பரிகாரம் என்பது வர இருக்கும் துயரங்களில் இருந்து மீள்வதற்காக சில சுயக்கட்டுப்பாடுகளுடன்
செய்யப்படும் முறையான பூஜை/ஜபம்/தானம்/இம்மூன்றும் இணைந்தது;
பரிகாரம் செய்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமலும்,மது அருந்தாமலும்,போதைப்
பொருட்களை உபயோகப்படுத்தாமலும் இருக்க வேண்டும்;பரிகாரம் செய்த நாள் முதல் (குறைந்த
பட்சம்) 90 நாட்கள் வரையிலும்;அதிக பட்சம் 300 நாட்கள் வரையிலும் மட்டுமாவது அசைவம்,மது,போதையைக்
கைவிட்டால் மட்டுமே பரிகாரத்திற்கான பலன் நம்மை வந்து சேரும்;
பரிகாரம் செய்பவர்களுக்கு,யார் அந்தப் பரிகாரத்தை ஜோதிடப்படியோ அல்லது
ஆன்மீக உபதேசப்படியோ உபதேசித்தார்களோ,அவர்களிடம் மட்டுமே பரிகாரம் செய்வதில் இருக்கும்
நடைமுறை சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற வேண்டும்;
பரிகாரம் செய்வதற்கு முன்பாகவும்,செய்யும் போதும்,செய்தப் பின்னரும்
‘இந்த தோஷம் தீர்வதற்காக இப்படிப்பட்ட பரிகாரம் செய்கின்றேன்’ என்று தெரிவித்தால்,பரிகாரத்திற்கான
பலன் நம்மை வந்து சேராது;அல்லது மிகவும் தாமதமாக பலன் வந்து சேருகின்றது;அல்லது முழுமையான
பலன் நமக்குக் கிடைப்பதில்லை;என்பது எமது கடந்த 28 வருட ஜோதிட அனுபவம் ஆகும்;
மனிதனுக்கு விஷகலைகள் அதிகம்;அதனால் தான் புல்வெளியில் நடந்து சென்றப்
பின்னர்,அங்கே புற்கள் முளைப்பதில்லை;நெகடிவ் எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் அதிகம்;இப்படிப்பட்ட
சூழ்நிலையில் அரசியல் துறையில் தமிழ்,தமிழினம்,தமிழ்நாடு என்று முகமூடி அணிந்து கொண்டு
தமிழைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் நஞ்சை
விதைத்துவருகின்றனர்;பொழுது போக்கு என்பதை ஒரு துறையாக்கி,அதன் மூலம் வருமானம் பார்ப்பதோடு,எப்படியெல்லாம்
அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கலாம்? எப்படி ஒற்றுமையான தம்பதியை பிரிக்கலாம்? எப்படி
திமிர்த்தனத்தை வெளிப்படுத்தலாம்? எப்படி ஒருவருடைய கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையைச் சிதைக்கலாம்?
என்பதைப் பிரதானமாகக் கொண்டு நமது கண்களையும்,காதுகளையும் நமது வீடுவரை ஒளிபரப்பி முட்டாளாக்குகின்றனர்;
இப்படிப்பட்ட சூழ்நிலையில் காலதேவனாகிய மஹா காலபைரவப் பெருமானின் அருளை
விரைவாகப் பெறுவதற்கு சித்தர் பெருமக்கள் ஒரு எளிமையான அதே சமயம் வலிமை மிக்க வழிமுறைகளை
உபதேசித்துள்ளனர்;
ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 3 மணி முதல் 4.30 வரையிலும்;
திங்கட்கிழமை அன்று மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரையிலும்;
செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12 மணி முதல் 1.30 வரையிலும்;
புதன்கிழமையன்று காலை 10.30 முதல் 12 மணி வரையிலும்;
வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும்;
வெள்ளிக்கிழமை அன்று காலை 7.30 முதல் 9 மணி வரையிலும்;
சனிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும்;
ஆலயத்தில் ஸ்ரீமஹா கால பைரவப்பெருமானை வழிபட மகத்தான நன்மைகள் தேடிவரும்;
வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வர நாம் பொருளாதாரத்தில்
தன்னிறைவை எட்டிவிடுவோம்;
மேலே கூறிய நேரத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீமஹா கால பைரவப் பெருமானின்
1008 போற்றிகளை அவரது சன்னதியில் ஜபித்தாலே போதுமானது;கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்
வீட்டின் தெற்குப் பக்கச் சுவற்றில் எலுமிச்சைபழத்தினால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அதன்
மீது குங்குமத்தால் மேல் பூச்சு பூச வேண்டும்;அதன் அருகில் நெய் தீபம் ஏற்றி வைத்து
1008 போற்றிகள் ஜபிக்கலாம்;(பாடக் கூடாது)
கோவிலில் மேலே கூறப்பட்ட நேரங்களில் கடைசி 30 நிமிடத்தில் மனப்பூர்வமான
வேண்டிக் கொண்டு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தாலும் நமது கோரிக்கைகள் நிறைவேறும்;ஆமாம்!
ராகு கால வழிபாட்டைவிடவும்,குளிகைக் கால வழிபாடு கோடி மடங்கு பலனைத் தரும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
No comments:
Post a Comment