Sunday, May 22, 2011

ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?


நாம் வாழ்ந்து வரும் காலம் கலிகாலம்.கலி என்றாலே துன்பம் தானே!எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,தினசரி வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.

நாடி ஜோதிடப்படி,முற்பிறவி தசரத மகாராஜாதான் இப்பிறவியில் எம்.ஜி.ஆராகப் பிறந்தார் என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.

நாம் இறக்கும் தருணத்தில்,கடைசியில் எதை நினைக்கிறோமோ அல்லது எதைப் பேசுகிறோமோ அந்த அடையாளத்துடன் தான் மறுபிறவியெடுப்போமாம்.

தசரத மகாராஜா (இராமயண காலத்தில் இராமச்சந்திர மூர்த்தியின் அப்பா;அயோத்தியின் மன்னர்) இறக்கும்போது ராமா என்றவாறே இறந்தாராம்.அதனால்தான்,மறுஜன்மத்தில் ராமச்சந்திரன் என்ற பெயரோடு பிறந்தார் என நாடி ஜோதிட ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.தசரத மகாராஜா மறு ஜன்மம் எடுக்க அவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல,நாம் நமது இப்பிறவிக்கும் முற்பிறவிக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளும் அதிக பட்சமாக பல லட்சம் ஆண்டுகளும் இருக்கும் என யூகிக்கலாம்.

அதே சமயம்,நமது குணம்,கல்வி,சுபாவம், பழக்க வழக்கம் அனைத்தும் நமது முந்தைய ஏழு பிறவிகளில் இருந்தே உருவாக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய தமிழ்வேதமாகிய திருக்குறளில் ஒருவன் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு ஜன்மத்துக்கும் கூடவே வரும் என்ற பொருளில் பாடல் எழுதியிருக்கிறார்.

ஆக, நாம் படும் கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,இழப்புக்கள்,தோல்விகளுக்கு நமது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பே ஆகும்.

எனவே, மனிதராகப் பிறந்த அனைவரும்,21 வயதைக் கடந்த அனைவரும்,அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது கர்மங்களை விரைவாக கரைப்போம்;சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமாவோம்.



நீங்கள் இந்த வலைப்பூவை அடிக்கடி வாசிக்கிறீர்கள் எனில்,உங்களின் முற்பிறவி புண்ணியத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே அர்த்தம்.

இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.

இப்படி ஓராண்டு மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டி விட்டதாக அர்த்தம்.இப்படி சாதித்துவிட்டால்,நமது ஏழு ஜன்ம பாவங்கள் பெருமளவு அழிந்துவிட்டதாக அர்த்தம்.

முயலுவோமா?

நமது ஆசை நிறைவேற எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?






மஞ்சள்விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.நெற்றியில் விபூதி(திருநீறு) பூசிக்கொண்டோமா? என்பதை பார்த்துக்கொள்ளவும்.செல்போன்,டிவி,காலிங் பெல் இவற்றை மவுனமாக்கிக் கொள்ள வேண்டும்.(அல்லது அதிகாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முந்திய ஒரு மணிநேரம் வரையிலும் எந்த தொந்தரவும் இராது)

முதலில் ஓம் (உங்களின் குலதெய்வத்தின் பெயர்) நமக

அடுத்து ஓம் கணபதியே நமக

அடுத்து ஓம் (உங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயர்) நமக என வரிசையாக மனதுக்குள்,உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.

இப்போது உங்களின் நியாயமான ஆசை என்ன வென்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

(சில உதாரணங்களைப் பார்ப்போம்:இந்த வருடம் எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்

நான் விரும்பும் படிப்பில் கவுன்சிலிங்கில் சேர வேண்டும்

எனது இப்போதைய மாத வருமானம் ரூ.15,000/-இது ரூ.45,000/-ஆக உயர வேண்டும்.

எனது நோய் விரைவில் தீர வேண்டும்

எனது பிரிந்த தம்பி என்னிடம் வந்து பேச வேண்டும்

எனது 2 லட்சம் ரூபாய் கடன் தீர வேண்டும்

எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க வேண்டும்

என உங்களுக்கு விருப்பமான,நியாயமான,யாருக்கும் தீங்கு தராத ஒரு கோரிக்கையை நினைத்துக்கொள்ளவும்.ஒரு முறை நினைத்தால் போதுமானது)

பிறகு,ஓம்சிவசிவஓம் ; ஓம்சிவசிவஓம்; ஓம்சிவசிவஓம் என தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபித்து வர வேண்டும்.

சிலருக்கு 10 நாளுக்குள் பலன் கிடைக்கத் துவங்கும்;சிலருக்கு 45 நாளாகலாம்;சிலருக்கு ஆறுமாதங்கள் ஆகலாம்;சிலருக்கு ஓரிரு வாரங்களிலேயே பலன் கிடைக்கத் துவங்கும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ஓம்சிவசிவஓம்

Wednesday, May 18, 2011

சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்கப் பயிற்சி





நீங்கள் கம்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட் ஒர்க்கிங்கில் ஓரிரு ஆண்டுகளாவது அனுபவம் உள்ளவரா?

சைபர் க்ரைம் பற்றிய படிப்புகளை இங்கே காணலாம்.நீங்கள் விரும்பியதைப் படிக்கலாம்.

உங்கள் குழந்தைகளை ஏன் தமிழ் மீடியத்தில் சேர்க்க வேண்டும்?





உலகில் எந்த குழந்தையும் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும்(ஐந்து வயது முதல் பத்து வயது வரை) தாய்மொழிக்கல்வியிலேயே கற்றால் மட்டுமே மொழித்திறனும்,படைப்புத்திறனும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை.

இன்றைய நிலவரப்படி எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது இங்கிலீஷ்மீடியம் பள்ளி எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலோ நமது குழந்தையைப் படிக்க வைப்பது நன்று.

ஆனால்,நடைமுறையில் நமது தருமம் மிகு தமிழ்நாட்டில் இருப்பது என்ன?

3 வயதிலேயே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.தாய்மொழியாம் தமிழே தெரியாத ஒரு இனம் உலகில் உருவாகிவிட்டது எனில் அது நமது தமிழ்நாடாகத் தான் இருக்கமுடியும்.விளைவு?

படிக்கும் வயதில் பள்ளியிலும்,வீட்டிலும் தரப்படும் தொல்லைகளால் ஏராளமான தமிழ்நாட்டுக்குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகி,வலிப்பு நோய் மாநிலமயமாகிவிட்டது.இதை எங்கள் ஊர் குழந்தை சிறப்பு மருத்துவர் சொன்னது.ஆனால்,கொந்தளிக்கும் நிஜம்.(எனவே,எனதருமை தமிழ்ப்பெற்றோர்களே,உங்கள் கால்களில் விழுந்து மன்றாடிக்கேட்கிறேன்.உங்கள் குழந்தையை தமிழ் வழிக்கல்வியில் சேருங்கள்)

ஆனால்,நாம் என்ன செய்கிறோம்? எம்புள்ள இங்கிலீஷ் மீடியம் படிக்கிறது என பீற்றிக்கொள்கிறோம்.

இங்கிலீஷ் மீடியம் பள்ளி நடத்துபவர்களின் பின்னணி பணம் பண்ணுவது மட்டுமே.இம்மாதிரியான பள்ளிகளின் ஆசிரியர்களில் எத்தனை பேர்கள் தகுதி வாய்ந்தவர்கள்?வெறும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்கள் சம்பளத்துக்கு வரும் ஆசிரியைகளின் கோபங்கள் பிஞ்சுகளை அடிக்கவும்,உதைக்கவுமே!!

உங்கள் குழந்தையின் படைப்புத்திறனையும்,சிந்திக்கும் திறனையும்,தன்னம்பிக்கையையும் நீங்கள் நாசமாக்குகிறீர்கள்.அப்படி நாசமாக்குவதை ஒரு மரபாக ஆக்கிய பெருமை தமிழறிஞர் டாக்டரைச் சேரும்.

இதிலும் பணம் சம்பாதிக்க வழி செய்த இவரா தமிழறிஞர்?புதிய சமுதாயப்பிரச்னையை உருவாக்கி,தமிழினத்தின் தரத்தை சிதைத்துவிட்ட இவரா முத்தமிழ்க்காவலர்?

Sunday, May 15, 2011

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்சி








ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம்,ஒரே மாதத்தில் ஜோதிடம் தொழில்முறையாக கற்றுக்கொள்ளுமளவுக்கு நமது ஆன்மீகக்கடல் பயிற்சியளித்துவருகிறது.இந்த ஒரு மாதத்திற்குப்பிறகு,நீங்கள் உங்கள் பகுதியில் ஜோதிடத்தொழில் செய்யலாம்.



இதற்குத் தேவையான தகுதிகள்:குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரை உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம்,(விருதுநகர் மாவட்டம்)நகரில் வந்து தங்க வேண்டும்.ஜோதிடம் பயிலுவதற்குக் கட்டணம் உண்டு.



மேலும் விபரமறிய மின் மடலில் aanmigakkadal@gmail.com க்கு தொடர்புகொள்ளவும்.



ஆன்மீகக் கடல் வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்


புத்தகம் வாசிப்பது என்பது இலக்கில்லாத மிக நீண்ட பயணம்;யார் தனது பள்ளிப்பருவத்தில் தினமும் செய்தித்தாள் வாசிக்கிறார்களோ,அவரே கல்லூரிப்பருவம் மற்றும் அதன்பிறகும் வாசிக்கும் பழக்கத்துக்கு அடிமையாவார்;அறிவே சக்தி என்ற கிரேக்க ஞானியின் கருத்து இந்த தகவல்யுகத்திற்கு மிகவும் பொருந்தும்.

நேற்று தினகரன் தினசரியில் ஒரு செய்தியை வாசித்தேன்.அது எனது மனதை மிகவும் பாதித்தது.கேரளாவில் ஒரு தம்பதி!கணவன் தனக்குப் பிடித்த நடிகையின் போட்டோவை தனது செல்போனின் முகப்பில் வைத்திருந்தான்;அதைப் பார்த்த மனைவி,அந்த நடிகையின் போட்டோ தனது கணவனின் கள்ளக்காதலி என நம்பி தற்கொலை செய்துகொண்டாள்.

