ஓராண்டுக்குள் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற
உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இதுவரை இருந்தாலும் சரி;இன்று முதல் அடியோடு மாறுகிறது;அதற்குரிய வழிமுறைகளை இங்கே உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;
1.ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி 24.7.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.55 முதல் 25.7.2020 சனிக்கிழமை மதியம் 2.37 வரை இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் அண்ணாமலைக்கு சென்று,அங்கே உண்ணாமலை சன்னதியில் அன்னையை வழிபட்டுவிட்டு,அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து அன்னையை தியானித்துவிட்டு ஒரு முறை வராகி மாலையை ஜபியுங்கள்;
2.அதன் பிறகு, தேய்பிறை பஞ்சமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;தேய்பிறை திதிகளில் செய்யப்படும் ஜபம்,கிரிவலம்,அன்னதானம் நம்முடைய கர்மவினைகளை எரித்து சாம்பலாக்கிவிடும்;
தேய்பிறை பஞ்சமி திதி வரும் நாட்களில் வராகியை முழு முதற்கடவுளாக எண்ணி பல பிறவிகளாக தவம் செய்து வரும் வராகி சித்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்:அவர்களுடைய சூட்சும வழிகாட்டுதல் கிடைக்க 36 தேய்பிறை பஞ்சமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
விகாரி வருடத்தின் தேய்பிறை பஞ்சமி நாட்கள்:
14.1.2020 செவ்வாய் மாலை 5.45 முதல் 15.1.2020 புதன் மதியம் 3.27 வரை
13.2.2020 வியாழன்
13.3.2020 வெள்ளி மதியம் 2.26 முதல் 14.3.2020 சனி மதியம் 12.29 வரை
12.4.2020 ஞாயிறு
சார்வரி வருடத்தின் தேய்பிறை பஞ்சமி நாட்கள்:
11.5.2020 திங்கள் இரவு
10.6.2020 புதன் இரவு 11.52 வரை;
9.7.2020 வியாழன் இரவு
8.8.2020 சனி இரவு
6.9.2020 ஞாயிறு இரவு
6.10.2020 செவ்வாய் இரவு
5.11.2020 வியாழன் இரவு
4.12.2020 வெள்ளி இரவு
3.1.2021 ஞாயிறு இரவு
1.2.2021 திங்கள் இரவு 7.55 முதல்
3.3.2021 புதன் இரவு
1.4.2021 வியாழன் இரவு
சார்வரி வருடத்தின் தேய்பிறை பஞ்சமி நாட்கள்:
11.5.2020 திங்கள் இரவு
10.6.2020 புதன் இரவு 11.52 வரை;
9.7.2020 வியாழன் இரவு
8.8.2020 சனி இரவு
6.9.2020 ஞாயிறு இரவு
6.10.2020 செவ்வாய் இரவு
5.11.2020 வியாழன் இரவு
4.12.2020 வெள்ளி இரவு
3.1.2021 ஞாயிறு இரவு
1.2.2021 திங்கள் இரவு 7.55 முதல்
3.3.2021 புதன் இரவு
1.4.2021 வியாழன் இரவு
3.ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிங்கம்புணரி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே முத்துவடுக நாதர் என்ற வராகி சித்தர் ஐக்கியமாகி இருக்கிறார்;எல்லா பவுர்ணமி இரவுகளிலும் இங்கே யார் வேண்டுமானாலும் தங்கி,நள்ளிரவு 12 மணி அபிஷேகத்தை தரிசிக்கலாம்;
சிங்கம்புணரி என்ற ஊர் சிறிய ஊர்;மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன;90 நிமிடங்கள் பயணம் இருக்கிறது;திண்டுக்கல் டூ காரைக்கடி சாலை மார்க்கத்தில் பொன்னமராவதிக்கு அருகில் இந்த ஊர் இருக்கிறது; ஆடி மாதம் வரும் ரோகிணி நட்சத்திர தினத்தன்று வருடாந்திர குரு பூஜை விழாவும்,அன்னதானமும் இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது;
4.இந்த ஓராண்டில் ஐந்து நபர்களுக்கு வராகி ஜபத்தின் முக்கியத்துத்தை புரிய வைக்க வேண்டும்;அவர்களையும் தினமும் வராகி மாலை ஜபிக்க வைக்க வேண்டும்;அன்னை மஹாவராகிக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் இதுவும் ஒன்று;
5.இந்த ஒராண்டுக்குள் பின்வரும் வராகி கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும்;
அமாவாசை/புதன் கிழமை/பஞ்சமி திதி/சனிக்கிழமை இதில் ஏதாவது ஒரு நாளில் செல்வது நன்று;
அமாவாசை/புதன் கிழமை/பஞ்சமி திதி/சனிக்கிழமை இதில் ஏதாவது ஒரு நாளில் செல்வது நன்று;
1.மங்களமஹா காளி கோவில்,உத்திரகோச மங்கை சிவாலயம் அருகில்,இராமனாதபுரம் மாவட்டம்,
2.ப்ருஹத் வராகி சன்னதி,பெரிய கோவில்,தஞ்சாவூர்
3.அருள்மிகு அரசாலையம்மன் திருக்கோவில்,பள்ளூர்;
காஞ்சிபுரம் டூ அரக்கோணம் சாலையில் 15 கி மீ (காஞ்சிபுரத்தில் இருந்தும் 15 கி மீ தூரம்;அரக்கோணத்தில் இருந்தும் 15 கி மீ தூரம்)
4.பாதாள வராகி கோவில்,காசி என்ற வாரணாசி ( தினமும் காலை 4 முதல் 5.40 வரை மட்டுமே திறந்திருக்கும்).உத்திரப்பிரதேச மாநிலம்;
5.அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்,வழுவூர்.
வழி:மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ சென்று அங்கே உள்ளடங்கிய கிராமத்தில் இருக்கிறது;
இங்கே தான் அன்னை மஹாவராகி ஈசனிடம் பல வரங்களைப் பெற்றார்!!!
No comments:
Post a Comment