Thursday, February 10, 2011

மாசி மகம் 18.2.11 வெள்ளியன்று வருகிறது;பயன்படுத்துங்கள்



18.2.2011 வெள்ளிக்கிழமை அன்று மாசி மாதத்து பவுர்ணமி வருகிறது.இந்த நாளை நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கப்பயன்படுத்துவோம்.

சந்தர்ப்பம் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள்.அன்று இரவு 10 மணி முதல் 12 அல்லது 1 மணிவரையிலும் பவுர்ணமி பூஜை நடைபெறும்.சென்னை,கோவை,மதுரை முதலான மாநகரங்களில் இரவு 8 முதல் 10 மணிக்குள் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில்,அம்மனின் அபிஷேகம் நடைபெறும்போது,நாம் அம்மனின் சன்னதியில் கடைசி ஆளாக நமது மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,உள்ளங்கைகளை மடக்கி,ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்.



அம்மன் சன்னதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தவறில்லை;பாவமும் இல்லை;ஏனெனில்,இந்த மந்திரத்தில் அனைத்து தெய்வங்களும் சூட்சுமமாக இருக்கின்றன.எனவே,குற்ற உணர்ச்சி வேண்டாம்.

குறிப்பாக,கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள்,அசுபதி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முடிந்தவரையிலும் அதிக நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது உங்களின் பாவத்தைப் போக்கும்.



இது செய்ய இயலாதவர்கள்,இந்த நாளில் நள்ளிரவு(வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 11.45 முதல் 1.15 வரை) வீட்டின் மொட்டை மாடியில் ஜபித்துவருவது மிகவும் அதிக நற்பலன்களைத் தரும்.அளவற்ற மன உறுதி உள்ளவர்கள்,இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஜபிக்கலாம்.



விடுப்பும்,போதுமான பணமும் இருப்பவர்கள் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் (உதாரணமாக கொல்லிமலை,சதுரகிரி,பர்வதமலை,பண்பொழி முருகன் கோவில்,திருத்தணி,பழனிமலை,சத்தியமங்கலம் காட்டுப்பகுதி)அங்கே சென்று,அன்று முழுவதும் விரதமிருந்து இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும். ஜபித்து முடித்தப்பின்னர், பால் சாப்பிட்டோ அல்லது இளநீர் சாப்பிட்டோ ஜபத்தை முடிக்கலாம்.



எந்த ஒரு மந்திர ஜபத்தையும் ஜபித்து முடித்துவிட்டு,ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால்,நாம் அன்று ஜபித்த மந்திர ஜபத்தின் மொத்த எண்ணிக்கையும் நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.இளநீர் கிடைக்காதவர்கள்,குடிநீர் அருந்தினாலும் போதுமானது.இந்தக் கருத்தை ஆராய்ந்து நமக்கு உபதேசித்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

No comments:

Post a Comment