Thursday, November 21, 2019

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

உலக வழக்கில் பலவிதமான பழமொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன;அதற்கு உரிய அர்த்தம் நமக்கு உடனே கிடைப்பதில்லை;

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பல நூற்றாண்டுகளாக நம்மிடையே பரவிக்கொண்டு இருக்கும் பழமொழி!

பொன் என்றால் குருபகவான் என்று அர்த்தம்;
நமது கலியுக வாழ்க்கையில் அதை நமக்கு வழிகாட்டக் கூடிய குரு என்று எடுத்துக் கொள்ளலாம்;

உண்மையான,சரியான குரு ஒருவருக்கு அமைந்தாலும்,அவரது உபதேசங்கள் சீடனுக்கு கிடைத்தாலும் கூட,குருவிடம் இருக்கும் சக்தி,சீடனுக்கு அதே போல அமையாது;


குரு தனது வாழ்க்கையில் முயற்சி செய்து கிடைத்த வித்தையை தனது அனுபவமாக  சீடனுக்கு போதிக்கிறார்;அப்படி போதித்தாலும்,அதே போல சீடன் முயற்சித்தாலும்,சீடனுக்கு குருவின் அனுபவம் போல கிடைப்பதில்லை;

வித்தைகளுக்கு அதிபதி புதன்;பொன்(குரு) கிடைத்தாலும் (வித்தையின் அனுபவம் சீடனுக்கு அதே மாதிரி)புதன் கிடைக்காது;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டு வித்தை என்பதும் அடுத்த பழமொழி!!!

No comments:

Post a Comment