உலகத்தில் தொழிற்புரட்சி துவங்கி 200 ஆண்டுகள் ஆகிவிட்டன;அதன் விளைவாக,இயற்கை வளங்களை படிப்படியாக அழிக்காமல் தாறுமாறாக அழிக்கத் துவங்கின ஜி 8 எனப்படும் வல்லரசு நாடுகள்! அதுவும் ஐ.நா.சபை,நேட்டோ,ஐரோப்பிய யூனியன் என்று அமைப்புகள் உருவானப் பின்னர்,தந்திரமாக சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில்களை ஏழை நாடுகளில் துவங்க வைத்தன இந்த வல்லரசு நாடுகள்;ஏழைநாடுகளில் பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் இப்படிச் செய்து அவர்களது இயற்கை வளங்களையும்,மனித வளத்தையும் சீரழிக்கத் துவங்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன;
இந்த நயவஞ்சகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது நமது பாரத நாடுதான்;காரணம் தமது நாட்டை நேசிக்கும் பிரதமர்கள் இதுவரை நமக்குக் கிடைக்காமல் இருந்தது தான்;இயற்கை வளங்களை அழித்து,இயற்கைச் சமநிலையைக் கெடுத்து,இப்போது அதன் பின்விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
2010 வரை மே மாதம் மத்தியில் மட்டும் தான் அக்னி நட்சத்திர வெயிலை உணர்ந்தோம்;இப்போது பிப்ரவரியில் இருந்து ஆகஸ்டு வரை உணர்கின்றோம்;
மாநில அரசியல்வாதிகளும் சரி;தேசிய அரசியல்வாதிகளும் சரி;இது நமது நாடு;இது நமது மக்கள் என்ற சொரணையே இல்லாமல் அரசியல் செய்கின்றார்கள்;அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முற்காலத்தில் மன்னர்களும்,ஜமீன் தார்களும் வாழ்ந்தார்கள்;தற்போதைய அரசர்களும்,இளவரசர்களும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே அரசியல் செய்துவருகின்றார்கள்;
தண்ணீரை விற்பதும் பாவம்;வாங்குவதும் பாவம்;இது இன்றைய இளைய சமுதாயத்திற்குத் தெரிகின்றதா?
1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதம் முழுவதும் பேசப்படும் மொழியாக தமிழ் இருந்தது! இன்றைய பத்ரிநாத் ஆலயத்தின் பக்கவாட்டுச் சுவர்களை கூர்ந்து கவனித்தால் இது உண்மை என்று புரியும்;இன்றோ,இலுமுனாட்டிகளின் அடிமைகளும்,ஏஜெண்டுகளும் தமிழ் இனத்தை தமிழ் மொழி வாசிக்க விடாமல் தடுக்கும் விதமாக ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்;
மேல்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமையாக பணிபுரியவே பி.ஈ; பி.டெக். படிக்கின்றார்கள்;இதுவே இன்றைய சமுதாயத்திற்குப் புரியவில்லை;
தண்ணீர்ப் பஞ்சம் பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றது;இதைச் சரி செய்ய குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஆகும்;இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை;ஒரு ஜோதிடராகவும்,ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவராகவும் உள்ள அடியேனுக்குத் தெரிந்த வழிமுறையை இங்கே தெரிவிப்பதில் பொறுப்பு கொள்கின்றோம்;
தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவருமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளாலும்,அண்ணாமலையாரின் ஆசிகளாலும் இந்தப் பதிகத்தை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.
இந்தப் பதிகத்தை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில் வாசித்து வந்தால் மழைவளம் உருவாகும்;
குழுவாகச் சேர்ந்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் தினமும் ஒருமுறையாவது பாடிவருவதன் மூலமாக தண்ணீர்ப்பஞ்சம் மழைவளத்தின் மூலமாகத் தீரும்;அப்படித் தீருவதற்கு ஈசன் அருள்பாலிப்பார்;
சைவ சமயக்குரவர்களில் சுந்தர மூர்த்திசுவாமிகள் திருப்புன் கூர் என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கத்தை நோக்கி பாடிய பாடல் இது;
திருச்சிற்றம்பலம்
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணம் ஆக
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
வவ்வினாய்க்குன் தன் வன்மை கண்டடியேன்
எந்தை நீ எனை நமன் தமர் நலியில்
இவன் மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 1
வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீர் இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை என்ன
ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 2
ஏத நன்னிலம் ஈர் அறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக்
கோல வெண்மணல் சிவன் தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த சண்டிக்குன்
சடை மிசை மலர் அருள் செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொழில் திருப்புன் கூர் உளானே. 3
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி
கண்ணப்பன் கணபுல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கொண்டு நின் குரைகழல் அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
பொய்கைசூழ் திருப்புன் கூர் உளானே. 4
கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள் அரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சு கண்டு அவர் மிக இரிய
அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடம் தனை உண்டு
கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 5
இயக்கர் கின்னரர் எமனொடு வருணன்
இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன்றின்றி நின் திருவடி அதனை
அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு
திகைப் பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 6
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கன்று பாசுபதம் கொடுத்
தருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழியும் புனல் கங்கை
நங்கையாளை நின் சடை மிசைக் கரந்த
தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 7
மூஎயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்றேவிய பின்னை
ஒருவன் நீ கரி காடு அரங்காக
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ
மணி முழா முழக்க அருள் செய்த
தேவ தேவ நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 8
அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்
தவ்வவர்க்காங்கே ஆர் அருள் புரிந்து
எரியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே. 9
கம்பமால் களிற்றின் உரியானைக்
காமன் காய்ந்ததோர் கண் உடையானைச்
செம்பொனே ஒக்கும் திரு உருவானைச்
செழும் பொழில் திருப்புன் கூர் உளானே
உம்பராளியை உமையவள் கோனை
ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்
தன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தினோ
டைந்தும் வல்லவர் அருவினை இலரே 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment