Thursday, April 27, 2017

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன? சிறு எளிய விளக்கம்

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?


14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.

அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.

இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

யோகாவின் சாதனை: குண்டுவெடிப்பால் இழந்த கேட்கும் திறன் மீண்டும் கிடைத்தது.



மும்பை ரயில் குண்டு வெடிப்பால் காது கேட்கும் திறனை இழந்தார் டாக்டர் காமத் என்பவர்.அவரது வயது 57.இவர் இயற்கை உணவு நிபுணர். 11.6.2006 ஆம் நாளன்று மும்பையில் பயங்கரமான ரயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடித்து ஏற்பட்ட பயங்கர சப்தத்தால் காது கேட்கும் திறன் இழந்தார்.

அவர் இயற்கை வைத்தியம் மற்றும் யோகா சிகிச்சையை மேற்கொண்டார்.சில மாதங்களில் அவரது காது கேட்கும் திறன் 80% அளவுக்கு அதிகரித்தது.

மும்பை கூப்பர் மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை நிபுணர்களால் இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.


ஆதாரம்:தினமலர் ஜீலை 14,2007.

ஜோதிடப் பட்டயப்படிப்பின் வரலாறு

ஜோதிடப்பட்டயப்(D.A.,)படிப்பின் வரலாறு

(Diplamo in Astrology)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடத்தில் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியது.ஆறுமாத பட்டயப்படிப்பு அது.இந்த படிப்பை அறிமுகப்படுத்திய உடனே மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனேகமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் என நினைக்கிறேன்.கம்யூனிஸ்டுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பின் அடையாளமாக பெரியாரிலிருந்து பல்கலைக்கழகம்செல்லும் ஒரு நகரப் பேருந்தை(டவுண் பஸ்) எரித்தன!!!

இதைப் பார்த்து எத்தனை மக்கள் சிரித்திருப்பார்கள்.மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த மாநில அரசாங்கத்தின் மந்திரிகள் துர்கா பூஜைகளில் திருட்டுத்தனமாக இன்றும் கலந்துகொள்ளுகிறார்கள்.

(சிலரது பிறந்த ஜாதகத்தில் சனியுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அவர் தெய்வநம்பிக்கையற்றவராகவும், தனது பிறந்த நாட்டின் புராதன சாஸ்திரங்களைக் கிண்டல் செய்பவராகவும் இருப்பார் என ஜோதிடம் சொல்லுகிறது)

அதே சமயம், ஜோதிடப்பட்டயப்படிப்பிற்கு முதல் பேட்ச் மாணவர்களின் எண்ணிக்கை 60,000.இத்தனைக்கும் இது அஞ்சல்வழிப்படிப்பாகும்.


2009 இல் மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடப் பட்டயப் படிப்பை நிறுத்திக்கொண்டது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்யூனிஸ்டின் கிளைகளில் ஒன்று;அந்த சமயத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடிவு எடுக்கும் இடத்தில் இருந்தவர்களும் கம்யூனிஸ்டுகள்!!!


ஆனால்,இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.20,00,000/-(இருபது லட்சம் ரூபாய்) வருமானம் பல்கலைக்கழகத்துக்குத் தந்துகொண்டு இருந்தது.ஆதாரம்: தினமலர்,பிப்ரவரி,2009.

அதே சமயம், தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் கற்பகம் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஜோதிடப் பட்டயப்படிப்பை அறிமுகம் செய்துள்ளன.இதில் சாஸ்திரா பட்டயம் முதல் முதுகலை வரை ஜோதிடவியல் பாடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது.
அமெரிக்காவில் வேத ஜோதிடம் (vedic astrology) என்ற பெயரில் நமது இந்து ஜோதிடக்கலையை பல பல்கலைக் கழகங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அமெரிக்க வேத ஜோதிட சங்கம்(www.aava.com= American Association of Vedic Astrology),இங்கிலாந்தில் பிரிட்டன் வேத ஜோதிட சங்கம்(British Association of Vedic Astrology = www.bava.org) என அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

கி.பி.2002 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.இங்கிலாந்து அரசு .400 கோடி பவுண்டுகள் செலவழித்து பல யாகங்களை லண்டன் மாநகரத்தில் செய்தது.(ஆதாரம் தினமலர் கி.பி.2002)
இங்கிலாந்து அரசு வேத ஜோதிடர்களைக் கொண்டு தனது நாட்டின் எதிர்காலத்தை கணிக்கச் சொன்னது. அந்த கணிப்பின் படி கி.பி.2012 முதல் 2015க்குள் இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்க இருப்பதைக் கண்டறிந்தது.

கடந்த நூற்றாண்டில் அது உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்தது.அப்போது அதன் நிர்வாகிகளும் இங்கிலாந்து ராணுவமும் பல மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்களை இடித்தாலும், ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்தியதாலும், கற்பழித்ததாலும் இந்த சாபம் உருவானது.
இதை மாற்ற கேரள நம்பூதிரிகளைக் கொண்டு பல யாகங்களைச் செய்தது.


அன்பார்ந்த   மஹாவில்வம் வாசகர்களே! இந்தச் செய்தி முழு நிஜம்.ஆதாரம் சேகரிக்குமளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது.நான் 1985 முதல் தினமும் தினமலர், தினத்தந்தி, சுதேச மித்திரன்(இப்போது இது வெளிவரவில்லை) வாசித்து வருகிறேன்.


வந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக்கும் ஊரு!!!



வந்தாரை வாழ வைக்கும் ஊரு என்பது நம் தமிழ்நாட்டுக்கே உரிய பெருமை!

இங்கேயே வாழ்வோரை சாகடிக்கும் ஊரு என்ற
பெயரையும் நம் தமிழ்நாடு இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகாசி, மதுரை முதலான மாநகரங்களில் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 1000 பேர் வேலை தேடி வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் ஃபேபிரிக்கேஷன், வெல்டிங் வேலைகளுக்கே வருகின்றனர். இந்த நிலை 1990களில் இருந்தது.

கி.பி.2000 வாக்கில் ராம் தேவ், ஜெயின் கோவில் என்ற பெயரில் சொத்துக்கள், தொழிற்சாலைகள், பண்ணை வீடுகள்,திரைஅரங்குகள், கல்யாண மண்டபங்கள் வாங்கிக்குவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதைத் தவிர, எந்தத் தொழிலையும் இவர்கள் முறைப்படி செய்வது இல்லை;
தவிர, அப்படி வேலைதேடி வரும் வடநாட்டினருக்கு நம் தமிழ்நாட்டு முதலாளிகள் நம் தமிழ்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து வைக்கும் கொடுமையும் நடக்கிறது.
இப்படியே போனால், 2010 முதல் 2020 க்குள் தமிழக சட்டசபையில் இவர்கள் எம்.எல்.ஏ.வாக நுழைந்து ராஜபக்ஷேவாக மாறி சட்ட ஒழுங்கை தன் வசப்படுத்திவிடுவார்கள்.2030க்குள் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் சிறுபான்மையினராகிவிடுவோம்.
இது ஓவர் பயம் அல்ல.யதார்த்தம்!!!!
வேண்டுமானால் கோவைத் தொழிலதிபர்களிடம் சர்வே செய்து பார்க்கவும்.

உதாரணமாக 5 டன் இரும்புக்கழிவு அல்லது 20,000 காலண்டர் வாங்குகின்றனர் எனில் அதற்கு பில் இல்லாமல் வாங்கி வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் அரசுக்குப் போக வேண்டிய வரி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், அதனால் அந்த வடநாட்டினருக்கு மிச்சமாகும் பணம் மட்டும் ஒரு வருடத்துக்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

கி.பி.2002 இல் பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ரெயில்வே தேர்வு எழுத நான் போயிருந்தேன்.பாட்னா ரயில் நிலையத்திலேயே என்னை மடக்கி திருப்பி அனுப்பினர் பீகாரிகள்.
தமிழ் தெரிந்தவர்களை வைத்து அவர்கள் சொன்னது:

பரீட்சை எழுதாமல் திரும்பப்போய்விடுங்கள்.மீறிச் சென்றால் பரீட்சை எழுதும் கல்லூரியின் வாசலில் உள்ள எங்கள் ஆட்கள் உங்களை மிரட்டிவிடுவர்.
ஒரு வேளை இந்த பரீட்சையில் பாஸ் ஆகி பீகாருக்கு வந்தால் உன்னைக் கொல்லுவோம்.

நாங்கள் மதராஸிக்கு வந்தால் எங்களை நீ என்ன வேணும் னாலும் செய்துகொள்

ஆகா!!! இந்தியாவில் ஏன் ராஜ்தாக்கரே உருவானார் என இப்போதுதான் புரிகிறது.

போன 2004-2009 மன்மோகனின் காங்கிரஸ் ஆட்சியில் லாலு ரயில் மந்திரியாக இருந்தார் அல்லவா?
அப்போது அவர் செய்த அக்கிரமம் என்ன தெரியுமா?
தகுதியற்ற பீகார்காரர்களை ரெயில்வேயில் தேர்வு மூலமாக ரெயில்வே ஊழியர்களாக்கியதுதான்.
இப்படி தேர்வு செய்வதற்காகவே பீகார் மண்டலத்தின் தேர்வை மும்பையில் நடத்தினார். இதை மோப்பம் பிடித்த ராஜ்தாக்கரே வடநாட்டாரை(பீகாரிகளை) தேர்வு எழுத விடாமல் தடுத்தார்.

காதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்

அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.


 காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.



அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. 

மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.கொஞ்சகாலம் முன்பு – சரியாகச் சொல்வதென்றால், காந்தியின் சில கட்டுரைகளைப் படித்துவிட்டு, கிராமப் பொருளாதார மேம்பாடு எப்படி ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தி முப்பதுகளில் எழுதிய கட்டுரைகள் அவை. கிராமப் பொருளாதார மேம்பாடு என்பது முன்னொரு காலத்தில் சரோஜ் நாராயண் சுவாமி மற்றும் ஜெயா பாலாஜியின் குரல்களில் உதித்து, அதிலேயே மரணமடைந்துகொண்டிருந்த ஒரு விஷயம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் செய்திகளில்கூட இந்தப் பிரயோகத்தைக் காணமுடிவதில்லை.


கடந்தவாரம் புதிய தலைமுறை வார இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடியாக இருந்தபோது இங்கே எத்தனை பருப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே அளவுதான் இன்றைய நூற்று முப்பது கோடி அளவுக்கும் உற்பத்தியாகிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ள நிலையில் இறக்குமதி தவிர நாம் செய்யக்கூடியது வேறில்லை. எனவே அதைச் செய்கிறோம். தேவையான அளவில் நாம் சமரசம் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிடுகிற பட்சத்தில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கிவிடுகிறது. துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாயைத் தொடும்போது அது செய்தியாகிறது. சாம்பார் காய்ச்சி, கலந்து அடித்தகையோடு அது மறந்தும் விடுகிறது. விலையேற்றத்துக்கு ஒருவாறு பழகிவிடுகிறோம்.


ஆனால் எந்தளவுக்கு இந்தப் ‘பழகிவிடுதல்’ சாத்தியம்? இதே நூறு ரூபாய் என்பது இருநூறாக ஆகும்போது என்ன செய்வோம்? அப்போது நமது வருமானமும் நூறு சதவீதம் அதிகரித்திருக்குமானால் ஒன்றும் செய்யத் தோன்றாது. ஆனால் நூறு சதவீத வருமான அதிகரிப்பு சாத்தியமா? நூறு சத வருமான அதிகரிப்பு என்பதுதான் சாத்தியமில்லையே தவிர நூறு ரூபாய் துவரம்பருப்பு, இருநூறு ஆகாது என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. ஆகும். ஏனெனில் நமக்குத் தேவை இருக்கிறது. அதற்கேற்ற அளவு உற்பத்திப் பெருக்கம் இங்கே இல்லை.
காரணம் விவசாயிகளுக்குத் தரப்படும் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது என்பது தொடங்கி, கிராமப்புற மக்கள் விவசாயத்தை விடுத்து மாற்றுத் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருவதுவரை பல உண்டு. கிராமப்புற மேம்பாடு என்பது பேச்சளவிலேயே பெரும்பாலும் தேங்கிவிடுவதால் கிராமப்புற மக்கள் வெறுத்துப் போய் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவது அதிகரித்து வருகிறது. செய்வதற்கு ஆளில்லாமல் விவசாயம் குன்றுவதால், வேறு வழியில்லாமல் இறக்குமதி செய்கிறோம். எனவே சொல்லும் விலையைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. பெட்ரோல் ஆனாலென்ன, பருப்பானால் என்ன? இறக்குமதி என்றால் கண்டிப்பாக ப்ரீமியம் விலைதான்.


