Monday, January 13, 2020

ஸர்ப்ப தோஷம் நீங்கிட


ஸர்ப்ப தோஷம் நீங்கிட

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் யாரும் காரணம் கிடையாது;எந்த கடவுளும் காரணம் கிடையாது;நீங்கள் மட்டுமே காரணம்! போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளீர்கள்;

1960க்குப் பிறகு 1000 க்கு 125 மனிதப் பிறப்புகளும்

1980 க்குப் பிறகு 1000 க்கு 250 மனிதப் பிறப்புகளும்

2000 க்குப் பிறகு 1000 க்கு 750 மனிதப் பிறப்புகளும் 

ஸர்ப்ப தோஷத்துடன் தான் பிறக்கின்றார்கள்;லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால்,அவர்களுக்கு ஸர்ப்ப தோஷம் உள்ளது என்று அர்த்தம்;லக்னத்திற்கு 2 இல் ராகு அல்லது கேது இருக்கப் பிறந்தாலும் இதே ஸர்ப்ப தோஷம் தான்!

கலியுகம் செல்லச் செல்ல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை அருகிக் கொண்டே வரும்;இதனால்,சமுதாயத்தில் அமைதி சீர்குலையத் துவங்கும்;இருப்பினும் திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற மனோபாவம் உருவாக வேண்டும் என்ற பூர்வபுண்ணியம்   உள்ளவர்கள் மட்டுமே வாழ்நாளில் பெரும்பகுதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவார்கள்;மற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே வேறு மாநிலம்   அல்லது நாட்டிற்குச் சென்று விடுவர்;

ஸர்ப்ப தோஷம் தீர சுலபமாக பரிகாரத்தை பாம்பாட்டி சித்தர் தனது சீடர்களுக்குப் போதித்திருக்கின்றார்;

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு ஆயில்யம் நட்சத்திர நாளன்று செல்ல வேண்டும்;

ஆயில்யம் நட்சத்திரம் இருக்கும் நாளில் வரும் இராகு காலத்தில்  ஒரே நேரத்தில் ராகு கிரகத்திற்கும்,கேது கிரகத்திற்கும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும்;


பிறகு, ராகுவுக்கு கறுப்பு/நீல நிற வஸ்திரத்தையும்,கேதுவுக்கு சிகப்பு நிற வஸ்திரத்தையும் அணிவிக்க வேண்டும்;நிறைவாக,யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கின்றதோ,அவரது பெயர்,ஜன்ம நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்; இப்படி 16 ஆயில்யம் நட்சத்திரநாட்கள் (16 மாதங்கள்) செய்து விட்டால்,ஸர்ப்ப தோஷத்தினால் வர இருக்கும் தீமைகள்,துயரங்கள் விலகிவிடும்;


தவிர,ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஊர்/மாவட்டத்தில் இயங்கி வரும்   உழவாரப் பணி செய்யும் சிவனடியார்கள் குழுவில் நிரந்தர உறுப்பினராகிவிட வேண்டும்;உங்கள் வாழ்நாளில் குறைந்தது 108 சிவாலயங்களில் உழவாரப் பணி செய்திருக்க வேண்டும்;இதன் மூலமாக ஈசனின் அருள் கடாட்சம் கிட்டும்;

ஓம் பாம்பாட்டி சித்த குரு நமஹ

No comments:

Post a Comment