Friday, January 29, 2016

இந்துதர்மத்தின் ஆணிவேரான குடும்ப அமைப்பின் இன்றைய நிலையைப் பாரீர்!!!


திருமண வரன் பார்க்கும் போது:மணமகனின் வயதை விடவும்,மணமகளின் வயது குறைந்தது 4 ஆண்டுகள் குறைவாக இருக்க வேண்டும்;அதிகபட்சமாக 8 ஆண்டுகள் குறைவாக இருக்கலாம்;

கணவனின் வயதைவிடவும்,மனைவியின் வயது 3 வருடம் அல்லது 2 வருடம் அல்லது 1 வருடம் குறைவாக இருந்தால் அந்த மனைவியின் புத்திசாலித்தனம்,சிந்திக்கும் வேகம் அந்தக் கணவனைக் கட்டிப் போட்டுவிடும்;

திருமணம் ஆன முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆம்பளை அடங்குவானா?யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தம் ஆரம்பிக்கும்;

கணவனின் பெற்றோர்கள் கணவன் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே கவனிப்பார்கள்;
மனைவியின் பெற்றோர்கள் தனது மகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே உணர்வார்கள்;

வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றங்களுக்குச் சென்று பாருங்கள்;மணவிலக்கு வழக்குகளின் பின்னணி இதுவாகத் தான் இருக்கும்;

காதலித்து திருமணம் செய்தாலும் இதே நிலைமைதான்!
திருமணம் ஆன 10 ஆண்டுகளுக்குப் பிறகே,தன்னை விடவும் தனது மனைவி புத்திசாலி என்பதை ஒவ்வொரு கணவனும் உணர்கிறான்;ஆனாலும்,ஒத்துக் கொள்வதில்லை;

திருமணம் ஆன 15 ஆண்டுகளுக்குப் பிறகு,கணவனே தனது மனைவிக்கு மனைவியாகி விடுகிறான்;அதுவே குடும்ப அமைப்பின் ஆதாரம்;

எந்த ஆம்பிளையும் நான் என் பொண்டாட்டி பேச்சை மட்டும்தான் கேட்பேன் என்று சொல்வதில்லை;ஆனால்,செய்கிறார்கள்;

பி.ஈ., படித்த மாப்பிள்ளை இக்காலத்தில் பி.ஈ.,படித்த மணமகளைத்தான் எதிர்பார்க்கிறான்;இருவரும் சேர்ந்து தமது பொறியியல் பட்டப்படிப்பை வைத்துக் கொண்டு வீடா கட்டப்போகிறார்கள்?

காதலித்து கல்யாணம் செய்து,சண்டை வந்தால் இருவரின் பெற்றோர்களும் எட்டிக் கூடபார்ப்பதில்லை;

பெற்றோர்கள் வரன் பார்த்து திருமணம் செய்தாலும்,அப்போது தம்பதியினரிடையே சண்டை வந்தாலும் இருவரின் பெற்றோர்கள் எட்டிப் பார்ப்பதில்லை;

குடும்ப அமைப்பு 1980களிலேயே சிதையத் துவங்கியிருக்கின்றது;
1990களில் குடும்ப அமைப்பு பெயரளவுக்கு இருக்கிறது;
2000களில் குடும்ப அமைப்பை முகமூடியாக அணிந்து வருகின்றனர்;
2010களில் தனிக்குடும்பமும் சிதைந்து,கணவன் பணிபுரிவது ஒரிடம்;மனைவி வாழ்வது ஒரிடம்;குழந்தைகள் படிப்பது ஒரிடம் என்று ஆகிவிட்டது;


2020களில் ம் ஹீம் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை;யூகம் செய்யவும் முடியவில்லை;

No comments:

Post a Comment