Tuesday, January 17, 2017

இப்பிறவி முழுவதும் மாந்திரீகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் கணபதி மந்திர ஜபம்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக நமது பாரத தேசம் வலிமை மிக்க தேசமாகவும்,உலக நாடுகளுக்கு உணவு ஊட்டும் தாய் நாடாகவும் இருந்து வந்தது;மந்திரங்களை நாடு முழுக்க தினமும் 14 மணி நேரம் ஜபித்து வந்ததும்,நாட்டு மக்கள்தொகையில் 85% பேர்கள் தினமும் அன்னை மஹாவராகி வழிபாடு செய்து வந்ததுமே இதற்குக் காரணம்!

வியாபாரம் வந்த இங்கிலாந்து கிறிஸ்தவ வியாபாரிகள் இந்த நாட்டின் செல்வச் செழிப்பில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்;பிச்சைக்காரர்களே கிடையாது;வீட்டிற்கு கதவும் கிடையாது;பூட்டும் கிடையாது;குடிக்க தண்ணீர் தருவதில்லை;மாறாக மோர் முதலான பானகங்கள் தான் தந்தனர்;


ஆன்மீகத்தின் அடிப்படையில் 20,00,000 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதம்,இங்கிலாந்து கிறிஸ்தவர்களின் பிடியில் சிக்கத் துவங்கியதும்,இந்த நாட்டின்,நாட்டுப் பண்பாட்டின் முதுகெலும்பாகிய கோவில்,பசு இனம்,விவசாயம்,பெண்கள் இவைகளை அழிக்கவும்,இழிவுபடுத்தவும் திட்டமிட்டு 300 ஆண்டுகளாக செயல்பட்டனர்;அதன் பின்விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்;கூடவே,தேசத்தின் பண்பாட்டு மரியாதையைத் தெரிந்தவர்களைக் கொல்வது,கிறிஸ்தவம்,ஆங்கிலம் இவைகளைப் பரப்புவது போன்ற நயவஞ்சகவேலைகளில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டனர்;நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளில் நமது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து இந்துக்களாகிய நம்மைப் பிரித்தார்கள்? என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர்;


இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதியில்லாமல் இருப்பதற்குக் காரணம்,நமது முன்னோர்கள் நமக்கு உபதேசம் செய்தவைகளை பின்பற்றுகிறோம்;ஆனால்,முழுமையாக பின்பற்றுவதில்லை;அதனால் தான் அரசியலில் குழப்பம்;தொழில் துறையில் குழப்பம்;ஆன்மீகத்துறையிலும் குழப்பம்;தினசரி வாழ்க்கையிலும் குழப்பம்,குடும்ப அமைப்பில் குழப்பம்;

இந்த குழப்பத்தின் ஊடாக நன்றாக நம்மிடம் இருந்து வருமானம் பார்ப்பவர்கள் யார் தெரியுமா?

பன்னாட்டு நிறுவனங்களே!

இன்றைக்கு நாட்டுமக்கள் தொகையில் 0.05% பேர்கள் தான் நமது பாரதமாதாவாகிய மஹாவராகியை தினமும் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்;இதனாலும்,உலகின் மிக நீண்டகாலமாக வல்லரசு நாடாக இருந்த நமது பாரத்தை சுண்டைக்காய் நாடுகளும்,வெறும் 1000 பேர்கள் கொண்ட ரவுடிக்கூட்டமெல்லாம் தீவிரவாதிகள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நமது நாட்டை மிரட்டுகின்றன;

தனிமனிதர்களின் நிலை உயர்ந்தால் தான்,அந்த நாட்டின் நிலை உயரும் என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று;அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் வலிமைமிக்கவர்களாக மாற வேண்டும்;ஆன்மீகத்தில் வலிமை என்பது மாந்திரீகத்தால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்;

மாந்திரீகம் என்பது அஷ்டகர்மாக்களின் தொகுப்பு;இதில் இருந்து இப்பிறவி முழுவதும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அஷ்ட கணபதி மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை ஜபித்து நிறைவு செய்வதுதான்;

இனி எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும்,அத்தனை மனிதப் பிறவிகளிலும் அஷ்டகர்மாக்களின் தாக்குதல் சிறிதும் இன்றி வாழ விரும்பினால்,நமது குழந்தையை அதன் 10 வது வயதில் இருந்து இந்த அஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்க வைக்க வேண்டும்;

மாந்திரீகத்தில் மிகவும் உச்சகட்டமான கெடுதியைச் செய்யக் கூடியது காஷ்மோரா! இன்றைய ஒடிசா,மத்தியப்பிரதேசம்,அசாம் மாநிலங்களில் இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் இதை செய்துதரும் ஆட்கள் இருக்கின்றார்கள்;அதனால் கூட இந்த அஷ்டகணபதி மந்திரம் சித்தி பெற்றவர்களுக்கு தீங்கு தர முடியாது;

குறளி,ஜின்,மோகினி,குட்டிச்சாத்தான் என்று ஒரு மிகப்பெரிய சூட்சும சக்திகளைக் கொண்ட சூட்சும உலகத்தில் இருந்து எதையாவது ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு தான் இன்று பலர்,பிறருக்கு தீங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர்;யார் தொடர்ந்து 48 நாட்கள் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை;

ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி

என்ற எட்டு விநாயக சக்திகளுக்கும் மூலமந்திரம் ஒன்றே ஒன்றுதான்;சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்கு ஈசனின் ஆணைப்படி கொண்டு வந்தவருமான அகத்திய மகரிஷி நமக்காக இதை உபதேசித்திருக்கின்றார்;

12 மாதங்களில் இந்த அஷ்ட கணபதி சித்தியாகிவிடும்;நாமும் இனி சர்வசக்தி வாய்ந்தவராகி விடுவோம்;

முறைப்படி குரு உபதேசம் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திர உபதேசம் பெற உங்கள் பிறந்த ஜாதகத்துடன் எம்மை(வாட்ஸ் அப்:9092116990,செல் எண்:9629439499) நேரில் சந்திக்கவும்;ஆண்,பெண்,குழந்தை,சிறுவர்,சிறுமி என்று எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

எங்கே எப்படி ஜபிக்க வேண்டும்?என்ற விபரங்களும் மற்றும் உங்களுடைய ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் இங்கே கிடைக்கின்றன;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment