கடந்த மூன்று பிறவிகளில் நாம் மனிதப் பிறவி எடுத்திருக்க வேண்டும்;அப்படி
மனிதப்பிறவி எடுத்து,ஒவ்வொரு பிறவியிலும்,பிறவி முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்திருக்க
வேண்டும்;அல்லது சித்தர் ஒருவரிடம் சீடராக இருந்திருக்க வேண்டும்;அப்படி இருந்தால்
மட்டுமே இப்பிறவியில் பைரவப்பெருமானை தொடர்ந்து வழிபட முடியும்;=இது காகபுஜண்டர் அவர்களின்
வாக்கு!
கடந்த ஒன்பது பிறவிகளில்,ஒவ்வொரு பிறவியிலும் நாம் மனிதப் பிறவி எடுத்திருக்க
வேண்டும்;அந்த ஒன்பது பிறவியிலும் சித்தரின் தீட்சையைப் பெற்றிருக்க வேண்டும்;அம்பாளை
தனது அன்னையாக மனதில் நினைத்து அவளை ஒரு நாள் விடாமல் தியானித்திருக்க வேண்டும்;அப்படிப்பட்டவர்கள்
மட்டுமே இப்பிறவியில் அன்னை அரசாலை(வராகி)யை தொடர்ந்து வழிபடமுடியும்;
இவளை வழிபட பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்;இல்லாவிடில்,சில வாரங்களோடு
இந்த வழிபாட்டைத் தொடர முடியாது;
முந்தைய ஐந்து பிறவிகளில் ஒரு பிறவியிலாவது
“அம்மா! இனி எந்த ஒரு மனித பிறவி எடுத்தாலும்,நீயே என்னைப் பாதுகாக்க
வேண்டும்;நீயே என்னை வழிநடத்த வேண்டும்; உன் நினைவு எனக்கு வருவதற்கு நீயே காரணமாக
இருக்க வேண்டும்” என்று மனம் உருகி வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் இவளை,இந்த
பிரபஞ்ச அன்னையை தினமும் வழிபட முடியும்;
பகல் பொழுது ஈசனுக்குரியது;இரவுப்பொழுது அன்னைக்குரியது;
16 தேய்பிறை பஞ்சமி திதி இரவுகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் அன்னை அரசாலை(வராகி)யைத்
துதித்து வந்தால்,நமது அனைத்து மனிதப்பிறவி கர்மாக்களையும் நம்மிடம் இருந்து நீக்கிவிடுவாள்;ப்ராப்த
கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற இந்த மூன்று கர்மாக்களையும் ஒரே மூச்சில் நம்மிடம்
இருந்து வீசித்தள்ளிவிடுவாள்;
அரசியலில் இருப்பவர்கள்,அரசுப்பணியில் இருப்பவர்கள்,அரசுப் பணிக்கு முயற்சி
செய்பவர்கள்,அதிகாரம் நிறைந்தவர்களிடம் பணிபுரிபவர்கள் தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி
இரவுகளில் இவளை இவளது பெயர்களைச் சொல்லி ஜபித்தாலே போதுமானது;நமது நியாயமான நோக்கங்களை
உடனே நிறைவேற்றுவாள்;
16 தேய்பிறை பஞ்சமி இரவுகள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தாலே நமது வாழ்வு
நிறைவுமிக்கதாக மாறிவிடும்;கடந்த பல நூற்றாண்டுகளாக பல லட்சக்கணக்கானவர்கள் அன்னையிடம்
இப்படித்தான் வரங்கள் பெற்றார்கள்;அவளின் அருளையும் பெற்றார்கள்:
தை மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி 28.1.16 வியாழக்கிழமை காலை 11.49
மணிக்குத் துவங்கி, 29.1.16 வெள்ளிக்கிழமை மதியம் 1.46க்கு நிறைவடைகிறது;
வியாழக்கிழமையும் தேய்பிறை பஞ்சமீயும் வருவதால்,இன்று இரவு 8 மணி முதல்
9 மணி வரை அன்னை அரசாலை(வராகி)யை ஜபிக்க ஏற்ற நேரம் ஆகும்;
உத்திரபிரதேசத்தில் வசிப்பவர்கள் காசியில் அன்னபூரணி சன்னதியில் இரவு
8 முதல் 9 மணி வரை ஜபிக்கலாம்;அல்லது கங்கைக்கரையோரத்தில் ஜபிக்கலாம்;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும்
நடுவே அமைந்திருக்கும் பள்ளூர் கிராமத்தில் இருக்கும் அன்னை அரசாலை சன்னதியில் வராகி
மாலையை ஜபிக்கலாம்;
இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும்
ஆதிவராகி ஆலயத்தில் இதே நேரத்தில் வராகி மாலையை ஜபிக்கலாம்;
தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பெரிய கோவிலுக்குள் அமைந்திருக்கும்
மஹாவராகி சன்னதியில் வராகி மாலையை ஜபிக்கலாம்;
சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் சன்னதியில் ஈசனின்
சன்னதி முன்பாக 30 நிமிடமும்,அம்பாளின் சன்னதி முன்பாக 30 நிமிடமும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
மகாபலிபுரத்தில் இருந்து 20 கி.மீ.தொலைவில் (சென்னையில் இருந்து 45 கி.மீ
தூரத்தில்)அமைந்திருக்கும் திருவிடந்தைப் பெருமான் ஆலயத்தில் இரவு 8 மணி முதல் 9 மணி
வரை வராகி மாலையை ஜபிக்கலாம்;
திரு அண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரு அண்ணாமலை கோவிலில் அண்ணாமலை
சன்னதியில் 30 நிமிடமும்,உண்ணாமுலை அம்மன் சன்னதியில் 30 நிமிடமும் ஜபிக்கலாம்;
அல்லது
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் சன்னதியில் 30 நிமிடமும்,அம்பாளின்
சன்னதியில் 30 நிமிடமும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
அரித்துவராமங்கலத்தில் பாதாள வரதர் சன்னதியில் 30 நிமிடமும்(இரவு 8 முதல்
8.30 வரை);அலங்காரவல்லி சன்னதியில் 30 நிமிடமும்(இரவு 8.31 முதல் 9 வரை) வராகி மாலையை
ஜபிக்கலாம்;
திருச்சி தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குளித்தலையில் அமைந்திருக்கும்
அருள் மிகு கடம்பவனேஸ்வரர் சன்னதியில் இரவு 8 மணி முதல் 8.30 வரையிலும்,பாலகுஜாம்பாள்
சன்னதியில் இரௌவ் 8.31 முதல் 9 மணி வரையிலும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
அரியலூர் ஆலந்துறையார் ஆலயத்தில் ஒப்பில்லா அம்மன் சன்னதியில் இரவு
8 மணி முதல் 9 மணி வரை வராகி மாலையை ஜபிக்கலாம்;
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரு ஆனைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர்
சன்னதியில் 30 நிமிடமும்,அகிலாண்டேஸ்வரி சன்னதியில் 30 நிமிடமும் வராகி மாலையை இன்று
இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஜபிக்கலாம்;
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாக்குமரி அன்னையின்
சன்னதியில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
திருப்பன்றிக்கோடு மகாதேவன் ஆலயத்தில் ஈசன் சன்னதி முன்பாக இரவு 8 முதல்
8.30 வரையிலும்,அம்பாள் சன்னதி முன்பாக இரவு 8.30 முதல் 9 வரையிலும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
வராகி மாலையைப் பற்றி அறியாதவர்கள்,பின்வரும் அன்னையின் 12 பெயர்களை
ஜபித்தாலும் போதுமானது;
அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச்
சேர்த்தால் 13 பெயர்கள்!!!)
ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
ஒருவேளை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நகரைத்தவிர,பிற ஊர்களில் வசிப்பவர்கள்
அவர்களது ஊர்களில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஜபிக்கலாம்;
அதுவும் செல்ல இயலாதவர்கள் அவரவர் வீட்டுப் பூஜை அறையில் கிழக்கு அல்லது
வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;
தமிழ்நாட்டிற்கு வெளியே பாரததேசம் முழுவதும் மற்றும் தொலைதூர தேசங்களில்
வசிப்பவர்கள் அவரவர் வீடுகளில் அன்னையை வழிபடத் துவங்கலாம்;
இன்று இரவு 8 முதல் 9 மணி வரை
குரு ஒரையாக இருப்பதால்,வராகி மாலையை 5 முறை ஜபிக்கவும்;
ஈசன் சன்னதியின் முன்பாக மூன்று முறையும்,அம்பாள் சன்னதி முன்பாக இரண்டு
முறையும் ஜபிக்கவும்;
வீட்டில் ஜபித்தாலும் வராகி மாலையை ஐந்து முறை ஜபிக்கவும்;
ஓம் வராகி சிவசக்தி ஓம்
No comments:
Post a Comment