சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி ஆன்மீகத்திற்கு
ஆணிவேராக விளங்கும் கருத்தினை விரிவாகவும்,ஆழமாகவும் கூறுகின்றார்;
ஒரு மரத்தில் இருக்கும் ஒரே ஒரு இலை அசைகின்றது என்று வைத்துக் கொள்வோம்;அந்த
இலை அசைவதும் ஏதோ ஒரு காரண காரியத்துடன் தான் அசைகின்றது;
இதன் உள்ளார்த்தம் என்ன?
காரண காரியம் இல்லாமல் இங்கே எதுவும் நடைபெறுவதில்லை என்பது உண்மை;இந்த
வாக்கியத்தின் அடிப்படையில் தான் ஆன்மீகமும்,சனாதன தர்மமும் உயிர்த்துடிப்புடன் இயங்கி
வருகின்றது;
காஷ்மோரா என்ற திரைப்படத்தைப் பார்த்துள்ளீர்களா?
இடைவேளை வரை ஒரு போலி மந்திரவாதியின் வாழ்க்கையையும்,இடைவேளைக்குப் பிறகு,
ஒரு புராணச் சம்பவத்தையும் விவரித்து இரு திரைக்கதைகளை அதன் இயக்குநர் நமக்கு படைத்துள்ளார்;
எமது 27 வருட ஜோதிட ஆராய்ச்சிகளின் படி,ஒருவர் இயற்கையான முறையில் இறந்தால்
மட்டும் தான் அவருக்கு மறுபிறவி உண்டு;செயற்கையான மரணம் எனில்,நிச்சயமாக பிறப்பு எடுக்க
முடியாது;
இந்தத் திரைப்படத்தில்,படைத்தளபதியாக வரும் கேரக்டர் போர்களில் வெற்றி
மேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருக்கின்றான்;அதே சமயம்,அந்தரங்க வாழ்க்கையில்
ஒழுக்கமில்லாதவனாக இருக்கின்றான்;
அவன் தமது நாட்டு இளவரசியின் மீது மோகம் கொள்கின்றான்;அவளை திருமணம்
செய்ய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றான்;
சந்தர்ப்பம் அமையும் போது ஒரே நாளில் அவளது காதலனை கொன்று விடுகின்றான்;அவளது
தம்பியையும் கொன்றுவிடுகின்றான்;அவளது அப்பாவாகிய நாட்டு மன்னனையும் கொன்றுவிடுகின்றான்;தான்
ராஜாவாக முடிசூட்டிட முயற்சிக்கும் போது இளவரசியின் நயவஞ்சகத்தால் கொல்லப்படுகின்றான்;அப்படிக்
கொல்லப்படும் போது,அந்த கணப்பொழுதினில்,தமது இளவரசியையும் கொன்றுவிடுகின்றான்;
இறந்த இருவரில் படைத்தளபதி ஆவியாக அலைகின்றான்;அவனது விசுவாசம் மிக்க
12 துணைத் தளபதிகளும் ஆவிகளாக அலைகின்றனர்;
ஆனால்,இளவரசி கம்போடியாவில் பிறவி எடுக்கின்றாள்;12 வயது சிறுமியாக இருக்கும்
போது அந்த படைத்தளபதிக்கு சாபம் தீரும் கிரக அமைப்புகள் அமைய இருக்கின்றது;
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்களை
1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் நவகாளி பவுர்ணமி அன்று பலி கொடுப்பதன் மூலமாக
தமது சாப நிவர்த்தி செய்ய முடியும் என்று முயற்சிப்பதாக கதை செல்கின்றது;
மறுபிறவி எடுத்த இளவரசி,கம்போடியாவில் இருந்து சில விநாடிகளில் தமிழ்நாடு
ஆந்திரா எல்லைக்குள் அமைந்திருக்கும் (திரைக்கதைப்படி மட்டுமே;நிஜத்தில் அல்ல) அந்த
மாளிகைக்கு வந்து படைத்தளபதியின் ஆவியோடு சண்டையிட்டு (முற்கால வழக்கப்படி போரிட்டு)
காஷ்மோராவின் உதவியோடு கொன்றுவிடுகின்றாள்;
இதில் இரண்டு விஷயங்கள் திரைப்பட லாஜிக் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றன;1
கொலை அல்லது தற்கொலை அல்லது விபத்து அல்லது போர் அல்லது கலவரம் முதலான செயற்கை மரணம்
அடைந்தவர்கள் ஒரு போதும் மறுபிறப்பு எடுக்க முடியாது;
2.சரியாக 700 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த படைத்தளபதிக்கும்,இளவரசிக்கும்
கதி மோட்சம் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் நவகாளி பவுர்ணமி அன்றுதான் கிடைக்கும்
சந்தர்ப்பம் அமையும் என்பது;
700 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த
இருவருக்கும் கதி மோட்சம் கிடைக்கும் நவகாளி பவுர்ணமி வர இன்னும் 300 ஆண்டுகள் ஆக வேண்டும்;
எப்படி முன்பே அது வந்தது;
முற்காலத்தில் அரசாங்கத்தில் இருக்கும் மன்னர்,அவரது மனைவிகள்,மகன் மற்றும்
மகள்கள் இவர்களுக்கு மட்டுமே ராஜ வைத்தியமும்,ராஜ மாந்திரீகமும் போதிக்கப்பட்டது;தமிழ்நாட்டை
எடுத்துக் கொண்டால்,பாண்டிய மன்னர்களுக்கு சித்தர் பெருமக்களில் யாராவது ஒருவர் குருவாக
இருந்து வழிநடத்தியுள்ளார்கள்;
ஒவ்வொரு ராஜாவுக்கும் இரு மனைவிகள் உண்டு;அம்மா வழி சொந்தங்கள் விட்டு
விலகிச் செல்லாமல் இருக்க ஒரு மனைவியும்,அப்பா வழி சொந்தங்கள் தலைமுறைகள் தோறும் தொடர
ஒரு மனைவியும் என்று இருவரைத் திருமணம் செய்வது வழக்கம்;
காஷ்மோரா திரைப்படத்தில் வரும் முக்கியமான வசனம்:
“காரண காரியம் இன்றி இங்கே எதுவும் நடக்காது காஷ்மோரா”
காஷ்மோரா திரைப்படத்தின் இயக்குநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! சுமாராக
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் உழைத்து காட்சிகளை எடுத்துள்ளார்;
கர்மவினை பற்றிய இங்கே கொஞ்சம் பார்ப்போமா:::-
கடவுளே ஏன் என்னை இந்த பாடு படுத்துகிறாய் என்று புலம்புவது நமது இன்றைய
தமிழ் மக்களின் சுபாவமாக மாறிவிட்டது;
ஆமாம்! கடவுள் உங்கள் ஊருக்கு வருகை தந்து,உங்கள் தெருவினை சரியாக அடையாளம்
கண்டு,உங்கள் வீட்டு எண்ணையும்,உங்கள் பெயர்,ராசி,பிறந்த நட்சத்திரம்(உங்களது பிறந்த
நட்சத்திரம் உங்களுக்குத் தெரியாமல் இருந்தாலும்) இவைகளை அடையாளம் கண்டு நேரடியாக வந்து
ஆவி ரூபத்தில் (உங்களுக்கு தெரியாமல்) உங்களை தினமும் பாடாய் படுத்துகின்றார்;
இது முழுப் பொய்;
தாங்க முடியாத கஷ்டம் அல்லது தாங்க முடியாத துயரம் வரும் போது இப்படி
புலம்புவது வாடிக்கையாகி,வழக்கமாகி,பாரம்பரியமாகிக்கொண்டிருக்கின்றது
ஆனால்,எது உண்மை?
