Thursday, November 21, 2019

முக்தியைத் தேடுவோர் கவனத்திற்கு


முக்தியைத் தேடுவோர் கவனத்திற்கு


உங்களைப் போல,பல லட்சம் பேர்கள் முக்தி அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரே பிறவியிலேயே, அதாவது இந்த ஒரு பிறவியோடு முக்தி அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது;


அந்த ஆசைக்குக் காரணம்,அந்ந்ந்த அளவுக்கு இப்பிறவியில் இன்று வரையிலும் அவர்களுடைய தினசரி வாழ்க்கை சோகங்கள்,அவமானங்கள்,சிக்கல்கள் நிரம்பியதாக இருக்கின்றன;


நாம் ஒவ்வொருவருமே குறையே இல்லாதவர்கள் என்று எண்ணினால் அது தவறு;சில பல குறைகள் ஒவ்வொரு ஆணுக்கும்,ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு.


நாம் வாழ்ந்து வரும் ஊரில் இன்றும் கல்விச் செருக்கு,செல்வச் செருக்கு,வித்தை கர்வம் என்று பலவிதமான சுபாவங்களுடன் பலர் வாழ்ந்து வருகின்றார்கள்;

கல்விச் செருக்கு என்றால்,நாம் படித்த படிப்பினால் நம்மைப் பற்றி உயர்வாக நினைப்பது;பிறரை மட்டமாக நினைப்பது,பேசுவது,பழகுவது.

செல்வச் செருக்கு என்றால் செல்வ வளத்தினால் பிறரை விடவும்  நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடனே எல்லோரிடமும் பழகுவது;தன்னைவிட அதிக செல்வ வளம் உள்ளவர்களைப் பார்த்து மனதுக்குள் கருவிக் கொண்டே இருப்பது;

வித்யா கர்வம் என்றால் தனித் திறமையால் வருவது!!!கார் ஓட்டச் சொல்லித் தருவது,ஓவியம் வரைவது,அழகுக் கலையால் சம்பாதிப்பது,கணிதம் டியூஷன் சொல்லித் தருவது;


ஆனால்,இந்த கல்வி,இந்த செல்வ வளம்,இந்த வித்யா திறமை போன 7 பிறவிகளுக்குள் சேமித்த புண்ணியம்,இறை வழிபாடு போன்றவைகளால் தான் இந்த பிறவியில் கிடைத்தது என்பது  பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை;


ரொம்பவும் தீவிரமான முயற்சி எடுத்தால்,அந்த முயற்சியை சுமார் 5 முதல் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்தால்,போன 4 பிறவிகளில் செய்த அட்டூழியங்களின் விளைவுகளை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம் என்பதை கண்டுபிடிக்க முடியும்;


திருந்த வேண்டும்;மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணத்தை அடிக்கடி யாருக்கு உண்டாகிறதோ,அவரே அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வார்;

குரு,சிஷ்ய பரம்பரை கிட்டத் தட்ட நாம் வாழ்ந்து வரும் ஆண்டிராய்டு யுகத்தில் அருகி,குறுகி காணாமல் போய்விட்டது;உண்மையான குரு வேண்டும் என்று எண்ணுவோரும்,திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணமுள்ளோரும் அதற்கு சரியான முயற்சி “திரு அண்ணாமலை கிரிவலம்” தான் என்பதைப் புரிந்து கொள்வார்கள்;


மாதம் இருமுறை வீதம்,இரண்டு ஆண்டுகளில் 108 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்துவிட்டால்,உண்மையான ஆன்மீக குருவை நமக்கு அண்ணாமலையாரே அடையாளம் காட்டுவார்;


முதல் 10 முறை அண்ணாமலை கிரிவலம் செல்வது தான் மிகவும் கடினமாக இருக்கும்;அதுவரை நமது முற்பிறவி கர்மவினைகள் தடுத்துக் கொண்டே இருக்கும்;

மாதம் இரண்டு முறை வீதம்,அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் என்று ஒரு ஆண்டில் 24 முறை கிரிவலம் சென்றுவிடலாம்;இதில் முதல் ஆறு மாதங்கள் வரை,(12 முறை) கிரிவலம் செல்லும் போது மட்டும் மிகுந்த மனப் போராட்டம்,பொருளாதாரப் போராட்டம் இருக்கும்;அதன் பிறகு,அண்ணாமலையாரின் அருள் பார்வைக்குள் வந்துவிடுவோம்;


விழுப்புரம் அருகில் இருக்கும் அண்ணாமலையே உண்மையான திருவண்ணாமலை! அங்கே செல்வது மட்டுமே உண்மையான கிரிவலம் ஆகும்;


முதல் 10 முறை கிரிவலம் செல்லும் போது,நமது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களைப் போலவே தான் திரு அண்ணாமலையும் தெரியும்;அங்கே நமது பயண அனுபவம் மிகவும் சராசரியாகவே இருக்கும்;

அது ஒரு மாவட்டத் தலைநகரம்! 

சென்னையில் இருந்தும்,பெங்களூரில் இருந்தும் வெறும் 4 டூ 6 மணி நேரத்தில் வந்துவிடலாம்;கலியுகத்தின் எல்லாவிதமான சராசரி சம்பவங்களும் இங்கும் நிகழ்வதை நேரில் பார்க்கலாம்;ஆனால்,உண்மையான ஆன்மீகம் இங்கே தான் மறைவாக இருக்கின்றது.

அந்த ஆன்மீக சூட்சும உலகத்தை உணர வேண்டுமானால்,50 முதல் 75 முறை அண்ணாமலை கிரிவலம் சென்ற பிறகே சிறிது சிறிதாக அருணாச்சலேஸ்வரர் உணர்த்த ஆரம்பிப்பார்;

108 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்யும் போது,முக்தியை அடையும் மார்க்கத்தையும் புரிய வைத்துவிடுவார்;

No comments:

Post a Comment