சத்குருவின் அருளைத் தரும் அண்ணாமலை கிரிவலம்!!!
உங்கள் ஒவ்வொருவருக்கும் காரண குரு,காரிய குரு,வித்தை குரு,வழிகாட்டும்
குரு,சத்குரு என்று ஐந்து விதமான குருமார்கள் தேவை;இதில் காரண குருவும்,காரிய குருவும்
வாழ்க்கைப் பயணத்தில் தானாகவே ,தக்க நேரம் பார்த்து வருகை தருவர்;வருகை தந்து,நமக்கு
எதைப் போதிக்க வேண்டுமோ அதை போதித்துவிடுவர்;
வழிகாட்டும் குரு என்பவரை நம்மால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்;நமது
பிறந்த நட்சத்திரம் தெரிந்தால் போதும்;நமது பிறந்த நட்சத்திரத்தை 1 வது நட்சத்திரமாகக்
கொண்டு,15 வது நட்சத்திரம் எதுவோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும்;அந்த 15 வது நட்சத்திரத்தில்
யார் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்களோ,அவரே நமது வழிகாட்டும் குரு ஆவார்;
இந்த ஜோதிடம்
சார்ந்த தெய்வீக ரகசியத்தை அடியேனுக்கு அருணாச்சலேஸ்வரர் அருளால் பாம்பாட்டி சித்தரின்
பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆத்மா உபதேசம் செய்தார்;
சத்குருவின் அருளும்,வழிகாட்டுதலும் கிட்டினால் மட்டுமே மீண்டும் இந்த
பூமியில் பிறவாமல் வாழும் தெய்வீக வாழ்க்கை கிடைக்கும்;
நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு அண்ணாமலை என்ற அருணாச்சலத்தில் காத்துக்
கொண்டு இருக்கிறார்;நமது பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் நமக்கு என்று ஒரு சத்குரு
அண்ணாமலையில் இருக்கின்றார்;அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் எனில்,இரண்டு
விதமான முயற்சிகளில் ஒன்றை செயல்படுத்த வேண்டும்;
1.இந்த பிறவிக்குள் அல்லது இந்த பிறவி முதல் அடுத்து வரும் ஒரு சில பிறவிகளுக்குள்
1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;
அல்லது
2.செவ்வாய்க்கிழமையும் விசாகம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அண்ணாமலை
கிரிவலம் வர வேண்டும்;இப்படிப்பட்ட நாட்கள் ஒரு தமிழ் வருடத்தில் 3 அல்லது 4 நாட்கள்
மட்டுமே வரும்;அதில் 1008 நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;
பின்வரும் சத்குரு இடியாப்ப
சித்தரின் மந்திரத்தை மட்டும் ஜபித்தவாறு கிரிவலம் வர வேண்டும்;
இதுவரை இந்த கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் இடியாப்ப சித்தர் பிரான் நமக்கு உபதேசமாக
தெரிவித்திருக்கின்றார்;
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!
29.10.2019 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.24 வரை விசாகம் நட்சத்திரம் இருக்கின்றது;அன்று
காலை சூரிய உதயத்தில் இருந்து நள்ளிரவு 2.24 க்குள் இருக்கும் நேரத்தில் அண்ணாமலை கிரிவலம்
செல்ல வேண்டும்;
ஆத்மபலமும்,குரு அருளும்,அண்ணாமலையாரின் அருளும் பெற்றவர்கள் இரண்டு
முறை கூட கிரிவலம் செல்லலாம்;
அடுத்தபடியாக,26.11.2019 செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயத்தில் இருந்து
காலை 10.14 வரை விசாகம் நட்சத்திரம் இருக்கின்றது;அப்போதும்
அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;
ஆனால்,காலை 10.14க்குள் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்;
காலை 6 மணி முதல் காலை 10.14 க்குள் அதாவது 4.14 மணி நேரத்திற்குள் அண்ணாமலை
கிரிவலத்தை நிறைவு செய்யும் மன வலிமை உள்ளவர்கள் இந்த கிரிவலம் செல்லலாம்;
குரு அருள் இல்லாமல் திரு(இறை) அருள் கிடைக்காது என்பதற்காக இதை தங்களுக்கு
தெரிவிக்கின்றோம்;
No comments:
Post a Comment