உலகத்தில் மிகவும் உன்னதமான பிறவி மனிதப் பிறவி;அந்த மனிதப் பிறவிகளில்
மகத்தான பிறவி எடுத்தவர் ரமண மகரிஷி! 1879 ஆம் ஆண்டு,விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியல்
நாதர் கோவில் இருக்கும் கிராமமான திருச்சுழி கிராமத்தில் திருச்சுழியல் நாதரின் கருணையால்
பிறந்தவர் ரமண மகரிஷி!
நம்முடைய ஜன்ம நட்சத்திர சத்குரு அண்ணாமலையில் கடந்த 12,000 ஆண்டுகளாக
நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்;ஆமாம்! நாம் ஒவ்வொருவருமே இந்த பூமியில் இப்போதுதான்
முதன் முதலில் பிறந்திருக்கின்றோம் என்று (கிறிஸ்தவம் போதிப்பது போல) நினைக்கின்றோம்;இது
மாபெரும் தவறு;நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் குறைந்தது 20,000 முறையும்,அதிகபட்சமாக
3,00,00,000 கோடி முறையும் பிறவிகள் எடுத்திருக்கின்றோம்;புண்ணியம் அதிகம் செய்தாலும்
பிறவிகள் தொடரும்;பாவம் அதிகம் செய்தாலும் பிறவிகள் தொடரும்;பாவம்,புண்ணியம் இரண்டையும்
0 அளவுக்கு கொண்டு வரவேண்டும்;அதற்கு ஒரு எளிமையான வழி இருக்கின்றது;அதுதான் இந்த பிறவி
முடிவதற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வருவது;
போன நான்கு பிறவிகளில் செய்த பாவம்+புண்ணியங்களின் விளைவுகளை அனுபவிக்க
இந்த ஒரு மனிதப் பிறவி நமக்கு தரப்பட்டிருக்கின்றது;ஆக,இன்னும் எத்தனை பிறவிகள் எடுப்பது?
அப்படி கிரிவலம் செல்லும் போது ஜபிக்க வேண்டிய துதி ஒன்று இருக்கின்றது;
நினைக்க அருணையது நீள்விசும்பு முத்திபர
பனித்த தரிசனமா பரமுத்தி தில்லையென
கனிந்த ஆரூரும் கருமுக்திப் பேராய
வனிதப் புவிகண்ட வரமுத்தி பூசுரமா
நனிபுலமே நானிலமே நஞ்சீய ராவரே
இந்த கிரிவலத் துதியை எப்போது கிரிவலம் சென்றாலும் ஜபிக்கலாம்;எல்லா
நாட்களிலும் வீட்டில் பூஜை செய்யும் போதும் ஜபிக்கலாம்;
1950 ஆம் ஆண்டில் ரமண மகரிஷியின் உயிர் பிரிந்து ஒளியாகி அண்ணாமலைக்குள்
புகுந்தது;தமது 12 ஆம் வயதில் அண்ணாமலைக்கு வருகை தந்த ரமண மகரிஷி அதன் பிறகு எக்காரணம்
கொண்டும் அண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை;
ரமண மகரிஷிக்கு குருவாக இருந்து வழிகாட்டியவர் அண்ணாமலையார்! இந்த பெரும்
பாக்கியம் கடந்த 5100 ஆண்டுகளாக எவருக்கும் கிட்டவில்லை;
ஒரு நாளுக்கு ஆறு முறை வீதம் 40 ஆண்டுகள் தினமும் கிரிவலம் வந்த மஹான்களும்
அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கின்றார்கள்:
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment