Friday, January 22, 2016

சிவ மந்திர ஜபமே அனைத்து கடவுள்களின் அருளாற்றலைத் தரும்!

சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை; என்பது பெரியோர்கள் கூற்று;

நம் ஒவ்வொருவருமே எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ,அப்போதெல்லாம் சிவநாமம் சொல்ல வேண்டும்;

ஒவ்வொரு வீட்டிலும் சிவன் நாமமானது சதாசர்வகாலமும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்;இந்த சிவ ஒலி இல்லாவிட்டால்,எந்த தேவதைகளும் வந்து அனுக்கிரகம் செய்ய மாட்டார்கள்:

தானாய் ஆகும் எந் தனித்திருந்த நாயகன்,எத்தேவரை வணங்குவோராய் இருந்தாலும்,நாரணன்,முருகன்,ஆதிபிரம்மன் என்று பல சக்தியுடன் தான் சேர்த்தே,வித்தகமாய் பேசுகின்ற விதவிதமாய் காளி,எல்லைக்காளிகள் என்றே,உள்ளது உள்ள வண்ணமாய் அடுத்து இருக்கின்ற காலையிலே கிராம தேவதை,வைப்புதேவதை,வைத்திய தேவதை,சின்னக் கருப்பு,மாடக்கருப்பு, காடன் மாடன்,கூடன்,எனகாலன்,சின்ன வாதகன்,மாத வாதகன்,அத்த வாதகன்,சூலி காகனன்,சின்ன கானகன்,வான கானகன் என்று தேவதைகளை அழைத்தாலும் யார் அழைத்தாலும், அன்னவர் இல்லத்தில் “சிவசிவ” என்று கூறினால்,அவர் அனைவரையும் வணங்கிய பலன் வந்து சேருமே!

எனவே,ஒவ்வொருவர் வீட்டிலும் ‘சிவசிவ’ என்று இடைவிடாமல் சொல்லிக் கொண்டு இருங்கள்;சிவநாமத்தை எங்கும் ஒலிக்க வைப்பதுதான் அடியார்களுடைய தலையாய கடமை;

நன்றி:நெஞ்சில் நிறைந்தவன் சிவனே! பக்கம் 23,24


No comments:

Post a Comment