இது மட்டும்தான் காரணம் என்றில்லை. செலவுகளைக் கொஞ்சம் குறைப்பதற்காகவாவது கொஞ்சநாள் சுதேசிச் சரக்குகளை மட்டும் உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. தவிரவும் அவசியமே என்றாலும் ஆடம்பரமாகத் தோற்றமளிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தாதிருந்து பார்க்கலாம் என்றும் நினைத்தேன். அதன் முதல் படியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் காரை விற்றேன். 

வாரத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். மாதம் எப்படியும் ஐந்து முதல் ஆறாயிரம் ரூபாய் அதற்குச் செலவாகிக்கொண்டிருந்தது. தவிர ஓட்டுநர் சம்பளம் ஆறாயிரம் ரூபாய். [நானே ஓட்டுவதென்றால் தினசரி ஒரு கொலை வழக்குக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.]
ஆனால் கார் எனக்கு அவசியமாக இருந்தது. என் புறநகர் வீட்டிலிருந்து சென்னைக்குள் பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்வது என்பது மிகுந்த அயற்சியை அளிக்கக்கூடிய விஷயம். வந்து போகலாம். பெரிய விஷயமில்லை. ஆனால் வீடு திரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். இரவெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதனால்தான் கார் வாங்கினேன்.


காரும் கூடாது, என் வேலையும் கெடக்கூடாது என்று தீர்மானித்தபோதுதான் சென்னைக்குள்ளே குடிமாறி வந்து, காரை விற்று ஸ்கூட்டர் வாங்கினேன். இப்போது என் மாத பெட்ரோல் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இந்தச் சிக்கனம் மூலம் சாத்தியமான சேமிப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கார் இல்லாததால் நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. மாறாக என் கையிருப்பு அதிகரித்தது. எனில், இன்னும் சில விதங்களிலும் இதனைப் பிரயோகம் செய்து பார்க்கலாமே?


காதியில் நான் முதல் முதலில் வாங்கிய பொருள் சோப்பு. அதுநாள் வரை டெட்டால் சோப் தவிர வேறெதையும் பயன்படுத்த விரும்பாதவன் நான். ஒரு சோப் எனக்கு ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு மட்டுமே வரும். மாதம் 150 ரூபாய் சோப்புக்கே போய்க்கொண்டிருந்தது. காதிக்குச் சென்றபோது அபரஞ்சி என்றொரு சோப்பைப் பார்த்தேன். நல்ல கோவிந்தா மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. உள்ளே டேபிள் வெயிட் மாதிரி கனமாக, பச்சை நிறத்தில் ஓவல் வடிவ அபரஞ்சி. துளசியின் மணம், நிறம், குணம் கொண்டது. விலை ரூபாய் இருபது மட்டுமே. சரி ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம் என்று வாங்கினேன்.


உண்மையிலேயே அபரஞ்சி உள்ளம் கொள்ளை கொள்ளக்கூடிய சோப்பாக இருந்தது. அபாரமான வாசனை கொண்ட ஆரோக்கிய சோப் அது. தவிரவும் ட்யூராசெல் பேட்டரி முயல் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஒரு சோப் ஒன்றரை மாதங்களுக்கு வருகிறது. ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப் அது.


அடுத்தது வாசனாதி திரவியங்கள். நான் நாலாயிரம் ரூபாய் வீட்டுக்குச் சம்பளமாக எடுத்துவந்த காலத்திலிருந்தே பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் வகையறாக்கள் இல்லாமல் வெளியே கிளம்பாத ஜில்பான்ஸ் பேர்வழி. விதவிதமான ஸ்பிரேக்கள், அபாரமான விலையில் மட்டுமே கிடைக்கும். ஒரு போதும் அது பற்றிய விமரிசனம் எனக்கு இருந்ததில்லை. யாராவது சுட்டிக்காட்டினாலும் பொருட்படுத்த மாட்டேன். கொசு மருந்துக்காரன் பீய்ச்சிவிட்டுப் போவதுபோல தினமும் குளித்துவிட்டு தேகமெங்கும் பாடி ஸ்பிரேவால் மறுகுளியல் போடாமல் வெளியே கிளம்பமாட்டேன். எனக்கு எப்போதும் வாசனையாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் எழுத மூட் வரும்.


