Saturday, October 20, 2012

உலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது?




காலையில் கண்ணைக் கசக்கும்போதே கார்த்தியும் காஜல் அகர்வாலும் ஒரு காபியை சிபாரிசு செய்கிறார்கள்;

மட்டமத்தியானம் டி.வி.யைப் போட்டால் ‘மேனேஜர்’ கிருஷ்ண மூர்த்தி,டெல்லி கணேஷ், ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ திவ்யதர்ஷினியெல்லாம் செங்கல்பட்டு தாண்டி நின்று கொண்டு ப்ளாட் வாங்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்.

சாயங்காலமாக புதுப்படம் போடுகிற சாக்கில்,10 நிமிஷத்துக்கு ஒருதடவை மூன்று விஜய் மொபைலில் பேசி,சரத்குமார் வேட்டி கட்டி நடந்து,தனுஷீம் விமலும் ஹேர் ஆயில் தடவி,அஞ்சலியும் தமன்னாவும் குத்து டான்ஸ் ஆடி,    ‘ஏண்டா வூட்ல இருக்கீங்க? ஷாப்பிங் போங்கடா’என வேப்பிலை அடிக்கிறார்கள்.(பழமொழியை மாத்துங்கப்பா! கோக் அடிக்கிறார்கள்)
நடுநடுவே ‘புரட்சிப் போராட்டம்’ என பிரபு நகைக்கடைக்குப்பண்ணுகிற விளம்பரத்தில் சே குவேரா,பகத்சிங்குக்கு எல்லாம் டவுசர் கிழிகிறது.

ஊரே தூங்குகிற மிட்நைட்டில் பார்த்தால் தாடை வீங்கிய சஃபாரி பார்ட்டி ஒருவர் வீரிய லேகியத்துக்கு விளம்பரித்துக் கொண்டு இருக்கிறார்.
இன்னொரு சேனலில் ஒரு கொழுத்த டாக்டரும் கருத்த காம்பியரும் ‘இதாங்க அமுக்ரா லேகியம். . .’ என கடுப்படிக்கிறார்கள்.
பின்னிரவுக்குப்பின்னும் ஒரு வெள்ளைக்காரிக்கு சிந்தாதிரிப்பேட்டை பெண்ணை டப்பிங் பேசவிட்டு வீட்டுப்பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தொப்பையை குறைக்க டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உச்சகட்டமாக சிட்டி முழுக்க ‘சினேகா பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம். . .?’ என போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.
நன்றி: நமது நலனிலும்,நாட்டு நலனிலும்,தமிழர்களின் நலனிலும் அக்கறையாக இருக்கும் ஆனந்த விகடன்,பக்கம் 56,வெளியீடு1.8.12

நீங்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்:மனோதத்துவம் சொல்லுவது என்னவெனில்,நமது ஐம்புலன்களான கண்,காது,மூக்கு,சுவை,தொடு உணர்வு இவைகளில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளும் தான்.இவை இரண்டையும் கட்டுப்படுத்திட தெரிந்து கொண்டால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்;
அதே சமயம் இந்த இரண்டையும் குறி வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களே திரைப்படமும்,டிவியும்.நம்மை அடிமுட்டாளாக்குவதில் எப்படி வெற்றி பெற்று,கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.
ஒரு கோடி சம்பளம் வாங்கும் கார்த்தி,ஒரு காபியையா வாங்கும்படி நம்மை நச்சரிப்பது?
சொந்த ஊரில் நிலம் வாங்கினாலே அதில் ஏமாறாமல் வாங்கிட நமக்கு ஆயிரம் சாணக்கியத்தனம் தேவைப்படுகிறது.இதில் செங்கல் பட்டில் வாங்கி,(விவேக் நடித்த செங்கல்பட்டு,செங்கல்பட்டு காமெடி நினைவுக்கு வருகிறதா?)
ஏன் ஒரு விஜய் விளம்பரத்தில் நடித்தால் செல்போன் வாங்க மாட்டோமா? எதற்கு மூன்று விஜய்? நம்மை நாகரீகக்கோமாளியாக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்றோ?

கேரளாவில் கம்யூனிஸ ஆட்சிகளே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன;நகைக்கடை வைத்திருப்பவர் அங்கே போய் புரட்சிப் போராட்டம் என்று விளம்பரப்படுத்த வேண்டியது தானே? ஓ! கேரளாவில் புரட்சி செய்து முடிச்சாச்சு;அது சரி,புரட்சிக்கும் தங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம் ?

பெண்களின் உடல்வாகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமைந்திருக்கும்;அதை ஓரளவுக்கு மேல் மாற்றிடவே முடியாது;ஆனாலும்,அமெரிக்கத் தயாரிப்புகள் நமது தலையில் மிளகாய் இல்லை;இல்லை;சில்லி அரைத்துக்கொண்டு,இந்தியாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.நாம் இன்னுமா ஏமாறுவது?

சினேகா பிரசன்னா கல்யாணச் செய்தியே நமக்குத் தேவையில்லாத விஷயம்.


வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்


நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.
என்ன தொழில் நுட்பம்?


விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன. 
அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
தினமும் அறுவடை:


களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை. 
தாய்லாந்து புளி:


தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.
"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':


விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.

- நமது நிருபர் (நன்றி:தினமலர் 20.10.2012)

அனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு!!!



ஒருவேளை உண்பவன் யோகி(துறவியாக வாழ்பவர்!)
இருவேளை உண்பவன் போகி(நம்மைப் போன்ற குடும்பஸ்தர்!!)
மூன்று வேளை உண்பவன் ரோகி(நோயாளி!!!) மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிடுபவர்கள் ஏதாவது ஒரு நோயின் தாக்கத்துக்கு ஆளாவர்கள் என்பது இதன் விளக்கம்.

காலை   =இஞ்சி
கடும்பகல்=சுக்கு
மாலை   =கடுக்காய் என்று ஒரு மண்டலம்(சுமார் 48 நாட்கள்) தின்றால் கோலை ஊன்றி குறுகி நடந்தவர்,கோலைவிட்டு குலாவி நடப்பாரே!
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சின வைத்தியமில்லை;இதையே வேறுவிதமாகவும் சொல்வார்கள்=சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை;சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;
வில்வப்பழம் தின்பார் பித்தம்போக;பனம்பழம் தின்பார் பசிபோக!!
கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?
**************************************************************************  ஏழைக்கு ஏற்றது எள்ளுருண்டை!
பணக்காரனுக்கு ஏற்றது பருப்புருண்டை!!
இளைத்தவனுக்கு எள்ளு;கொழுத்தவனுக்கு கொள்ளு!!!
நன்றி:அவள் விகடன் பக்கம்16,வெளியீடு 11.9.12

ஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை!!!




இராமநாதபுரத்திலிருந்து 12 கி.மீ.தொலைவில் இருப்பது உத்தரகோச மங்கை ஆகும்.இங்கே மங்களநாதசுவாமி திருக்கோவிலில் தல விருட்சமாக இலந்தை மரம் இருக்கிறது.இந்த இலந்தை மரத்தின் அருகில் ஒரு வரிசைக்கு ஐம்பது லிங்கங்கள் வீதம் இருபது வரிசைகளாக ஆயிரம் லிங்கங்கள் இருக்கின்றன.
இந்த லிங்கங்களைப் பார்த்தவாறு திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் இராகு காலத்திலோ அல்லது அமாவாசையன்று வரும் குரு ஓரையிலோ ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தால் ஒரே நேரத்தில் ஆயிரம் லிங்கங்களை ஜபித்தபலன்கள் மொத்தமாகக் கிடைக்கும்;இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு நாள் வீதம்,12 முறை இங்கே வந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமக்கு லிங்க தரிசனம் கிடைக்கும்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரைவீதம் பனிரெண்டு  திருவாதிரை நாட்களுக்கு  வழிபட்டுவர,கடுமையான கர்மவினைகள் தீர்ந்துவிடும்.

