Friday, December 30, 2016

நான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்!!!





உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரது சுவாசமே வாக்கிய மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கங்களாக விரிவடைகிறது.ஸ்ரீகால பைரவர் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே விநாயகரும்,முருகக் கடவுளும் தோன்றினார்கள்.அப்படித் தோன்றுவதற்கு முன்பே ஸ்ரீகால பைரவர் தனது சாகசச் செயல்களால் பிரபஞ்சத்தில் மனிதர்கள்,தேவர்கள்,மும்மூர்த்திகளின் துயரங்களைத் தீர்த்துவைத்தார்;அவ்வாறு தீர்த்து வைத்துவிட்டு,தனது தந்தையாகிய சிவலிங்க வடிவத்திலேயே எட்டு இடங்களில் மறைந்திருந்து அருளாட்சி புரிய ஆரம்பித்தார்;அந்த எட்டு இடங்களே அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


அஷ்ட வீரட்டானங்களில் நான்காவதாக இருப்பது திருப்பறியலூர் ஆகும்.இந்த வீரட்டானம் மயிலாடுதுறை என்ற மாயவரம் அருகே பரசலூர் என்ற பெயரில் ஒரு சிற்றூராக இருக்கிறது.இந்த பரசலூரில் இருக்கும் வீரட்டானம் சாலைப்போக்குவரத்திலிருந்து விலகியே அமைந்திருக்கிறது.


அட்டவீரட்டானங்களில் சாலையோரம் அமைந்திருக்கும் வீரட்டானங்கள் திருக்கடையூர்,திருவதிகை,திருக்கண்டியூர்,திருக்கோவிலூர்.      சாலையிலிருந்து விலகி,சற்றுத் தொலைவில் இருக்கும் வீரட்டானங்கள் வழுவூர்,பரசலூர்,திருக்கொறுக்கை,திருவிற்குடி ஆகும்.


மயிலாடுதுறையில் இரண்டு நாட்கள் தங்கினாலே நான்கு வீரட்டானங்களைத் தரிசித்துவிடமுடியும்.அப்படி தரிசிக்க நமக்கு கார் அல்லது ஆட்டோ அல்லது பைக் வசதி இருக்க வேண்டும்;இந்த இரண்டு நாட்களுமே அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும்.விசாரித்து,விசாரித்துச் சென்றால் மட்டுமே இந்த வீரட்டானங்களை குறித்த நேரத்தில் சென்றடைய முடியும்.பெரும்பாலான வீரட்டானங்கள் மிகப்பிரம்மாண்டமான ஆலயங்களாக அமைந்திருக்கின்றன;அப்படி அமைந்திருந்தாலும் சாதாரண நாட்களில் வெறும் பத்து பேர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்தாலே அது அதிகமாம்;பிரதோஷ நாட்களில் ஐம்பது பேர்கள் வருவது அதிகம் என்று கேள்விப்படுகிறோம்.காரணம் கலியுகத்தில் பாவ ஆத்மாக்கள் இந்தக் கோவில்களில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் ஒரே ஒருமுறை வருவதே அபூர்வமாம்!!!


இங்கே மூலவராக சிவலிங்கம் இருந்தாலும்,அந்த சிவலிங்க வடிவத்தில் இருந்து அருளாட்சி புரிபவர் ஸ்ரீகாலபைரவப் பெருமானே! எனவே,  நீங்கள் இந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது ஆர்வக் கோளாற்றினால் மூலவரை போட்டோ எடுக்க முயலாதீர்கள்;எடுத்தப் பின்னர்,கேமிராக்கள் பழுதாகியிருக்கின்றன;பலருக்கு உடல்நிலை சீர்குலைந்து போயிருக்கிறது;மீண்டும் பூரண உடல் ஆரோக்கியம் பெற ஒரு வாரமாவது ஆகும்.எச்சரிக்கை! கம்யூட்டர் யுகம் வந்தாலும் கம்யூட்டரால் நல்ல ஆட்சியாளர்களைத் தர முடிந்ததா? நமது மனநிலையில் மன ஒருமைப்பாட்டை உருவாக்கிட முடிந்ததா? யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத மனநிலையை மட்டுமே தந்திருக்கிறது;நம் ஒவ்வொருவரையும் காமக் கோட்டிகளாக மாற்றியிருக்கிறது.திமிரை நிஜமான ஆன்மீகவாதிகளிடம் காட்டி சீரழியவேண்டாம்.


மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந் தண்புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே(சம்பந்தர்)


மயிலாடுதுறைக்கு அருகில் செம்பொன்னார் கோவில்(திருச்செம்பொன் பள்ளி) என்ற திருத்தலத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது.விசாரிக்காமல் போனால்,வேறு சில கிராமங்களுக்குச் சென்று தடுமாற வேண்டியிருக்கும்.
பிரம்மாவின் மகன் தட்சன் ஆவார்.இவரது மகளாகப் பிறக்க சதாசிவன் தனது மனைவியான பராசக்திக்கு வரமருளினார்;சிவபூஜையும்,தவமும்புரிந்து வளர்ந்த தாட்சாயணியை பரமேஸ்வரன் தனது தேவியாக்கிக்கொண்டு அருளினார்.


வேள்விகளின் நாயகனாக பரம்பொருளான சிவனையே ஆவாஹனம் செய்வது யுகம்,யுகமாக இருந்து வரும் வழக்கம் ஆகும்.கிருதயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம் மற்றும் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்திலும் வேள்விகள் செய்யும் போது அவிர்ப்பாகத்தை முதலில் சதாசிவன் என்ற பரமேஸ்வரனுக்கு தருவதே வழக்கம்;


ஆனால்,சர்வேஸ்வரனின் மாமனார் என்ற அகங்காரத்தினால் தாம் நடத்தும் வேள்விக்கு பிரம்மன் முதலான தேவர்களை அழைத்து வந்து நாத்திக வேள்வி நடத்தினான் தட்சன்.இந்த வேள்வியில் கேட்காமலேயே கலந்து கொண்டாள் பரமனைத் திருமணம் செய்த தாட்சாயணி!
இதனால் கோபமுற்ற பரமேஸ்வரன் தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஸ்ரீகாலபைரவரைத் தோற்றுவித்தது போல வீரபத்திரரையும் தோற்றுவித்தார்;


திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்
ஆயிரம் மணிக்கரத்து அமைத்த வாள் படையுடன்
சயம் பெறு வீரனைத் தந்து அவன் தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த
இருள் மனத் தக்கன் பெருமகம் உண்ணப் புக்க
தேவினர் தம் பொரு கடற்படையினை
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய கூடல் பெருமான்
என்று சங்கப்புலவர் கல்லாட தேவ நாயனார் பாடுகிறார்.
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிரம் முகம் நாசி சிறந்த கை தோள் தாள்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே
என்று திருமந்திரம் அரன் அருள் இல்லாமல் தட்சயாகம் அழிந்ததைப்  பாடுகின்றது.


வீரபத்திரர் தனது படைகளோடு சென்று தட்சனது யாகத்தை அழித்தார்;தட்சனது தலையைத் துண்டித்தார்;இந்த யாகத்தில் கலந்து கொண்ட அனைத்து தேவர்களும் தண்டிக்கப்பட்டனர்;


மிருகத் தலை நினைந்து வருந்திய தட்சன் பல தலங்களையும் தரிசனம் செய்து வழிபட்டு சென்னையை அடுத்துள்ள அரக்கோணம் அருகே உள்ள திருவூறல் என்னும் திருத்தலத்திற்குச் சென்றான்.நந்தியின் வாயிலிருந்து சாதாசர்வ காலமும் நீர் ஊறிக் கொண்டிருப்பதால் திருவூறல் என்று பெயர் உண்டானது;இந்தத்திருத்தலத்திற்கு ஆட்டுத்தலையோடு வந்த தட்சன்,ஓலமிட்டு தனி லிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டான்.
அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை விதித்து வைக்கும் விதி நாயகன் தட்சனுக்கு மீண்டும் பழைய வடிவை வழங்கியருளினார்;ஒப்பில்லாத கருணைக் கடலின் மாபெரும் கருணைக்கு தட்சன் வியந்து மகிழ்ந்தான்;தட்சன் சிவபூஜை செய்து பழைய வடிவம் கொண்ட திருத்தலமே தக்கோலம் எனப்படும் திருவூறல் ஆகும்.தட்சன் ஓலமிட்டு அலைந்து திரிந்ததால் இத்தலம் தக்கன் ஓலம் என்று பெயர் பெற்றது.அதுவே காலப்போக்கில் தக்கோலம் என்று ஆயிற்று.
ஆலகால விஷத்தினால் இளமை நீங்கி முதுமை அடைந்த பராசக்தி பல திருத்தலங்களை வழிபட்டு திருபறியலூரை அடைந்தாள்;திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் பராசக்தியின் முதுமையைப்போக்கி இளமையை அருளச் செய்து பாலாம்பிகை ஆக்கினார்.


சிவபூஜையும் தவமும் புரிந்த அம்மன் திருக்கரங்களில் ருத்ராட்சமாலையும்(பெண்கள் எப்போதும் ருத்ராட்சம்  அணிந்திருக்கலாம் என்ற மரபு இங்கே தான் உருவானது;இப்படித் தான் உருவானது) தாமரைப்பூவும் தாங்கி பாலாம்பாள்,இளங்கொம்பு அணையாள் என்ற பெயர்களுடன் தனிச் சந்நிதியில் இங்கே அருள்பாலித்து வருகிறாள்.


நால்வகைச் சாதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதிமக்களாக அந்தணர்களே இருந்தார்கள்;பல ஊர்களின் பெயர்களின் அந்தணர்கள் என்ற பெயர் இதனாலேயே உண்டானது;தொல்காப்பியத்தில் பார்ப்பன வாகை என்று ஒரு தனித் துறையே கூறப்பட்டுள்ளது.


பசு உண்ணும் புலைச் சமயங்களான முகம்மதிய,கிறுஸ்தவ அந்நிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது மக்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்;தீய பழக்க வழக்கங்கள் தலைவிரித்து ஆடியதாலும் நல்லோர்களின் எண்ணிக்கை குறைந்து போனது;இதனால் அந்தணர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோய்விட்டது.


திருப்பறியலூர் வீரட்டேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு ஆணவம் குறையும்;நாத்திக இருள் மறையும்;ஞான ஓளி பிறக்கும்;பக்தி பெருகும்;பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.


கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே

ஓம் ரீங் ஸ்ரீவாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்!!!






அவதாரம் எடுக்காத சதாசிவம்,தனது மனதில் வைத்திருந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட,அந்தகாசுரனை அழிக்க உதயமானவரே ஸ்ரீகாலபைரவர் ஆவார். தமிழ்நாட்டில் எட்டு இடங்களில்  ஸ்ரீகாலபைரவர் திருவிளையாடல்கள் புரிந்திருக்கிறார்.அந்த எட்டு இடங்களில் ஸ்ரீகாலபைரவர் சிவலிங்க வடிவத்தில் அருட்பேரரசு புரிந்து வருகிறார்.இந்த எட்டு இடங்களுமே அட்டவீரட்டானம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இந்த அட்டவீரட்டானங்களின் இருப்பிடம் பற்றி ஏற்கனவே நாம்  எழுதியிருந்தோம்;

தற்போது,இந்த இடங்களுக்குச் சென்று,இந்த ஸ்தலங்களின் மகிமைகளை விசாரித்துப் பார்த்தால்,மறக்கப்பட்ட ஸ்ரீகாலபைரவரின் பெருமைகள் இமயமலையளவுக்கு கிடைத்திருக்கின்றன.நமது ஆன்மீக வரலாற்றிலும் பல ரகசியங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கின்றன;திரிக்கப்பட்டிருக்கின்றன;குழப்பத்தை உருவாக்கி,உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.


நாம் வைவஸ்தவ மன்வந்திரத்தில்,இருபத்து நான்காவது மகாயுகத்தில் இருக்கும் நான்காவது யுகமான கலியுகத்தில்       5117 ஆம் ஆண்டில் வசித்து வருகிறோம்..(இந்துக் காலக் கணக்கினை எந்த ஒரு மேல்நாட்டினராலும் புரிந்து கொள்ளவே முடியாது;இந்துக் காலக் கணக்கு எந்த ஒரு தனி மனிதனின் பிறப்பையும் மையப்படுத்தாமல்,ஸ்ரீகால பைரவரின் மூச்சை கணக்கிட்டு மதிப்பிடப்படுகிறது.வெறும் 2000 ஆண்டு வரலாறு கொண்ட மேல்நாட்டினரால் இந்துக்  காலக்கணக்கின் பரிணாமத்தை  புரிந்துகொள்ளவே முடியாது)

.
ஏறுடன் ஏழு அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறுடைச் சடையினானை அருச்சித்தான் அடியிணைக்கீழ்
வேறுமோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே(அப்பர்)
காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம்)


முக்கண் முழுமுதலின் நெற்றிக்கண் தீப்பொறியால் மகாவிஷ்ணுவின் மகன் மன்மதன் அழகிய உடல் எரிந்து சாம்பலாய்க் குறுகியதால் குறுக்கை என்று பெயர் பெற்றது என்பதை திருமந்திரமாக திருமூலர் தெரிவிக்கிறார்.
இராமன் வனவாசம் இருந்த காலங்களில் வருடந்தோறும் தந்தைக்கு திவசம் செய்து பித்ரு கடன் நிறைவேற்றி வழிபட்ட பல தலங்களில் கொறுக்கையும் ஒன்று.


மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் கொறுக்கைக்கு அருகில் விபூதிக்குட்டை என்று வழங்கப்படுகிறது.


கணவன் இறந்துபட்டு உடலும் எஞ்சாமல் முழுவதும் எரிந்து சாம்பலானதைக் கண்ட ரதிதேவி சிவபூஜையால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்ந்து பல தலங்களையும் வழிபட்டு இறுதியாக திருக்கொறுக்கையை அடைந்தாள்.குளம் ஒன்றை உண்டாக்கி கடுக்காய் மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து,பூஜித்தாள்.புத்திரசோகத்தால் வருந்திய மகாவிஷ்ணுவும்,மஹாலட்சுமியும் திருக்குறுக்கையை அடைந்து ரதிதேவியுடன் சேர்ந்து பரம்பொருளை பூஜித்தனர்.எல்லையில்லா கருணை காட்டும் கருணாகரனாகிய சதாசிவம் மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ்வளித்தார்.மீண்டும்  உயிர் பெற்ற மன்மதன் தனது மனனவியாகிய ரதிக்கு மட்டுமே தெரியும் விதமாகவும் வரமளிருனார்.


உடம்பு இழந்து அநங்கனாய மன்மதன்(சம்பந்தர்)
மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,ரதி ஆகிய மூவரின் சோகங்களையும் நீக்கியதால் கொறுக்கை ஈசனுக்கு சோக ஹரேஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.கொறுக்கையின் ஸ்தலவிருட்சம் கடுக்காய் மரம் ஆகும்.
அடிமுடி காண்பர் அயன் மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார் மிசைக்  கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே


என்று திருமந்திர ஆகமம் காட்டுகிறது.பொய் பேசிய பாவத்தினால் பிரம்மர்களுக்கு பூவுலகில் திருவுருவமும் பூஜையும் இல்லாமல் போயிற்று.பல ஊழிகளுக்குப்பிறகு, பிரம்ம பதவியில் இருந்த ஒரு பிரம்மன் திருக்குறுக்கை வீரட்டேஸ்வரரைப் பூஜித்து வழிபட்டார்.வழிபடுவோர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் உலகநாதன் பிரம்மன் உருவம் சிவாலயங்களில் இருக்குமாறு வரம் அருளினார்.


கொறுக்கையானது மயிலாடுதுறைக்கு அருகில் சாலைப்போக்குவரத்திலிருந்து விலகி அமைந்திருக்கிறது.யாருக்குப் பூர்வ புண்ணியமும்,ஸ்ரீகாலபைரவரின் அருளாசியும் இருக்கிறதோ அவர் மட்டுமே இந்தக் கோவிலுக்குச் செல்ல முடியும்.தொடர்ந்து  ஒன்பது      தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்த ஆலயத்துக்கு வருகை தந்து இவரை வழிபட நமது முன்னோர்களின் 71 தலைமுறைகளாக சுமார் 20,000 தம்பதியரின் பெண்சாபமானது விலகும் என்பது உறுதி.

ஓம் ரீங் வாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

அஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்!!!




புல்லசுகா திகளுக்கு ளென்று மேன்மை
பொருந்தாத நரகமுடின் சுவர்க்க மாதி
இல்லசுகா திகளூடனே கீழு மேலு
மெய்திநலி வுறனீங்கி யிருக்க வேண்டி
வல்லசுகா தியரெண்ணி வையந் தன்னில்
வளங்குலவு மனோலயமாய் வைகு மாறு
நல்லசுகா தனமதனில் இருக்கும் எங்கள்
நாயகன் அடிமலரை நாடி வாழ்வாம்


இந்த பாடலின் அர்த்தம்: பொருந்திய துன்பம் முதானவைகளுடனே இழிவினை உடைய நரகத்துடன் சுவர்க்க முதலிய தானங்களில் மனைவி மக்களுடன் வாழுகின்ற இன்பம் முதலியவைகளுடன் கீழும் மேலும் சென்று துன்பம் அடைதலை யொழித்துச் சுகமாய் இருக்கக் கருதி,தவத்தில் வல்ல சுகன் முதலியவர்கள் தியானித்து உலகத்தில் வளப்பம் பொருந்திய மனோலயத்துடன் வாழும் வண்ணம்,நல்ல சுகாதனத்தில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கர்த்தா(சிவனின்)
வின் திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டு வாழ்வோமாக!
சீர்காழியில் இருந்து அருள் தரும் சட்டைநாதருக்கு இந்த பாடலின் கருத்துக்கள் பொருந்தும்;இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர்களும்,உள்சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரும் இருந்து அருளாட்சி புரிந்து வருகின்றனர்.


சித்தர்களின் தலைவர் அகத்தியர்,திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இடைக்காடர்,ரோம ரிஷி, மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழும் தன்வந்திரி,கொங்கணர்,கோரக்கர்,கருவூரார்,கமலமுனி,போகர்,   புலஸ்தியர் போன்ற சித்தர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டமாசித்திகள் கிடைத்த இடம் இந்த சீர்காழி ஆகும்.


திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களிலும்,திங்கட்கிழமைகளிலும் இங்கு வந்து வழிபாடு செய்தால் நமது உள்முக வாழ்க்கை ஆரம்பமாகும்.


சித்தராக விரும்புவோர் 11 திங்கட்கிழமைகளுக்கு பலாப்பழத்தால் அபிஷேகம் செய்துவந்தால்,தகுந்த குருவை அடையமுடியும்.இந்த 11 திங்கட்கிழமைகளுமே உரியவர்கள் விரதமிருந்து இந்த கோவிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரை “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்.எந்த திங்கட்கிழமையன்று இங்கே வருகிறோமோ அன்றும் அதற்கு முந்தைய நாளும்,மறு நாளும் தாம்பத்திய நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும்.


இந்த 11 திங்கட்கிழமைகளிலும் கோவில் திறந்திருக்கும் நேரத்தில் மேற்கூறிய மந்திர ஜபத்தை கோவிலுக்குள்ளே இருக்கும் ஸ்ரீகாலபைரவ சன்னதியில் மஞ்சள் பட்டுத்துண்டின் மீது அமர்ந்து கண்களை மூடி ஜபிக்க வேண்டும்.
கோவில் நேரம் தவிர மீதி நேரங்களில் நாம் தங்கியிருக்கும் அறையில் (முதல் நாளே வந்து அந்த அறையை கோமயத்தினால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்;சந்தனப்பத்தி பொருத்தியிருக்க வேண்டும்;சந்தன பத்தி வாசனை திங்கட்கிழமை முழுவதும் அறையில் பரவிக்கொண்டே இருக்க வேண்டும்)இதே மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்.
திங்கட்கிழமையன்று குறைந்தது  5 மணி நேரம் அதிகபட்சம் 12 மணி நேரம் இவ்வாறு ஸ்ரீகாலபைரவ மந்திரத்தை ஜபித்துவருவது அவசியம்.விரத நாளில் அடிக்கடி இளநீர் அல்லது பசும்பால் அல்லது தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்று மட்டும் அருந்திக்கொள்ளலாம்.


இந்த முதல்கட்டமான 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவாறு வழிபாடு முடித்த சில வாரங்களில் உங்களை தகுந்த குரு தேடி வந்து அடுத்த கட்ட வழிபாட்டுக்கு  தயார் செய்வார்;அது வரையிலும் வேறு எந்த தியானப்பயிற்சிக்கும்,ஆன்மீகப்பயிற்சிக்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.நீங்கள் உலகில் எந்த மூலையிலிருந்து வந்து இந்த வழிபாட்டைச் செய்தாலும்,அந்த மூலைக்கு ஸ்ரீகாலபைரவரின் அருளாசி பெற்ற குரு உங்களைத் தேடி வருவார்.மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் சீர்காழிக்குச் செல்வோமா?

ஓம் ரீங் ஸ்ரீ வாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இப்பிறவியிலேயே முக்தி கிட்டிட நாம் என்ன செய்ய வேண்டும்?





ஒரு துறவி குளக்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்;அப்போது மீன்கள் நீரின் மேல் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்;திடீரென அந்த இடத்திற்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மீனைக் கவ்விக் கொண்டு செல்வதை பார்த்தார்;அப்போது அவருக்கு ஞானம் பிறந்தது.
அந்த மீனைப் போல பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக இருந்தால் மீனுக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் ஏற்படும்என்பதை உணர்ந்தார்.எனவே, ஆழமான பக்திக்குச் சென்று பைரவப் பெருமானைச் சரணாகதி அடைந்தால் இப்பிறவியிலேயே முக்தி பெற முடியும் என்று நம்பினார்.அந்த நம்பிக்கையை ஒவ்வொரு நிமிடம் தோறும் வளர்த்து எடுத்து,ஒரே பிறவியில் பைரவ தரிசனமும் பெற்றார்;


ஆழமான பக்தியைப் பெற வயிறு நிறையச் சாப்பிடுதல்,தேவையில்லாத பேச்சு பேசுதல்,அடுத்தவரைப்பற்றி புறங்கூறுதல்,வம்பு பேசுதல்,தேவைக்கும் அதிகமாக பணம் சேர்த்தல்,அதை மேலும் மேலும் பெருக்குவதற்காக மட்டுமே சிந்தித்தல்;ஒழுக்கக் கட்டுப்பாடுவிதிகளை அதன் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் போன்ற விஷயங்களைத் தவிர்த்தாலே படிப்படியாக ஆழ்ந்த பக்தி மனதினுள் உருவாகிவிடும்.


வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு; நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீகச் செயல்களும் மரண நேரத்தில் சோதிக்கப்படும்;மரண நேரத்தில் இறைவனை நினைவு கூர்ந்தால் வெற்றி நம் பக்கம்;
எனவே,நாம் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆன்மீகத் தொண்டில் ஆழமாகச் செல்ல பைரவப் பெருமானைத் தஞ்சமடைவோம்.

ஓம் ரீங் ஸ்ரீவாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மஹாவராகியின் ஆட்சி பீடங்கள்



உலகம் தோன்றியது முதல் நல்ல சூட்சும சக்திகளும்,தீய சூட்சும சக்திகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன;நல்ல சூட்சும சக்திகள் மெதுவாகவும் அதே சமயம் வலுவாகவும் செயல்பட்டுவருகின்றன;தீய சூட்சும சக்திகள் படுவேகமாகவும்,அதேசமயம் விரைவான சுய அழிவில் அழிந்தும் போகின்றன;

கலியுகாதி 5117 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகின்றோம்;மிக மிக மிக பழமையான ஒலைச்சுவடி ஒன்று ஈசன் வரம் தரும் விதத்தை தெரிவிக்கின்றது;

தொடர்ந்து ஈசனை துதித்துக் கொண்டும்,அன்னதானம் செய்து கொண்டும் இருந்தால் ஈசன் வரம் தருவார்;அப்படித் தரும் போது அது மிகவும் வேகமாக நம்மை வந்து சேரும்;நமது சூட்சும உடலில் அது 100% ஆக பதிவாகாமல் போய்விடும்;85% அல்லது 99% ஆகத் தான் பதிவாகும்;இதை அருகில் இருந்து கவனிக்கும் அகிலாண்ட நாயகியும்,நமது பிரபஞ்ச அன்னையுமாகிய பார்வதி தேவி இதை நினைத்து வருத்தப்படுவாள்;இந்த குறைவான வரத்தை வைத்துக் கொண்டு இவன் அல்லது இவள் எப்படி சாதிப்பாள்? என்ற மனவருத்தம் அவளுக்கு உண்டாகும்;எனவே,தமது பங்காக மீதி 15% அல்லது 1% வரமாக கொடுத்து ஈசனின் வரத்தை முழுமைப் படுத்துவாள்;


இதே நிலைதான்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் துதிப்பவர்களுக்கும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தரும் வரத்தை முழுமைப்படுத்துபவள் அவரது தொடையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் சொர்ணதாதேவி என்ற அஜாமிளை!


இதே போல உன்மத்த பைரவரின் துணை சக்தியான உன்மத்த வராகியும் வரத்தை முழுமைப் படுத்துவதும் வழக்கம்;
இந்த தெய்வீக சூட்சுமத்தை உணர்ந்த சோழர்கள் வெளியுலகிற்குத் தெரியும் படியாக பைரவப் பெருமானையும்,சிவபெருமானையும் வழிபட்டுவந்தார்கள்;ஆனால்,பரம ரகசியமாக பிரபஞ்ச அன்னை மஹாவராகியை வழிபட்டுவந்தார்கள்;அன்னை மஹாவராகியை வழிபட்டு வந்தமையால் தான் தமிழ்நாட்டில் இதுவரை 24,000 விதமான நெல் ரகங்களை நமது முன்னோர்கள் விளைவித்துள்ளார்கள்;இதில் தற்போது சுமார் 3000 நெல் ரகங்களை மீண்டும் கண்டுபிடித்து தமிழ்நாடு முழுக்கவும் பரப்பி வருகின்றார்கள் இயற்கை வேளாண்மை விஞ்ஞானிகள்!


ரகசிய வழிபாடாக அன்னை மஹாவராகி வழிபாட்டினை சோழர்கள் பின்பற்றியதால்,இது தொடர்பாக ஆதாரங்களும்,ஒலைச்சுவடிகளும் மிக அரிதாகவே இருக்கின்றன;அவைகளும் இன்று வரை ஒருசில குடும்பத்தார்களால் பாதுகாக்கப்பட்டுவருகின்றன;அவர்கள் பரம்பரையில் பிறந்தவர்களைத் தவிரவேறு எவருக்கும் அதில் இருக்கும் வராகி ரகசியங்கள் வெளிப்படுவதில்லை;

உலகம் முழுவதும் சித்தர்கள் பிறந்துள்ளார்கள்;அவர்கள் இறுதியாக ஆன்மீகத்தில் உயர்ந்த தெய்வீக நிலையை அடைவதற்காக தேடிவந்து ஜீவசமாதி ஆனது நமது தமிழ்நாட்டில் மட்டும் தான்! அதே போல,சிவபக்தியை பரப்பிட சித்தர் பெருமக்கள் இருப்பது போல பைரவப் பெருமானது பக்தியை பரப்பிடவும் பைரவ சித்தர்கள் இருக்கின்றார்கள்;அன்னை மஹாவராகியின் பக்தியைப் பரப்பிட வராகி சித்தர்களும் இருக்கின்றார்கள்;


உத்திரகோசமங்கை என்ற சிற்றூர் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்றது;இங்கே இருக்கும் சிவாலயத்திற்கு சிறிது தொலைவில் சுயம்பு வராகி அருள்பாலித்துவருகின்றாள்;இந்த அன்னையை தொடர்ந்து உபாசனை செய்து தான் சிங்கம்புணரியில் முத்துவடுகநாதர் என்ற வாத்தியார் ஐயா ஜீவசமாதி ஆனார்;


உத்திரகோசமங்கையில் இருக்கும் சுயம்பு வராகி தோன்றி குறைந்த பட்சம் 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;கி மு 2000 வாக்கில் அதாவது இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே சுயம்பு வராகி பலருக்கு காட்சியளித்து தினமும் பேசியிருக்கின்றாள்;தற்போது 60 தமிழ்ஆண்டுகளில் முக்கிய இரண்டு தெய்வீக மனிதர்கள் மட்டும் தமிழ்நாட்டில் பிறக்கின்றார்கள்;அவர்களுக்கு மட்டுமே அன்னை மஹாவராகியிடம் பேசும் பாக்கியம் கிட்டுகின்றது;இவர்கள் ஒரு போதும் வெகு ஜனமீடியாக்களில் தோன்றுவதில்லை;


காசியை இந்துக்கள் தெய்வீகத் திருத்தலமாக போற்றுகின்றார்கள்;அதே சமயம்,இங்கே கங்கைக்கரையில் 64 படித்துறைகள் இருக்கின்றன;ஒவ்வொரு படித்துறைப் பகுதியிலும் 64 வித பைரவப் பெருமான்கள் ஆட்சிபுரிந்து வருகின்றார்கள்;இதுதான் நம்மில் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு தேடி வரும் பைரவ ரகசியம்;ஒவ்வொரு பைரவப் பெருமான் களின் ஆலயத்தை ஒட்டியும் 64 வித வராகி சக்திகளும் ஆட்சி புரிகின்றன என்பது நம்மில் பலர் அறியாத வராகி ரகசியம்;64 வராகிகளையும் தரிசித்தாலே அன்னை மஹாவராகியின் அருளுக்குப் பாத்திரமாகிவிடுவோம்;சில வராகி பீடங்கள் இங்கே வேற்றுமதத்தவர்களின் இருப்பிடத்தில் இருக்கின்றன;


காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சியும்,மதுரையில் அரசாளும் மீனாட்சியும்,திருவானைக்காவில் அருளாட்சிபுரிந்து கொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரியும் அன்னை மஹாவராகியின் வேறு வடிவங்கள் என்பது மானசீக உண்மைகள் ஆகும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா

அஷ்ட வீரட்டத் துதி!!!





ஸ்ரீகால பைரவர் சிவலிங்க வடிவில் இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி புரிந்து வரும் இடங்கள் அட்டவீரட்டத்தலங்கள் எனப்படும்.இவைகளை நாம் தரிசிக்க விரும்பினாலும்,நமது பூர்வகர்மாக்கள் சிலருக்குத் தடுக்கும்;அந்த பூர்வக் கர்மாக்கள் விலகி,அட்டவீரட்டத்தலங்களை தங்கு தடையின்றி தரிசிக்க இந்த துதியை தினமும் ஒன்பதுமுறை வாசித்து வரவும்;அவ்வாறு வாசித்து வந்தால்,நிச்சயமாக நீங்கள் அட்டவீரட்டானங்களுக்குப் பயணிக்க முடியும்.


இந்த அட்டவீரட்டானங்களையும் தரிசிக்க நான்கு நாட்களாகும்;இந்த அட்டவீரட்டானங்களையும் ஒரே ஒருமுறை தரிசித்தப் பின்னர்,நீங்கள் இதுவரை எத்தனை முறை மனிதப் பிறப்பெடுத்தீர்கள்? என்கிற படைப்பின் ரகசியத்தை உணருவீர்கள்;எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன புண்ணியச் செயல்கள் செய்தீர்கள்? என்னென்ன பாவவினைகளைச் செய்தீர்கள்? என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
தங்களது முந்தைய அனைத்து முற்பிறப்புகளையும் நீங்கள் அறிந்தால்,அதன் பிறகு உங்களுக்கு என்ன தோன்றும்?


திருக்கோயிலூர்,திருக்கடையூர்,திருவதிகை,திருக்கண்டியூர் இவைகள் மட்டுமே அதிக பக்தர்கள் வரும் பிரதான இடத்தில் அமைந்திருக்கிறது.பிற வீரட்டானங்கள் பிரதான சாலையில் இருந்து விலகியே இருக்கின்றன. 

   அட்டவீரட்டத் துதி:


சீரெட்டுத் திசையிலும் சிறப்புற சிவன் திருப்
பேரொலிக்கும் திருத்தலம் பலப்பல பாரில்
வீரட்டத் தலங்கள் எனப்பேர் விளங்க
ஓரெட்டுச் சிவத்தலம் ஓங்கும் புகழில்
மறப்பினை நீக்கி நினைந்திடும் அடியார்
பிறப்பினை நீக்கும் பிறப்பிலி பொலியும்
குறுக்கை கடவூர் கண்டியூர் கோவலூர்
பறியலூர் வழுவூர் விற்குடி அதிகை
வந்துவில் வளைத்து மலர்க்கணை விடுத்த
இந்திரன் ஏவிய திருமால் மைந்தன்
கந்தன் பிறந்த கண்ணின் பொறியால்
வெந்துச் சாம்பலாய் விழுந்தது குறுக்கையில்
ஆக்கமும் அழிவும் இல்லா இறைவனை
வாக்குமன உடலால் வழிபடும் பாலனைப்
போக்கிடும் காலனை நீக்கிடத் தில்லையில்
தூக்கிய திருவடி தழைந்தது கடவூரில்
அரிஅயன் ருத்திரன் மூவரும் வழிபடும்
பெரியனை மறந்து பரமன் யான் எனும்
சிரமைந்து நான்காய் நிலைக்க பைரவர்
விரல்நகம் கிள்ளிக் களையும் கண்டியூரில்
ஐந்தொழில் இறைவிழி அம்மை மறைக்க
வையகம் இருளும் ஒளிதரும் நுதற்கண்
மையிருள் வந்த அசுரன் வதங்க
வைத்துச் சூலத்தில் கோர்த்தது கோவலூரில்
சிவம்அது நீங்கின் அனைத்தும் சவம் எனும்
உண்மையை உணராத் தக்கன் வேள்வி
அவியத் தேவர் திசைதிசை ஓடித்
தவித்திடப் பாவம் தீர்ந்தது பறியலூரில்
ஆண்பெண் அலியெனும் தூணின் அடிமுடி
காணார் மால் அயன் கடுவல் அசுர
யானை உரித்துக் கருந்தோல் செந்நிற
மேனியில் முன்னவன் போர்க்கும் வழுவூரில்
அருவமும் உருவமும் ஆகும் பரமன்
பெருவிரல் கீறிய சிறுநில வட்டம்
இருகரம் சேர்த்து எடுத்த சலந்தரன்
பெரு உடல் ஆழியாய்ப் பிளக்கும் விற்குடியில்
உறவும் பகையும் இல்லா ஒருவன்
பறக்கும் கோட்டை மூன்றும் அழியக்
குறுநகை செய்து அசுரரைக் காத்து
பெரும்பணி புரியப் பணித்திடும் அதிகையில்
மண்ணில் கடவுளைக் கண்டசீர் அடியார்
பண்ணில் போற்றிப் பாடிய பெருமை
விண்ணவர் வியந்து வழிபடும் பழைமை
எண்பெரும் தலங்கள் இவற்றின் பெருமை



இயற்றியவர்:முனைவர் சிவப்பிரியா

ஓம் ரீங் ஸ்ரீவாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் மஹாகால பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ




படத்தில் இருப்பது கும்பகோணம் மகாமகக்குளத்தின் அருகே ஒரு கோவிலுக்குள்ளே எடுக்கப்பட்ட பாணலிங்கம்.இராமாயண காலத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வழிபட்ட பாண லிங்கம் இது.ஆக,இந்த பாணலிங்கம் 17,50,000 ஆண்டுகளாக இருக்கிறது.முதல் யுகமான கிருதயுகத்தின் முடிவில் ராமாயணச் சம்பவம் நிகழ்ந்தது;நாம் வாழ்வது நான்காவது யுகமான கலியுகத்தில் 5117 ஆம் ஆண்டு!!!

பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரகர்!!!


கால தேவன் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீமஹா காலபைரவப் பெருமான்!

இவரை பல கோடி ஆண்டுகளாக தியானித்து பைரவ சித்தராக ஆனவர்தான் ஸ்ரீ வாரதாரகர் என்ற சித்தர் ஆவார்;

இவரது ஜீவசமாதி பூமியில் இருப்பதாகத் தெரியவில்லை;இவரது உருவம் தமிழ்நாட்டில் ஒரு சில ஆலயங்களில் இருக்கலாம் என்று தெரிகின்றது;
மனிதனுடைய ஜீவித வாழ்க்கையை இயக்குவது
9 கிரகங்கள்

27 நட்சத்திரங்கள்

12 ராசிகள்

7 ஓரைகள் என்று வகுத்து நமக்கு அளித்தவர் ஸ்ரீவாரதாரகர் சித்தர் பெருமான் தான்;இப்படி வகுத்து அளித்து பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;

ஸ்ரீவாரதாரகர் சித்தரை உபாசனை செய்துதான் ஆர்ய பட்டரும்,வராஹ மிகிரரும் பல அரிய ஜோதிட மற்றும் வானியல் நூல்களை இயற்றினார்கள்;

ஒவ்வொரு ஜோதிடரும்,ஒவ்வொரு பைரவ உபாசகரும்,ஒவ்வொரு சிவபக்தரும் தினமும் ஒருமுறை நினைக்க வேண்டிய சித்தர் ஸ்ரீவாரதாரகர் சித்தர் பெயரை!!!

ஓம் ரீங் ஸ்ரீவாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர்!!!



