Thursday, August 30, 2018

விளம்பி வருடத்தின் அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்கள்;


இந்த நாட்களில் உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் உங்கள் குல தெய்வத்தை அதன் இருப்பிடம் சென்று மனம் உருகி வேண்டுங்கள்;

குறைந்தது 24 நிமிடங்கள் உங்கள் குலதெய்வத்தின் சன்னதியில் வேண்டிக் கொள்ள வேண்டும்;அந்த சமயத்தில் அழக் கூடாது;பிறரை சபிக்கக் கூடாது;கோபம் கொள்ளக் கூடாது;
இப்படி வேண்டுவதன் மூலமாக உங்கள் வாழ்க்கை வளமுடனும்,நலமுடனும் சீரோடும் சிறப்போடும் இருக்கும்;
யாரெல்லாம் உங்கள் பார்வையில் எந்த குறையும் இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களது குலதெய்வத்தின் ஆசிகள் பரிபூரணமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

விளம்பி வருடத்தின் அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்கள் பட்டியல் இதோ:
9.9.2018 ஞாயிறு முழுவதும்
13.9.2018 வியாழன் மாலை 6.54 முதல் 14.9.2018 வெள்ளி மாலை 6.40 வரை(வ/பி பஞ்சமி)
8.10.2018 திங்கள் காலை 11.18 முதல் 9.10.2018 செவ்வாய் காலை 9.45 வரை
13.10.2018 சனி காலை 8.02 முதல் 14.10.2018 ஞாயிறு காலை 8.53 வரை(வ/பி பஞ்சமி)
7.11.2018 புதன்
12.11.2018 திங்கள்(வ/பி.பஞ்சமி)
6.12.2018 வியாழன் மதியம் 12.41 முதல் 7.12.2018 வெள்ளி மதியம் 1.07 வரை
11.12.2018 செவ்வாய் இரவு 7.14 முதல் 12.12.2018 புதன் 9.21 வரை(வ/பி.பஞ்சமி)
5.1.2019 சனி
10.1.2019 வியாழன் மதியம் 2.58 முதல் 11.1.2019 வெள்ளி மாலை 4.47 வரை(வ/பி.பஞ்சமி)
4.2.2019 திங்கள்
8.2.2019 வெள்ளி காலை 8.22 முதல் 9.2.2019 சனி காலை 9.47 வரை(வ/பி.பஞ்சமி)
5.3.2019 செவ்வாய் மாலை 7.34 முதல் 6.3.2019 புதன் இரவு 9.34 வரை
11.3.2019 திங்கள்
3.4.2019 புதன் காலை 11.46 முதல் 4.4.2019 வியாழன் மதியம் 1.28 வரை
9.4.2019 செவ்வாய் மதியம் 3.13 முதல் 10.4.2019 புதன் மதியம் 2.07 வரை(வ/பி.பஞ்சமி)
$ கடந்த 70 ஆண்டுகளில் படிப்படியாக நாம் மறந்து போன குலதெய்வ வழிபாட்டு நாட்கள் இவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
அன்னை மஹாவராகியை தொடர்ந்து 1008 நாட்கள் (3 ஆண்டுகள்) ஜபித்து வருவதால் குலதெய்வத்தின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும்;குலதெய்வம் தெரியாதவர்களும் கூட அசைவம்,மதுவை கைவிட்டு தினமும் அன்னை மஹாவராகியை இரவு ஒரு மணி நேரம் வரை ஜபித்து வர வேண்டும்;
ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ


இந்த 13 பெயர்களை தினமும் ஜபித்து வருவதாலும் குலதெய்வத்தின் ஆசிகள் நமக்கு கிட்டும்;

No comments:

Post a Comment