இந்த செய்தியில் இரண்டு உண்மைகள் தெரிகின்றன.ஒன்று,அந்த மனைவிக்கு உலக நடப்பு பற்றிய அடிப்படை ஞானமில்லை;இரண்டு எந்தக் கணவனாவது தனது கள்ளக்காதலியை செல்போனில் எல்லோரும் பார்க்கும்விதமாக வைத்திருப்பானா? என சிந்திக்கவில்லை;மூன்று தனது கணவனிடம் யார் இவள்?என்று கேட்கவில்லை

இதன் மூலமாக அந்த மனைவி சிந்திக்கத் தெரியாதவள் என்பது புலனாகிறது.தினமும் எதையாவது படித்தால் தானே சிந்திக்கும் சுபாவம் வளரும்?

ஆக,வேர்களைப் பலப்படுத்திட,ஏற்கனவே பதிவிட்ட ஒன்றை சிறு மாற்றங்களுடன் மீண்டும் வெளியிடுகிறேன்.

யாரிடம் எப்படிப் பேசுவது? எங்கே எவ்வாறு நடந்து கொள்வது? என்பது பற்றி பலருக்குத் தெரியாமைக்குக் காரணமே வாசிக்கும் பழக்கம் இல்லாமையே!

இந்தப் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை இதில் சொல்லப்பட்டுள்ள வரிசைப்படி வாசிக்கவேண்டும்.ஒவ்வொரு புத்தகத்தையும் ஆறு மாதங்கள் வரையிலும் அடிக்கடி திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் நீங்கள் மன வருத்தத்தில் இருக்கிறீர்களோ,அப்போது முதல் புத்தகத்தை வாசிக்கவும்.ஓராண்டு கழிந்தபிறகு,உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சுக்கு உள்ளார்த்தம் என்ன? அவர்கள் ஏன் அப்படிப் பேசுகின்றனர்? என்பது உங்களுக்குப் புரியும்.

சில புத்தகங்கள் நாவல்கள்,புதினங்கள்,வரலாற்று உண்மையை விவரிக்கும் கதைகளாக இருக்கும்.அவற்றை எப்போதும் எப்படியும் வாசிக்கலாம்.

1.எண்ணங்கள் / எம்.எஸ்.உதயமூர்த்தி=வானதி பதிப்பகம்

2.கர்மயோகம் /சுவாமி விவேகானந்தர்=ஸ்ரீஇராமகிருஷ்ணமிஷன் வெளியீடு

3.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்/ ஜேம்ஸ் ஆலன்

4.வந்தார்கள்;வென்றார்கள்/மதன்=விகடன் பிரசுரம் வெளியீடு

5.மனம் தரும் பணம்/நெப்போலியன்ஹில்=கண்ணதாசன் பதிப்பகம்

6.விழிமின்;எழுமின்/சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திர வெளியீடு(அங்கு மட்டுமே கிடைக்கும்)

7.விலை ராணி/சாண்டில்யன்=வானதி பதிப்பகம்

8.ஆழ்மனதின் சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்

9.மனோசக்தி மாத இதழ்,சென்னையிலிருந்து உலகெங்கும் வெளிவருகிறது

10.தேசப்பிரிவினையின் சோக வரலாறு/ஹெ.வே.ஷேசாத்ரி

11.பாரதத்தின் விஞ்ஞானச் சாதனைகள்/இராம.கோபாலன்

12.என்று காண்போம் எங்கள் சிந்துவை/கேப்டன் எஸ்.பி.குட்டி

13.முன்கதைச் சுருக்கம்/பாலகுமாரன் அவர்களின் சுயசரிதை

14.ஓம்சக்தியும் அணுசக்தியும்

15.ஏழை படும்பாடு/விக்டர் ஹ்யூகோ/தமிழில் சுத்தானந்த பாரதியார்

16.நான் ஏன் நாத்திகனானேன்?/தந்தைப் பெரியார்

17.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்

18.நாதுராம் விநாயக் கோட்சே/இஜட்.ஒய்.ஹிம்சாகர்=குமரிப் பதிப்பகம்

19.எப்படி ஜெயித்தார்கள்?சில மார்க்கெட்டிங் சாகசங்கள்/ரமேஷ் பிரபா

20.மனசே,ரிலாக்ஸ் ப்ளீஸ்/சுவாமி சுகபோதானந்தா=விகடன் பிரசுரம் வெளியீடு

21.அர்த்த சாஸ்திரம்

22.சதுரகிரி ஸ்தல புராணம்=தாமரை நூலகம்

23.ஞான கங்கை /குருஜி=சக்தி புத்தக நிலையம்

24.அர்த்தமுள்ள இந்துமதம் 18 பாகங்கள்/கண்ணதாசன்

25.கூடு/பாலகுமாரன்

26.கோட்டைப்புரத்து வீடு/இந்திரா சவுந்தரராஜன்

27.அடுத்த நூற்றாண்டு/சுஜாதா