கரூர் மாவட்டத்தில் இருக்கும் முசிறியில் இருந்து 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் ஊர் தாத்தையங்கார்பேட்டை ஆகும்.இங்கு அமைந்திருக்கும் காசி விசுவநாதர் ஆலயத்தில் பஞ்சமுக பைரவரே ரேவதி நட்சத்திரத்தின் பிராண தேவதை ஆகும்.இஅவரை இங்கே பராக்கியம் பஞ்சவக்த பைரவர் என்று அழைக்கிறார்கள்.
64 பைரவ தோற்றங்களில் 52 வது பைரவத் தோற்றமே பஞ்சமுக பைரவப் பெருமான் ஆவார்.

இத்திருமேனியானது யாளி வாகனத்துடன்,ஐந்து முகங்களும் பத்து கரங்களும்,ஜ்வால கேசமும்,கோரைப்பற்களும் கொண்டு நின்ற நிலையில் அருள் பாலித்து வருகிறார்.
இவரது வலது கரங்களில் சூலம்,மழு,கத்தி,கதை,சக்கரமும் அமைந்திருக்கிறது;
இவரது இடது கரங்களில் டமருகம்,சங்கு,பாசம்,கேடயம் அமைந்திருக்கிறது.

இவரது திருமேனியில் கபாலமாலை விளங்க,இடையில் பாம்பு அரைஞாணாக சுற்றி இருக்கிறது.இந்த கலையம்சம் மிக்க பைரவ வடிவம் மிகவும் அரிதான பைரவ வடிவம் ஆகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது பிறந்த நட்சத்திர நாட்களில் இங்கே வந்து வழிபட பிறவிகள் பலவற்றில் சேகரித்த கர்மாக்கள் காணாமல் போய்விடும்.

ஓம் ரீங் ஸ்ரீவாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்!!!(உத்ரட்டாதி நட்சத்திரத்தின் வழிபட வேண்டிய பைரவப்பெருமான்)





கும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.

வெகுகாலத்திற்கு முன்பு வாயுதேவனுக்கும்,ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர்? என்ற பலப்பரீட்சை ஏற்பட்டது.அப்போது ஆதிசேஷன் மேருமலையை தன் உடம்பால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வாயுதேவன் தனது முழுபலத்தையும் காட்டி மேருமலை மீது பலத்த காற்றுவீசி அதை அசைக்க முயன்றான்;அப்போது மேரு மலையின் ஒன்பது பகுதிகள் பெயர்ந்து ஒன்பது கண்டங்களாக விழுந்தன;அவற்றில் ஒரு சிகரமே கந்தமாதனம் ஆகும்.கந்தமாதனத்தில் இருந்து ஏழு சிறிய சிகரங்கள் தனித்தனியாக பெயர்ந்து நமது பாரத தேசத்தில் ஏழு இடங்களில் விழுந்தன;அவற்றில் ஒன்று இந்த சேங்கனூரில் விழுந்தது;அந்த சிகரத்தின் பெயர் சத்தியம் ஆகும்.அதனால்,இந்த தலத்திற்கு சத்தியகிரி என்ற பெயர் உருவானது.குமாரபுரம்,சண்டேசுவரபுரம்,அகமாதகவனம் என்ற வேறு பெயர்களும் சேங்கனூருக்கு உண்டு;இந்தத் தலத்தில் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளூம் விலங்குகள் வடிவிலும்,பறவைகள் வடிவிலும் மரங்கள் வடிவிலும் உருவகமாக பல கோடி ஆண்டுகள் நின்று வழிபாடு செய்து வருகிறார்கள்.

சிபிமகாராசன் என்ற மன்னன் காம்பீலி நகரத்தை ஆண்டு வந்தான்;அவனது ஜாதகப்படி ஏற்பட்ட தோஷத்தை நீக்கிட,அவன் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான்;திரிவேணி சங்கமம்(இன்றைய பிரயாகை=அல் லஹா பாத்)நர்மதை,கோதாவரி முதலிய தீர்த்தங்களில் நீராடினான்.நீராடிவிட்டுத் திரும்பி வரும் போது சேங்கனூரைக்கடக்கும் போது பக்தி உணர்ச்சிப் பெருகியது.எனவே,இங்கே இருக்கும் ஸ்ரீசத்தியகிரீஸ்வரை வழிபட்டு இங்கேயே சிலகாலம் தங்கினான்.
பிராமணர்களுக்கு பூதானம் செய்ய நினைத்து 360 வீடுகள் கட்டினான்;360 பிராமணர்களை பாரத தேசம் முழுவதும் இருந்து வரவழைத்து அவர்களை இங்கே குடியேற்றினான்.அப்போது அவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எச்சதத்தனின் மனைவியான பவித்திரை ஒரு ஆண்குழந்தையை பெற்றாள்.அதனால்,எச்சதத்தனும் பவித்திரையும் ஊரின் எல்லையில் தங்கும் சூழல் உருவானது.எல்லா குடும்பத்தாரும் சிபிமகாராசனை அடைந்தார்கள்.சிபிமகாராசன் ஒவ்வொரு பிராமணக்குடும்பத்திற்கும் ஒரு வீடும்,ஒரு காராம்பசுவும்,சிறிதளவு நிலமும் தானமாக வழங்கினான்.359 பேர்களுக்கு தானம் வழங்கிட மீதி ஒரு வீடு தானம் செய்ய முடியாத நிலை இருந்தது.எனவே,அரசன் மிகவும் வருத்தமடைந்தான்;ஏனெனில்,குறிப்பிட்ட திதியும்,நட்சத்திரமும் நிறைவடையும் முன்பே 360 பிராமணர்களுக்குத் தானம் வழங்கினால் தான் தானத்தின் பலன் முழுமையாக மன்னனை வந்து சேரும்;இல்லாவிடில் 12 ஆண்டுகள் இதே போல் தானம் செய்யக் காத்திருக்க வேண்டும்;எனவே,அரசனின் வருத்தத்தைப் போக்கிட சிவலோக நாயகியும்,வயோதிக பிராமணருமாக வந்த அந்த 360 வது வீட்டையும்,காராம்பசுவையும்,நிலத்தையும் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.