நம்மில் பெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்ப இந்த பூமியில் பிறந்து
கொண்டேதான் இருக்கின்றோம்;(கலியுகத்தின் மொத்த வருடங்கள் 4,32,000 ஆண்டுகள்)ஜோதிடப்படி,கடந்த
ஐந்து முற்பிறவிகளில் செய்த பாவச் செயல்கள் மற்றும் புண்ணியச் செயல்களின் தொகுப்பை
அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;
இதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகள் இந்த உலகத்தில் நமது தமிழ்நாட்டில்
மட்டுமே இருக்கின்றன;வேறு எங்கும் இல்லை;
அவைகளில் ஒருசிலவற்றை மட்டும் தான் இங்கே எழுத்து வடிவத்தில் கொடுத்திருக்கின்றோம்;மற்றவகள்
எம்மை நேரில் சந்திப்பவர்களுக்கு மட்டுமே தரமுடியும்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற பழமொழிக்கும் இதே அர்த்தம் தான்;
கடந்த ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள் மற்றும் தீயச்செயல்களுக்கு
ஏற்ப குறிப்பிட்ட கிரக அமைப்புகளில் பிறக்கும் விதமாக நம்மை நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நாம்
பிறந்தது முதல் மரணம் அடையும் வரை நம்மை இயக்குவதும் இவர்களே! இங்கே கடவுளுக்கு வேலை
இல்லை;அது இந்துக் கடவுளாக இருந்தாலும் சரி;இந்து மதம் அல்லாத கடவுளாக இருந்தாலும்
சரி;
இன்று நாம் கோடீஸ்வரனாக இருக்கின்றோம் என்றால் அதற்கு நாம் செய்த புண்ணியச்
செயல்கள் தான் காரணம்;
முற்பிறவிகளில் சிவாலயம் ஒன்றில் தினமும் பள்ளியறை பூஜைக்குச் சென்று
அன்னதானம் செய்தவர்கள் இப்பிறவியில் சுயதொழில் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்ப்பார்கள்
என்று சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷி தெரிவிக்கின்றார்;
முற்பிறவிகளில் சிவாலயத்தில் பள்ளியறை பூஜைக்கு உடுக்கு,கொட்டு,மிருதங்கம்,நாதசுவரம்
போன்றவைகளால் ஒரு பிறவி முழுவதும் சம்பளம் வாங்காமல் வாசித்தவர்களே இப்பிறவியில் இசைக்
கலைஞர்களாகி,அதன் மூலமாக மகத்தான செல்வந்தர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்;இதில் நம்
நாட்டு இசைக்கலைஞர்கள் மட்டும் அல்ல;சீனா,ஜப்பான்,ஹாலிவுட் இசைக்கலைஞர்களும் இதில்
அடக்கம்;
முற்பிறவிகளில் குறைந்தது ஒரு பிறவி முழுவதும் பள்ளியறை பூஜைக்குச் செல்லும்
ஈசன்,அம்பிகையை பல்லக்கில் வைத்து தமது தோளில் தாங்கி ஆலயத்தை வலம் வந்தவர்களே,இப்பிறவியில்
பிரபலமாக மற்றும் செல்வ வளம் மிக்க பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக் கட்டிடங்களுக்குச்
சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றார்கள்;
முற்பிறவிகள் மூன்றில் பள்ளியறை பூஜை நைவேத்தியத்திற்குத் தேவையான பசும்பால்
அளித்தவர்கள் தான் இப்பிறவியில் அருமையான மகன் மற்றும் மகள்களை பெற்று இறுதிக்காலத்தில்
நிம்மதியாகவும்,ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்;
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இந்தியாவில் வறுமை ஒழிந்துவிடும் என்று
1990 முதல் 2000 வரை அனைத்துப் பத்திரிகைகளும் இந்தப் பொய்யை திரும்பத் திரும்ப எழுதித்
தள்ளின;
இன்றைய கால கட்டத்தில்,நமது கர்மவினைகளை போக்கிட பலவிதமான வழிமுறைகள்
இருக்கின்றன;தினமும் ஒரு மணி நேரம் சிவாய நம என்று ஜபிப்பதும் ஒரு வகை;தினமும் அருகில்
இருக்கும் ஜீவசமாதிக்குச் சென்று அதை பெருக்குவதும்,அதை பிரபலப்படுத்துவதும்,அங்கே
தினமும் ஒரு தீபம் ஏற்றுவதும்,அங்கே ஒரு மணி
நேரம் சிவாய நம என்று ஜபிப்பதும் சுலபமான பரிகாரங்களில் ஒன்று;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment