Wednesday, May 23, 2018

அல்சரும் அன்னதானமும்



யார் கடந்த மூன்று பிறவிகளில் ஒரே ஒருமுறை கூட அன்னதானம் செய்யவில்லையோ,அவர்களே இப்பிறவியில் அல்சரால் அவதிப்படுகின்றனர்;இது பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஆன்மீக உண்மை;


அன்னதானத்தை உள்ளூர் சிவாலயத்தில் அமாவாசை தோறும் செய்யலாம்;

அன்னதானத்தை சனிக்கிழமைகளில் செய்யலாம்;இதன் மூலமாக சனியின் தாக்கம் பெருமளவு குறையும்;

அன்னதானத்தை தினமும் சிவாலயத்தில் வாசலில் செய்வது சிறப்பு;

அன்னதானத்தை நாம் பிறந்த தமிழ் மாதத்தில்,பிறந்த நட்சத்திரத்தன்று அண்ணாமலையில் செய்வதன் மூலமாக நமது கர்மவினைகளை பாதியாக்கிவிடும் சுலப வழியாகும்;

அன்னதானத்தை, ‘பசி’ என்று யார் எங்கே கேட்டாலும் உடனே செய்வது கோடி மடங்கு புண்ணியத்தைத் தரும்;

அன்னதானத்தை சொந்த ஊரில் தினமும் செய்யலாம்;அல்லது இப்போது வசிக்கும் ஊரிலும் தினமும் செய்யலாம்;(அவரவர் பொருளாதார வசதி,பூர்வபுண்ணியத்தைப் பொறுத்தது)

அன்னதானம் செய்தால் அதன் பிறகு அல்சர் வராது;ஒருவேளை வந்தால்,அதற்கு வேறு ஏதோ ஒரு ஜோதிட/ஆன்மீகக் காரணம் இருக்கும்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அன்னதானத்தால் மட்டுமே நமது கர்மவினைகளை ஈஸியாகக் கரைக்க முடியும்;

அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாளில் அன்னதானம் செய்தால் அதற்கு மிஞ்சிய புண்ணியம் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது;

ஒரு ஆலயத்தில் அல்லது ஜீவசமாதியில் 1000 பேர்களுக்கும் மேலானவர்களுக்கு நாம் அன்னதானம் செய்வதாக வைத்துக்ககொள்வோம்;1001 வது மனிதராக நமது முன்னோர்களில் யாராவது ஒருவர் சித்தராகவோ,துறவியாகவோ,ரிஷியாகவோ,ஞானியாகவோ இருந்திருப்பார்கள்;அவர் அங்கே வந்து அந்த அன்னதானத்தில் கலந்து கொள்வார்;இதன் மூலமாக நமது கர்மவினைகளை ஏற்றுக் கொள்வார்;

யார் ஒருவர் ஒரே பிறவியில் 30,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்கின்றார்களோ,அவருக்கு இந்த உலகில் பேசும் அனைத்து மொழிகளும் தானாகவே பேசும் ஆற்றல் உருவாகிவிடும்;அதுவும் தேவைப்படும் போது மட்டுமே வெளிப்படும்;எல்லா நேரங்களிலும் அந்த அருளாற்றல் இருக்கும் என்று எண்ணக் கூடாது;

சில விதிமுறைகளை கண்டிப்பாக அன்னதானம் செய்பவர்கள் பின்பற்றியே ஆக வேண்டும்;

1.ஒருபோதும் கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;

2.ஒரு போதும் நள்ளிரவில் (அகால நேர) அன்னதானம் செய்யக் கூடாது;

3.ஒரு போதும் அசைவ உணவுகளை அன்னதானம் செய்யக் கூடாது;

4.ஒரு போதும் விளம்பரப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;(இன்றைய காலகட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது கடினமே)

5.நண்பர்கள்,உறவினர்களுக்கு வீடு/ஹோட்டலில் உணவு வாங்கித்தருவது அன்னதானம் ஆகாது;

6.வீடு வாசல் இல்லாத அனாதைகளுக்கு இலவசமாக தரும் உணவுக்கு அன்னதானம் என்று பெயர்;

7.அன்னதானத்தை மனப்பூர்வமாக செய்ய வேண்டும்;இந்தப் பிறவியில் நம்மைப் படைத்த ஈசன் நம் மூலமாக இந்த தெய்வீக செயலைச் செய்கின்றான் என்றே எண்ண வேண்டும்;

8.அன்னதானம் செய்ய விரும்பி,அதற்கு சந்தர்ப்பமே அமையாத சூழ்நிலையில் வாழ்ந்து வருபவர்கள்,தமது குலதெய்வம் கோவிலில் சுவாமிக்கு படையல் (தளுவை) செய்ய மாதம் தோறும் அரிசி வாங்கித் தரலாம்;

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு அருளியவர் இடியாப்ப சித்தர் ஆவார்;அவரது சீடரும்,நமது சூட்சும சத்குருவுமாகிய வெங்கடராம சுவாமிகளுக்கு இக்கணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்;


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment