உலகில் பலவிதமான சிவலிங்கங்கள் இருக்கின்றன;அவைகளில் மிகவும் அரிதான
லிங்கமே சகஸ்ரலிங்கம்! இது சுயம்புவாக உருவாகுவது;யாராலும் நிர்மாணிக்க முடியாது;
ஒரு பெரிய சிவலிங்கத்தின் வெளிப்பகுதியில் சிறுசிறு லிங்கமாக 1007 இருந்தால்
அதுவே சகஸ்ரலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது;
ஒரு சிவங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஒரே ஒரு முறை ஓம்நமச்சிவாய
என்று ஜபித்தால் ஒரே ஒருமுறை ஜபித்த பலன் கிட்டும்;ஒரு சகஸ்ரலிங்கத்தின் முன்பாக அமர்ந்து
கொண்டு ஒரே ஒருமுறை ஜபித்தால் 1008 முறை ஜபித்த புண்ணியம் உடனே கிட்டும்;
தமிழ்நாட்டில் எல்லா சிவாலயங்களிலும் சகஸ்ரலிங்கம் இல்லை;வெகு அரிதாக
சில ஆலயங்களில் இரண்டு சகஸ்ர லிங்கங்கள் இருக்கின்றன;
திருச்சி மலைக்கோட்டையிலும்,திருச்செங்கோடு
மலையிலும் இரு சகஸ்ரலிங்கங்கள் இருக்கின்றன;
சைவத்தின் தலைநகரம்,பிரபஞ்சத்தின் மையம்
திரு அருணாச்சலம் என்ற அண்ணாமலையில் மூன்று சகஸ்ரலிங்கங்கள் இருக்கின்றன;
ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும் விரதம் இருக்க வேண்டும்;ஒரு
ஆண்டுக்கு 12 அல்லது 13 திருவாதிரை நட்சத்திரம் வரும்;இப்படி 12 ஆண்டுகள் தொடர்ந்து
விரதம் இருந்து சகஸ்ரலிங்கத்தின் அருளைப் பெற்றால் அது பரிபூரணமான குரு கடாட்சத்திற்கு
இட்டுச் செல்லும்;இதற்கு திருவாதிரை புஷ்கரிணி பூஜை என்று பெயர்;தொடர்ந்து திருவாதிரை
நட்சத்திரம் வரும் நாளன்று சகஸ்ரலிங்க பூஜை செய்வதற்கு “சகஸ்ர ஷட்கோண நட்சத்திர் கோ
பூஜை” என்று பெயர்;
தோற்றமும் மறைவும் இல்லாத ஈசனுக்கு என்று ஜன்ம நட்சத்திரம் கிடையாது;ஆனால்,தான்
படைத்த 27 நட்சத்திரங்களுக்கு ப்ரபஞ்சம் முழுவதும் ஒரு மகிமை கிட்ட வேண்டும் என்பதற்காக
ஈசன் தனது ஜன்ம நட்சத்திரமாக தேர்ந்தெடுத்தது திருவாதிரையைத் தான்!
ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளன்றும் நட்சத்திரம் உதயமாகும் நாளில்
இருந்து முடியும் நேரம் வரை உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்;
ஆண்களாக இருந்தால் வெண்மை நிற ஆடையையும்,பெண்களாக இருந்தால் ரோஸ் நிற
ஆடையையும் அணிய வேண்டும்;
உள்ளாடைகளையும் அதே நிறத்தில் அணிய வேண்டும்;
தாமே அரைத்த சந்தனத்தை சகஸ்ரலிங்கத்தின் மீது பூச வேண்டும்;(தென் பாரத
கோவில்களில் சிவாச்சாரியாரிடம் கொடுத்தும்,வட பாரத கோவில்கள் மற்றும் ஆளரவமற்ற கோவில்களில்
தாமேயும்)
தும்பைப் பூவைக் கொண்டு சிவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வணங்கிட வேண்டும்;
சிவனுக்கு என்னென்ன அபிஷேகங்கள் இருக்கின்றனவோ,அதே வரிசையில் சகஸ்ரலிங்கத்திற்கும்
அபிஷேகம் செய்ய வேண்டும்;குறைந்த பட்சம் தேன் அபிஷேகம் மற்றும் பாஞ்சாமிர்த அபிஷேகம்
செய்ய வேண்டும்;இந்த அபிஷேகம் நடைபெறும் போதே சிவ சகஸ்ரநாம அர்ச்சனையை நாம் செய்யலாம்;அல்லது
அபிஷேகம் முடிந்த பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனையை சிவாச்சாரியார் மூலமாகச் செய்யலாம்;பிறகு,தக்காளிச்சாதம்
முதலான படையல்களை சிறிது மட்டும் சகஸ்ரலிங்கத்திற்கு வைத்துவிட்டு,மற்றவைகளை ஏழைக்குழந்தைகளுக்கு
தானமாக தர வேண்டும்;
அபிஷேகம் துவங்கியது முதல் நிறைவு பெறும் வரையிலும் பத்மாசனத்தில் அமர்ந்து,மெளன
விரதம் இருக்க வேண்டும்;அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரம் அல்லது சிவசகஸ்ர நாம அர்ச்சனை
செய்யவேண்டும்;
இந்த விரதம் இருப்பவர் அகில் கட்டையால் அரைத்த குழம்பினை அபிஷேகத்திற்கு
தர வேண்டும்;
திருவாதிரை விரத நேரம்(திருவாதிரை நட்சத்திர நேரம்) முடிந்த பின்னர்,வில்வ
தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்;
அடுத்த ஓராண்டுக்கு திருவாதிரை நட்சத்திர நாட்கள் பட்டியல் இதோ:
18.5.2018 வெள்ளி காலை 7.47 முதல் 19.5.2018 சனி காலை 6.11 வரை
14.6.2018 வியாழன் மாலை 4.02 முதல் 15.6.2018 வெள்ளி மதியம் 2.29 வரை
11.7.2018 புதன் இரவு 12.14 முதல் 12.7.2018 வியாழன் இரவு 10.40 வரை(ஆனி
மாத அமாவாசை)
8.8.2018 புதன் காலை 8.20 முதல் 9.8.2018 வியாழன் காலை 6.50 வரை
4.9.2018 செவ்வாய் மாலை 4.23 முதல் 5.9.2018 புதன் மதியம் 2.54 வரை
1.10.2018 திங்கள் இரவு 12.22 முதல் 2.10.2018 செவ்வாய் இரவு 10.56 வரை
29.10.2018 திங்கள் காலை 8.21 முதல் 30.10.2018 செவ்வாய் காலை 6.56 வரை
25.11.2018 ஞாயிறு மாலை 4.15 முதல் 26.11.2018 திங்கள் மதியம் 2.55 வரை
22.12.2018 சனி இரவு 12.10 முதல் 23.12.2018 ஞாயிறு இரவு 10.22 வரை(மார்கழி
மாத பவுர்ணமி)
19.1.2019 சனி காலை 8.14 முதல் 20.1.2019 ஞாயிறு காலை 6.59 வரை
15.2.2018 வெள்ளி மாலை 4.16 முதல் 16.2.2019 சனி மதியம் 3.06 வரை
14.3.2019 வியாழன் இரவு 12.22 முதல் 15.3.2019 வெள்ளி இரவு 11.14 வரை
11.4.2019 வியாழன் காலை 8.30 முதல் 12.4.2019 வெள்ளி காலை 7.29 வரை
இதன் மூலமாக அவரவர் பிறந்த ஜாதகப்படி,மாங்கல்ய ப்ராப்தம்,சந்ததி விருத்தி,அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகள்,வியாபாரத்தில் அசுர வளர்ச்சி கிட்டும்;
No comments:
Post a Comment