இயற்கை நலவாழ்வு என்றால் என்ன?
நாம் உண்ணும் காய்கறிகள்,பழங்கள்,தண்ணீர்
இவைகளைக் கொண்டே எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் மிகவும் பழைய உணவுமுறைக்கு இயற்கை
நலவாழ்வு என்று பெயர்;
கம்யூட்டர் யுகம் போய்,ஃபேஸ்புக்,டுவிட்டர்
யுகத்தில் இதெல்லாம் சாத்தியமா?
கம்யூட்டர் யுகத்திலும் நாம் வாய் வழியாகத்தான்
சாப்பிட்டோம்;டுவிட்டர் யுகத்திலும் நாம் வாய் வழியாகத்தானே சாப்பிடுகிறோம்?
உண்ணும் உணவும்,உடுத்தும் ஆடைகளும் மாறியிருக்கலாமே
தவிர வேறு என்ன மாறியிருக்கிறது? ஆண் கர்ப்பிணன் ஆகி குழந்தை பெறும் அளவுக்கா அறிவியல்
முன்னேற்றமடைந்துவிட்டது?இல்லையே!
வாழ்க்கை வேகமானாலும் உணவை சீரணிக்கும்
நமது உடல் அமைப்போ,ஜீரண மண்டலமோ இன்னும் மாறவில்லை;
தவறான உணவுப்பழக்கத்தாலோ அல்லது முறையற்ற
உணவுப் பழக்கத்தாலோ தான் நோய்கள் உருவாகியிருக்கின்றன;இவைகளூக்குப் பின்னால் சர்வதேச
உணவு அரசியலும் நிழலாக இயங்குகிறது;
இதில் இருந்து மீள்வதற்கு பின்வரும் இடங்களில்
இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம்கள் நடைபெற இருக்கின்றன;அவைகளில் உங்களுக்கு அருகில்
இருக்கும் முகாம்களில் கலந்து கொள்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள
முடியும்;
1.அரவிந்த் ஆஸ்ரமம்,140,முடங்கியார் சாலை
4 வது கி.மீ,ராஜபாளையம்;முதல் நாள் மாலையே வந்து சேரவேண்டும்;கட்டணம் இல்லை;சில பொருட்கள்
மட்டும் ஆஸ்ரம வாசலில் வாங்கிட ரூ.250/-தேவைப்படும்;
முன் பதிவு அவசியம்; 91 4563 233308
2.இயற்கை மருத்துவ சந்தியா வித்யாலயம்,முருக
பவனம்,திண்டுக்கல்;செல்:9842836928
ஞாயிறு மாலை 5 மணிக்கு
3.ஆயர்பாடி இயற்கை மருத்துவமனை,அம்மாபாளையம்,திருப்பூர்
இயற்கை மருத்துவ முகாம்;நபருக்கு ரூ.1000/-
அலைபேசி:9345442687,9965042543
ஒவ்வொரு வாரமும் வெள்ளி,சனி,ஞாயிறு தோறும்;
நன்றி:இயற்கை மருத்துவம் மாத இதழ்;நவம்பர்
2015
No comments:
Post a Comment