Thursday, April 4, 2019

மழை வளம் தரும் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம்


உலகத்தில் தொழிற்புரட்சி துவங்கி 200 ஆண்டுகள் ஆகிவிட்டன;அதன் விளைவாக,இயற்கை வளங்களை படிப்படியாக அழிக்காமல் தாறுமாறாக அழிக்கத் துவங்கின ஜி 8 எனப்படும் வல்லரசு நாடுகள்! அதுவும் ஐ.நா.சபை,நேட்டோ,ஐரோப்பிய யூனியன் என்று அமைப்புகள் உருவானப் பின்னர்,தந்திரமாக சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில்களை ஏழை நாடுகளில் துவங்க வைத்தன இந்த வல்லரசு நாடுகள்;ஏழைநாடுகளில் பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் இப்படிச் செய்து அவர்களது இயற்கை வளங்களையும்,மனித வளத்தையும் சீரழிக்கத் துவங்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன;


இந்த நயவஞ்சகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது நமது பாரத நாடுதான்;காரணம் தமது நாட்டை நேசிக்கும் பிரதமர்கள் இதுவரை நமக்குக் கிடைக்காமல் இருந்தது தான்;இயற்கை வளங்களை அழித்து,இயற்கைச் சமநிலையைக் கெடுத்து,இப்போது அதன் பின்விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
2010 வரை மே மாதம் மத்தியில் மட்டும் தான் அக்னி நட்சத்திர வெயிலை உணர்ந்தோம்;இப்போது பிப்ரவரியில் இருந்து ஆகஸ்டு வரை உணர்கின்றோம்;


மாநில அரசியல்வாதிகளும் சரி;தேசிய அரசியல்வாதிகளும் சரி;இது நமது நாடு;இது நமது மக்கள் என்ற சொரணையே இல்லாமல் அரசியல் செய்கின்றார்கள்;அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முற்காலத்தில் மன்னர்களும்,ஜமீன் தார்களும் வாழ்ந்தார்கள்;தற்போதைய அரசர்களும்,இளவரசர்களும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே அரசியல் செய்துவருகின்றார்கள்;

தண்ணீரை விற்பதும் பாவம்;வாங்குவதும் பாவம்;இது இன்றைய இளைய சமுதாயத்திற்குத் தெரிகின்றதா?


1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதம் முழுவதும் பேசப்படும் மொழியாக தமிழ் இருந்தது! இன்றைய பத்ரிநாத் ஆலயத்தின் பக்கவாட்டுச் சுவர்களை கூர்ந்து கவனித்தால் இது உண்மை என்று புரியும்;இன்றோ,இலுமுனாட்டிகளின் அடிமைகளும்,ஏஜெண்டுகளும் தமிழ் இனத்தை தமிழ் மொழி வாசிக்க விடாமல் தடுக்கும் விதமாக ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்;


மேல்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமையாக பணிபுரியவே பி.ஈ; பி.டெக். படிக்கின்றார்கள்;இதுவே இன்றைய சமுதாயத்திற்குப் புரியவில்லை;


தண்ணீர்ப் பஞ்சம் பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றது;இதைச் சரி செய்ய குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஆகும்;இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை;ஒரு ஜோதிடராகவும்,ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவராகவும் உள்ள அடியேனுக்குத் தெரிந்த வழிமுறையை இங்கே தெரிவிப்பதில் பொறுப்பு கொள்கின்றோம்;

தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவருமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளாலும்,அண்ணாமலையாரின் ஆசிகளாலும் இந்தப் பதிகத்தை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.


இந்தப் பதிகத்தை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில் வாசித்து வந்தால் மழைவளம் உருவாகும்;


குழுவாகச் சேர்ந்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் தினமும் ஒருமுறையாவது பாடிவருவதன் மூலமாக தண்ணீர்ப்பஞ்சம் மழைவளத்தின் மூலமாகத் தீரும்;அப்படித் தீருவதற்கு ஈசன் அருள்பாலிப்பார்;


சைவ சமயக்குரவர்களில் சுந்தர மூர்த்திசுவாமிகள் திருப்புன் கூர் என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கத்தை நோக்கி பாடிய பாடல் இது;


திருச்சிற்றம்பலம்

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
  அவனைக் காப்பது காரணம் ஆக
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
  வவ்வினாய்க்குன் தன் வன்மை கண்டடியேன்
எந்தை நீ எனை நமன் தமர் நலியில்
  இவன் மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.         1

வையகம் முற்றும் மாமழை மறந்து
  வயலில் நீர் இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை என்ன
  ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
  பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           2

ஏத நன்னிலம் ஈர் அறு வேலி
  ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக்
  கோல வெண்மணல் சிவன் தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த சண்டிக்குன்
  சடை மிசை மலர் அருள் செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன்
  பூம்பொழில் திருப்புன் கூர் உளானே.                 3

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
  நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி
  கண்ணப்பன் கணபுல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
  கொள்கை கொண்டு நின் குரைகழல் அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
  பொய்கைசூழ் திருப்புன் கூர் உளானே.               4

கோல மால்வரை மத்தென நாட்டிக்
  கோள் அரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சு கண்டு அவர் மிக இரிய
  அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடம் தனை உண்டு
  கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           5

இயக்கர் கின்னரர் எமனொடு வருணன்
  இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம்
  வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன்றின்றி நின் திருவடி அதனை
  அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு
திகைப் பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           6

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
  பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கன்று பாசுபதம் கொடுத்
  தருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழியும் புனல் கங்கை
  நங்கையாளை நின் சடை மிசைக் கரந்த
தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           7


மூஎயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
  இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்றேவிய பின்னை
  ஒருவன் நீ கரி காடு அரங்காக
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ
  மணி முழா முழக்க அருள் செய்த
தேவ தேவ நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.            8

அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்
  தவ்வவர்க்காங்கே ஆர் அருள் புரிந்து
எரியு மாகடல் இலங்கையர் கோனைத்
  துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
  கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.             9

கம்பமால் களிற்றின் உரியானைக்
  காமன் காய்ந்ததோர் கண் உடையானைச்
செம்பொனே ஒக்கும் திரு உருவானைச்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே
உம்பராளியை உமையவள் கோனை
  ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்
தன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தினோ
  டைந்தும் வல்லவர் அருவினை இலரே              10


திருச்சிற்றம்பலம்

ஒரு மாதம் வரை வருமானத்தை அதிகரிக்கும் தேய்பிறை அஷ்டமி பைரவ ஜபம்!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,     சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 26.4.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.22 முதல் 27.4.2019 சனிக் கிழமை இரவு 7.07 வரை 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

சனிக்கிழமை இராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இருக்கின்றது.

 சனிக்கிழமை குளிகை காலம் காலை 6 மணி முதல் 7.30  மணி வரை அமைந்திருக்கின்றது.




இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 26.5.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.24 முதல் 27.5.2019 திங்கட்கிழமை காலை 11.23 வரை  இருக்கின்றது;

பேய்,பிசாசு பற்றிய உண்மைகளும்,அது பற்றிய திரைப்படங்களும்



உங்களைச் சுற்றிலுமே மிகப்பெரிய சூட்சும உலகம் எப்போதும் இயங்கி வருகின்றது;நீங்கள் தான் அதை உணருவதில்லை;அது பற்றிய முழு உண்மைகள் நமது இந்து தர்மத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகள்,யோகிகளால் கண்டுபிடிக்கப்பட்டன;புத்த மதம்,ஜைன மதம் மூலமாக கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கின்றது;

முன்பு,1990 வரையிலும் 40 வாட்ஸ்,60 வாட்ஸ் குண்டு பல்புகளைப் பயன்படுத்தி வந்தோம்;அப்போது,நாடு முழுவதும் பேய்,பிசாசுகளின் தொல்லை வீட்டிலேயே இருந்திருக்கின்றது;சிறு தெய்வங்களான குல தெய்வம்,வீட்டு தெய்வம் போன்றவை வீடுகளுக்கு நேரடியாக வருகை தந்து,தமது வம்சாவழியினருக்கு வரங்களைக் கொடுத்திருக்கின்றன;

பாதரசத்தைக் கொண்டு எரியும் விளக்குகள் பரவலான பிறகு,பேய்,பிசாசுகள் தொல்லைகள் அறவே நின்றுவிட்டன;சிறு தெய்வங்களும் வருகை தருவது நின்றுவிட்டன;பாதரசம் என்பதை சித்த வைத்தியத்தில் சிவனின் விந்து என்றே குறிப்பிடப்படுகின்றது;அது இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் வர முடியாது;


மாநகரங்களில் வாடகை வீடுகளில் யாராவது தற்கொலை செய்தால்,அதை எவருக்கும் சொல்லாமல் இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவது சகஜம்;(லாட்ஜ்களிலும் சில அறைகளில் தற்கொலை அல்லது கொலை செய்வது வழக்கமாக இருக்கின்றது;இங்கேயும்)  புதியதாக வாடகைக்கு வருபவர்களில் பலவீனமான ஜாதகர் அல்லது ஜோதிடப்படி,கோட்சார ராகு,ஒருவரது ராசியைக் கடந்தால்,அவர்களை தற்கொலை செய்த ஆத்மா பிடித்துக்கொள்கின்றது;எப்போதும்,ஆணை பெண் ஆவியும்,பெண்ணை ஆண் ஆவியும் மட்டுமே பிடிக்கும்;
ஒருவரை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் எப்போதும் பிடிக்காது;(ராகவா லாரன்ஸ் படத்தில் காட்சி அமைத்தது டூப்)


ஆவி பிடித்தவர்களை அந்த ஆவி தற்கொலை செய்ய தூண்டும்;நிறைய்ய சாப்பிட வைக்கும்;நிறைய்ய உணவு பானங்களை அருந்த வைக்கும்;பூர்வ ஜன்ம புண்ணியமோ அல்லது தகுந்த சொந்தங்களோ இருந்தால் மட்டுமே ஆவியை விரட்டிட முடியும்;இல்லாவிட்டால்,ஆவியால் பிடிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபம் தான்;சிலருக்கு, அருள்வாக்கு சொல்வதும் நடக்கும்;(நேரடி அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறிந்தவை)


எங்கள் ஊருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் டூரிஸ்ட் பாலம் என்று ஒன்று இருக்கின்றது;1976 வாக்கில் அங்கே முதன் முதலில் ஒரு டூரிஸ்ட் பஸ் விபத்திற்கு உள்ளானது;அப்போது முதல் இன்று 2019 வரை அந்த இடத்தை பல லட்சம் வாகனங்கள் கடந்து சென்று இருக்கின்றன;டூரிஸ்ட் வாகனம் செல்லும் போது மட்டுமே அங்கு இப்போது வரை விபத்துக்கள் உருவாகின்றன;

சாலைகளின் வளைவுகளில் அந்திமாலைப் பொழுதுகளில் (மாலை 6 முதல் 7 க்குள்) டூவீலரில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவது வழக்கம்;காவல் தெய்வங்களான முனீஸ்வரன்,கருப்பசாமி,இருளாயி,இசக்கி மற்றும் பல்வேறு சிறு தெய்வ சக்திகள் அந்த இடத்தை கடந்து செல்லும் போது,யார் டூவீலரில் செல்கின்றார்களோ அவர்களை தூக்கி எறிவது வழக்கம்;(நேரடி ஆதாரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;உலகம் முழுவதுமே இருக்கின்றன;ஆவிகள் உலகம் என்ற மாத இதழை வாங்கி படியுங்கள்)


