Friday, October 18, 2019

அஷ்டமச்சனியை அனுபவிக்க இருக்கும் மிதுன ராசியினருக்கு....





ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகள் வரையிலும் மிதுனராசிக்கு மகர சனிப்பெயர்ச்சியானது அஷ்டமச்சனியாக பரிணமிக்க இருக்கின்றது;

எனது ஜோதிட குரு  அவர்கள் அஷ்டமச்சனி பற்றி சொன்னதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.




அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லது பைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.

நீங்கள் 22 வயதுக்கு உட்பட்ட மிதுன ராசிக் காரர் எனில்,பின்வரும் பைரவ மந்திரத்தை தினமும் 1008 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;இயலாதவர்கள் 108 முறையாவது ஜபிக்க/எழுத வேண்டும்;

ஓம் சம்ஹார பைரவாய நமஹ

22 வயதுக்கு மேற்பட்ட மிதுன ராசிக்காரர்கள் பின்வரும் பைரவ மந்திரத்தை தினமும் 1008/108 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.










No comments:

Post a Comment