மேலும்,நமது ஆத்ம சக்தி அதிகரிக்கும்.தவிர,ஆயிரம் லிங்கங்களின் ஆசியும் மொத்தமாகக் கிடைக்கும்.


ஓம்சிவசிவஓம்

அமெரிக்காவும் வால்மார்ட்டும்!!


ஒவ்வொரு வருடமும் ஒரு அமெரிக்க குடும்பமும் சராசரியாக $4000களை வால்மார்ட்டில் செலவழிக்கிறது. அமெரிக்காவில் வேறு எந்த நிறுவனத்தையும் காட்டிலும்,வால்மார்ட் மிக அதிகளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு $4 களிலும் $1 வால்மார்ட்டில் மளிகைப்பொருட்கள் வாங்கச் செலவிடப்படுகிறது.

எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒன்று: 2001 லிருந்து 2006ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால் அமெரிக்காவில் 1,33,000 உற்பத்தி வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன என்று தெரிவிக்கிறது.

வால்மார்ட் கம்பெனியின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குழந்தைகளும் 'மருத்துவ வசதி' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால்,அவர்களது மருத்துவச் செலவுகளை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது.வால்மார்ட் கம்பெனி அல்ல!

96% அமெரிக்கர்களுக்கு 20 மைல்களுக்குள் ஒரு வால்மார்ட் கடை உள்ளது.1992 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த சுதந்திர சிறு வணிகர்களின் எண்ணிக்கை 60,000 சரிந்துவிட்டது.

2011 ஆம் ஆண்டில் வால்மார்ட் 'அரசியல் லாபி' செய்ய 7.8 மில்லியன் டாலர்களை செலவழித்தது.இதை செண்டர் பார் ரெஸ்பான்ஸிவ் பொலிடிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ந்து தெரிவித்துள்ளது.இந்தத் தொகையில் பிரச்சாரச் செலவுகள் சேர்க்கப்படவில்லை;

வால்மார்ட் கம்பெனியின் வெறும் ஆறு குடும்பங்களின்(பங்குதாரர்கள்) ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 30% அமெரிக்க ஏழைகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்புக்குச் சமம்.

மேலும் சில அவசியமான தகவல்கள்:இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடிகள்;அமெரிக்காவின் ஜனத்தொகை வெறும் 30 கோடிகள்.

இந்தியாவின் டீன் ஏஜ் எண்ணிக்கை 1.1.2012 அன்று 35 கோடிகள்.

இந்தியாவில் இருக்கும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை 4 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த 4 கோடி பெட்டிக்கடைகளால் 12 கோடிப் பேர்களுக்கு தினசரி வேலை வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அரசியல் பின்பலத்தால் இம்மாதிரியான பன்னாட்டு நிறுவனங்களால் நாம் ஏமாற்றப்படுகிறோம் இந்தியர்கள் உணரும் முன்பே இதுமாதிரியான பன்னாட்டு நிறுவனபூதங்கள் உலகம் முழுவதும் சம்பாதிக்கும் மொத்த லாபத்தை விடவும்,குறைந்தது நான்கு மடங்கு இந்தியாவில் சம்பாதித்துவிடும்.இது நவீன காலனியாதிக்கமே! இவைகளின் ஓராண்டு லாபம் இந்தியாவைத் தவிர்த்து 9,00,000 கோடி ரூபாய்கள் ஆகும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் அரசியல் விழிப்புணர்வோடு இருப்பான்;நாம் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளின் மயத்திலிருந்து மீளவே மாட்டோம்;
நன்றி: சுதேசிச் செய்தி அக்டோபர் 2012

சரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை!!!





மனித இனம் நாகரீகமடையத்துவங்கி சுமாராக 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன.அப்போதுதான் இராமாயணம் நமது நாட்டில் நிகழ்ந்தது.பாதி மனிதனாகவும்,பாதி குரங்காகவும் இருந்த கால கட்டம் அது.அப்போது இருந்த தேசமே கிஷ்கிந்தை ஆகும்.மனிதன் பாதி,குரங்கு பாதி என்ற நிலையில் இருந்த சூழ்நிலையில் தோன்றிய சிறந்த பக்தனே ஆஞ்சநேயர் எனப்படும் மாருதி ஆவர்.அவரைப்போல இன்னொரு ஆத்மா பிறக்க இன்னும் பல லட்சம் வருடங்கள் இந்த பூமி காத்திருக்க வேண்டும்.

சரணாகதி தத்துவத்துக்கு நமக்கு சிறந்த குருவாக இருப்பவர் ஆஞ்சநேயரே! நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்,நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனைக்கும் நாமே காரணம் என்று நம்புகிறோம்.இந்த எண்ணமே நமக்குள்ளிருக்கும் நான் என்ற எண்ணத்துக்கு உயிரூட்டி நம்மை வழிநடத்தத் துவங்குகிறது.இதனால்,என்னால் தான் . . . என்ற எண்ணங்கள் நம்மை ஆட்சி புரியத் துவங்குகிறது.கூடவே,நாம் இன்று கற்று வரும் மெக்காலே கல்வித்திட்டமும் நமது ‘நான்’ என்ற அகங்காரத்தை மிகவும் வலுவுள்ளதாக மாற்றிவருகிறது.இப்படிப்பட்ட அகங்காரம் கொண்ட மனிதர்களால் நமது அரசுத்துறைகளும் அரசு ஊழியர்களால் நிரம்புகிறது.இதனால் தான் மனித நேயம் என்பது அரசு அலுவலகங்களிலும் அரசியலிலும்,ஆட்சியில் தேடிப்பார்த்தாலும் கிடைப்பதில்லை;

இந்த சூழ்நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நினைக்கிறோம்;நாம் செய்யும் ஒவ்வொரு சாதனையையும் நாம் தான் சாதிக்கிறோம் என்று நம்புகிறோம்;இந்த நம்பிக்கையானது நமக்கு நான் என்ற அகங்காரத்தை வளர்க்கிறது.இந்த அகங்காரத்தினால் நாம் ஆரம்பத்தில் சந்தோஷப்படுகிறோம்;போகப்போக என்னால் தான் இந்த உலகமே இயங்குகிறது என்று செயல்படுகிறோம்;கூடவே,நமது ஜாதகப்படி இருக்கும் யோகங்களும் நம்மை வாழ்க்கையில் பெரும் செல்வச் செழிப்புக்குக்  கொண்டு செல்ல ஆடாத ஆட்டம் ஆடிவிடுகிறோம்.கெட்ட நேரமான ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,ஆறாம் இடத்து திசை,எட்டாமிடத்து திசை,பாதகாதிபதி திசை இவைகளில் ஏதாவது ஒன்று நம்மை நெருங்கியதும்,நமது அத்தனை புகழும்,அனைத்து செல்வாக்கும் தூள் தூளாகிவிடுகின்றன.அப்போதுதான் நாம் சாதாரண ஆள் என்பது தெரியத் துவங்குகிறது.அப்போதுதான் நாம் உச்சத்தில் இருக்கும் போது நமக்கு அறிவுரை சொன்னவர்களை நினைத்தும்,அவர்கள் கெஞ்சி கெஞ்சி சொன்ன புத்திமதிகளையும் நினைத்துப்பார்க்கிறோம்.


