Sunday, August 4, 2019

ஏழரைச்சனியை சுபச் சனி காலமாக மாற்றிவிடும் மங்கள சனி!!!




ஏழரைச்சனியை சுபச்சனியாக மாற்றிவிடும் மங்கள சனி!!!


தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஜனவரி 2020 வரை ஜன்மச்சனி நடைபெற்று வருகின்றது;

ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஜன்மச்சனி காலமும்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டமச்சனி காலமும்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வாக்குச் சனி(ஏழரைச்சனியின் இறுதி கட்டம்) காலமும்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்த  அஷ்டமச்சனி காலமும் வர இருக்கின்றது;
இதுவரை அசைவம் சாப்பிட்டாலோ,மது அருந்தினாலோ அன்று படாத பாடு பட வேண்டியிருக்கும்;

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் சாலையில் (திருவாரூர் மார்க்கம்) திருநரையூர் என்று ஒரு கிராமம் இருக்கின்றது;
($ திருநாரையூர் என்பது மயிலாடுதுறை அருகில் இருக்கும் சிவாலயம் என்பதை மறக்காதீர்கள்;ஒரு துணையெழுத்து மாறிவிட்டால் ஆலயமும் மாறிவிடும்$)
இங்கே அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமி திருக்கோவில் இருக்கின்றது;இதுதான் இன்று மங்கள சனி கோவிலாக மாறியிருக்கின்றது;
இந்த ஆலயத்தினுள் சனிபகவான் தனது இரு மனைவிகளான மந்தா தேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன்களான மாந்தி,குளிகன் உடன் இருந்து மங்கள சனியாக அருள் பாலித்துவருகின்றார்;
தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே காலை 8 மணிக்கு செல்ல வேண்டும்;
கோவிலை வலம் வரும் போது கோவிலுக்குள் இருக்கும் தண்ணீர்க் குழாயில் வரும் தண்ணீரை நமது தலையில் தெளிக்க வேண்டும்;பிறகு,ராமனாதசுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசிக்க வேண்டும்;
அதன் பிறகுதான் மங்கள சனியை தரிசிக்க வேண்டும்;
11 மணி வரை இருந்து மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு மீண்டும் ஒரு முறை பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்;முடிவாக கால பைரவரை தரிசிக்க வேண்டும்;
பிறகு வீடு திரும்ப வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்;
அன்று முதல் ஒரு போதும் அசைவம்,மது தவிர்த்தே ஆக வேண்டும்;ஜன்மச்சனி சுபச்சனியாக,மங்கள சனியாக மாறிவிடும்;
தசரத மஹாராஜாவின் பெருமுயற்சியால் இந்த கோவில் நமக்கு கிடைத்திருக்கின்றது;இந்த கோவிலின் வயது 17,50,000 ஆண்டுகள் ஆகும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment