதுவுமில்லை.பித்ரு பூஜையைப் போல பலன் அளிப்பதும் வேறு எதுவும் இல்லை.
நன்றி;குமுதம் ஜோதிடம்-வார ஜோதிட இதழ் 1.11.2002 பக்கம் 14.
1.பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது கிரகண நேரம் அல்லது தமிழ் வருடப் பிறப்பு அன்று ஒரு மந்திரத்தை கடல் அல்லது ஆற்றில் நீராடி-ஈர உடையுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று ஒரு முறை ஜபித்தால்-
2 கோடி X 100 கோடி முறை ஜபித்ததற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
அதாவது,நாம் உள்பட 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் உடனே தீர்ந்துவிடும்.

2.ஆறுதல் சொல்வதும் ஒரு விதபுண்ணியமே!

3.ஜோதிடர்களில் பிராடுகள் உண்டு.ஒரிஜினல் ஜோதிடர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.தட்சினை கொடுக்குறதைக் குடுங்க என்று சொல்லுவார்.அல்லது 200-300 கேட்பார்.

4.ஜோதிடர்களில் கல்யாண ஜோதிடர் என்றும்,தொழில் விருத்தி ஜோதிடர் என்றும்,மரண ஜோதிடர் என்றும் பெயர் எடுத்தவர்கள் உண்டு.விசாரித்துக் கொள்வது நமது பொறுப்பு

Thursday, October 7, 2010

நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு

நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு

இன்று புரட்டாசி மாத அமாவாசை;(7.10.2010 வியாழன்).இன்று நள்ளிரவு சுமார் 1.40 மணி வரையிலும் அமாவாசை இருக்கிறது.இந்த நாளை நமது முற்பிறப்புப் பாவங்கள்,கர்மங்களை அழிப்பதற்கான ஆரம்பநாளாக வைத்துக்கொள்வோம்.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில்,கதர்க்கடைக்குச் சென்று ஒரு ருத்ராட்சம் வாங்கிக்கொள்ளவேண்டும்.விலை ரூ.30 முதல் ரூ.100க்குள் இருக்கும்;மஞ்சள் நிற துண்டு இரண்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஒரு சாதாரண மஞ்சள் துண்டு விலை ரூ.25 லிருந்து ஆரம்பமாகும்.உங்கள் ஊரிலிருக்கும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று சிவனை வணங்கி,கொஞ்சம் விபூதி வாங்கி வரவேண்டும்.
இன்று முதல் எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது;எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது;இந்த இரண்டு கொள்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.அப்படிப் பின்பற்றினால்தான்,நமது பாவங்கள் தீரும்!!!

இன்றிரவு தூங்கும் முன்பு,நமது வீட்டில் கிழக்கு நோக்கி அல்லது வடக்குநோக்கி அமரும் விதமாக மஞ்சள் துண்டினை விரிக்க வேண்டும்;இன்னொரு மஞ்சள் துண்டினை இடுப்பில் கட்டிட வேண்டும்.கழுத்தில் ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.எந்த முக ருத்ராட்சமாகவும் இருக்கலாம்;(செல்போன்,டிவி,தொலைபேசி,காலிங் பெல்லை அணைத்துவிடவும்;அல்லது சைலன் ட் மோடில் வைக்கவும்)சிவாலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்.முதுகு நேராக இருக்குமாறு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரவேண்டும்.ஆழ்ந்து மூச்சுவிடவேண்டும்.ஒரு முறையல்ல;குறைந்தது 9 முறை!

முதலில் விநாயகரை நினைத்து வழிபட்டுக்கொள்ள வேண்டும்;அடுத்ததாக நமது குல தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும்;மூன்றாவதாக நமது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டும்.(குலதெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபட்டுக்கொள்ள வேண்டும்)அதன் பிறகு,கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
ஓம் சிவசிவ ஓம்; ஓம் சிவசிவ ஓம் என தொடர்ந்து அரை மணிநேரம் வரை ஜபிக்க வேண்டும்.அரை மணி நேரத்துக்குப் பிறகு,மஞ்சள் நிறத்துண்டிலிருந்து எழுந்து,ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்கவும்;மஞ்சள் துண்டுகளை மடித்து பத்திரப்படுத்தவும்;எக்காரணம் கொண்டும் அவற்றை நீரில் நனைக்கக் கூடாது;இந்த விபூதி,ருத்ராட்சம்,மஞ்சள் துண்டுகளை யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தரக்கூடாது;


இதே போல்,தினமும் காலை அரைமணி நேரம்,மாலை அல்லது இரவு அரை மணி நேரம் செய்து வரவும்.100 நாட்களில் நமது நீண்ட காலப்பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

இந்த 100 நாட்கள் மட்டுமல்ல;தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இந்த ஒரே ஒரு வழிபாட்டுமுறையைப் பின்பற்றவும்.