எப்போது மெக்காலே கல்வித்திட்டமும்,ஆங்கில வழிப் பள்ளிகளும் பரவலானதோ அப்போதே இந்த மாதிரியான விஷயங்களை யாரும் நம்புவதில்லை;தனக்கு பேய் பிடிக்கும் வரை;

இரவு 10 மணிக்குப் பிறகு,சுடுகாட்டுப் பாதை வழியாக தனி மனிதனாக பயணிப்பது தவறு;அதே போல,சுடுகாடு,முனியாண்டி கோவில்,ஆக்ரோஷமான பெண் தெய்வங்கள் கிராமப்பகுதிகளில் நிறைய இருக்கின்றன;இந்த ஆலயங்களின் அருகில் ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபாடாமல் இருப்பது அவசியம்;இல்லாவிட்டால்,திடீர் மனக் கோளாறு,திடீர் மரணம் வர வாய்ப்புகள் உண்டு; இந்த திடீர் மனக் கோளாறினை நீக்கிட போதுமான மந்திரீகம் தெரிந்தவர்கள் இப்போது இல்லை;பெருமளவு குறைந்துவிட்டார்கள்!!!

தூங்கும் போதோ,சுடுகாட்டின் வழியாக வரும் போதோ,பேய் வீட்டினை கடக்கும் போதோ ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வருவது பாதுகாப்பு தரும்;அல்லது வாய்விட்டுப் பாடிக் கொண்டும் வரலாம்; கந்த சஷ்டிக்கவசம்,வராகி மாலை போன்றவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் ஜபிக்கலாம்;அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரையும் சொன்னாலோ அல்லது ஜபித்தாலோ கூட உடனே தீய சக்தியின் தாக்கம் அப்போது நெருங்காது;

ஐரா என்ற திரைப்படத்தை கிறிஸ்தவ நடிகை நயன்தாரா  நடித்திருக்கின்றார்;அதில்,ராசியே இல்லாத கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருக்கின்றார்;
சிலருக்கு எல்லாவிதமான சுகபோகங்களையும் அள்ளித் தரும் கடவுள்,சிலருக்கு எல்லாவிதமான சோகங்களை மட்டும் தருவதற்குக் காரணம் என்ன? அப்போது மட்டும் கடவுள் தூங்கிட்டாரா? என்று 2 வது நயன்தாரா நினைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது;
 கடவுள் கணக்கு எப்போதும் தப்பாது;கச்சிதமாக இருக்கும்; இப்பிறவியில் பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் எல்லோரும் வெறுப்பதாக இருந்தால், அதற்கும் அவரது முற்பிறவி கர்மவினைகளே காரணமாக இருக்கும்;

மானுட வாழ்க்கை வாழும் போது,சாந்தமாக வாழ்ந்து,தற்கொலை அல்லது கொலைசெய்யப்படுபவர்கள் ஆவியான பின்னர்,யாரையும் பழி வாங்குவது இல்லை;வாழும் போது அடாவடியாக வாழ்ந்து,திடீரென செயற்கையான முறையில் இறந்தால் அவர்கள் ஆவியான பின்னர்,மிகுந்த அடாவடிகள் செய்வது வழக்கம்;

நமது பாரத நாட்டில் மட்டும் அல்ல;கீழ்த்திசை நாடுகளான மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா,தாய்லாந்து,வியட்னாம் மற்றும் மேல்திசை நாடுகளான இங்கிலாந்து,ப்ரான்ஸ்,அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் ஆவிகள் தொல்லை இன்று வரை தொடர்கின்றது;அந்த ஆவிகளுக்கு கதி மோட்சம் தரும் பூஜை,பரிகாரங்கள் நமது நாட்டில் மட்டுமே இருக்கின்றன;அதைச் செய்து அந்த ஆவிகளுக்கு விடுதலை தருவது மிகப் பெரிய புண்ணியம் ஆகும்;இது பற்றி நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்துள்ளார்கள்;

பக்திரீதியாக நம்மையும்,நமது குடும்பத்தாரையும் ஆவிகள்,பேய்கள் தாக்காமல் இருக்க வழிமுறையை உங்களுக்கு  வழங்குகின்றோம்;

1008 நாட்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் மந்திரத்தை தினமும்  ஒரு மணி நேரம் வரை ஜபித்து இருந்தீர்கள் என்றால்,அந்த தெய்வத்தின் அருள் பாதுகாப்பு உங்களுடன் எல்லா இடத்துக்கும் வரும்;

அல்லது

108 சதுர்த்திகளுக்கு விநாயகருக்கு அபிஷேகம் அல்லது மந்திர ஜபம் அல்லது இரண்டையும் செய்து இருந்தீர்கள் என்றால்,விநாயகரின் அருள் பாதுகாப்பில் இப்பிறவி முழுவதும் இருப்பீர்கள்;

அல்லது

108 பஞ்சமிகளுக்கு வராகி  அல்லது அங்காளபரமேஸ்வரிக்கு அபிஷேகம்,ஆராதனை அல்லது ஒரு மணி நேரம் வரை மந்திர ஜபம் செய்து இருந்தீர்கள் என்றால்,இப்பிறவி முழுவதும் அந்த உக்கிரப் பெண் தெய்வத்தின் அருள் பாதுகாப்பு உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்;

அல்லது

108 சஷ்டிகளுக்கு முருக கடவுளையும்

அல்லது 

108 அஷ்டமிகளுக்கு பைரவர் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரையும்

