நமது நாட்டின் மக்கள்தொகை அடர்த்திக்கு இணையாக ஜோதிடர்களின் எண்ணிக்கை
இல்லை;என்பது நம்மில் பலருக்கும் தெரியாது;(கணினி பழுதுபார்ப்பவர்களின் எண்ணிக்கையும்
தான் ,மக்கள் தொகை அடர்த்திக்கு இணையாகவும்,கணினி,செல்போன்,மடிக்கணினியின் எண்ணிக்கைக்கு
இணையாக இல்லை!!!)
அனுபவசாலிகளுக்கு எப்போதுமே மரியாதை உண்டு;
ஜோதிடத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன;
1.ஜோதிட அடிப்படை
2.ஜோதிடம் கணிப்பது;ஜாதகம் எழுத அறிந்து கொள்வது;
3.ஜாதகம் பலன் சொல்வது
இதில் இன்றும் கூட பலருக்கு ஜாதகப் பலன் சொல்லத் தெரியும்;ஆனால்,ஜாதகம்
கணிக்கத் தெரியாது;
பலருக்கு ஜாதகம் கணிக்கத் தெரியும்;ஆனால்,ஜாதகம் பலன் சொல்லத் தெரியாது;
ஜாதகம் பலன் சொல்லும் டெக்னிக்குகளே 100 வித டெக்னிக்குகள் இருக்கின்றன;
ஜாதகம் கணிக்க அடிப்படையான பஞ்சாங்கங்கள் மட்டும் தமிழ்நாட்டில் 100
விதமான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;
20 முதல் 25 வயது வரை பொழுதுபோக்காக ஜோதிடம் கற்பவர்கள்,40 வயதுக்குப்
பிறகு முழுநேரஜோதிடராக ஆகிவிடுவது சர்வசாதாரணம்;
எண்கணிதம்,வாஸ்து,கைரேகை,சாமுத்ரிகா லட்சணம்,மந்திரஜபம்,மாந்திரீகம்(இதில்
நல்ல மாந்திரீகம்,தீய மாந்திரீகம் என்று இரண்டு இருப்பது பலருக்குத் தெரியுமா?),மூச்சுப்பயிற்சியை
சொல்லித்தரும் சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம் இவைகள் அனைத்தும் ஜோதிடக்கலையின் ஒரு அங்கங்களாகவே
இருந்தன;
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை,யாரெல்லாம் ஜோதிடம் கற்றார்களோ அவர்கள்
இந்தக் கலைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால்
தான் ஜோதிட அறிஞர் பட்டம் பெற முடியும்;
இன்று அப்படியல்ல;மனித மூளையைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது;இதனால்,ஜோதிடம்
மட்டுமே கற்றுக் கொண்டு பொது மக்களுக்கு வழிகாட்டலாம்;
நேரடியாக வந்து ஜோதிடம் கற்றுக் கொள்ள பலருக்கு ஆசை இருக்கிறது.ஆனால்,செல்போனும்,இணையமும்
வந்தப் பின்னர் அதற்குரிய அவசியம் பெருமளவு குறைந்துவிட்டது;
இணையம் மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருந்து ஜோதிடம் கற்கலாம்;தபால்
வழியே ஜோதிடம் பயிற்றுவிக்கும் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;இவைகள்
துவங்கி அதிகபட்சமாக 45 ஆண்டுகள் ஆகிவிட்டன;
ஒரு குரு,ஒரு சீடன் என்ற அடிப்படையில் இங்கே ஜோதிடம் பயிற்றுவிக்கிறோம்;
ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் வீதம் தினமும் நேரம் ஒதுக்கினால்,வெறும்
100 நாட்களிலேயே ஆர்வமுள்ள எவரையும் ஜோதிடராக்கிவிட முடியும்;
அடிப்படை,பலன் சொல்லுதல்,ஜாதகம் எழுதுதல் இம்மூன்றும் இப்பாடத்திட்டத்தில்
உண்டு;நேரடியாக வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் கொள்ளலாம்;ஜோதிடர் ஆனப் பின்னர்
அடுத்த 5 ஆண்டுகள் வரையிலும் அனுபவங்களைப் பெற்று வெகுவிரைவாக பிரபல ஜோதிடர் ஆகலாம்;
கல்வித்தகுதி:(குறைந்த பட்சம்)பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;
வீட்டில் இருந்தவாறே ஜோதிடம் கற்க விரும்புவோர் தங்கள் ஜாதகத்தை 9092116990 என்ற இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும்;கூடவே
Like to Learn Astrology என்று அனுப்பவும்;
No comments:
Post a Comment