உங்களுக்கு இது எத்தனையாவது மனிதப் பிறவி
தெரியுமா?தெரியாது;
ஆனால்,கண்டிப்பாக இது உங்களுடைய முதல்
மனிதப் பிறவி அல்ல;குறைந்த பட்சம் உங்களுடைய இந்த ஜன்மம்(பிறவி) 30,000 ஆவது அல்லது
3,00,000 ஆவது மனிதப் பிறவி என்று உறுதியாகச் சொல்லலாம்;
நம் எல்லோரும் முதன் முதலில் மனிதப் பிறவி
எடுத்தது சைவத்தின் தலைநகரம் அண்ணாமலையில் தான்!84,00,000 உயிரினங்களாக வெவ்வேறு பிறவிகள்
எடுத்துவிட்டு,முடிவாக ஈசனின் கருணையால் பிறப்பது மனிதப் பிறவி!!!;
யார் காளை பிறவி எடுத்திருந்தார்களோ,அவரே
முதன் முதலில் மனிதப்பிறவி எடுக்கும் போது ஆணாகவும்,யார் பசுவாக பிறவி எடுத்திருந்தார்களோ,அவரே
முதன் முதலில் மனிதப் பிறவி எடுக்கும் போது பெண்ணாகவும் பிறக்கின்றார்கள்;
பிறந்த 4 வயது வரை அடிக்கடி ஒரு குழந்தை
அழுதால்,அது இப்பிறவியில் தனது ஆன்மீக லட்சியங்களை நிறைவேறாமல் தான் வாழ்க்கையை நிறைவு
செய்யும் என்று அர்த்தம்;அதற்கு தான் இப்பிறவியில் என்னவெல்லாம் சாதிக்கப் போகின்றோம்
என்பது தெரிந்துவிடும்;
வெகு அபூர்வமாக சில குழந்தைகள் பசிக்கும்
நேரம் தவிர,பிற நேரங்களில் அழுவதே கிடையாது;அது தனது இப்பிறவியில் தனது ஆன்மீக லட்சியங்களை
முழுமையாக நிறைவேற்றும் என்று அர்த்தம்;அகத்தீசரின் கருணையால் கிடைத்த இந்த ஆன்மீக
பொக்கிஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது எமது கடமை;உங்களின் குல தெய்வத்தின் ஆசிகளாலும்,இதுவரை
நீங்கள் செய்த புண்ணியச் செயல்கள்,பக்திபுர்வமான நடவடிக்கைகளாலும் இந்த பதிவு உங்களுக்கு
கிடைத்திருக்கின்றது என்றும் அர்த்தம்;
ஜோதிடத்தின் மூலமாக,உங்களுடைய ஜனன ஜாதகத்தின்
மூலமாக இது உங்களுடைய எத்தனையாவது பிறவி? இன்னும் எத்தனை மனிதப் பிறவி எடுப்பீர்கள்?
என்பதையும் கணித்துக் கூற முடியும்;
அதனால் என்ன லாபம்?
அதற்குப் பதிலாக,வெகு சீக்கிரமாக இறைசக்தியான
ஈசன் என்ற அருணாச்சலேஸ்வரருடன் கலப்பதற்கு ஒரு சுலபவழியை அகத்தீசன் என்ற அகத்தியர்
நமக்காக கண்டுபிடித்திருக்கின்றார்;அது தான் சரணாகதி தத்துவம்!
நீங்கள் போன 4 பிறவிகளில் தொடர்ந்து உழவாரப்
பணி செய்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் எல்லோரிடமும் பணிவாக பேசி,பழகும் சுபாவம்
இருக்கும்;இல்லாவிட்டால்,அளவற்ற தற்பெருமையும்,உயர்வு மனப்பான்மையும் தான் இருக்கும்;அதனாலேயே
பலமுறை நீங்கள் அவமானப்பட்டிருப்பீர்கள்;அல்லது உங்கள் செல்வத்தில் சில பகுதியை இழந்திருப்பீர்கள்!
எந்த ஒரு செயலையும் எல்லோரும் காணும்(அல்லது
அறிந்துகொள்ளும்) விதமாகச் செய்யும் முன்பாக “அடுத்தவர் என்ன நினைப்பார்கள்?” என்ற
பயத்திலேயே பலர் தமது தனது சொந்த குணத்தையும்,பண்புகளையும் இழந்துவிடுகின்றார்கள்;
எந்த ஒரு புதிய முயற்சியையும் நீங்கள்
செய்ய ஆரம்பித்தால் மூன்று நிலைகளைக் கடந்து வர வேண்டும்;
2.எதிர்ப்பு
3.ஏற்றுக் கொள்ளுதல்
பலர் 1ஆம் நிலையோடு தமது புதிய முயற்சிகளைக்
கைவிட்டுவிடுகின்றார்கள்;வெகு சிலர் 2 ஆம் நிலையோடு தமது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை
நிறுத்திவிடுகின்றார்கள்;
நீங்கள் போன 4 பிறவிகள் முழுவதும் ப்ரதோஷ
பூஜையில் கலந்து கொண்டிருந்தாலோ அல்லது ப்ரதோஷ பூஜையை பல சிவாலயங்களில் ஆரம்பித்து
வைத்து,அதை தங்குதடையின்றி நடைபெற வைத்திருந்தாலோ இப்பிறவியில் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட
மாட்டீர்கள்;அல்லது எவருடனும் எப்போதும் ஒப்பிட்டு பார்க்கவே மாட்டீர்கள்;
அரசியல் துறை,ஆன்மீகத் துறை,அரசுப்பணி,சுயமாக
செய்து வரும் தொழில் துறை,ஆன்மீகப்பயிற்சிகளை சொல்லித் தரும் ஆச்சாரியர்கள்,வங்கிப்
பணி,ஜோதிடம்,சிற்பம்,நடனம்,நுண்கலைகளான வாசியோகம்,புலி ஆட்டம்,சிலம்பாட்டம்,அருள்வாக்கு
சொல்பவர்கள்,மந்திர உபதேசம் தருபவர்கள்=இவர்களிடையே கூட போட்டி மனப்பான்மையும் பொறாமையும்
இருக்கின்றது;1970க்குப் பிறகு இது மிகவும் பல மடங்கு அதிகரித்துவிட்டது;
நீங்கள் அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதன்
மூலமாக உங்கள் பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்;அப்படி குறைப்பதற்கு அருணாச்சலேஸ்வரரின்
அருள் காரணமாக இருக்கும்;
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் விளைவும்
உங்களுக்கு நன்மையைத் தரலாம் அல்லது தீமையைத் தரலாம்;ஒரு சாதனையை சாதித்து முடித்தீர்கள்
என்றால்,உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்;அதனால்,உங்களுக்கு நான் என்ற அகங்காரம்
வளரத் தான் செய்யும்;அதே போல,ஒரு சாதனை முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்டீர்கள் என்றால்,அப்போது
உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து விமரிசனம் வரும்;கூடவே,கிண்டல்,கேலி,ஏளனம்
வரும்;அப்போது நீங்கள் “நான் எதற்குமே தகுதி இல்லாதவன்” என்ற எண்ணத்தை உங்களைச் சுற்றி
இருப்பவர்கள் உங்களுக்குள் உருவாக்குகின்றார்கள்;
சாதனையில் ஜெயித்தால் “நான் சாதிக்கப்
பிறந்தவன்” என்ற அங்காரமும்,
சாதனையில் தோற்றால் “நான் எதற்கும் லாயக்கற்றவன்”
என்ற விரக்தியும் வராமல் நடுநிலை மனப்பான்மையை உருவாக்குங்கள்;
உங்களுக்கு பிடித்தமான கடவுள் அல்லது அவதாரத்தை
அடிக்கடி நினையுங்கள்;
யாராவது உங்களைப் புகழ்ந்தால்,உடனே நீங்கள்
பெருமிதப் படாமல் “எல்லாப் புகழும் எனது க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம்” என்று எண்ணுங்கள்;
யாராவது
உங்களை இகழ்ந்தால்,அப்போது மனம் வருந்தாமல் “எல்லா இகழ்ச்சியும் எனது க்ருஷ்ணனுக்கே
அர்ப்பணம்” என்று எண்ணுங்கள்;உங்கள் மனதில் தலைக்கனமோ அல்லது சுயவிரக்தியோ உருவாகாது;பிறவிகளின்
எண்ணிக்கை அதிகரிக்காது;கர்மவினைகளும் அதிகரிக்காது;
இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு
சிறு சாதனையிலும்,சிறு தோல்விகளிலும் எண்ணிக் கொண்டே இருந்தால்,இந்த பிறவி நிறைவடையும்
போது அந்த அவதாரத்தினைச் சென்றடைவீர்கள்;அல்லது அந்த அவதாரம் வாழ்ந்து வரும் பூமியில்
உங்களுக்கு என்று ஒரு இடம் கிடைக்கும்;
அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றால்
என்ன தெரியுமா?
ஒரு வருடத்தில் குறைந்தது 108 முறை கிரிவலம்
செல்லுங்கள்;அது தவிர,அடிக்கடி உங்கள் இருப்பிடத்தில் இருந்து மானசீகமாகவும் கிரிவலம்
செல்லுங்கள்;மானசீக கிரிவலம் ஒரு முறை செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;சில
ஆண்டுகளுக்குப் பிறகு,மானசீக கிரிவலம் செல்ல 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;
மானசீக கிரிவலம் அடிக்கடி சென்றாலும்,அடிக்கடி
நேரடியாகவும் கிரிவலம் செல்லுங்கள்;இப்படி வாழ்ந்து கொண்டே வந்தால் மட்டுமே நமது உயிர்
பிரியும் கணத்தில் அண்ணாமலையின் ஞாபகம் வரும்;இப்படியும் முக்தி பெறலாம் என்று அகத்தீசர்
நமக்கு போதித்து இருக்கின்றார்;
No comments:
Post a Comment