உலகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் முந்தைய பிறவிகள் நான்கில் செய்த
பாவ,புண்ணியத்தினால் விளைந்த கர்மவினைகளை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளார்கள்;இதில்
விலங்குகளும்,மரம் செடி கொடிகளும் அடங்கும்;
புராணங்களை வாசித்துப் பார்த்தால்,ஒரு உண்மை விளங்கும்;இந்திரன்,தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள்
என்று யாராக இருந்தாலும் முறையற்ற காம இச்சையால் ரிஷியிடம் அல்லது துறவியிடம் சாபம்
பெற்றிருப்பார்கள்;அல்லது நான் என்ற அகங்காரத்தினால் சாபம் பெற்று தனது பதவியை இழந்திருப்பார்கள்;
அது எப்படி தேவ உலகத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கும் நான் என்ற அகங்காரம்
உண்டாகின்றது;முறையற்ற காம இச்சை தோன்றுகின்றது என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல
ஆளில்லை;
ஆக,பல கோடி பிறவிகளாக ஒவ்வொரு மனிதனும் சேமித்த புண்ணிய சக்திகளின் தொகுப்பாகவே
ஒருவன் இந்திரப் பதவியை அடைகின்றான்;அல்லது அஷ்டதிக்கு பாலகர் என்ற பொறுப்பினை ஏற்கின்றான்;பிரம்மா
என்பதும் ஒருவித பதவியே;விஷ்ணு என்பதும் ஒரு வித பதவியே;அதனால் தான் 1970 க்கு முந்தைய
ஜோதிட நூல்கள்,வைத்திய நூல்கள்,ஆன்மீக வெளியீடுகளை வாசித்தால் இறைவன் என்றால் அது ஈசன்
என்பதை உணரலாம்;
மஹா கணபதி உபாசனை செய்வதன் மூலமாக தடைகளை நீக்கி விடலாம்;
பைரவ உபாசனை
செய்து வருவதன் மூலமாக கர்ம வினைகளை கரைத்துவிடலாம்;
ஸ்ரீவித்யா உபாசனை செய்து வருவதன் மூலமாக பாவமற்ற நிலையை அடைந்துவிடலாம்;
அண்ணாமலை
கிரிவலம் செல்வதன் மூலமாக மீண்டும் இந்த பூமியில் பிறவாத முக்தியை அடைந்துவிடலாம்;
இன்றைய கலியுகத்தில் உபாசனை என்ற ஆன்மீக வழிமுறையை பின்பற்ற யாராலும்
இயலாது;மனிதர்களே உட்புக முடியாத வனப்பகுதிக்குள் சிலர் உபாசனை செய்து வருகின்றார்கள்;இன்றைய
ஜனத்தொகை விகிதப்படி 1 கோடியில் ஒருவருக்கு உபாசனை கைகூடும்;மற்றவர்களுக்கு உபாசனையை
போதிப்பதற்குக் கூட ஆன்மீக குரு கிடைப்பதில்லை;
இங்கே யாம் தெரிவிப்பது பக்தி மார்க்கத்தில் தான்;
இறைசக்தியின் அருளை பெற நான்கு விதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய
சித்தர்பெருமக்கள் போதித்திருக்கின்றார்கள்;
1.ராஜ யோகம் = ப்ராணயாமம்,யோகா,வாசி யோகம் மூலமாக முயற்சிப்பது
2.ஞான யோகம் = பக்தி நூல்களை வாசிப்பது,குருவின் வழிகாட்டுதல் படி செயல்படுவது
3.கர்ம யோகம் = மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த எவரும் இதைச் செயல்படுத்தலாம்;சுவாமி
விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய கர்ம யோகம் நூல் தான் இதற்கு வழிகாட்டி;
4.பக்தி யோகம் =இன்றைய கால கட்டத்தில் இல்லறவாசிகளான நமக்கு இதுதான்
ஒத்து வரும்;காவடி எடுப்பது,பாத யாத்திரை செல்வது;அன்னதானம் செய்வது;கோவில் கட்டுவது/மறு
நிர்மாணம் செய்வது/சீரமைப்பது; தினசரி மந்திர ஜபம் செய்வது;ஆன்மீக முயற்சிகளை ஜோதிடத்தின்
அடிப்படையில்,ஜோதிட வழிகாட்டுதலின் படி செயல்படுத்துவது;
அஸ்வாரூடா மாலையை தினமும் ஒருமுறையும்,ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை
அன்று ஐந்து அல்லது இருபத்தைந்து முறையும் ஜபிக்க வேண்டும்;அஸ்வாரூடா வராகிக்கு தனியாக
ஒரு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு ஜபிப்பது சிறப்பு;அந்த சமயத்தில்
மனதில் அன்னையின் உருவம் தெரியும் விதமாக நினைத்துக் கொண்டே(இதற்கு பாவனை என்று பெயர்)
ஜபிக்க வேண்டும்;
சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு,அஸ்வாரூடா வராகியின் அருளை
சூசகமாக உணரலாம்;அதன் பிறகு தொடர்ந்து அஸ்வாரூடா மாலையை ஜபித்து வர மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் மனமானது மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையில்
இருந்து முழுமையாக விலகிச் சென்றுவிடும்;
நமது ஆன்மீக லட்சியங்களை நோக்கி அதன் பின்னர் படுவேகமாக முன்னேறலாம்;
அஸ்வாரூடா மாலையையும்,அஸ்வாரூடா வராகியின் முழுமையான வழிபாட்டுமுறையையும்
பெற விரும்புவோர் எம்மை நேரில் சந்திக்கவும்;
No comments:
Post a Comment