காதியில் எனக்கு ஜவ்வாது அறிமுகமானது. வெறும் முப்பது ரூபாய். ஒரு சிறிய பாட்டில் ஜவ்வாது [பொடி, க்ரீம் இரு விதமாகவும் கிடைக்கும்.] ஊரைக்கூட்டும் நறுமணம் கமழ்வது. இதுவும் ஒரு மாதம் வரக்கூடியது. தவிரவும் இயற்கையான பொருள். ரசாயன சேர்மானம் இல்லாதது. எனக்கு ஜவ்வாது வாசனை ரொம்பப் பிடித்துவிட்டது. அலுவலகத்தில் முகில் எனக்கு மதன சுந்தர ஜவ்வாது பாகவதர் என்று பட்டப்பெயர் வைத்தான். அந்தக் கிண்டலும் கமகமவென்றே இருப்பதாகப் பட்டது.


அந்தக் காலத்து பாகவதர்கள் உபயோகித்தார்கள் என்பதனாலேயே ஜவ்வாதை நாம் நிராகரிப்பதும், அது பழம்பெருச்சாளிகளின் வாசனைப்பொருள் என்று ஒதுக்கிவைப்பதும் அபத்தம் என்று தோன்றியது. பாகவதர் கிராப்பும் ஜெமினி கணேசன் பேண்ட்டும் மறுஃபேஷனாகிவிட்ட காலத்தில் பாடி ஸ்ப்ரேக்களின் இடத்தில் ஜவ்வாதைத் திரும்பக் கொண்டுவைப்பதில் என்ன பிழை? எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. எனவே ஜவ்வாதுக்கு மாறினேன். இருநூறு ரூபாய் பாடி ஸ்ப்ரே இடத்துக்கு முப்பது ரூபாய் ஜவ்வாது.
இது கொடுத்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. நான் காதியின் காதலனாகிப் போனேன். அங்கே வேறென்னென்ன கிடைக்கின்றன என்று கவனமாக ஆராயத் தொடங்கினேன்.


எதுவும் கிடைக்கும். அண்ணாசாலை காதி பவன் என்பது ஸ்பென்சர் ப்ளாசா, சிடி செண்டர் போலவே ஒரு நல்ல ஷாப்பிங் மால். ஆனால் சுதேசி ஷாப்பிங் மால். உள்ளே நுழையும்போதே நன்னாரி, எலுமிச்சை ஜூஸ்கள், பதநீர்க் கடைகள் இருக்கின்றன. ஆறு ரூபாய் நன்னாரி ஜூஸுக்கு இன்னொரு பெயர் அமிர்தம். ஜில்லென்று அருந்திவிட்டு உள்ளே போகலாம். நிதானமாக எடை பார்த்துவிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதித்துக்கொண்டு[பத்து ரூபாய்.] கடை கடையாக ஆராயலாம். மளிகைப் பொருள்கள் கிடைக்கும் விசாலமான ஹால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. எளிதாகப் பார்த்து வாங்க வசதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் வினாடிகளில் கம்ப்யூட்டர் பில்லிங். கடன் அட்டை வாங்கிக்கொள்கிறார்கள். 

இந்த வளாகத்துக்குள்ளேயே சித்த மருத்துவப் பொடிகள், லேகியங்கள், தைலங்கள் போன்றவையும் இருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் ஒவ்வொன்றையும் எடுத்து மிக அழகாக விளக்குகிறார்கள்.
உங்களுக்கு ‘பிராண்ட்’ மாயை மட்டும் இல்லை என்றால் காதியில் இன்னதுதான் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். விதவிதமான செருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பைகள், பர்ஸ்கள், பெல்ட்கள், முத்து, பவழம், மணி மாலைகள், ஸ்படிகம், ருத்திராட்ச மாலைகள், வேட்டி, துண்டு, சேலைகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், சிற்பங்கள், சிலைகள், இருக்கவே இருக்கிறது ஜிப்பாக்கள்.
முற்றிலும் உள்நாட்டில், கிராமப்புறங்களில், பெரும்பாலும் பெண்களால் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தயாரிப்புகள் நம்பமுடியாத அளவுக்குத் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. இவை பரவலாகாததற்குக் காதியும் ஒரு காரணம். அவர்கள் முழு வர்த்தகமாக இதனைச் செய்யவில்லை என்பதனால் பல இடங்களில் கிளைகள் இருந்தும் எல்லா இடங்களிலும் இதே அளவுக்கு எல்லா பொருள்களும் கிடைக்கும்படி வைப்பதில்லை. 