அல்லது

108 திருவாதிரை நாட்களுக்கு முனீஸ்வரருக்கும்

அல்லது

108 தசமிகளுக்கு துர்கை அல்லது  உங்களுக்கு விருப்பமான உக்கிரமான அம்பாள் ஒரு தெய்வத்தையும்

அல்லது

108 ப்ரதோஷங்களுக்கு சரபேஸ்வரரையும்

அல்லது


108 அமாவாசைகளுக்கு சிவலிங்கம் ஒன்றையும் இவ்வாறு மந்திர ஜபம் , பூஜை செய்து அருளைப் பெறலாம்;


ஒவ்வொரு திதிக்கும் ஒரு திதி நித்யா தேவிகள் இருக்கின்றார்கள்;நீங்கள் பிறந்த திதிக்கு உரிய திதி நித்யா தேவியை அறிந்து,அந்த அன்னையின் அருளைப் பெறும் முறைகளை அறிந்து 108 திதிகளுக்கு விரதம் +பூஜை+மந்திர ஜபம்+அன்னதானம் செய்தால்,அவளின் அருளைப் பெறலாம்;வேண்டியது ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களில் உண்மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு நட்பினைப் பெற்றிருக்க வேண்டும்;

முயன்று பாருங்கள்;வளமோடு வாழுங்கள்!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Wednesday, March 27, 2019

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;

இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;

84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;


2.4.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.51 முதல் நள்ளிரவு 1.36 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; நள்ளிரவு 1.37 முதல் 3.4.2019 புதன்கிழமை காலை 11.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்பம் & மீனம்) பிறந்தவர்களும்


16.4.2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.50 முதல் 17.4.2019 புதன் கிழமை இரவு 9.06 வரையிலான நேரத்தில் உத்திரம் (சிம்மராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்

1.5.2019 புதன் கிழமை நள்ளிரவு(வியாழன் விடிகாலை) 2.41 முதல் 2.5.2019 வியாழக்கிழமை மதியம் 1.30 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில்(மீனம் ராசி) பிறந்தவர்களும்;

2.5.2019 வியாழக்கிழமை மதியம் 1.31 முதல் நள்ளிரவு 3.59 க்குள் இருக்கும் நேரத்தில் ரேவதி  நட்சத்திரத்தில்(மீனம் ராசி) பிறந்தவர்களும்

16.5.2019 வியாழக்கிழமை காலை 9.53 முதல் 17.5.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.16 வரை சித்திரை நட்சத்திரத்தில் (கன்னி ராசி & துலாம் ராசி  ) பிறந்தவர்களும்

17.5.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.17 முதல் காலை 6.03 க்குள் இருக்கும் நேரத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் (சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் செல்ல முடியுமா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்)

31.5.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.59 முதல் இரவு 12.10க்குள் மேஷ ராசி,அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 12.11 முதல் 1.6.2019 சனிக்கிழமை அன்று மாலை 5.18 க்குள் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

14.6.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.41 முதல் 15.6.2019 சனிக்கிழமை காலை 11.13 வரையிலான நேரத்திற்குள் விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் ராசி & விருச்சிக ராசி) பிறந்தவர்களும்;காலை 11.14 முதல் மதியம் 3.37 க்குள்  அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்


30.6.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.53  முதல் காலை 9.14 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி & ரிஷப ராசி) பிறந்தவர்களும்;

காலை 9.15 முதல் 1.7.2019 திங்கட்கிழமை அதிகாலை 4.11 வரை ரோகிணி நட்சத்திரத்தில் (ரிஷப ராசி)பிறந்தவர்களும் ;

13.7.2019 சனிக்கிழமை பின்னிரவு(ஞாயிறுவிடிகாலை) 2.35 முதல் 14.7.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.32 க்குள் இருக்கும் நேரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; இரவு 7.33 முதல் பின்னிரவு (திங்கள் விடிகாலை) 2.27 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

29.7.2019 திங்கட்கிழமை மதியம் 2.42 முதல் மாலை 4.42 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷப ராசி & மிதுன ராசி) பிறந்தவர்களும், மாலை 4.43 முதல் 30.7.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.13 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

12.8.2019 திங்கட்கிழமை மாலை 2.24 முதல் 13.9.2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.13 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

13.8.2019  செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.14 முதல் மதியம் 3.14 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி & மகர ராசி) பிறந்தவர்களும்

27.8.2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.24 முதல் 28.8.2019 புதன் கிழமை இரவு 9.20க்குள் வரும் நேரத்தில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

11.9.2019 புதன் கிழமை அதிகாலை 4.39 முதல் மாலை 4.20 வரை திருவோணம் என்ற சிராவணம் என்ற ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

மாலை 4.21 முதல் 12.9.2019 வியாழக்கிழமை காலை 6 மணி வரை அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் ராசி & கும்பம் ராசி) பிறந்தவர்களும்;

26.9.2019 வியாழக்கிழமை காலை 7.52 முதல் நள்ளிரவு 2.37 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

10.10.2019 வியாழக்கிழமை இரவு 9.16 முதல் 11.10.2019 வெள்ளிக்கிழமை விடிகாலை 4.14 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களூம்;

11.10.2019 வெள்ளிக்கிழமை விடிகாலை 4.15 முதல் இரவு 11.19 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்ப ராசி & மீன ராசி) பிறந்தவர்களும்;

25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.38 முதல் 26.10.2019 சனிக்கிழமை காலை 7.21 வரை உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்ம ராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்; காலை 7.21 முதல் மதியம் 2.18 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

9.11.2019 சனிக்கிழமை மதியம் 4.22 முதல் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.18 வரை ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்களும்;

