இராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009
நவக்கிரகங்களில் மிக மிக சக்தி வாய்ந்த கிரகங்கள் ராகுவும் கேதுவும்.இந்த இரண்டு சர்ப்பக்கிரகங்களில் கேதுவே சர்வ சக்தி வாய்ந்தவர்.
ஞானத்தின் சின்னங்களான கடகராசியும்,மகர ராசியும் இதுவரை கேது ராகுக் கிரகங்களின் பயணத்தை பொறுத்திருந்தன.
கடந்த 18 மாதங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஞானத்தின் அம்சங்களாகவே திகழும்.
27.10.2009 அன்று இராகு பகவான் குருவின் வீடான தனுசு ராசிக்கும், அதே நேரம் அதே நாளில் கேது பகவான் புதனின் வீடான மிதுனத்துக்கும் பெயர்ச்சியாகின்றனர்.
இதனால், 27.10.2009 முதல் 18 மாதங்களுக்குள் தனுசு மற்றும் மிதுன ராசிக்காரர்கள் ஒரு முறையாவது காவல்நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
முறையற்ற உறவில் சிக்குவதற்கு சந்தர்ப்பம் உண்டாகும்.
மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்காரர்கள், திருவாதிரை நட்சத்திரம் மிதுனராசிக்காரர்களுக்கு இந்த 18 மாதங்களில் பேய் பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.ஏன் எனில், இந்த காலகட்டம் இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை உண்டாகும்.எனவே,அகால நேரத்தில் அதாகப்பட்டது இரவு 10 மணிக்கு மேல் சுடுகாட்டுப்பக்கம் போகக்கூடாது.
உங்களின் எதிரிகள் உங்களுக்கு மாந்தீரீகப்பாதிப்பு ஏற்படுத்தலாம்.
இந்த பாதிப்புக்கள் ஏற்படாதிருக்க உக்கிரமான பெண் தெய்வத்தை தினமும் வழிபட்டு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்வது நல்லது.இந்த காலகட்டத்தில் உங்கள் சார்பாக யார் அம்மன் வழிபாடு செய்தாலும், இந்த பரிகாரம் செல்லாது.நீங்கள் மட்டுமே 27.10.2009 முதல் ஒன்றரை ஆண்டுக்கு தினமும் அம்மன் வழிபாடு செய்யவும்.அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.
சற்றும் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு விதத்தில் அவமானப் பட வேண்டியிருக்கும்.
ஒரு சில தனுசு மற்றும் மிதுன ராசியினர் மட்டும் உலகப்புகழ் பெறுவர்.இந்த எதிர்நிலைக்கு அவர்களது பிறந்த ஜாதகத்தில் ராகு கேதுக்களின் நிலை நல்ல நிலையில் இருக்கும்.
விருச்சிகராசிக்காரர்கள் இந்த 18 மாதங்களில் பேச்சை 2000% அளவுக்கு குறைப்பது அவசியம்.இல்லாவிட்டால்,இவர்களது பேச்சே ஏதாவது வில்லங்கத்தை உண்டாக்கிவிடும்.அதே சமயம்,எவருக்கும் பணம்,திருமணம்,வேலைவாய்ப்பு,காதல் சார்ந்த வாக்குறுதி தராமலிருப்பது அவசியம்.
கும்பராசிக்காரர்களுக்கு வீண்சிலவுகள் பெருமளவு குறையும்.மகர ராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் திடீர் தனலாபம் பெரியளவில் அடைவர்.
மீனராசி,கடகராசி,சிம்மராசி,கன்னிராசி,மேஷ,ரிஷபராசிக்காரர்களுக்கு பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை.
No comments:
Post a Comment