மறுநாள் சிபிமகாராசன் ஒவ்வொரு வீடாகச் சென்று பிராமணர்களைக் கண்டு யோக க்ஷேமம் விசாரித்தான்;கடைசியாக வயோதிகப் பிராமணரின் வீட்டிற்கு வந்தான்;வீட்டுக் கதவு உள்புறம் பூட்டியிருந்தது.பலமுறை கதவைத் தட்டியும் குரல் கேட்காததால்,கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தான்;உள்ளே யாரும் இல்லை;ஆக,நேற்று வீட்டை தானமாகப் பெற்றது சிவலோக நாயகியும்,சுவாமியுமே என்பதை உணர்ந்து,ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்;சேங்கனூரில் அமைந்திருந்த இறைவனையும்,இறைவியையும் வழிபட்டு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துவிட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான்.

இவ்வூரின் எல்லையில் தங்கிய எச்சதத்தன்,தனது மனைவி,குழந்தைகளுடன் வந்து ஊருக்குள் வந்தான்;வீடுகள் எல்லாம் தானம் செய்து விட்டதால்,சிபிமகாராசனை கண்டு தனது நிலையை முறையிட்டான்.சிபிமகாராசன்,சேங்கனூருக்கு வந்து அங்கே இருக்கும் 359 பிராமணர்களின் பசுக்களை மேயும் பொறுப்பை எச்சதத்தனிடம் ஒப்படைக்கும் படி ஆணையிட்டான்.அதற்கு எச்சதத்தன் ஒப்புக்கொண்டால்,அந்த சேங்கனூரில் வசித்துக் கொள்ளலாம் என்று பிராமணர்களும்,மன்னனும் ஒப்புக்கொண்டனர்;


எச்சதத்தன் தனது மகனை பொறுப்பாகவும்,அன்பாகவும் வளர்த்து வரும் வேளையில்,ஏழு வயது நிரம்பியதும் உபநயனம் செய்தான்;விசாரசருமர் என்று பெயரிட்டு,பசுவை மேய்க்கும் பொறுப்பையும் ஒப்படைத்தான்;தினமும் மண்ணியாற்றங்கரையில் பசுக்களை மேய்த்து வரும் போது,அவைகளின் மீது அளவற்ற பாசம் கொண்டான்.விசாரசருமரை பசுக்கள் தமது கன்றாகவே கருதி பாசம் கொண்டன.அதனால்,அவனைக் கண்டதுமே பாலைப் பொழிந்தன.பால் வீணாவதை நினைத்து,அவைகளைக் கொண்டு சிவ அபிஷேகம் செய்ய விரும்பினான்.எனவே,மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில் மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினான்.பூசைக்காக பூக்களையும்,தளிர்களையும் பறித்து வந்து,தினமும் ஆகமவிதிப்படி சிவபூஜை செய்துவந்தான்;இதை அந்த பாதை வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் ஊருக்குள் இருந்த பிராமணர்களிடம் தெரிவித்துவிட,அவர்கள் சிவாசரசருமரின் அப்பா எச்சதத்தனிடம் முறையிட்டனர்.எச்சதத்தனும் தனது மகனைக் கண்டித்தான்;

மறுநாள் விசாரசருமர் பசுக்களை மேய்ப்பதற்கு ஓட்டிக்கொண்டு போக,எச்சதத்தன் தனது மகன் அறியாதவாறு அவனைப் பின் தொடர்ந்தான்;விசாரசருமரும் வழக்கம் போல அத்திமரநிழலில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி,ஆகமவிதிப்படி பூஜை செய்ய,அதை மறைந்திருந்து கவனித்த எச்சதத்தன்,தனது மகன் விசாரசருமரை கோலால் அடித்தான்;சிவசிந்தனையிலேயே இருந்தமையால் தந்தை அடித்ததும்,திட்டியதும் உணரவில்லை;

தான் அடித்தும்,திட்டியும் கூட தனது மகன் கண்டுகொள்ளாமல் இருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட எச்சதத்தன்,பால் குடங்களை தனது காலால் இடறிவிட,பால் அனைத்து சிந்தியது;பால் சிந்தியதைக்கண்ட விசாரசருமருக்கு சுயநினைவு வர,பாலைச் சிந்தியது தனது அப்பா என்று அறிந்தும்கூட,அவனுக்கு கோபம் பொங்கியது;தாம் செய்து வரும் சிவபூஜைக்கு இடையூறு வந்துவிட்டதே என்று ஆவேசப்பட்டு,அருகில் இருந்த கோலை எடுத்தான்;அது உடனே மழுவாக உருமாறியது;அந்த மழுவினால் தனது தந்தை எச்சதத்தனின் கால்களை வெட்டினான்;தந்தை கால்களின்றி கீழே விழ,தனது பூஜையைத் தொடர்ந்தான் விசாரசருமர்.
அந்த கணத்தில் சதாசிவனும்,பாலாம்பிகையும் அந்த மணல் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டனர்;விசாரசருமருகுக்கு காட்சியளித்தனர்;

எனக்காக பெற்றத் தந்தையின் கால்களையே வெட்டியெறிந்தாய்;இனி உனக்கு எல்லாமே யாம் தான் என்று விசாரசருமரைப்பாரட்டி, அவனை உச்சிமோந்தார்;தனது கழுத்தில் கிடந்த கொன்றை மாலையை விசாரசருமர் கழுத்தில் அணிவித்தார்;

மேலும், “இனி யாம் உண்டகலமும்,உடுக்கும் ஆடையும்,சூடும் அனைத்தும் உனக்கே சொந்தம்”என்று சண்டீச பதம் கொடுத்தார்;
“சிவாலயம் வந்து எம்மை வழிபடும் ஒவ்வொருவரும்,இறுதியாக உன்னை வழிபட்டால் தான் சிவாலயத்திற்கு வந்து வழிபட்டதற்கான புண்ணியம் அவர்களுக்குக் கிட்டும்” என்று வரம் கொடுத்தார்.
சண்டீசரும் இறைவனைத் தொழுது பிறவாநிலையை அடைந்தார்;திருக்கையிலாயம் சென்றடைந்தார்.
இருப்பிடம்:தஞ்சாவூர்  மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவில், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் தெற்கே ஒரு கி.மீ.தொலைவில் ஸ்ரீசத்தியகிரீஸ்வரர் ஆலயம் சேங்கனூர் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து ஒன்பது ஜன்ம நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபாடு செய்து வர அனனத்து கர்மாக்களிலிருந்தும் மீண்டு வளமோடும் நலமோடும் இப்பிறவியிலேயே வாழலாம்.

ஓம் ரீங் ஸ்ரீவாரதாரகர் சித்தர் குரு நம ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