23.11.2019 சனிக்கிழமை பின்னிரவு (ஞாயிற்றுக்கிழமை விடிகாலை) 2.28 முதல் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.22 வரை சித்திரை நட்சத்திரத்தில் (கன்னி ராசி & துலாம் ராசி) பிறந்தவர்களும்; மதியம் 12.23 முதல் இரவு 12.28 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

9.12.2019 திங்கட்கிழமை காலை 9.45 முதல் 10.12.2019 செவ்வாய்க்கிழமை விடிகாலை 5.29 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; விடிகாலை 5.30 முதல் காலை 10.46 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி & ரிஷப ராசி) பிறந்தவர்களும்;

23.12.2019 திங்கட்கிழமை மதியம் 1.46 முதல்  மாலை  6.04 வரை விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் ராசி & விருச்சிக ராசி) பிறந்தவர்களும்; மாலை 6.05 முதல் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.23 வரையிலான நேரத்திற்குள் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

7.1.2020 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.41 முதல் 8.1.2020 புதன் கிழமை மதியம் 2.50 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 2.51 முதல் நள்ளிரவு 2.40 வரை மிருக சீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷப ராசி & மிதுன ராசி) பிறந்தவர்களும்;

21.1.2020 செவ்வாய் நள்ளிரவு 2.46 முதல் 22.1.2020 புதன் கிழமை நள்ளிரவு 1.36 வரையிலான நேரத்திற்குள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

6.2.2020 வியாழக்கிழமை  மாலை 5.24 முதல் இரவு 10.50 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;இரவு 10.51 முதல் 7.2.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.21 வரையிலான நேரத்திற்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில் (மிதுன ராசி & கடக ராசி) பிறந்தவர்களும்;

20.2.2020 வியாழக்கிழமை மாலை 5.38 முதல் 21.2.2020 வெள்ளிக்கிழமை காலை 10.14 வரையிலான நேரத்திற்குள் உத்ராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி & மகர ராசி) பிறந்தவர்களும்; காலை 10.15 முதல் மாலை 6.14 வரை ஓணம் என்ற சிராவணம் என்ற திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

8.3.2020 சனிக்கிழமை விடிகாலை 4.30  முதல் 9.3.2020 ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 3.56 வரையிலான நேரத்திற்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

21.3.2020 சனிக்கிழமை காலை 9.52 முதல் இரவு 9.04 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் ராசி & கும்பம் ராசி ) பிறந்தவர்களும்; இரவு 9.05 முதல் 22.3.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.23 வரையிலான நேரத்திற்குள் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

5.4.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.49 முதல் 6.4.2020 திங்கட்கிழமை காலை 9.49 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; காலை 9.50 முதல் மதியம் 1.33 வரையிலான நேரத்திற்குள் உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்மராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்




கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
இதில் குறிப்பிடப்படாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடுத்த தமிழ் வருடப் பிறப்பு வரை காத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்;


அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!

ஓம் ரீங் அகத்தீசா! அகத்தீசா!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!

ஏன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபிக்க வேண்டும்?



உங்களுக்கு இன்றுவரை கிடைக்கும் வருமானத்திற்கும்,இனிமேல் வர இருக்கும் வருமானங்களுக்கும் யார் காரணம் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


உங்களுக்கு இன்றுவரை இருக்கும் சொத்துக்கள்,மறைமுக வருமானத்திற்கும்,இனிமேல் வர இருக்கும் சொத்துக்கள்,சம்பாத்தியங்களுக்கும் யார் காரணம் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


உங்களுடைய கடன் அல்லது நோய் அல்லது எதிரி/துரோகிகளின் தொல்லைகளுக்கு காரணம் யார் தெரியுமா?
இதற்கும் நீங்கள் மட்டுமே காரணம்!!!
($ நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் புண்ணியத்தில் 8 இல் 1 பங்கை மட்டுமே நாம் அனுபவிக்கின்றோம்;மீதி 7 பங்கு நம்முடையது மட்டுமே!)


மாயை என்ற சக்தியின் மூலமாக நம்மையும்,நமது முற்பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பற்றிய உண்மைகளையும் ஈசன் நம்மிடம் இருந்து மறைத்து இருக்கின்றார்;


நம்முடைய கர்மவினைகளை படிப்படியாக நீக்கி,இப்பிறவியில் நமது வருமானம் அதிகரித்து,பொருளாதார தன்னிறைவை எட்டிட நாம் செய்ய வேண்டிய ஜபம் எது தெரியுமா?


பைரவ ஜபம்!


கால பைரவரை ஜபித்து வந்தால் அல்லது கால பைரவரை தொடர்ந்து வழிபட்டால்,நமது கர்மவினைகள் படிப்படியாகக் குறையும்;நிம்மதியான வாழ்க்கை கிடைக்கத் துவங்கும்;வருமானம் அதிகரிக்காது;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபித்து வந்தால்,கர்மவினை குறையும்;அதே சமயத்தில் வருமானமும் அதிகரிக்கும்;நம்மில் எத்தனை பேர்களுடைய வீட்டில் வைர நகைகள்,முத்து நகைகள்,பவளம்,கோமேதகம்,வைடூரியம் சார்ந்த நகைகள் இருக்கின்றன?


1000 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பத்தில் இருக்கலாம்;
10,000 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பத்தில் இருக்கலாம்;
ஏன் எல்லோருடைய வீட்டிலும் நவரத்தினங்களுடன் கூடிய நகைகள் இல்லை;ஏனென்றால்,கடுமையான கர்மவினைகளுடன் பிறப்பவர்களின் வீடுகளில் தங்க நகைகள் கூட இருப்பதில்லை;அவை பெரும்பாலும் வட்டிக்கடையில் இருக்கும்; அல்லது வங்கிக் கடனாக இருக்கும்;இதுவும் கர்மவினையின் விளைவுகளால் தான்!

