Monday, December 21, 2015

will reach great manthira power

கறிவேப்பிலைச்சாறு அருந்தி மந்திரம் ஜபித்து வந்தால் விரைவில் மந்திரம் ஸித்தி ஆகும்;குண்டலினி சக்தி விரைவில் ஆக்ஞாசக்கரத்தைத் தொடும்;

relief from joint pain

குதிரைவாலி அரிசியை சமைத்து தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால்,மூட்டுவலி சீக்கிரம் குணம் ஆகிடுமாம்;இயற்கை உணவு ஆர்வலர்களின் அனுபவ உண்மை இது;

Saturday, December 19, 2015

(ஒரு ஜோதிட வாடிக்கையாளர்களின் வலைப்பின்னல் உருவான வரலாறு)

எமது ஜோதிட அனுபவங்கள் -2

2001 ஆம் ஆண்டு அது;ஒரு நண்பரின் மூலமாக இன்னொருவர் ஜாதகம் பார்க்கத் தேடி வந்தார்;சுமாராக இரண்டு மணி நேரமாக அவரது ஜாதகத்தை ஆராய்ந்து,கணிதம் கணித்து,உங்களுக்கு இந்தத் தேதியில் இருந்து இந்தத் தேதிக்குள் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருக்கின்றது;இதில் இருந்து தப்பிக்க உங்கள் குலதெய்வத்தை தினமும் வழிபடுங்கள்;என்று கூறினோம்;
அவரோ,எனது குலதெய்வக் கோவில் 120 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கின்றது;நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறைதான் அங்கே செல்வது வழக்கம்;என்ன செய்ய? என்று வினவினார்;

வீட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் போட்டோ இருக்கின்றதா? என்று கேட்டதற்கு,தெரியவில்லை;என்றார்;
இருந்தால்,தினமும் காலையில் 15 நிமிடம் வரை அந்த படத்தின் முன்பாக வழிபட்டுவிட்டு வேலைக்குச் செல்லுங்கள்;இல்லாவிடில், இரண்டு வார்த்தைகள் சொல்லி இதைச் சொல்லிவிட்டு உங்கள் குலதெய்வத்தின் பெயரை இரண்டு முறை கூறவும்;இது ஒருவரி;இந்த ஒருவரியை தினமும் 108 முறை ஜபிக்கவும்;காலையில் குளித்து முடித்ததும் ஜபிக்கவும்;என்று விவரித்தோம்;

8 ஆம் நாளில் அவர் மீண்டும் எம்மை நேரில் சந்தித்தார்;வீட்டில் அவருடைய குலதெய்வத்தின் போட்டோ இருக்கிறது;மிகவும் அழுக்காகவும்,பழையதாகவும் இருக்கின்றது;அந்தப் படத்தை வைத்து பிரார்த்தனை செய்யலாமா? என்று கேட்டார்;நமது தாத்தாவுக்கு உரிய மரியாதையை குலதெய்வத்துக்குத் தரவேண்டும்; என்றோம்;

ஒரு வருடம் கடந்தது;திடீரென அவர் மீண்டும் எம்மைத் தேடி வந்தார்;அப்போது இரண்டு மூன்று வீடுகள் மாறிவிட்டதால்,சுமாராக நான்கு மாதங்களாக எம்மைத் தேடிக் கொண்டே இருந்தார் என்பது புரிந்தது;மிகவும் கஷ்டப்பட்டு எம்மைத் தேடிக் கண்டுபிடித்தது புரிந்தது;

வித்தையில் சூரனாக இருப்பவர்கள் எப்போதும் வறுமையில் தான் இருப்பார்கள் என்பது கலியுக விதி;வித்தையில் கவனம் செலுத்துபவர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையின்றி இருப்பார்கள்;பழகுபவர்களின் நலனில் அக்கறையுடன் இருப்பார்கள்;இதை சிலபல மந்திரவாதிகள் பயன்படுத்திக் கொண்டு,இவர்களுக்கு சிறு உதவி செய்து,தம்மை வளப்படுத்துவது வழக்கம்;இதுவும் காலம் காலமாக இருந்து வரும் துரோக சரித்திரமே!

ஜோதிடம்,சித்தமருத்துவம்,கைரேகை,சரக்கலை,பஞ்சபட்சி
வாஸ்து,யோகாசனம்,சாமுத்ரிகா லட்சணம் கற்றறிந்த நிமித்திகன்,பிரபஞ்சசக்தியை கையில் தேக்கி வைத்து பிறரின் நோய்களைக் குணப்படுத்தும் ஹீலிங் மாஸ்டர்கள் இவர்கள் அனைவருமே வித்தைக்காரர்கள் தான்;

கையோடு எம்மைக் கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்;அவரது வீடு சிறிய மாளிகை போல இருந்தது;தனது கையால் எமக்குப் பரிமாறி,எம்மை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்;

சாப்பிட்டப் பிறகு,அவர் எமது அருகில் அமர்ந்து கொண்டு,அவருக்கு நாம் சொன்ன ஜோதிடக் கணிப்பு பலித்ததை விவரித்தார்;நாம் குறிப்பிட்டுக்கூறிய தேதிக்குள் அவருக்கு விபத்து நடந்திருக்கிறது;இவர் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்பியதையும் தெரிவித்திருக்கிறார்;விபத்து நடைபெற்ற போது யாரோ ஒரு தாத்தா(அவரது குல தெய்வம்) வாகனத்தில் இருந்து எகிறி விழுந்த இவரை,தமது இருகைகளால் தாங்கியதைத் தெரிவித்தார்;எமக்கு ஆச்சரியமும்,பெருமையுமாக இருந்தது;எமது ஜோதிடப் புலமை மீதான நம்பிக்கை இதன் மூலமாக இன்னும் பலமடங்கு அதிகரித்தது;

அதன்பிறகு,நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்;இரண்டு ஆண்டுகள் கடந்தன;அவருக்கு விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்ததை தெரிவித்ததோடு,அது எப்போது முடிவுக்கு வரும்? என்று கேட்டார்;அவரது ஜாதகப்படி அதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிந்ததால்,சரியான சந்தர்ப்பம் வரும்போது தெரிவிக்க முடியும் என்று மட்டும் தெரிவித்தோம்;

இறுதிகட்ட விசாரணை அவருக்கு வந்தது;அந்த தேதியில் அவர் நீதிமன்றவளாகத்தில் அவமானப்பட வேண்டும் என்பது தெரிந்தது;எனவே,அவரை எச்சரித்து,என்ன சம்பவம் நீதிமன்றத்தில் நடந்தாலும்,தாக்குதல் பாணியில் செயல்பட வேண்டாம்;தற்காப்புப் பாணியில் செயல்படும்படி ஜோதிட அறிவுரை கூறினோம்;

அன்றைக்கு இருதரப்பு வாதங்களும்,விசாரணைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,இவரது மனைவி வீட்டார் நீதிமன்றத்திலேயே இவர் மீது செருப்புடன் பாயத் துவங்கினர்;இவரோ தன்னைத் தற்காத்துக் கொள்ள கூண்டில் இருந்து தாவிக் குதித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடத் துவங்கினார்;இவரது மனைவி வீட்டார் இவரை கேவலமாகத் திட்டிய படியும்,கத்தியபடியும் ஓட இவரோ நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி வரத் துவங்கினார்;இதனால் கோபமுற்ற நீதிபதி இவரது மனைவியின் வக்கீலை அழைத்து செம திட்டு,திட்டி அவர்களை அழைத்து வரச் செய்தார்;நீதிபதியும் அவர்களைக் கண்டித்தார்;

விளைவு?

அடுத்த சில வாரங்களில் இவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது;மேலும்,இவரது மனைவி தரப்புக்கு இவர் வழக்குச் செலவு உள்பட எதுவும் தரவேண்டியதில்லை;என்றும் தீர்ப்பானது;சுமாராக 12 முதல் 14 ஆண்டுகளாக இந்த வழக்குடன் போராடியிருந்தார் என்பது பின்னர் தெரிந்தது;
அன்று மாலையே எம்மிடம் தேடிவந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்;அன்று முதல் அவர் எனது அண்ணன் ஆனார்;ஆமாம்! அவரது கடந்த கால வாழ்க்கைச் சோகங்களைத் தெரிவித்தார்;எமக்கே கண்ணீர் வந்தது;நாம் மட்டும் தான் பலவிதமான அவமானங்களைச் சந்தித்தோம்;என்று எண்ணியிருந்தோம்;இவரது வாழ்க்கை அதைவிட கொடூரமாக இருக்கின்றதே? என்று வருந்தினோம்;இவரது ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் நீக்கி இவரை இப்பிறவியிலேயே பரிசுத்த ஆத்மாவாகவும்,மகத்தான செல்வந்தர் ஆக்கவும் அக்கணமே மனதிற்குள் சபதம் எடுத்தோம்;

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது நட்பு வட்டம் எமது ஜோதிட வாடிக்கையாளர்களாக ஆனது;
அவருடைய நெருங்கிய நண்பர்கள் எமது ஆத்மார்த்தமான நண்பர்கள் ஆனார்கள்;

அந்த அண்ணன் தமது ஆருயிர் நண்பர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்;அவருக்கு 11 குழந்தைகள்;அவரோ தினக்கூலி;எமக்கோ ஆச்சரியம்;இவரும்,இவரது மனைவியும் தினசரி வேலைக்குப் போய் எப்படி 11 குழந்தைகளுக்கு உணவு தருகிறார்கள்? என்று;ஆனால்,அவரிடம் இதைக் கேட்க முடியவில்லை;11 குழந்தைகளுக்கும் ஒரே நாளில் ஜாதகம் பார்த்து முடித்தோம்;அதில் 7 வது குழந்தையாக ஒரு மகன் இருக்கிறான்;இந்த மகனின் ஜாதகப்படி நீங்கள் இன்னும் 4 வருடம்,19 நாட்களுக்குப் பிறகு கோடீஸ்வரர் ஆவீர்கள்;புதையல் கிடைப்பது போல உங்களுக்கு திடீரென சிலபல கோடிகள் கிடைக்கும்;என்றோம்;அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்;போய்விட்டார்;எனது அண்ணனோ,அவரிடம் என்னை விட்டுக் கொடுக்காமல் வாதாடியிருக்கிறார்;


காலங்கள் கடந்தன;இந்த தினக்கூலியின் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்;ஆனால்,அவரை கவனிக்க உறவினர்கள் யாரும் செல்லவில்லை;இவரை இவரது மனைவி கட்டாயப்படுத்தி,அந்த மருத்துவமனையில் கவனிக்கச் சொல்லி கொண்டு போய்விட்டுவிட்டு வந்திருக்கிறார்;இவரும் சில மாதங்கள் இருந்து அவருக்கு துணையாக இருந்திருக்கிறார்;இவர் வந்ததாலோ என்னவோ,அந்த உறவினர் குணமாகிவிட்டார்;இவருக்கு தினசரி சம்பளம் மட்டும் தந்திருக்கிறார்;குணமான சில வாரங்களில் அந்த உறவினர் உயில் எழுதியிருக்கின்றார்;அவரது சொத்துக்கள் பல கோடி ரூபாய்கள் பெறும்;உயில் எழுதிய சில மாதங்களில் அந்த உறவினரின் ஆயுள் நிறைவடைந்தது;சிவபதம் அடைந்துவிட்டார்;முறைப்படி உயிலை பதிவு செய்திருந்தபடியால்,இவருக்கு மட்டும் சில கோடி ரூபாய்கள் சொத்து கிடைத்தது;தினக்கூலியாக இருந்தவர் இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டார்;ஆனால்,இதை அந்த தினக்கூலி எம்மிடம் கூறவில்லை;இதை உடன் இருந்து கவனித்த எமது அண்ணன் தான் தெரிவித்தார்;ஜோதிடத்தின் மீது எமது அண்ணனுக்கு நம்பிக்கை அதிகமாகிவிட்டது;இப்போது எமது அண்ணன் எம்மை ஜோதிடம் கற்றுத் தரச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்;

நேர்மையான ஜோதிடர்கள் இதைப் போல தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்;அவர்களால் தான் பல குடும்பங்கள் வசதியாகவும்,நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றன;எமக்கு கொஞ்சம் எழுத்தாற்றலும்,இணையம் பற்றிய அறிவும் இருப்பதால் எம்மைப் பற்றி எமது ஜோதிட அனுபவம் பற்றி எழுத முடிகிறது;


இப்படிக்கு
சுப ஜோதிடர் கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர்.

9092116990 9364231011

எமது ஜோதிட அனுபவங்கள்-1


அது ஒரு சிறுகிராமம்; ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வரும்;அங்கே ஒரு நண்பர் எம்மை அழைத்துச் சென்றார்;ஒரு நாள் முழுக்கவும் அங்கேயே இருந்து அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு ஜாதகம் பலன் சொல்லிக் கொண்டு இருந்தோம்;

ஒரு இளைஞர் வந்தார்;அவரது ஜாதகத்தைப்பார்க்கும் போது,அவரது முன்னோர்கள் செய்த தவறுகள் இவரது திருமண வாழ்க்கையைத் தடுத்துநிறுத்தியிருக்கின்றது;வயதோ 30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது;

சுமாராக 42 ஆலயங்களுக்கு ஒரு வருடத்திற்குள் சென்று வந்தால் மட்டுமே அந்த இளைஞருக்கு திருமணம் நடக்கும்;இல்லாவிடில்,இந்தப் பிறவியில் திருமணமே நடக்காது;என்ன செய்ய? இந்த இளைஞனது குடும்பப் பின்னணி மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது;
நீண்ட யோசனைக்குப் பிறகு,அந்த இளைஞனை 3 முறை அண்ணாமலைக்குச் சென்று வரும்படி பரிகாரம் கூறினோம்;அந்த 3 முறையும் அவரது பிறந்த நட்சத்திர நாளன்று செல்லும் விதமாக எழுதிக் கொடுத்தோம்;

அடுத்த ஒரு மாதத்திற்குள் அந்த இளைஞர் ஒருமுறை அண்ணாமலைக்கு சென்று கிரிவலம் முடித்துவிட்டு,தமது கிராமத்திற்குத் திரும்பினார்;
திரும்பிய மறுநாளே,பெரும் தொழிலதிபர் ஒருவர்,இவரை மருமகனாக்கிக் கொண்டார்;இந்த சம்பவம் 2009 இல் நிகழ்ந்தது;

எல்லாம் அண்ணாமலையாரின் அருள்!

திருமண ஜோதிடர் கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

9092116990  9364231011

Friday, December 18, 2015

தேவதானம் (ராஜபாளையம் அருகில் அமைந்திருக்கும்)அன்னை தவம்பெற்ற நாயகி 108 போற்றிகள்!!!


தினமும் இந்தப் பாடலை 21 முறை வீதம்,48 நாட்கள் பாராயணம்(வீட்டில் அல்லது கோவிலில்) செய்ய,அல்லல்கள் அகன்று அன்னையின் அருளும் சுபிட்சமும் கிட்டும்;

1.ஓம் அகிலம் காக்கும் அன்னையே போற்றி
2.ஓம் அகிலாண்ட ஈஸ்வரியே போற்றி
3.ஓம் அச்சம் தவிர்க்கும் அருமருந்தே போற்றி
4.ஓம் அரி ஹரி அம்மனே போற்றி
5.ஓம் அமுதம் அளிப்பவளே போற்றி
6.ஓம் ஆனந்த வடிவானவளே போற்றி
7.ஓம் ஆதிபராசக்தியே போற்றி
8.ஓம் இடுக்கண் களைபவளே போற்றி
9.ஓம் இருள் நீக்க வந்தவளே போற்றி
10.ஓம் இன்றும் காட்சி தரும் தேவியே போற்றி
11.ஓம் ஈடில்லா உபகாரியே போற்றி
12.ஓம் ஈகையின் வடிவே போற்றி
13.ஓம் உண்மையின் உருவே போற்றி
14.ஓம் உன் தாள் பணிந்தோம் போற்றி
15.ஓம் ஊரெல்லாம் உறைபவளே போற்றி
16.ஓம் ஊழ்வினை அறுப்பவளே போற்றி
17.ஓம் எம்மை ஆளும் சக்தியே போற்றி
18.ஓம் எங்கள் குலவிளக்கே போற்றி
19.ஓம் ஏழைக்கு இறங்குபவளே போற்றி
20.ஓம் ஏழிசை வடிவானவளே போற்றி
21.ஓம் ஏற்றமெல்லாம் தருபவளே போற்றி
22.ஓம் ஐயம் தீர்ப்பவளே போற்றி
23.ஓம் ஐஸ்வர்யம் தருபவளே போற்றி
24.ஓம் ஒளியுடைய சக்தி தேவியே போற்றி
25.ஓம் ஓங்கார நாதமே போற்றி
26.ஓம் ஓளடதமே போற்றி
27.ஓம் கருணையின் வடிவே போற்றி
28.ஓம் கனவில் தோன்றும் தாயே போற்றி
29.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
30.ஓம் திருஓலக்கம்பாறையை அரசாளும் தேவியே போற்றி
31.ஓம் காலத்தை வென்ற சாம்பவியே போற்றி
32.ஓம் காப்பாற்ற வருவாய் போற்றி
33.ஓம் கீர்த்திக்கு உரியவளே போற்றி
34.ஓம் குலம் தழைக்க அருள்பவளே போற்றி
35.ஓம் குன்றில் இட்ட விளக்கே போற்றி
36.ஓம் குங்கும கோதையே போற்றி
37.ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
38.ஓம் கூற்றுவனை அழிப்பவளே போற்றி
39.ஓம் கூவிட வருபவளே போற்றி
40.ஓம் கேட்ட வரம் தரும் அன்னையே போற்றி
41.ஓம் கொடையளிக்கும் கொற்றவையே போற்றி
42.ஓம் கோபம் தணிப்பவளே போற்றி
43.ஓம் கோதை நாயகியே போற்றி
44.ஓம் சகலசமயத்தார் போற்றும் தேவியே போற்றி
45.ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சஞ்சீவிப்புற்றே போற்றி
46.ஓம் சகலம் அளிக்கும் சக்தியே போற்றி
47.ஓம் சித்தர் வடிவானவளே போற்றி
48.ஓம் சிந்தை தெளிபவளே போற்றி
49.ஓம் சீர்மிகு அம்மையே போற்றி
50.ஓம் செல்வம் கூட்டுவிக்கும் தாயே போற்றி
51.ஓம் சோதிப்பவளே போற்றி
52.ஓம் சோதனைகளைக் களைபவளே போற்றி
53.ஓம் தவவலிமை அளிக்கும் தாயே போற்றி
54.ஓம் தஞ்சமே உன் பாதம் தாயே போற்றி
55.ஓம் திருமறையின் அன்னையே போற்றி
56.ஓம் தீவினை அறுப்பவளே போற்றி
57.ஓம் தீமைகளை அழிப்பவளே போற்றி
58.ஓம் தூயவளே போற்றி
59.ஓம் தேசமெல்லாம் உறைபவளே போற்றி
60.ஓம் நம்பிக்கை தருபவளே போற்றி
61.ஓம் நம்பிக்கை தருபவளே போற்றி
62.ஓம் நல்லனவெல்லாம் தருபவளே போற்றி
63.ஓம் நவதுர்க்கையின் வடிவானவளே போற்றி
64.ஓம் நல்வரம் தரும் நாகம்மையே போற்றி
65.ஓம் நினைவில் நிற்பவளே போற்றி
66.ஓம் நினைத்தவுடன் காட்சி தருபவளே போற்றி
67.ஓம் நெஞ்சில் நிறைந்தவளே போற்றி
68.ஓம் நேர்வழி நடத்துபவளே போற்றி
69.ஓம் நோய்கள் தீர்ப்பவளே போற்றி
70.ஓம் பசி நீக்கும் பரமே போற்றி
71.ஓம் படியளக்கும் பகேசுவரியே போற்றி
72.ஓம் பாவங்களை நீக்கும் பரமே போற்றி
73.ஓம் புவனம் காப்பவளே போற்றி
74.ஓம் தவம் பெற்ற நாயகியே போற்றி
75.ஓம் புகழுக்குரியவளே போற்றி
76.ஓம் சிவசிவ சக்தியானவளே போற்றி
77.ஓம் பூலோகம் நிறைந்தவளே போற்றி
78.ஓம் பூஜைக்குரியவளே போற்றி
79.ஓம் பூமாதேவியே போற்றி
80.ஓம் பூமாதேவியே போற்றி
81.ஓம் பூவையர் தேவியே போற்றி
82.ஓம் பெரியவளே போற்றி
83.ஓம் பேரருள் புரிபவளே போற்றி
84.ஓம் பேசும் தெய்வமே போற்றி
85,ஓம் பொன்னே புகழே போற்றி
86.ஓம் பொற்பாதம் பணிந்தோம் போற்றி
87.ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி
88.ஓம் மண்ணே மருந்தானவளே போற்றி
89.ஓம் மாங்கல்யம் அளிப்பவளே போற்றி
90.ஓம் மாதுளம்பூ நிறத்தவளே போற்றி
91.ஓம் முக்தி தரும் முனியம்மையே போற்றி
92.ஓம் முதலில் அழைக்கப்படுபவளே போற்றி
93.ஓம் மூலாதாரங்கள் அளிப்பவளே போற்றி
94.ஓம் மேதினின் திருமகளே போற்றி
95.ஓம் மேன்மை தருபவளே போற்றி
96.ஓம் வற்றாத ஜீவநதியானவளே போற்றி
97.ஓம் வளம் பல தருபவளே போற்றி
98.ஓம் வாழ்வளிக்கும் வரமே போற்றி
99.ஓம் விசுவரூபிணியே போற்றி
100.ஓம்விரதத்தின் மகிமையே போற்றி
101.ஓம் விண்ணளிக்கும் விந்தையே போற்றி
102.ஓம்விளக்கு பூஜைக்குரியவளே போற்றி
103.ஓம் வீரமளிக்கும் அன்னையே போற்றி
104.ஓம் வெற்றிக்கு உரியவளே போற்றி
105.ஓம் வேள்வியில் உதிப்பவளே போற்றி
106.ஓம்வேற்றுமை களைபவளே போற்றி
107.ஓம் தவம் பெற்ற நாயகியே போற்றி
108.ஓம் வையகம் தழைக்க வந்தவளே போற்றி



