விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பது
மூவரைவென்றான் கிராமம்! இங்கே மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஆலயமே அருள்மிகு மரகதவல்லியம்மை
சமேத மரிக்கொழுந்தீஸ்வரர்!
பாண்டிய மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்தது;தொடர்ந்து
இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சிவராத்திரி பூஜை,பிரதோஷ பூஜை,அமாவாசை பூஜை செய்தமையால்
பாண்டியமன்னனுக்கு அம்பிகையின் அம்சமான மீனாட்சியம்மனே மகளாகப் பிறந்திருக்கிறாள்;
வத்ராயிருப்பு,அழகாபுரி,குன்னூர்,கிருஷ்ணன்கோவில் கிராமங்கள் வழியாக
இந்த ஆலயத்தை வந்தடையலாம்;ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இங்கே கிரிவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது;
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு மடவார்வளாகம் திருக்கோவிலுக்கு உட்பட்ட
துணைக் கோவில்களில் ஒன்றாக இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது;
அன்னை அரசாலை(வராகி)யின் ஒரு அவதாரமே மதுரை மீனாட்சி என்பது நம்மில்
பலரால் மறந்துவிட்ட உண்மையாகும்;எனவே,அன்னை அரசாலை(வராகி)யின் அருளைப் பெற விரும்புவோர்
அவரவர் ஜன்ம நட்சத்திர தினத்தன்று இங்கே வருகை தந்து ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல்
ஓம் வராகி சிவசக்தி ஒம் என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்;
பால்,வில்வம்,தேன்,விபூதி,இளநீர்,குங்குமம் இவைகளை இந்த ஆலயத்திற்கு
அபிஷேக அன்பளிப்பாகத் தருவதன் மூலமாக புத்திர தோஷத்தை சரி செய்ய முடியும்;
குழந்தை இல்லாதவர்கள் தொடர்ந்து 16 திங்கட்கிழமை அல்லது 16 பிரதோஷம்
அல்லது 16 அமாவாசை அல்லது 16 சிவராத்திரி அல்லது 16 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு இங்கே
வருகை தந்து ஒரு முகூர்த்த நேரம் தங்குவதன் மூலமாக(தங்கி ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற
மந்திரம் ஜபிக்க வேண்டும்;)மழலைச் செல்வம் பெறுவார்கள்;
தொடர்ந்து 16 முறை என்பது இன்றைய சிக்கலான கால கட்டத்தில் வருவது சிரமம்
தான்;விட்டு விட்டாவது 16 முறை வந்துவிடவேண்டும்;
விரைவானப் பலன் பெற விரும்புவோர் 16 நாட்கள் தினமும் வந்தும் வழிபடலாம்;வசதியுள்ளவர்கள்
அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கித் தரலாம்;வசதியற்றவர்கள் இந்த ஆலயத்தை தினமும்
சுத்தப்படுத்துவது போதுமானது;
ஓம் வராகி சிவசக்தி ஓம் என்பது 121 ஆண்டுகளாக மறக்கப்பட்ட சிவமந்திரங்களில்
ஒன்று;
ஒருவேளை இதை ஜபிக்க விருப்பமில்லாதவர்கள் பின்வரும் சிவமந்திரங்களில்
ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;
ஓம் ரீங் மரிக்கொழுந்தீஸா;மரிக்கொழுந்தீஸா
அல்லது
ஓம் ரீங் சிவ சிவ
அல்லது
ஓம் ரீங் சதாசிவ சதாசிவ
அல்லது
ஓம் அருணாச்சலாய நமஹ
அல்லது
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
அல்லது
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீரீம் நமசிவாய பிரம்மனே நமஹ
சிறுகுறிப்பு:ஒரு சிவனை வழிபட ஏன் இத்தனை சிவமந்திரங்கள் கொடுத்துள்ளோம்?
மனிதர்கள் ஒவ்வொருவருவரும் ஏதாவது ஒரு பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில்
பிறந்துள்ளனர்;அவர்களை அந்த பஞ்சபூத தத்துவமே இயக்குகிறது;அவர்களுக்கு ஏதுவான மந்திரங்களையே
இங்கே கொடுத்திருக்கிறோம்;இதில் உங்களுக்கு பிடித்தமான சிவமந்திரம் ஏதாவது ஒன்றுதான்
இருக்கும்;அதை மட்டும் ஜபித்தால் போதும்;
சிலர் மண் தத்துவத்தில் பிறந்து அதன் படி வாழ்ந்துவருகின்றனர்;
சிலர் நெருப்பு தத்துவத்தில் பிறந்துள்ளனர்;
சிலர் நீர் தத்துவத்தில் வாழ்ந்து வருகின்றனர்;
சிலரது வாழ்க்கையை இயக்குவது காற்று தத்துவமே!
சிலரை இயக்குவது ஆகாய தத்துவமே!(ஆகாய தத்துவத்தில் 10 கோடி பேர்களில்
ஒருவரே பிறக்கின்றனர்;)
No comments:
Post a Comment