இப்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்குப்பதிலாக, நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும்,நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் நாம் வழிபடும் ஸ்ரீபைரவரின் அருளால் என்று எண்ணத் துவங்க வேண்டும்;ஒரு சாதனையை நாம் செய்ததுமே நமது மனதுக்குள் ஒருவித உணர்வு தோன்றும். “நாம் தான் இந்த சாதனையைச் செய்தோமா?” என்று தோன்றும்.அப்போது, நமது மனதின் சைத்தான் பகுதி ‘நீ அப்பேர்ப்பட்ட சாதனையாளன்’ என்று அகங்காரம் என்ற திமிரைத் தூண்டிவிடும். இந்த கணத்தில்(கண நேரமான சில நொடிகளில்) இந்த சாதனைக்கு நாம் வழிபடும் ஸ்ரீபைரவரே காரணம் என்றோ அல்லது நாம் தினமும் செய்யும்  ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் என்றோ எண்ணத் துவங்க வேண்டும்.இவ்வாறு ஒவ்வொரு சாதனையைச் செய்து முடிக்கும்போதும் நினைக்கப்பழகினால், நம்மை பாவம் அண்டாது.இந்த உணர்வைத்தான் சுவாமி விவேகானந்தர் கர்ம யோகம் என்று கூறுகிறார். “கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே” என்று சுருக்கமாக கர்மயோகத்தின்  மையப்புள்ளியை விவரிக்கிறார்.

ஒவ்வொரு கடமையையும் செய்வதற்கே நமக்கு உரிமை உண்டு;அந்த  கடமையின் பலன்களை அனுபவிக்க காத்திருக்க வேண்டாம்;அப்படிக்காத்திருந்தாலே நமக்குள் நான் என்ற அகங்காரம் வரத் துவங்கிவிடும்;ஏனெனில்,நான் தானே இந்த வேலையை முடித்தேன்;இருந்தும் ஏன் இதற்கான பலன் நம்மை வந்து சேரவில்லை;எனவே,நாம் நமது அருகில் இருக்கும் வேலைகளை(அடுத்து செய்ய வேண்டிய பணிகளை) செய்து கொண்டே செல்வோம்;இதுவே கர்மயோகத்தின் அடிப்படை ஆதாரம்.இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் நமது ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர,நமது வாழ்க்கைப்பாதையில் ஒரு மலர்ச்சியான அர்த்தம் தோன்றிவிடும்.


ஓம்சிவசிவஓம்


கடலுக்குள் வாழும் தமிழன்.....





நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்து செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு வாழ்ந்த தமிழன் முழு நிலத்தோடும் கடலுக்குள் சங்கமமானான். அவன் இந்தக் கடலுக்கடியில் இன்றும் பழம் பெருமைகளுடனும்,கலாச்சாரப் பண்பாடுகளைக் காத்து வாழ்கிறான்.


இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம், இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் குமரிக்கண்டம். ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது . தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.


உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள தென் மதுரையில் கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவி
ரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில், கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்
அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் .
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்

கி.மு.
200.000 – 50.000 தமிழர் கலாச்சாரமும்,மொழியின் தொடக்கமும்...
50.000 குமரிக் கண்ட நாகரீகம்
20.000 ஈஸ்டர் தீவுகளில் தமிழன் நாகரீகம் அழிந்தது.
16.000 லெமூரியா கடலில் மூழ்கியது
6087 பாண்டிய மன்னர்களால் இரண்டாவது தமிழ் சங்கம் தொடக்கம்
3031 சேர மன்னர்கள் சாலமொன் தீவுகளுக்கு சென்றதால் தமிழர் நாகரீகம் அங்கு தொடங்கியது
1780 மூன்றாவது தமிழ் சங்கம் பாண்டியர்களால் தொடக்கப்பட்டது.
7 வது நூற்றாண்டு தொல்காப்பியர் காலம்


 தமிழன் என்ற உணர்வில் ஒருங்கிணையாதவரையிலும் இப்படியே அடியும் உதையும் வாங்க வேண்டியதுதான். தமிழனின் மதம் சைவம்! தமிழனின் குரு அகத்தியர்!! தமிழனின்  அறிவு சாந்த சொத்து திருமந்திரம்,திருக்குறள்,தொல்காப்பியம்,கம்பராமாயாணம் என்பதை நமது குழந்தைகளுக்கு எப்போது சொல்லிக் கொடுக்கப்போகிறோம்?