Thursday, December 17, 2015

பால்கன் நார்ஸ்டர்டாமஸ்


பல்கேரியாவில் ஒருவர் வாழ்ந்துவந்தார்;அவரது பெயர் வெஞ்செலியா பண்டவா டிமிட் ரோவா;இவர் 12 வயது வரை சராசரி வாழ்க்கை வாழ்ந்து வந்தார்;12 வது வயதில் இவருக்கு புயல் ஒன்றில் சிக்கியதன் மூலமாக கண்பார்வை பறிபோனது;அதன் பிறகு,இவர் நடக்க போகும் சம்பவங்களை சொல்ல ஆரம்பித்தார்;தமிழில் இதை தீர்க்க தரிசனம் என்று கூறுவர்;

இரட்டை மாடித் தாக்குதல்,அமெரிக்கா,2004 சுனாமி,கறுப்பினத்தைச் சேர்ந்தவர் அமெரிக்காவின் அதிபராவது(பராக் ஒபாமா) போன்றவைகளை முன் கூட்டியே கூறியவர்;இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பைப் பற்றியும் கூறியுள்ளார்;

2010 முதல் 2016க்குள் அணுஆயுத யுத்தம் உண்டாகும்.இதனால் ஐரோப்பாவே காலியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்;பராக் ஒபாமா தான் அமெரிக்காவின் கடைசி அதிபர் என்று கூறியுள்ளார்;இதற்குரிய அர்த்தம் என்னவென்று தெரியவில்லை;2016 வாக்கில் அமெரிக்காவை தொடர்ந்து புயல் தாக்குமா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் தாக்குதல் நேரடியாக அமெரிக்காவையே தாக்குமா? அல்லது பூகம்பத்தால் அமெரிக்காவின் பெரும்பகுதி அழியுமா? என்று தெரியவில்லை;இவையெல்லாம் ஒரு யூகமே!

2043 வாக்கில் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இஸ்லாமியக் குடியரசு உருவாகும்;

2130 ஆம் ஆண்டு வாக்கில் பூமியில் மனிதர்கள் தண்ணீருக்குள் வாழ ஆரம்பிப்பார்கள்;அப்படி வாழ வேற்றுக்கிரக மனிதர்கள் உதவி செய்வார்கள்;

3005 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கிரகத்தில் பெரிய போர்(?!) வெடிக்குமாம்;
இவையெல்லாம் இவர் கணித்திருப்பது;

இவர் 1996 ஆம் ஆண்டில் மறைந்துவிட்டார்;



உங்களது நீண்ட கால வழக்கு தீர ஒரு சுலப வழி


பல ஆண்டுகளாக உங்களுக்கு வழக்கு இருக்கின்றதா? 

உங்கள் பக்கம் நியாயம் இருந்தும்,வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கிறீர்களா?

ஆம் எனில்,அந்த வழக்கு சில வாரங்களில் முடிவுக்கு வர இந்த சிவரகசியத்தைப் பின்பற்றுங்கள்;

இந்த மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்லுங்கள்;

மார்கழி 30 நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது முதன் முதலாக சிவதரிசனம் செய்துவிட்டாலே போதும்.அந்த ஈசனின் அருளால் அடுத்த சில வாரங்களில் வழக்கு முடிவுக்கு வந்து,தீர்ப்பின் நகலே வாங்கிவிடலாம்;

சிவாலயத்தில் இருக்கும் போது,ஒரு மணி நேரம் வரை       ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;சிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு சன்னதியின் முன்பாகவும் இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை ஜபிக்க வேண்டும்;

கடந்த பல நூற்றாண்டுகளாக நமது தமிழ்நாட்டில் இந்த வழிமுறை மூலம் நீதி நிலைநாட்டப் பட்டிருக்கின்றது;

பின் குறிப்பு:ரகசியமான இந்த சுயபரிகாரத்தை அப்பாவி மற்றும் நேர்மையாளர்களின் நலனுக்காவே வெளியிடுகிறோம்;எனவே,இதை பிறரிடம் தெரிவிக்காமல் மட்டுமே பின்பற்ற வேண்டும்;இல்லாவிடில்,பலன் கிடைக்காது;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!