இதை ஒரே ஒரு நாள் மந்திர ஜபத்தால் சரிசெய்ய முடியாது;ஒரே ஒரு மாத மந்திர ஜபத்தால் சரி செய்யவும் முடியாது;ஆனால்,விடாமுயற்சியாக 3 முதல் 5 ஆண்டுகள் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபத்தால் கர்மவினைகளை நீக்கி/குறைத்து செல்வ வளத்தைப் பெருக்க முடியும்!


முற்பிறவிகள் மூன்று அல்லது நான்கில் நாம் செய்த புண்ணியச் செயல்கள்,தானங்கள்,உழவாரப் பணி,இறைச் சேவைகளின் விளைவுகள் தான் இப்பிறவியில் நமக்கு இவ்வளவு செல்வ வளமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது;


போன பிறவிகளில் பள்ளியறை பூஜைக்கு பிரசாதம் தயார் செய்து,அதை இறைவனுக்கு மனதார (கவனிக்கவும்=மனதார) படைத்து,அதை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருந்தால்,அவரே இப்பிறவியில் பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று அகத்திய மகரிஷியின் கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;


போன பிறவிகளில் கோவிலில் வாழ்ந்து வரும் ஈசனுக்கும்,அம்பாளுக்கும் தனது சொந்த வருமானத்தில் மனதார தேர் செய்து கொடுத்திருந்தால்,அவரே இப்பிறவியில் விலை உயர்ந்த காருக்கு சொந்தக் காரராக இருக்கின்றார்;


போன பிறவியில் பல நூறு அல்லது ஆயிரம் பேர்களுக்கு இலவசமாக ஏதாவது ஒரு வித்தையை (கல்வி) சொல்லிக் கொடுத்து,அதில் அவர்களை நிபுணர்களாக ஆக்கியிருந்தவரே,இப்பிறவியில் கல்வித் தந்தையாக உருமாறியிருக்கின்றார்;


எப்படி உங்களுக்கு வருமானம் வருகின்றது என்பதை நீங்கள் யாருக்காவது சொல்லித் தருவீர்களா? ஒரு போதும் மாட்டீர்கள்;உங்கள் வாரிசுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ மட்டும் சொல்லித் தருவீர்கள்;

அதே போல,எப்படி உங்கள் வருமானம் அதிகரிக்கின்றது என்பதை உங்கள் நட்பு வட்டம் அல்லது உறவினர் வட்டத்தில் ஒரே ஒருவருக்கு தெரிவித்தாலும்,அதன் பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபத்தை உங்களால் தொடர முடியாமல் போய்விடும்;


1990களை விடவும் இன்றைய 2020 களில் போட்டி மனப்பான்மை குறுகி,பொறாமையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது;இதற்கு உலக அரசியலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கார்பரேட் வணிகமும் காரணம்!


$ 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கே இந்த ஜபம் செல்வ வளத்தைத் தரும்;
$ இந்த ஜபத்தை வீட்டில் இருப்பவர்களைத் தவிர,பிறருக்குத் தெரியாமல் பரம ரகசியமாக ஜபித்தால் மட்டுமே செல்வ வளத்தைத் தரும்;
$ வெளியே இந்து போல நடித்துக் கொண்டு,ரகசிய கிறிஸ்தவராக வாழ்ந்து வருபவர்களுக்கு இது பலன் தராது;
$ கூடாத நாட்களில் பிறந்தவர்கள்,அவர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர்களுக்கு இந்த ஜபம் பலன் தர இரு மடங்கு காலம் ஆகும்;
$ ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் போது,அண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்கு விரைவாக பலன் கிடைத்திருக்கின்றது;
$ ஜன்மச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலத்தில் இந்த ஜபம் சற்று தாமதமாக பலன் தருகின்றது;

வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவர் ஜபம் செய்ய தேவையான பொருட்கள்:

1.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் (இன்றைய ஆனந்த விகடன் பத்திரிகை அளவுக்கு இருக்க வேண்டும்;அதாவது அகலம் 9 செ மீ;நீளம்/உயரம் 12 செ மீ)
2.பசு நெய்+தாமரை தண்டுத் திரி,மண் விளக்கு,தீப்பெட்டி(இவருக்கு என்று தனியாக இவைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்)
3.சந்தன பத்தி
4.மஞ்சள் பட்டுத் துண்டு அல்லது சாதாரண மஞ்சள் நிறத் துண்டு இரண்டு
5.கையால் எழுதப் பட்ட சொர்ண பைரவ அஷ்டகம்
6.தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை செய்ய வேண்டும் என்ற வைராக்கியம்

ஒரு அமாவாசை அல்லது வளர்பிறை திதி ஒன்றில் இவைகளைக் கொண்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைக்க வேண்டும்;ஆணியில் மாட்டலாம் அல்லது மணையில் ஒரு சுத்தமான மஞ்சள் துண்டினை மடித்து அதன்மீது வைக்கலாம்;

புதிய மண் விளக்கில்(அகல் விளக்கு) பசுநெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்தியை ஏற்ற வைக்க வேண்டும்;

இன்னொரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;நீங்கள் கையால் எழுதிய சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபிக்க வேண்டும்;

பலருக்கு ஜபம் புதியதாக இருக்கும்;அவர்கள் முதல் வாரம் வரை தினமும் 7 முறையும்,இரண்டாவது வாரம் வரை தினமும் 14 முறையும்,மூன்றாவது வாரம் வரை தினமும் 21 முறையும்,நான்காவது வாரம் வரை தினமும் 28 முறையும்,ஐந்தாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை       (3 ஆண்டுகள்) தினமும் 33 முறையும் ஜபித்து வர வேண்டும்;
ஜபித்து முடித்ததும்,தீபத்தை அணைத்து விட வேண்டும்;விடிகாலை 5 மணிக்குள் ஜபிக்க ஆரம்பித்து,சூரிய உதயத்திற்குள் (காலை 6 மணி) ஜபித்தை நிறைவு செய்துவிட வேண்டும்;