சென்னை நகரில் உள்ள பல காதி பவன்களில் வெறும் ஜிப்பாக்களும் சபரிமலை சீசன் வேஷ்டிகளும் மட்டும்தான் இருக்கின்றன. அற்புத சோப் அபரஞ்சி அண்ணாசாலை காதி தவிர வேறு எங்குமே இருப்பதில்லை. [லாயிட்ஸ் சாலை காதி பவனில் ஒருவேளை இருக்கலாம். நான் போகவில்லை.]
எனவே புறநகர்வாசிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. சென்னைக்குள்ளே குடியிருப்பவர்கள் மட்டுமாவது இந்த இடத்துக்கு முடிந்தபோது போய்வரலாம். 

மாதம் ஒருமுறை மளிகைப் பொருள் வாங்கவாவது போவது என்னும் வழக்கத்தை வைத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட வகையில் கணிசமான சேமிப்பு நிச்சயம் சாத்தியமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் அநேகமாக இம்மாதிரி ஒரு பெரிய காதி அங்காடியாவது நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.


தொலைக்காட்சி திணிக்கும் பிராண்ட் போதையிலிருந்து விடுபட்டு சுதேசித் தயாரிப்புகளை உபயோகிக்கத் தொடங்குவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.நன்றி:www.writerpara.com/paper/

நாத்திகர்கள் பற்றிய உண்மை

கேள்வி:நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்கள் ஆத்திகத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இந்து மதத்தை மட்டுமே தாக்குகிற நிலைப்பாட்டிற்கு,ஆத்திகர்களாக இருக்கக்கூடியவர்கள் எத்தகைய வெளிப்பாட்டை முன்னிறுத்த வேண்டும்?


பதில்: நாத்திகர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மொத்த தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட கிடையாது.அது ஒரு மலிவான தந்திரம்நிறைந்த வியாபாரம்! அது தந்தை பெரியாரால் துவக்கப்பட்டது.தந்தை பெரியார் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

அதில் நாத்திகர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்துமதஎதிர்ப்பையும்,பிராமண எதிர்ப்பை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.மற்ற விஷயங்களை எல்லாம்விட்டுவிட்டார்கள்.

சமூகநீதி என்று சொல்வார்கள்.ஆனால் தந்தை பெரியார் எழுதிய புத்தகம் இரண்டு ரூபாய்.ஆனால்,திரு.கி.வீரமணி எழுதிய புத்தகம் ரூபாய் இருபது என்று விற்பனை செய்வார்கள்.அதிலேயே ஒரு நீதிஎன்பது அவர்களிடத்திலே கிடையாது.இவர்களெல்லாம் சமூக நீதி பற்றிப்பேசுவது நகைச்சுவையான விஷயம்.

இவர்கள் எல்லாம் அரசியலில் நிற்கவில்லை என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசுவார்கள்.ஆனால் திராவிடர் கழகம் என்பது ஆரம்பத்தில் இருந்தே ஆளும்கட்சிகளை ஆதரித்துத்தான் அறிக்கை விடும்.ஏனென்றால்,தாங்கள் செய்கின்ற தொழில்களுக்குப் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம் ஆகும்.
நன்றி:பி.எஸ்.பி.அவர்களின் விடியல் மாத இதழ்

வேர்களைக் காட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோடு டாக்டர் எம்.எல்.ராஜா அவர்கள்


நமது புனிதமான பாரதத் தாய்திருநாட்டின் வரலாற்றில் ஐரோப்பியர்கள் புகுத்திய தவறுகள் கணக்கில் அடங்கா.
நம்நாட்டின் தொன்மையான ஓலைச்சுவடிகளைப்படித்து பிரதிஎடுக்கும்போதும்,கல்வெட்டுக்களைப்பிரதி யெடுத்துப் பொருள் கொள்ளும்போதும்,அவற்றில் பொய்களைப் புனைந்துரைத்தல்,தவறுகளைப் புகுத்துதல்,தவறாகப்பொருள் உரைத்தல்,இடைச்செருகல்களை நுழைத்தல்,தவறாகத்திருத்திக்கூறல்,உண்மைகளைஅழித்தல்மற்றும் மறைத்தல்,பொய்யான ஆதாரங்களைச் செயற்கையாக உருவாக்குதல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத அநீதிகளைச் செய்தார்கள்.

