Tuesday, November 15, 2016

தொழில் வளம் பெருகவும்,எலும்பு சார்ந்த விபத்துக்கள் வராமலும் காக்கும் பதிகம்!!!



திருமயிலாப்பூர் - பூம்பாவைத் திருப்பதிகம் - சீகாமரம்


திருச்சிற்றம்பலம்

மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!1

மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பயந்த நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான்,
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!2

வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!3

ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!4

மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பூசு நீற்றான், கபாலீச்சுரம் அமர்ந்தான்
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசும் காணாதே போதியோ? பூம்பாவாய்!5

மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான்,
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி,
நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!6

மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக்
கலி விழாக் கண்டான், கபாலீச்சுரம் அமர்ந்தான்
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!7

தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்,
கண் ஆர் மயிலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான்,
பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள்
கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!8

நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான்,
பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!9

உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில்
கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!10

கான் அமர் சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.11

திருச்சிற்றம்பலம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ஓம் அகத்தீசாய நம
ஸ்ரீபாகம்பிரியாளுக்கு அர்ப்பணம்

வள்ளலார் அருளிய அம்பலத்தான் துதிப் பாடல்கள்



ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

பாடிய வேதங்கள் தேடிய பாதம்
  பக்தி செய் பக்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம்
  நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்                     1

                                         (ஆடிய)
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
  தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
  வஞ்ச மனத்தில் வசியாத பாதம்                      2
                                         (ஆடிய)
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
  அன்பர் உளத்தே அமர்ந்தருளும் பாதம்
நாராயணன் விழி நண்ணிய பாதம்
  நான்புனை பாடல் நயந்த பொற்பாதம்               3
                                          (ஆடிய)

நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
  நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம்
  மந்திர யந்திர தந்திர பாதம்                          4
                                          (ஆடிய)
எச்சமயத்தும் இலங்கிய பாதம்
  எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
  ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம்                    5
                                           (ஆடிய)

தேவர்கள் எல்லாம் சிந்திக்கும் பாதம்
  தெள்ளமுதாய் உளம் தித்திக்கும் பாதம்
மூவருங் காணா முழுமுதற் பாதம்
  மூப்பாலுக்கு அப்பால் முளைத்த பொற்பாதம்          6
                                          (ஆடிய)

துரிய வெளிக்கே உரிய பொற்பாதம்
  சுகமய மாகிய சுந்தர பாதம்
பெரிய பொருளென்று பேசும் பொற்பாதம்
  பேறெல்லாம் தந்த பெரும் புகழ் பாதம்                7
                                         (ஆடிய)

சாகா வரம் தந்த தாரக பாதம்
  சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருஷ்டிக்கும் பாதம்
  திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்               8
                                           (ஆடிய)

ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம்
  ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
  துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்                 9
                                          (ஆடிய)

ஐவண்ண முங்கொண்ட அற்புத பாதம்
  அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
  கண்ணும் கருத்தும் கலந்த பொற்பாதம்               10
                                           (ஆடிய)

ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
  அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
  சத்திய ஞான தயாநிதி பாதம்                      11
                                          (ஆடிய)

தாங்கி எனைப் பெற்ற தாயாரும் பாதம்
  தந்தையுமாகி தயவு செய்ப் பாதம்
ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம்
  உண்மை விளங்க உரைத்த பொற்பாதம்               12
                                          (ஆடிய)

எண்ணியவாறே எனக்கருள் பாதம்
  இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
  பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்               13
                                           (ஆடிய)

ஆறந்தத் துள்ளும் அமர்ந்த பொற்பாதம்
  ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லா என வாழ்முதற் பாதம்
  மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்                  14
                                           (ஆடிய)

அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
  அம்மையும் அப்பனுமாகிய பாதம்
பொருட் பெரும் போகம் புணர்த்திய பாதம்
  பொன் வண்ணமாகிய புண்ணிய பாதம்               15
                                           (ஆடிய)
நாரண னாதியர் நாடரும் பாதம்
  நான் தவத்தாற் பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
  ஆசை விட்டார்க்கே அணிமையாம் பாதம்            16

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வள்ளலார் பெருமான் அருளிய இந்தத் துதியை தினமும் ஓதி,தில்லை சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடுவானின் பொற்பாதங்களை தியானித்து வருதல் வேண்டும்;

அவ்வாறு மனம் உருகி அம்பலத்தாடுவானை வணங்குவோர் அனைவரும் பிறவிப்பிணி நீங்கி,மரணமில்லாப் பெருவாழ்வு அடைவார்கள் என்பது சத்தியம்;

ஓம் அகத்தீசாய நம
ஓம் அருணாச்சலாய நம
              


Wednesday, November 9, 2016

அனைத்து கஷ்டங்களையும் சில வாரங்களிலேயே தீர்த்துவைக்கும் பதிகம்!!!



உங்களது வாழ்க்கை இன்று முதல் அடியோடு மாறிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்;அசைவம்,மது இரண்டையும் கைவிடவேண்டும்;புரோட்டாவும்,முட்டை வகைகளும் அசைவமே;ஜீவகாருண்யம் என்ற சைவ உணவுப் பழக்கத்திற்கு தயாராகுங்கள்;சைவ உணவுப்பழக்கத்துடன் பின்வரும் பதிகத்தை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில் ஜபித்து வரவேண்டும்;


முடிந்தால் அருகில் இருக்கும் சிவாலயத்தில் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இதை பாடலாம் அல்லது ஜபிக்கலாம்;

அல்லது 

காலையில் வீட்டிலும்,இரவில் அருகில் இருக்கும் சிவாலயத்திலும் ஜபிக்கலாம் அல்லது பாடலாம்;


தொடர்ந்து 108 நாட்கள் விடாமல்(பெண்கள் எனில் மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து) ஜபித்து அல்லது பாடி வருக! இதுவரை இருந்து வந்த அனைத்து சோகங்களும்,கடனும்,சிக்கல்களும்,அவமானங்களும்,துயரங்களும்,கண்ணீரும் ஓடியே போய்விடும்;டெஸ்ட் செய்து பாருங்கள்;

கடந்த 20,000 ஆண்டுகளாக பல லட்சம் சிவபக்தி கொன்டவர்கள் தினமும் இதைப் பாடி நிம்மதியான வாழ்க்கையைப் பெற்றுள்ளார்கள்;


இன்றைய கால கட்டத்தில் முதல் ஒருவாரம் வரை இந்த 10 பாடல்களை வாசிப்பது சிரமமாகத் தான் இருக்கும்;பரவாயில்லை;விடாமுயற்சியை வைராக்கியத்துடன் தொடருங்கள்;ஈசனுடைய அருளால் அனைத்து நலனும் தேடி வரும்;

பதிகம்:நமச்சிவாயத் திருப்பதிகம்

பண்:காந்தாரப் பஞ்சமம்

பாடியவர்:திருநாவுக்கரசர்

இங்கே அடுத்த வரியில் இருந்து பாட அல்லது ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;(பதிகங்களை திருச்சிற்றம்பலம் என்று கூறியே துவக்க வேண்டும்;திருச்சிற்றம்பலம் என்று கூறித்தான் நிறைவு செய்ய வேண்டும்)

திருச்சிற்றம்பலம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டி ஓர் கடலினுள் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே.                     1

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.                  2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.                 3

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.                 4 

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.                  5 

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்க்கு அலால்
நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்
குலம் இலராகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே.                 6   

வீடினர் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.                   7

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.                    8

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.                    9  

மாப்பிணைத் தழுவிய மாதுஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்தடி பொருந்தகக் கைத் தொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.           10 

திருச்சிற்றம்பலம்


பொதுவாக இம்மாதிரியான பதிகங்களை ஒருமுறை பார்த்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்;அதன்பிறகு,தாம் எழுதியதை ஜபிக்க பயன்படுத்த வேண்டும்;


 ஓம் அகத்தீசாய நம

ஓம் அருணாச்சலாய நம





விரும்பிய வாழ்க்கைத் துணை அமையவும்,சர்ப்பதோஷம் நீங்கவும் பாடவேண்டிய பதிகம்!

தினமும் காலையில் ஒருமுறையும் இரவில் ஒருமுறையும் வீட்டில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள்ளும் ஜபிக்கலாம்)
திருமருகல் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
1.சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;
"விடையாய்!" எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
2.சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்;
"முந்தாய்!" எனுமால்; "முதல்வா!" எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
3.அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
4.ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
5.துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
6.பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே
7.வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
8.இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?
9.எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
10.அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
11.வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.
திருச்சிற்றம்பலம்
பலருக்கு தாம் விரும்பியவரையே வாழ்க்கைத் துணையாக அமைய இந்த பதிகம் உதவியிருக்கின்றது;
தினமும் அருகில் இருக்கும் சிவாலயத்தில் இரவு மட்டுமாவது ஜபித்து வருவதன் மூலமாக விரைவான பலனைப் பெறலாம்;
ஓம் அகத்தீசாய நம
அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு சமர்ப்பணம்

மழை வளம் தரும் சுந்தரமூர்த்திசுவாமிகளின் பதிகம்!


உலகத்தில் தொழிற்புரட்சி துவங்கி 200 ஆண்டுகள் ஆகிவிட்டன;அதன் விளைவாக,இயற்கை வளங்களை படிப்படியாக அழிக்காமல் தாறுமாறாக அழிக்கத் துவங்கின ஜி 8 எனப்படும் வல்லரசு நாடுகள்! அதுவும் ஐ.நா.சபை,நேட்டோ,ஐரோப்பிய யூனியன் என்று அமைப்புகள் உருவானப் பின்னர்,தந்திரமாக சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில்களை ஏழை நாடுகளில் துவங்க வைத்தன இந்த வல்லரசு நாடுகள்;ஏழைநாடுகளில் பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் இப்படிச் செய்து அவர்களது இயற்கை வளங்களையும்,மனித வளத்தையும் சீரழிக்கத் துவங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன;


இந்த நயவஞ்சகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது நமது பாரத நாடுதான்;காரணம் தமது நாட்டை நேசிக்கும் பிரதமர்கள் இதுவரை நமக்குக் கிடைக்காமல் இருந்தது தான்;இயற்கை வளங்களை அழித்து,இயற்கைச் சமநிலையைக் கெடுத்து,இப்போது அதன் பின்விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
2010 வரை மே மாதம் மத்தியில் மட்டும் தான் அக்னி நட்சத்திர வெயிலை உணர்ந்தோம்;இப்போது பிப்ரவரியில் இருந்து ஆகஸ்டு வரை உணர்கின்றோம்;


மாநில அரசியல்வாதிகளும் சரி;தேசிய அரசியல்வாதிகளும் சரி;இது நமது நாடு;இது நமது மக்கள் என்ற சொரணையே இல்லாமல் அரசியல் செய்கின்றார்கள்;அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முற்காலத்தில் மன்னர்களும்,ஜமீன் தார்களும் வாழ்ந்தார்கள்;தற்போதைய அரசர்களும்,இளவரசர்களும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே அரசியல் செய்துவருகின்றார்கள்;

தண்ணீரை விற்பதும் பாவம்;வாங்குவதும் பாவம்;இது இன்றைய இளைய சமுதாயத்திற்குத் தெரிகின்றதா?


1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதம் முழுவதும் பேசப்படும் மொழியாக தமிழ் இருந்தது! இன்றைய பத்ரிநாத் ஆலயத்தின் பக்கவாட்டுச் சுவர்களை கூர்ந்து கவனித்தால் இது உண்மை என்று புரியும்;இன்றோ,இலுமுனாட்டிகளின் அடிமைகளும்,ஏஜெண்டுகளும் தமிழ் இனத்தை தமிழ் மொழி வாசிக்க விடாமல் தடுக்கும் விதமாக ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்;


மேல்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமையாக பணிபுரியவே பி.ஈ; பி.டெக். படிக்கின்றார்கள்;இதுவே இன்றைய சமுதாயத்திற்குப் புரியவில்லை;


தண்ணீர்ப் பஞ்சம் பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றது;இதைச் சரி செய்ய குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஆகும்;இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை;ஒரு ஜோதிடராகவும்,ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவராகவும் உள்ள அடியேனுக்குத் தெரிந்த வழிமுறையை இங்கே தெரிவிப்பதில் பொறுப்பு கொள்கின்றோம்;

தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவருமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளாலும்,அண்ணாமலையாரின் ஆசிகளாலும் இந்தப் பதிகத்தை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.


இந்தப் பதிகத்தை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில் வாசித்து வந்தால் மழைவளம் உருவாகும்;


குழுவாகச் சேர்ந்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் தினமும் ஒருமுறையாவது பாடிவருவதன் மூலமாக தண்ணீர்ப்பஞ்சம் மழைவளத்தின் மூலமாகத் தீரும்;அப்படித் தீருவதற்கு ஈசன் அருள்பாலிப்பார்;


சைவ சமயக்குரவர்களில் சுந்தர மூர்த்திசுவாமிகள் திருப்புன் கூர் என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கத்தை நோக்கி பாடிய பாடல் இது;


திருச்சிற்றம்பலம்

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
  அவனைக் காப்பது காரணம் ஆக
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
  வவ்வினாய்க்குன் தன் வன்மை கண்டடியேன்
எந்தை நீ எனை நமன் தமர் நலியில்
  இவன் மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.         1

வையகம் முற்றும் மாமழை மறந்து
  வயலில் நீர் இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை என்ன
  ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
  பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           2

ஏத நன்னிலம் ஈர் அறு வேலி
  ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக்
  கோல வெண்மணல் சிவன் தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த சண்டிக்குன்
  சடை மிசை மலர் அருள் செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன்
  பூம்பொழில் திருப்புன் கூர் உளானே.                 3

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
  நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி
  கண்ணப்பன் கணபுல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
  கொள்கை கொண்டு நின் குரைகழல் அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
  பொய்கைசூழ் திருப்புன் கூர் உளானே.               4

கோல மால்வரை மத்தென நாட்டிக்
  கோள் அரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சு கண்டு அவர் மிக இரிய
  அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடம் தனை உண்டு
  கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           5

இயக்கர் கின்னரர் எமனொடு வருணன்
  இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம்
  வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன்றின்றி நின் திருவடி அதனை
  அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு
திகைப் பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           6

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
  பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கன்று பாசுபதம் கொடுத்
  தருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழியும் புனல் கங்கை
  நங்கையாளை நின் சடை மிசைக் கரந்த
தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           7


மூஎயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
  இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்றேவிய பின்னை
  ஒருவன் நீ கரி காடு அரங்காக
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ
  மணி முழா முழக்க அருள் செய்த
தேவ தேவ நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.            8

அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்
  தவ்வவர்க்காங்கே ஆர் அருள் புரிந்து
எரியு மாகடல் இலங்கையர் கோனைத்
  துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
  கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.             9

கம்பமால் களிற்றின் உரியானைக்
  காமன் காய்ந்ததோர் கண் உடையானைச்
செம்பொனே ஒக்கும் திரு உருவானைச்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே
உம்பராளியை உமையவள் கோனை
  ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்
தன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தினோ
  டைந்தும் வல்லவர் அருவினை இலரே              10


திருச்சிற்றம்பலம்

Sunday, November 6, 2016

சிவ தீட்சை பெற விரும்புவோர் கவனத்திற்கு!!!



இடம்;திருநாவுக்கரசர் தமிழ் வேத பாடசாலை

ராம்கோ நகர்,எஸ்.ராமலிங்காபுரம்,சத்திரப்பட்டி அருகில்,ராஜபாளையம் தாலுகா,விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,பாரதம்.

நாள்;20./11./16 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை

முழு விபரம் அறிய:திரு.கணேசன் சிவாச்சாரியார் அவர்கள்,
செல் எண்:9952195895,8148720671

மன மகிழ்ச்சியை கொடுக்கும் நின்ற திருத்தாண்டகம்

மன மகிழ்ச்சியை கொடுக்கும் நின்ற திருத்தாண்டகம்
நின்ற திருத் தாண்டகம் 

(வட மொழி வேதத்தின் இருதயமாக விளங்கும் "ஸ்ரீருத்ரம்" - திருநாவுக்கரசரால் 6 ம் திருமுறையில் "நின்ற திருத்தாண்டகம்" ஆக அருளியுள்ளார் .

இதன் சிறப்பினை சேக்கிழார் மறைப்பயன் ஆகிய "ருத்ரம்"எனச் சிறப்பித்துள்ளார்.

சிவபெருமானின் விஸ்வ ரூபத்தையும் பேராற்றலையும் விவரித்து விளக்கி வணக்கம் கூறுவதே ஸ்ரீ ருத்ரம் ஆகும்..

நின்ற திருத் தாண்டகம் - " ஸ்ரீருத்ரசாரம்" எனப் போற்றப் படுகிறது.

சிவலிங்க மூர்த்திக்கு பிரதோஷ வேளையில் அபிஷேகம் நிகழும் போது நின்ற திருத்தாண்டகத்தை
மனமுருகி ஓதுவதால் மனதில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகும்.

அன்பர்கள் அனுதினமும் மற்றும் குறிப்பாக பிரதோஷ வேளையில் நின்ற திருத் தாண்டகம் படித்து இறைவன் அருளுக்கு பாத்தியமவோமாக!!!!!

திருச்சிற்றம்பலம்
நின்ற திருத்தாண்டகம்
1.இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும்
காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய்,
அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்
உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை
அடிகள் நின்ற ஆறே!.

2.மண் ஆகி, விண் ஆகி, மலையும் ஆகி, வயிரமும் ஆய்,
மாணிக்கம் தானே ஆகி,
கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி, கலை ஆகி,
கலை ஞானம் தானே ஆகி,
பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி, பிரளயத்துக்கு
அப்பால் ஓர் அண்டம் ஆகி,
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி, எழும் சுடர்
ஆய் எம் அடிகள் நின்ற ஆறே!.

3.கல் ஆகி, களறு ஆகி, கானும் ஆகி, காவிரி ஆய், கால் ஆறு
ஆய், கழியும் ஆகி,
புல் ஆகி, புதல் ஆகி, பூடும் ஆகி, புரம் ஆகி, புரம் மூன்றும்
கெடுத்தான் ஆகி,
சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி, சுலாவு ஆகி,
சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,
நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் ஆகி, நெடுஞ்சுடர் ஆய்
நிமிர்ந்து, அடிகள் நின்ற ஆறே!.

4.தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு
ஓர் தெய்வம் ஆகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும்
தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள்
நுகர்வானும் தானே ஆகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,
நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.

5.காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு
ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி,
கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை
கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய்,
நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள்
விசும்பின் உச்சி ஆகி,
ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

6.அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் ஆகி, அருமறையோடு
ஐம்பூதம் தானே ஆகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே ஆகி, பால் மதியோடு
ஆதி ஆய், பான்மை ஆகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி,
மலை ஆகி, கழியும் ஆகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர்
ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

7.மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும்
தானே ஆகி,
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக்
குழகன் ஆகி,
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு
அறுக்கும் புனிதன் ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி, அழல் வண்ண
வண்ணர் தாம் நின்ற ஆறே!.

8.ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி,
அழல் ஆகி, அவியும் ஆகி,
நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி, நாதனாய்,
வேதத்தின் உள்ளோன் ஆகி,
பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி, பூக்குளால்
வாசம் ஆய் நின்றான் ஆகி,
தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர்
ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.

9.நீர் ஆகி, நீள் அகலம் தானே ஆகி, நிழல் ஆகி, நீள்
விசும்பின் உச்சி ஆகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி, பெரு
மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம்
ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய்,
சென்று அடிகள் நின்ற ஆறே!.

10.மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம்
ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி,
பரலோகம் தானே ஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய்,
புராணன் தானே ஆகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம்
அடிகள் நின்ற ஆறே!.

திருச்சிற்றம்பலம்

அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு சமர்ப்பணம்