52 வாரங்களுக்குப் பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் தொடர்புடைய கனவு ஒன்று உங்களுக்கு வரும்;அதுதான் நீங்கள் மனப்பூர்வமாக ஜபித்துள்ளீர்கள் என்பதற்கு ஆதாரம்;


சொர்ண பைரவ அஷ்டகம் ஜபிப்பதற்குப் பதிலாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 330 முறை ஜபிக்கலாம்;அல்லது பின்வரும் மந்திரத்தை தினமும் 1008 முறை ஜபிக்கலாம்;


ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்


இதில் ஏதாவது ஒரு மந்திரத்தை மட்டுமே முதல் நாளில் இருந்து இறுதி நாள் வரை (3 ஆண்டின் முடிவு அல்லது 5 ஆம் ஆண்டின் முடிவு) ஜபிக்க வேண்டும்;மூன்று மந்திரங்களையும் ஜபிக்க கூடாது;


இங்கே உங்களுக்கு வழங்கியிருப்பது இல்லறவாசிகள் செல்வ வளம் பெருக செய்ய வேண்டிய ஜபமுறை தான்;

இதற்கு தீட்சை தேவை இல்லை;

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;(3 அல்லது 5 ஆண்டுகள் வரை மட்டும்);

இந்த முயற்சியை எவருக்கும் தெரிவிக்கக் கூடாது;

இது உபாசனை அல்ல;

தாம்பத்தியக் கட்டுப்பாடு கிடையாது;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

விரைவாக இறைவனுடன் கலக்கச் செய்யும் சரணாகதி தத்துவம்!




உங்களுக்கு இது எத்தனையாவது மனிதப் பிறவி தெரியுமா?தெரியாது;

ஆனால்,கண்டிப்பாக இது உங்களுடைய முதல் மனிதப் பிறவி அல்ல;குறைந்த பட்சம் உங்களுடைய இந்த ஜன்மம்(பிறவி) 30,000 ஆவது அல்லது 3,00,000 ஆவது மனிதப் பிறவி என்று உறுதியாகச் சொல்லலாம்;


நம் எல்லோரும் முதன் முதலில் மனிதப் பிறவி எடுத்தது சைவத்தின் தலைநகரம் அண்ணாமலையில் தான்!84,00,000 உயிரினங்களாக வெவ்வேறு பிறவிகள் எடுத்துவிட்டு,முடிவாக ஈசனின் கருணையால் பிறப்பது மனிதப் பிறவி!!!;

யார் காளை பிறவி எடுத்திருந்தார்களோ,அவரே முதன் முதலில் மனிதப்பிறவி எடுக்கும் போது ஆணாகவும்,யார் பசுவாக பிறவி எடுத்திருந்தார்களோ,அவரே முதன் முதலில் மனிதப் பிறவி எடுக்கும் போது பெண்ணாகவும் பிறக்கின்றார்கள்;


பிறந்த 4 வயது வரை அடிக்கடி ஒரு குழந்தை அழுதால்,அது இப்பிறவியில் தனது ஆன்மீக லட்சியங்களை நிறைவேறாமல் தான் வாழ்க்கையை நிறைவு செய்யும் என்று அர்த்தம்;அதற்கு தான் இப்பிறவியில் என்னவெல்லாம் சாதிக்கப் போகின்றோம் என்பது தெரிந்துவிடும்;

வெகு அபூர்வமாக சில குழந்தைகள் பசிக்கும் நேரம் தவிர,பிற நேரங்களில் அழுவதே கிடையாது;அது தனது இப்பிறவியில் தனது ஆன்மீக லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும் என்று அர்த்தம்;அகத்தீசரின் கருணையால் கிடைத்த இந்த ஆன்மீக பொக்கிஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது எமது கடமை;உங்களின் குல தெய்வத்தின் ஆசிகளாலும்,இதுவரை நீங்கள் செய்த புண்ணியச் செயல்கள்,பக்திபுர்வமான நடவடிக்கைகளாலும் இந்த பதிவு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது என்றும் அர்த்தம்;


ஜோதிடத்தின் மூலமாக,உங்களுடைய ஜனன ஜாதகத்தின் மூலமாக இது உங்களுடைய எத்தனையாவது பிறவி? இன்னும் எத்தனை மனிதப் பிறவி எடுப்பீர்கள்? என்பதையும் கணித்துக் கூற முடியும்;

அதனால் என்ன லாபம்?
அதற்குப் பதிலாக,வெகு சீக்கிரமாக இறைசக்தியான ஈசன் என்ற அருணாச்சலேஸ்வரருடன் கலப்பதற்கு ஒரு சுலபவழியை அகத்தீசன் என்ற அகத்தியர் நமக்காக கண்டுபிடித்திருக்கின்றார்;அது தான் சரணாகதி தத்துவம்!

நீங்கள் போன 4 பிறவிகளில் தொடர்ந்து உழவாரப் பணி செய்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் எல்லோரிடமும் பணிவாக பேசி,பழகும் சுபாவம் இருக்கும்;இல்லாவிட்டால்,அளவற்ற தற்பெருமையும்,உயர்வு மனப்பான்மையும் தான் இருக்கும்;அதனாலேயே பலமுறை நீங்கள் அவமானப்பட்டிருப்பீர்கள்;அல்லது உங்கள் செல்வத்தில் சில பகுதியை இழந்திருப்பீர்கள்!