அவர்களின் நோக்கம் நமக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.மேலும் நமக்குள் செயற்கையாகப் பிரிவினையை உருவாக்க வேண்டும்.இவற்றின்மூலம் நம்மை அவர்கள் என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டி,தாம் கொழுக்க வேண்டும் என்பதே!


இதற்காக அவர்கள் புரிந்த,சிறிதும் நியாயமற்ற செயல்களில் மிக முக்கியமானவை.1.ஆதாரபூர்வம் ஏதுமற்ற கிரேக்க நாட்டுக்குறிப்புக்களை,உறுதியான மற்றும் முடிந்த முடிவான ஆதாரமாகக்கொண்டு(sheet anchor) நம் நாட்டு வரலாற்றின் கால வரிசைக்கிரமத்தை முற்றிலும் தவறாக நிர்ணயித்து,நமது தொன்மையை செயற்கையாகக் குறைத்தது.2.அலெக்ஸாண்டரை மிகப்பெரிய வீரனாகப் பொய்யாக உயர்த்திக்கூறியது.புருஷோத்தமன் தோற்றுப்போனதாகப் புனைந்துரைத்தது. 3.நமது பாரத தேசத்தில் செயற்கையாகப்பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் நம்மை என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டுவதற்கு ஐரோப்பியர் திட்டமிட்டது.இதற்கு ஏதுவாக மொழி,சமூக,பிராந்திய மற்றும் சமுதாயப் பழக்க வழக்க ரீதியில் நம்மவருக்குள் மனத்தளவில் பிரிவினை மற்றும்துவேசத்தை விதைத்தது.இதுவே அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும்.
இதற்காக நமது நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற,முற்றிலும் தவறான கருத்துக்களைச் செயற்கையாகப் புகுத்தினர்.இதற்கு ஒரு உதாரணமாக,ஐரோப்பியரும் அவர்களது அடிவருடிகளும் புனைந்துரைத்த,ஆரிய திராவிட இனவாதகட்டுக்கதையைக் கூறலாம்.


4.உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு,முழு பாரதத்தையும் ஆண்ட வீரதீரம் பொருந்திய மாபெரும் மன்னர்களான விக்ரமாதித்ய மற்றும் சாலிவாஹன மன்னர்களை,வரலாற்று நாயகர்களாக ஏற்றுக்கொள்ளாது,மக்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று வரலாற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப தவறாகமாற்றிஎழுதியது.
5.கனிஷ்கர் (கி.மு.1294முதல் கி.பி.1234 வரை) என்ற காஷ்மீரத்தின் க்ஷ்த்ரிய குல மன்னனை ஹீணமன்னனாக மாற்றி , அவரின் காலத்தை நவீன காலத்தை நோக்கி மாற்றியது.


6.மிகிரகுல (காஷ்மீரத்து க்ஷத்திரிய மன்னர் கி.மு.704 முதல் கி.மு.634 வரை)மற்றும் தோரமாணா (காஷ்மீரத்து க்ஷத்திரிய இளவரசர் கி.மு.16) ஆகியோரை ஹீண மன்னர்களாக தவறாகக் கூறி,618 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகிர குலனை,அவருக்கு மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்த தோரமாணாவின் மகனாக வரலாற்றை தவறுபட எழுதியது.

7.நம்நாட்டின் பண்டைய விஞ்ஞான மற்றும் பிற நூல்கள்,அவற்றின் ஆசிரியர்களின் கால நிர்ணயத்தில்,நீதிக்குப்புறம்பாகத் தொன்மையை வெகுவாகக் குறைப்பதற்குச் செய்த மாற்றங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றை ஒவ்வொன்றாக சிந்திக்கலாம்.


