Thursday, December 20, 2012

திருவதிகை வீரட்டானத்தின் தனிச்சிறப்புகள்!!!







பலாப்பழத்துக்குப் புகழ் பெற்ற பண்ருட்டி மாநகரத்தின் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் முதல் வீரட்டானமே திருவதிகை ஆகும்.இந்தக் கலியுகத்திலும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்து செல்லும் ஓரிரு வீரட்டானங்களில்(திருக்கடையூர்,திருக்கோவிலூர்) இதுவும் ஒன்று!

பெரும்பாலான சிவபக்தர்களுக்கு தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் என்று மட்டுமே தெரியும்.அட்டவீரட்டானங்களில் இதுவும் ஒன்று என்பது தெரியாது என்பது கொடுமையான உண்மையாகும்.

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
   மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
   வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி
பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
   பார்முழுதும் ஆய பரமா போற்றி
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி
   கார்கெடிலம் கொண்ட கபாலீ போற்றி  (அப்பர்)

கெடில நதிக்கரையில் அமைந்திருக்கும் வீரட்டானம் இந்த திருவதிகை ஆகும்.தேரும் சாரதியும் படைக்கலனும் இல்லாமல் எல்லாம் வல்ல பரமேஸ்வரன் புன்னகையாலேயே புரம் எரித்ததால் கையில் இருந்த ஒரே ஆயுதமான அம்பும் மிக அதிகமாக இருந்ததால் புரம் எரிந்து விழுந்த ஸ்தலம் திரு அதிகை என்று பெயர் பெற்றது.இதனாலேயே பரமேஸ்வரனுக்கு அதிகன்,அதியன்,விரியூர் நக்கன்,நக்கன்,நக்கீரன்(நக்க+ஈரன்),பேரெயில் முறுவலான்,திரிபுராரி,திரிபுரசம் காரி,திரிபுராந்தக மூர்த்தி என்று திருப்பெயர்கள் உண்டாயின.


சமுதாயத்தில் தங்கள் தங்கள் இடத்தில் இருந்து தத்தம் தொழிலைச் செய்து பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவிதமான இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த நால்வகைச் சாதியினரிடையே பிரிவினையை உண்டாக்கிச் சமுதாயத்தைப்பிளவுபடுத்தியதாலேயே பவுத்த மதத்தைத் தோற்றுவித்த நாத்திக சித்தார்த்தனுக்கு புத்தன் என்று பெயர் அமைந்தது;தர்க்கம் செய்து மற்றவர்களின் மனதைக் கெடுப்பதால் பவுத்தர்களுக்கு தர்க்கவாதிகள் என்று பெயர்.

தருக்க சாத்திரத்தவர்கள் சொல் இடுக்கண் வரும் மொழி

 என்று மூன்று வயதிலேயே மூன்று காலமும் உணர்ந்த தெய்வ மழலை திருஞான சம்பந்தப்பெருமான் தர்க்கவாதிகள்களாகிய பவுத்தர்களின் துன்பம் தரும் பேச்சினைக் காட்டுகின்றார்.


நாராணன் நடித்த எழுவாய்த் தருக்கத்து
அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த
வெள்ள முரண் அரக்கர்         (கல்லாடம்)


என்று புத்தனாக அதாவது கலகக்காரனாகச் சென்று மஹாவிஷ்ணு செய்த கலகத்தினால் முப்புராதியர்கள் சிவபூஜையை விடுத்தனர்.அப்பொழுதும் பறக்கின்ற மூன்று கோட்டைகளையும் ஓரிடத்தில் ஒன்று  கூட்டி ஒரு சேர அழிக்கும் வல்லமை யாரிடமும் இல்லை;பல வகையிலும் முயற்சி செய்து தோல்வியுற்ற பிரம்மன்,விஷ்ணு முதலான தெய்வங்களும் இந்திரன் முதலான தேவர்களும் கெடில நதிக்கரையில் சரக்கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர்;பறந்து பறந்து அச்சத்தைத் தருகின்ற மூன்று கோட்டைகளையும் அழித்தருளுமாறு வேண்டித் தொழுதனர்.தாயும் தந்தையுமாகத் திகழும் ஈசனன பிரம்மா,விஷ்ணு இந்திரன் முதலானோர் இன்னிசை பாடிக் காலையும் மாலையும் மலர் தூவிக் கை கூப்பி தொழுது வழிபட்டுத் தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.

அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை(சுந்தரர்)
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி
கடிமலர்கள் பல தூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழ
விரிகொன்றை விண்ட தொடையலான்(சம்பந்தர்)
என்று தேவர்களின் சிவபூஜையைத் தெய்வீகத் தேவாரம் சிறப்பிக்கின்றது.

சீதையின் தந்தையான ஜனகரின் அரண்மனையில் பூஜிக்கப்பட்டு வந்த இந்த வில்லை மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமன் எடுத்துத்  தன் வல்லமையைக் காட்டியபோது அது உடைந்து போனதே தவிர,வளையவில்லை;ஏனெனில்,அந்த  சிவதனுசு கல்லால் செய்யப்பட்டதாகும்.கல்லால்  ஆன வில்லை எப்படி வளைக்க முடியும்?


நந்தித் தேவர் ரிஷப வாகனம் ஆவதற்கு முன்பும் பிள்ளையார்,முருகன் ஆகியோர் பிறப்பதற்கு முன்பும் நடைபெற்ற,கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த அருட் செயலே திரிபுரம் எரித்த ஸ்ரீகால பைரவரின் வீரச் செயலாகும்.திரிபுரத்தை எரித்த இடமே திருவதிகை ஆகும்.
இப்போது உள்ள நான்முகம் கொண்ட பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு முன்னர் பல ஊழிகளுக்கும் முற்பட்டு,மிகப் பழைமையான பிரம்மா விஷ்ணுக்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த வீரச் செயலே திரிபுரம் எரித்தது!

திரிபுர தகனத்தின் தொன்மையை
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள் நோக்கம்


என்று ஓங்காரம் உணர்ந்த மாணிக்க வாசகப் பெருமான் மிக அழகாகக் காட்டுகிறார்.அப்படியிருக்க இந்தக் கலியுகத்தில் பிற்காலத்தில் இவ்வற்புத வீரத் திருவிளையாடலை நாடகமாக்கியவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல்,பக்தியும் சிரத்தையும் இல்லாமல்,திரிபுர தகனம் நடந்த காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் மனம் போனபடி நாத்திகப்போக்கில் பிள்ளையாரையும் சேர்த்து அவரை தீய சக்தியாக காட்டி எழுதினர்.


பிள்ளையார் என்ற தெய்வமே இல்லாத காலத்தில்,புன்னகை புரிந்த பரமனின் திருவடி தீண்டப்பட்ட அளவிலேயே தேர் அச்சு முறிந்து விழுந்து திரிபுரமும் எரிந்து சாம்பலாகியிருக்கும் போது நாடகக் கலைஞர்கள் சர்வேஸ்வரனைத் தேரின்  மேல் ஏற்றி அமர வைத்து பிள்ளையாரைக் கொண்டு அச்சு முறித்துள்ளனர்.

புன்னகையால் புரம் எரித்த வீரட்டேஸ்வரர் பதினாறு பட்டை லிங்கப் பரம்பொருளாகக்  கர்ப்பக் கிருகத்தில் கருணை பொங்கக் காட்சி அளிக்கிறார்.

சமண மதத்திற்கு மாறிய திருநாவுக்கரசரை சூலை நோய் மூலமாக ஆட்கொண்டு,மீண்டும் சைவத்துக்கே மாற்றியவர் இந்த திருவதிகை வீரட்டேஸ்வரர்;

சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே
சாவாமே காத்து என்னை ஆண்டாய்(திருநாவுக்கரசர்)

ஆன்மீகக்கடலின் அனுபவக்குறிப்பு: அஷ்ட கர்மாக்களில் தேர்ச்சி பெறும் நிலையை எட்டியவர்கள் தன்னையறியாமலேயே திருவதிகைக்குச் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.இந்த சூழ்நிலையானது பல கோடி ஆண்டுகளாக பல சித்தர்களுக்கும்,சராசரி மனித நிலையிலிருந்து சித்தநிலையை  எட்டும் நிலைக்கு வந்தவர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது;அப்படி திருவதிகை வீரட்டேஸ்வரரை வழிபடச் செல்லும்போது கோவிலுக்குள் எந்த சராசரி மனிதருக்கும் தெரியாத,பல தெய்வீக நிலைகளை அவர்கள் மட்டும் உணர்வார்கள்;சிலபல சிவ தெய்வ சக்திகளை காண்பார்கள்;இதே நிலையை நீங்களும் எட்டவிரும்பினால்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகளும்,அதிகபட்சமாக பத்து ஆண்டுகளும் ஓம்சிவசிவஓம் தினமும் ஜபித்து வர வேண்டும்;அல்லது ஒரு நாளுக்கு அரை மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையிலும் ஸ்ரீகால பைரவர் மந்திரஜபம் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர ஜபத்தை ஜபித்திருக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஸ்ரீபைரவர் வழிபாடு செய்தாலே சில நொடிகளிலேயே ஸ்ரீகால பைரவர் நமக்கு அஷ்ட கர்மாக்களில் தேர்ச்சியைத் தருவார் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.முயலுவோமா? இந்த கேடு கெட்ட மனிதப் பிறப்புக்களிலிருந்து தப்பிப்போமா?                          ஆதாரம்:அட்ட வீரட்டானங்கள்


ஓம்சிவசிவஓம்

ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்தூர்




                                                       

ஈஸ்வர பட்டசுவாமிகளின் ஜீவசமாதியானது பழனி மலையின் கிரிவலப்பாதையில் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்;இவரது அருளாற்றல் மிக மிக சக்தியும்,வலிவும்,பொலிவும் நிறைந்தது;இவரது குருபூஜை விழாவை ஆண்டு தோறும் திருச்செந்தூரில் நடத்தி வருகிறார்கள்.இவரது புகைப்படத்தை நமது தொழில் நிறுவனத்தில் வைத்து தினமும் வழிபட்டால் எப்பேர்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறனுள்ளதாக நமது தொழில் உயர்ந்துவிடும்;ஆம்! நமது தொழில் அபார வளர்ச்சி பெறும்.அப்படி அபார வளர்ச்சி பெற நாம் ஒரே ஒரு சுயக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்;அது அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிடுவதே!!!
ஓம் ஈஸ்வர பட்டாய நமஹ
ஓம்சிவசிவஓம்

Wednesday, December 19, 2012

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும் பிரபஞ்சமும் நமது பூமியும்!!!





பல கோடி ஆண்டுகளாக பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது;சூரியன் நமது காலக்ஸியான பால்வழிமண்டலம் எனப்படும் மில்கிவேயை(Milky Way)ச் சுற்றி வருகிறது;பால்வழிமண்டலம் கன்னிராசி மண்டலத்தைச் சுற்றிவருகிறது;இதுவரையிலும் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்கள்:

உலகின் மிக பிரம்மாண்டமான விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சி அமைப்பான நாசா அமெரிக்காவுக்குச் சொந்தமானது;அமெரிக்க ராணுவத்தை விட வலிமையும்,சக்தியும்,செல்வ வளமும் கொண்டது;இங்கே ஏராளமான விஞ்ஞானிகள் இருபத்துநான்கு மணி நேரமும் விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்;இவர்களின் ஆராய்ச்சியால் தான் நாம் வாழ்ந்து வரும் சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை நாம் கண்டறியமுடிந்தது;(இவர்கள் விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்த உண்மைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களாகிய ஆர்ய பட்டர்,பாஸ்கராச்சாரியார்,அபிராமி பட்டர்,சித்தர்களில் ஒரு சிலர் கண்டறிந்து பாடல்களாக எழுதியிருக்கின்றனர்;அதில் ஒன்றுதான் திருமந்திரமும்,காகபுஜண்டர் சித்தரின் பாடல்களும்!!!)


மாயன் காலண்டர் 21.12.2012 அன்றோடு முடிவதை நாசா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை;இதில் ஏதாவது உண்மை இருக்கலாம் என்று கருதி,பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து வெளியிட்டிருக்கிறது;அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி நாம் வாழும் பூமியும்,சூரியனும்,சந்திரனும்,பால்வழிமண்டலமும் ஒழுங்கற்ற நிலையிலிருந்து ஒழுங்கு நிலைக்கு வர இருக்கிறது;இந்த ஒழுங்கு நிலையானது வரும் டிசம்பர் 23,24,25-2012 என்ற ஏற்பட இருக்கிறது!!!


 இதன் படி உலகத்தில் பருவநிலை மாற்றங்கள் திகைப்பூட்டும் விதமாக ஏற்பட இருக்கிறது;வட துருவம்  தென் துருவமாக மாற இருக்கிறது;பூமியின் புவியீர்ப்பு விசையில் மாற்றம் உண்டாகும்;மனித குல வரலாற்றில் மட்டுமல்ல;பிரபஞ்ச வரலாற்றிலும் இது மிகப் பிரம்மாண்டமான மாற்றமாக இருக்கும் என்று நாசா ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது;இந்த மாற்றத்தால் தனுசு ராசி மண்டலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது;மேலும் விபரமறிய நாசாவின் இந்த இணைப்பைச் சொடுக்கவும்;ஆங்கிலத்தில்  இருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவின் படி டிசம்பர் 23,24,25 இந்த மூன்று நாட்களும் யாரும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கிறது.செய்வோமா?


ஓம்சிவசிவஓம்

தினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமான உண்மை!! இந்துக்களே ஒன்று சேருவோம்!

ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்.
அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே நீங்கள் அகதி என்றால் எப்படி இருக்கும்?
இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்து விட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு, முன்பு போல் வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம். இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!
இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில் தனக்கு சமமாகவோ, தனக்குப் போட்டியாகவோ வந்துவிடக்கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவை துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது.
அவற்றில் ஒன்றாக, நான் சமீபத்தில் கேள்விப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஜாதிகள், அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர், யாருக்கும், யாருக்கும் நல் உறவு என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஏராளமாகப் பணம் ஒதுக்கி உள்ளதாம்!
இந்த பணத்தை உதவித் தொகையாக இங்குள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து, ஆராய்ந்து வருகிறதாம்! இதேபோல, மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்.
"யோவ் மணி... இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?
இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம். யாருக்கு யார் எதிரி என்பதை தெரிந்து, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டிமேட்டாக' நாட்டைத் துண்டாடுவதுதான் அவர்கள் நோக்கம்!
இதன் முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. தம் தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டின் பல பாகங்களுக்கும் சிதறிச் சென்றுள்ளனர்.
இதே செயல்முறையைப் பயன்படுத்தி, மற்ற மாநிலங்களிலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!
இந்தியனே... நீ விழித்துக் கொள்ளும் நேரம் நெருங்கிவிட்டது; இனியும் தூங்காதே!
***

உலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு


வாஷிங்டன்: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது: உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இதே போல் 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அடுத்தபடியாக, இந்து மதத்தை 1 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதமாகும். மேலும், 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர். இவர்களில் அதிகம் பேர், ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள், ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தை பின்பற்றுவோரில் 90 சதவீதம் இந்தியா, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் வசிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.                                                                   
அடேயப்பா! மதமாற்ற வேகம் இந்த அளவுக்கு வளர்த்துடுச்சா?

நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டி -1



இந்து தர்மத்தின் புராதன போர்க்கலைகளில் ஒன்று வர்மக்கலை ஆகும்.இதன் மருத்துவசிகிச்சைப் பிரிவே இன்றைய நியூரோதெரபி ஆகும்.மும்பையில் டாக்டர் லஜ்பதிராய் மெஹ்ரா  என்பவரால் இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டு,தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் நியூரோதெரபிஸ்டுகள் மருத்துவச் சேவையாற்றிவருகின்றனர்.

எந்த ஒரு மருந்தும் இல்லாமலேயே நமது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அதிசயத்தை நேரில் உணரும்போது ஆச்சரியமும்,மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியும் அடைகிறோம்.நமது உணவுப்பழக்கத்தை டிவி விளம்பரங்கள் மூலமாக மேல்நாட்டினர் மாற்றிவிட்டதால்,இன்று நோயாளி சமுதாயமாக மாறிவருகிறோம்;இதை மேல்நாட்டினரின் கலாச்சாரத் தாக்குதல் என்று மட்டும் எண்ணாமல்,நமது இந்து தர்மத்தின் மீதான சர்வதேச கிறிஸ்தவ தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே இனி நம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் நமது சுய அக்கறையால் பாதுகாத்திட முடியும்.எப்படி நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதை நமக்கு விவரிக்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த்,நியூரோதெரபிஸ்ட்,திருச்சி.

சுமார் 12 ஆண்டுகளாக நியூரோதெரபிஸ்ட் சிகிச்சையை அளித்து வருகிறார்.இவரது மருந்தில்லாத சிகிச்சையால் குணமடைந்தவர்கள் ஏராளம்;பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப்பின்னர்,அறுவை சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது;இவரிடம் சிகிச்சை எடுத்தப்பின்னர்,இவர் சொல்லும் மருத்துவ ஆலோசனையை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்.அப்படி பின்பற்றினால் மட்டுமே மீண்டும் அதே நோய் நம்மை தாக்காது;முன் அனுமதி பெற இவரது செல் எண்:9894487122(காலை 9 மணி முதல் இரவு எட்டு மணி வரை);இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப் பின்னர் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மின் அஞ்சலிலும் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.இவரது மின் அஞ்சல்:neurovijay@gmail.com  மருத்துவக் கட்டணம் மிக மிகக் குறைவு:
பின் குறிப்பு:உங்களின் மருத்துவ ஆலோசனையை போனில் முழுமையாக கேட்க வேண்டாம்;முன் அனுமதி பெற்று,உங்களது மருத்துவ ஆவணங்களை எடுத்துச் சென்று நேரில் ஆலோசனை கேட்கவும்;அதுவே உங்களுக்குச் சிறந்தது.இவரது பேச்சினை நமது யூட்யூப் சேனலில் பார்க்கலாம்;இந்த இணைப்பில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார்.
ஓம்சிவசிவஓம்

புத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயணம்!!!

வேற்குழவி வேட்கை




11.8.2012 ஆன்மிக மலர் இதழில் விஐபி பூஜையறை பேட்டியில் டாக்டர் சிவகடாட்சம், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபரதாச சுவாமிகள் அருளிச்செய்த வேற்குழவி
வேட்கை பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பலநூறு வாசகர்கள் அந்தப் பாடலைப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்காகவும், பொதுவாக
அனைத்து வாசகர்கள் நன்மைக்காகவும் அந்தப் பாடல் தொகுப்பை இங்கே வெளியிடுகிறோம்:

பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே   

1. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே   

 2. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே   

3. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர நல்க வாராயோ உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே  

 4. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ   

5. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ   

6. ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ  

 7. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ   

8. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே   

9.மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ  

 10. இப்பதிகத்தை பாராயணம் செய்து வந்தால் புத்திரதோஷம் நீங்கி, சந்ததி விருத்தியாகும். குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகள்
பிறக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஆன்மிக அருமருந்து இந்தத் துதி.: நன்றி:தினகரன்,ஆன்மீகமலர் 8.9.12  ஒரு நாளுக்கு ஒன்பது முறை நமது வீட்டுப்பூஜை அறையில் ஜபிக்க வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 27 நாட்கள் ஜபித்து வந்தால், நிச்சயமாக புத்திர தோஷம் நீங்கி,குழந்தை பிறக்கும்;தமிழ்நாட்டில் சில ஆயிரம்பேர்களுக்கு இவ்வாறு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது.

 ஓம்சிவசிவஓம்