எந்த ஒரு செயலையும் எல்லோரும் காணும்(அல்லது அறிந்துகொள்ளும்) விதமாகச் செய்யும் முன்பாக “அடுத்தவர் என்ன நினைப்பார்கள்?” என்ற பயத்திலேயே பலர் தமது தனது சொந்த குணத்தையும்,பண்புகளையும் இழந்துவிடுகின்றார்கள்;
எந்த ஒரு புதிய முயற்சியையும் நீங்கள் செய்ய ஆரம்பித்தால் மூன்று நிலைகளைக் கடந்து வர வேண்டும்;

1.கிண்டல் , கேலி, ஏளனம்
2.எதிர்ப்பு
3.ஏற்றுக் கொள்ளுதல்
பலர் 1ஆம் நிலையோடு தமது புதிய முயற்சிகளைக் கைவிட்டுவிடுகின்றார்கள்;வெகு சிலர் 2 ஆம் நிலையோடு தமது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிடுகின்றார்கள்;

நீங்கள் போன 4 பிறவிகள் முழுவதும் ப்ரதோஷ பூஜையில் கலந்து கொண்டிருந்தாலோ அல்லது ப்ரதோஷ பூஜையை பல சிவாலயங்களில் ஆரம்பித்து வைத்து,அதை தங்குதடையின்றி நடைபெற வைத்திருந்தாலோ இப்பிறவியில் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட மாட்டீர்கள்;அல்லது எவருடனும் எப்போதும் ஒப்பிட்டு பார்க்கவே மாட்டீர்கள்;

அரசியல் துறை,ஆன்மீகத் துறை,அரசுப்பணி,சுயமாக செய்து வரும் தொழில் துறை,ஆன்மீகப்பயிற்சிகளை சொல்லித் தரும் ஆச்சாரியர்கள்,வங்கிப் பணி,ஜோதிடம்,சிற்பம்,நடனம்,நுண்கலைகளான வாசியோகம்,புலி ஆட்டம்,சிலம்பாட்டம்,அருள்வாக்கு சொல்பவர்கள்,மந்திர உபதேசம் தருபவர்கள்=இவர்களிடையே கூட போட்டி மனப்பான்மையும் பொறாமையும் இருக்கின்றது;1970க்குப் பிறகு இது மிகவும் பல மடங்கு அதிகரித்துவிட்டது;


நீங்கள் அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதன் மூலமாக உங்கள் பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்;அப்படி குறைப்பதற்கு அருணாச்சலேஸ்வரரின் அருள் காரணமாக இருக்கும்;


நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் விளைவும் உங்களுக்கு நன்மையைத் தரலாம் அல்லது தீமையைத் தரலாம்;ஒரு சாதனையை சாதித்து முடித்தீர்கள் என்றால்,உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்;அதனால்,உங்களுக்கு நான் என்ற அகங்காரம் வளரத் தான் செய்யும்;அதே போல,ஒரு சாதனை முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்டீர்கள் என்றால்,அப்போது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து விமரிசனம் வரும்;கூடவே,கிண்டல்,கேலி,ஏளனம் வரும்;அப்போது நீங்கள் “நான் எதற்குமே தகுதி இல்லாதவன்” என்ற எண்ணத்தை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்குள் உருவாக்குகின்றார்கள்;

சாதனையில் ஜெயித்தால் “நான் சாதிக்கப் பிறந்தவன்” என்ற அங்காரமும்,
சாதனையில் தோற்றால் “நான் எதற்கும் லாயக்கற்றவன்” என்ற விரக்தியும் வராமல் நடுநிலை மனப்பான்மையை உருவாக்குங்கள்;
உங்களுக்கு பிடித்தமான கடவுள் அல்லது அவதாரத்தை அடிக்கடி நினையுங்கள்;


யாராவது உங்களைப் புகழ்ந்தால்,உடனே நீங்கள் பெருமிதப் படாமல் “எல்லாப் புகழும் எனது க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம்” என்று எண்ணுங்கள்;

யாராவது உங்களை இகழ்ந்தால்,அப்போது மனம் வருந்தாமல் “எல்லா இகழ்ச்சியும் எனது க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம்” என்று எண்ணுங்கள்;உங்கள் மனதில் தலைக்கனமோ அல்லது சுயவிரக்தியோ உருவாகாது;பிறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது;கர்மவினைகளும் அதிகரிக்காது;

இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு சிறு சாதனையிலும்,சிறு தோல்விகளிலும் எண்ணிக் கொண்டே இருந்தால்,இந்த பிறவி நிறைவடையும் போது அந்த அவதாரத்தினைச் சென்றடைவீர்கள்;அல்லது அந்த அவதாரம் வாழ்ந்து வரும் பூமியில் உங்களுக்கு என்று ஒரு இடம் கிடைக்கும்;


அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றால் என்ன தெரியுமா?


ஒரு வருடத்தில் குறைந்தது 108 முறை கிரிவலம் செல்லுங்கள்;அது தவிர,அடிக்கடி உங்கள் இருப்பிடத்தில் இருந்து மானசீகமாகவும் கிரிவலம் செல்லுங்கள்;மானசீக கிரிவலம் ஒரு முறை செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;சில ஆண்டுகளுக்குப் பிறகு,மானசீக கிரிவலம் செல்ல 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;


மானசீக கிரிவலம் அடிக்கடி சென்றாலும்,அடிக்கடி நேரடியாகவும் கிரிவலம் செல்லுங்கள்;இப்படி வாழ்ந்து கொண்டே வந்தால் மட்டுமே நமது உயிர் பிரியும் கணத்தில் அண்ணாமலையின் ஞாபகம் வரும்;இப்படியும் முக்தி பெறலாம் என்று அகத்தீசர் நமக்கு போதித்து இருக்கின்றார்;