மெகஸ்தனிஸின் சண்ட்ரகோட்டோஸ்
பாரத நாட்டின் வரலாற்றைத் தவறாக எழுத முயற்சித்த ஐரோப்பியர்களுக்கு,கிரேக்க நாட்டின் அலெக்ஸாண்டர் மற்றும் செல்யூகஸீடன் பாரதம் வந்த மெகஸ்தனிஸ் என்பவர் நமது நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புக்களைப்பற்றிய சிலவிபரங்கள் கிடைத்தன.அவற்றில் மெகஸ்தனிஸ் காலத்தில் ப்ராஸி என்ற பகுதியின் பாலிபோத்ரா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயர் சண்ட்ரகோட்டோஸ் என்று ஓரிரு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.(Ref.Ancient India as described by Megasthenes and Arrian,John W.Mc Crindle,Munishiram,New Delhi (1926)2000,page 5,19,66)வெறும் இந்தப்பெயரை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, அவசரம் அவசரமாக இந்த சண்ட்ரகோட்டோஸ் என்பது சந்த்ர குப்தா: என்றும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட
சந்த்ர கும்பதர் என்றும் ஐரோப்பியர் முடிவு கட்டினர்.சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பிரிட்டிஷ் நாட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிப்பிரிவில்,பாரதத்தில் கி.பி.1780 களில் பணிபுரிந்து வந்தார்.1784 இல் கொல்கத்தாவில் ராயல் ஆசியாடிக் சொசைட்டியை (Royal Asiatic Society)ஏற்படுத்தி,நம் நாட்டின் வரலாற்றை,ஐரோப்பியருக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்தார்.நம் நாட்டின் ராதாகண்ட்(Radhakant)என்ற ஸமஸ்க்ருத நிபுணர்,இந்த துரோகத்திற்கு உதவியாய் இருந்தார்.நம் நாட்டின் பாகவதபுராணம் உட்பட பற்பல புராணங்களைப் புரட்டிப் பார்த்த வில்லியம் ஜோன்ஸீக்கு அந்த புராணங்கள் விவரித்த நம் நாட்டின் மிகமிகத் தொன்மையான வரலாற்றை ஏற்றுக்கொள்வதில் எண்ணற்ற சிரமங்கள் இருந்தன.உதாரணமாக,அவரது மத நம்பிக்கையின்படி,உலகம் இன்றைக்கு 6014 ஆண்டுகளுக்கு முன்புதான் (கி.மு.23.10.4004 காலை 9 மணிக்கு) படைக்கப்பட்டது.ஆகவே,பத்தாயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நம்நாட்டின் பழமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.நம் நாட்டினைத் தாழ்வாக சித்தரிக்கும் அவரது நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிராக இருந்தது.ஆகவே,கிரேக்க நாட்டவரான மெகஸ்தனிஸின் குறிப்புகள் மற்றும் தான் அரைகுறையாகப் படித்திருந்த நமது புராணங்கள் இவற்றை வைத்துக்கொண்டு,அவசர கதியில்,மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புக்களில் காணப்பட்ட பாலிபோத்ராநகரமானது,பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) என்றும்,இதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயரான ‘சண்ட்ரகோட்டோஸ்’என்பது சந்திரகுப்தர் என்பதன் உருமாற்றம் எனவும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட சந்த்ரகுப்தர் என்றும் அரைகுறையாக 28.02.1793இல் முடிவுகட்டினார். 

இதைப்பற்றி வில்லியம் ஜோன்ஸ், “இது முடிந்த முடிவு அல்ல;இது பற்றிய தனது ஆய்வுகள் மற்றும் முடிவுகள் அடுத்த கட்டுரையில் தான் முழுமையாக முடிவாகும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால்,அடுத்த கட்டுரை எழுத,காலம் அவருக்கு அவகாசம் தரவில்லை.வில்லியம் ஜோன்ஸ் 27.4.1794இல் காலமாகிவிட்டார்.(ஆதாரம் 1. “The work of Sir WilliamJones” in 13 Volumes,Volume 4,1807 Edition,pages 1,2,6,36 to 40,42 to 46 by Lord TEignmouth and 2.”Is Sandrakottas Chandragupta Mauraya)” by Sree Shriram Sathe,1985 Edition,Pages 1 to 9)நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்