புரட்டாசி மாத அமாவாசையன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியிருக்கும்.மனதில் ஒரு பேராசை உண்டானது.
“வலைப்பூவில் மட்டும் இதை பரப்பினால் போதாது;உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இந்த ஓம்சிவசிவஓம் இன் மகிமைகள் பரவ வேண்டும்.21`வயது நிறைவடையும் ஒவ்வொருவரும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எப்பேர்ப்பட்ட பிரச்னையோடு இருந்தாலும்,அந்த பிரச்னையால் அவதிப்படுவோர் ஓம்சிவசிவஓம் மந்திரத்தினை தொடர்ந்து ஜபிப்பதால்,தமிழினம் முழுவதும் ருத்திர இனமாக மாற வேண்டும்”
எனவே, எழுத்துத்திறனைப் பயன்படுத்தி மாத இதழ்கள்,வார இதழ்கள்,ஜோதிட இதழ்கள்,தினசரி பத்திரிகைகள்,இலவச இணைப்புக்கள்,சிற்றிதழ்கள் என அனைத்திலும் ஓம்சிவசிவஓம் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதத் துவங்கினேன்.
அப்படி முதன் முதல் கட்டுரையை சென்னையிலிருந்து வெளிவரும் எனது மானசீக குரு அமரர் பி.எஸ்.பி.ஐயா அவர்களின் விடியல் ஜோதிட விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதத் துவங்கினேன்.அப்படி எழுத ஆரம்பித்து,முதல் வரி முடியும் முன்பாக நான் இருந்த அறையில் ஓம் என்ற சப்தம் ஒருமுறை உண்டானது.அந்த ஓம் என்ற சப்தம் ஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம் என்ற விதமாக கேட்டது.ஓஓஓஓ என கேட்டபோது,மனதில் திகில் கலந்த பயம் உண்டானது.ம்ம்ம்ம்ம்ம் எனக் கேட்டதும் ஒருவித சிலிர்ப்பு உண்டானது.
இதை எனது ஆன்மீககுருவாகிய மிஸ்டிக் செல்வம் அவர்களின் அருளாசி என்பதை உணர்ந்து கொண்டேன் *** .தற்போது இதை வாசிக்கும் எனது தமிழ் இன சகோதரர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
(நீங்களும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை எப்படி ஜபிக்க வேண்டும்? என்பதை உங்கள் பகுதியில் பரப்புங்கள்.இதுவும் ஒரு தெய்வீக காரியமே! இதனால்,உங்களது புண்ணியம் அதிகரிக்கும்.நீங்கள் ஜோதிடராக இருந்தாலோ,அருள்வாக்கு சொல்பவராக இருந்தாலோ,ஆன்மீகத் தலைவராக இருந்தாலோ இதை அவசியம் செய்வது நல்லதே)
ஓம்சிவசிவஓம்
நான் இந்த அரிய மந்திரத்தை என்னுடைய நண்பர்களுக்கு கடந்த தை அமாவாசை அன்று தாங்கள் கூறியது போல் உச்சரிக்குமாறு சொன்னேன். பலர் சொன்னேன் என்றார்கள். சிலர் காரியத்தடையைக் காரணமாக சொன்னார்கள். நானும் சொன்னேன் ஆயிரத்தி எட்டு முறை. தயவுசெய்து ஜெபமாலையை உருட்டும் முறை பற்றி விளக்குங்களேன். ப்ளீஸ்.
ReplyDeleteஅருமையான மந்திரம். அனைவருக்கும் சென்றடையவேண்டிய மந்திரம்.
ReplyDelete"தமிழினம் முழுவதும் ருத்திர இனமாக மாற வேண்டும்”-என்ற தங்களின் கருத்து வரவேற்க்கதக்கது. தமிழினம் என்பது பண்டைய காலத்தில் சைவர் இனம் என்று அழைக்கப்பட்டதாக தகவல் , இதன்காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் "சைவர்கள்" என்று அழைக்கப்பட்டார்கள்.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.