லக்னத்தில் குரு இருக்கும் போது(கோசாரத்தில் தான்) தங்கம்,ரத்தினம்,தானியங்கள்
வாங்கினால் அது பெருகும்;(அட்சய திரிதியை வரை காத்திருக்கத் தேவையில்லை)
சந்திரன் உச்சமாகி,அதை லக்னமாக்கி அதற்கு ஏழாமிடத்தில் குரு இருக்க செல்வங்களைச்
சேமித்தால் தங்கம்,வெள்ளி,ரத்தினங்கள் ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருகும்;
கார்த்திகை,மகம்,அஸ்தம்,அனுஷம்,மூலம்,சதயம் நட்சத்திர நாட்களில் தங்கம்,ரத்தினம்
போன்றவைகளை பிறருக்கு இரவல் தரக்கூடாது;அப்படித் தந்தால் கொடுத்தவன் தரித்திரனாகிறான்;வாங்கியவன்
செல்வங்கள் நிறைந்து காணப்படுகிறான்;
குரு வர்கோத்தமம் ஆகி,புதனும்,சுக்கிரனும் கேந்திரத்தில் இருக்கும்படியான
லக்னத்தில் தங்கத்தை வாங்கி சேமித்தால் ஒன்று கோடி மடங்காகப் பெருகும்;
வியாழக்கிழமை,லக்னத்தில் குருவும்,11 இல் சூரியனும் 6 இல் சனியும் இருந்தால்
அது சமயம் பணியாளர்களை நியமனம் செய்து வைப்பது உத்தமானது;
வெளியீடு:தஞ்சை சரபோஜி நூலக வெளியீடு
ஜோதிடம் கற்றுக் கொடுப்பவர்:கை.வீரமுனி. . .9092116990
No comments:
Post a Comment