குழந்தைப்பிறந்த அன்றும்,ஒருவர் மரணமடைந்த அன்றும் அந்த வீடுகளுக்குச் செல்லக்கூடாது;(இந்த 100 நாட்கள் வரையிலும்)

போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்,அன்று முதல் ஐந்து நாட்கள் வரை இந்த மந்திரஜபத்தை தவிர்க்கவும்.

ஒரு குழந்தை பிறந்திருந்தால்,15 நாட்கள் கழித்தும்,ஒருவர் மரித்துவிட்டால்,அவர் மரித்த 16 ஆம் நாளன்றும் போய் சந்திக்கலாம்;அப்படி சந்தித்தால்,மூன்று நாட்கள் இந்த மந்திரஜபத்தை நிறுத்திவைக்கவும்.

ஆன்மீக ஆராய்ச்சியாளர்களையும்,கடவுள் இல்லையென்று நம்பும் நாத்திகவாதிகளையும்,கடுமையான நோய் அல்லது கடன் அல்லது துன்பத்தில் உழலுவோர்கள் இந்த மந்திரஜபத்தை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கலாம்;

விரைவான,நிறைவான,அபரிதமான பலன்கள் வேண்டுவோர்,இந்த மந்திரஜபத்தை திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது ஜபிக்க வெகுவிரைவான தீர்வு கிடைக்கும்;கிரிவலம் சாதாரண நாட்களிலும் செல்லலாம்;
சதுரகிரிக்குச் சென்று கோவிலின் சன்னதியில் ஒருநாள் முழுக்கவும் எதுவும் சாப்பிடாமல் (தண்ணீர் அருந்தலாம்) இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கலாம்.
இப்படிச் செய்த அடுத்த சில நாட்களிலேயே உங்களது மாபெரும் பிரச்னைகள் தீர்ந்துவிடும்;அல்லது தீர்வதற்கான உதவிகள் கிடைக்கும்.

இந்த இரண்டு இடங்களுக்கும் செல்ல இயலாதவர்கள்,உங்கள் ஊரிலிருக்கும் சிவாலங்களில் தினமும் மேற்கூறியபடி ஜபம் செய்துவரவும்.அமாவாசை,பவுர்ணமி,தமிழ் மாதப்பிறப்பு,மாத சிவராத்திரி நாட்களில் மிக அதிக நேரமாக ஜபம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்;

Thursday, December 11, 2008

ANCHESTOR'S POOJAI "S POWER

அவர்கள்:1)இறைவன்,2)பித்ரு தேவதைகள்,3)எமதர்மராஜன்,4)பித்ருக்கள்.
பித்ரு பக்திக்கு இணையானது எதுவுமில்லை.பித்ரு பூஜையைப் போல பலன் அளிப்பதும் வேறு எதுவும் இல்லை.
நன்றி;குமுதம் ஜோதிடம்-வார ஜோதிட இதழ் 1.11.2002 பக்கம் 14.
1.பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது கிரகண நேரம் அல்லது தமிழ் வருடப் பிறப்பு அன்று ஒரு மந்திரத்தை கடல் அல்லது ஆற்றில் நீராடி-ஈர உடையுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று ஒரு முறை ஜபித்தால்-
2 கோடி X 100 கோடி முறை ஜபித்ததற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
அதாவது,நாம் உள்பட 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் உடனே தீர்ந்துவிடும்.

2.ஆறுதல் சொல்வதும் ஒரு விதபுண்ணியமே!

3.ஜோதிடர்களில் பிராடுகள் உண்டு.ஒரிஜினல் ஜோதிடர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.தட்சினை கொடுக்குறதைக் குடுங்க என்று சொல்லுவார்.அல்லது 200-300 கேட்பார்.

4.ஜோதிடர்களில் கல்யாண ஜோதிடர் என்றும்,தொழில் விருத்தி ஜோதிடர் என்றும்,மரண ஜோதிடர் என்றும் பெயர் எடுத்தவர்கள் உண்டு.விசாரித்துக் கொள்வது நமது பொறுப்பு.