Sunday, July 15, 2018

அமானுஷ்ய சக்தி படைத்த தெய்வம்:செங்கணூர் பார்வதிதேவி






இயற்கையின் உபாதை மனிதர்களுக்குத்தான் உண்டு என எண்ணியிருந்தோம்.ஆனால் தெய்வங்களுக்கு இது உண்டு என்பதை இந்த சம்பவம் மூலமாக உணரலாம்.
கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் கொட்டாரக்காரா அடூர்க்கு வடக்கேயும்,திருவல்லா என்ற ஊருக்குத் தெற்கேயும் திருச்சூரிலிருந்து மேற்கேயும் இந்த ஊர் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பெயர் செங்கணூர்.இங்கு ஒரு சிறிய நரசிம்மர் கோவிலும் மற்றும் மஹாதேவர் என்னும் சிவாலயமும் இருக்கின்றன.இந்த சிவன்கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் பார்வதிதேவி.

தமிழ்நாட்டில் இருக்கும் சில சிவாலயங்களில் உலவும் அதே புராணக்கதை.அதாவது சிவன் பார்வதி திருமணத்தின்போது,எல்லோரும் கூடியதால் வடதிசை தாழ்ந்துவிட்டது.அதை சமன்படுத்த அகத்தியரை தென் திசைக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.அதன்படி அகத்தியர் தென் நாட்டிற்கு வருகை தருகிறார்.அகத்தியர் தென் நாட்டில் இருக்கும் சஹயாத்திரி எனப்படும் சோனாத்திரி  மலைக்குச் சென்று தவம் செய்கிறார்.பரமசிவன் பார்வதி தம்பதியராக வருகை தந்து,அகத்தியருக்கு காட்சி கொடுக்கின்றனர்.அந்த சமயத்தில் பார்வதிதேவி மாதவிடாய்க்கு உள்ளாகிறார்.
தன்னை தூய்மையாக்கி கொள்வதற்காக பார்வதி,பரமேஸ்வரன் தம்பதியர் 28 நாட்கள் அங்கு தங்குகின்றார்கள்.28 நாட்கள் கழிகிறது.அதன்பிறகு பாரம்பரியமாய் அங்குள்ள பஞ்சலோக விக்ரகத்திற்கு உள்ளாடை அணிவித்துத்தான் அலங்காரம் செய்கிறார்கள்.இந்த மாதவிடாய் நிகழ்வு அந்த பஞ்சலோக விக்ரகத்திற்கும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.இந்த மாதிரியான நிகழ்வு உலகத்தில்  எந்த ஒரு சிவாலயத்திலும் நிகழாத ஒரு நிகழ்வு!!!
அதனால்,முதல்நாள் அங்குள்ள முதன்மை குருக்கள்/அர்ச்சகர் முதல்நாள் ஆடை அலங்காரத்தை மறுநாள் காலையில் கண்ணைமூடிக்கொண்டுதான் களைகிறாராம்.அந்த உள்ளாடை மற்ற ஆடைகளைக் கண்ணை மூடிக்கொண்டு தன் உதவி அர்ச்சகரிடம் கொடுக்கிறார்.உதவி அர்ச்சகர் அதில் ஏதாவது ரத்தக்கறை பட்டிருக்கிறதா? என்று நன்கு பார்வையிடுகிறார்.அப்படி ஏதேனும் இருந்தால் அதை அப்படியே குருக்கள்/அர்ச்சகர் மனைவியிடம்  அனுப்பிவிடுகிறார்.அவர் மனைவி அந்த புனிதத்தை உறுதிபடுத்துகிறார்.அதை வாங்குவதற்கு முன்பதிவு செய்துவிடுகின்றார்கள்.அந்த உள்ளாடைக்கு கோவில் நிர்ணயம் செய்த விலை ரூ.10/-தான்!!! ஆனால்,மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.

அப்படி வாங்கிய சில முக்கிய பிரமுகர்கள்:முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி,திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பதவி வகித்த சி.பி.ராமசாமி ஐயர் போன்றவர்கள்.
கி.பி.1810 முதல் கி.பி.1814 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.


அப்போது கிறிஸ்தவ பிரிட்டன் ,நமது பாரதத்தை அடிமைப்படுத்தி,நமது செல்வ வளத்தைச் சுரண்டிக்கொண்டிருந்தது.(நாம்தான் பிரிட்டன் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தது என்று பொய்யான வரலாறு படித்துக்கொண்டிருக்கிறோம்)எனவே,திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசு ஆலோசகராக கர்னல் மன்றோ என்ற கிறிஸ்தவ(ஆங்கிலேய) அதிகாரியை அரசு நியமித்திருந்தது.அவன்,செங்கணூர் வந்து மஹாதேவ ஆலயத்தின் கணக்குகளை தணிக்கை செய்துகொண்டிருந்தான்.அப்பொழுது,அம்மனுக்கு உள்ளாடைச் செலவைப் பற்றி விபரம் கேட்டான்.கோவில் பணியாளர்களும் அம்மனின் மாதவிடாய் பற்றிய அதிசயத்தை விளக்கியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு வாய்விட்டு சிரித்துவிட்டு,பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்கு இது எப்படி உண்டாகும்? இது அசிங்கமானது;அபத்தமானதும் கூட என்று சொல்லிவிட்டு இந்தச் செலவை நான் நிராகரிக்கிறேன் என்றபடி தனது பேனாவால் அந்த பக்கத்தின் குறுக்கே ஒரு  கோடு  போட்டுவிட்டு இந்த செலவை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான்.

ஆனால்,பார்வதிதேவி(அம்மன்) அவனுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறாள்.எப்படித் தெரியுமா?
கர்னல் மன்றோவின் மனைவிக்கு அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கை உண்டாக்கி,உயிருக்கே ஆபத்தான நிலை வந்துவிட்டது.அதோடு அவனது குழந்தைகளுக்கும் கடுமையான நோய் உண்டாகிறது.அருகில் இருந்த இந்துக்கள்,கோவிலில் நீ இப்படி நடந்துகொண்டதனால்தான் இத்தனை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறாய் என புத்திமதி கூறினர்.

உடனே,கர்னல் மன்றோ கோவிலுக்கு வந்து அம்மனிடம் மன்னிப்பு கேட்டதோடு,உள்ளாடை கணக்கையும் அங்கீகரித்தான்.அதன்பிறகு,அவனது மனைவியும்,குழந்தைகளும் குணமடைகின்றார்கள்.

நன்றி;ஆவிகள் உலகம்,பக்கம் 34,நவம்பர் 2011.


$ படத்தில் இருப்பது செங்கணூர் மஹாதேவகோயில்,கேரளா

பணம் பெறுவதற்கு தினமும் மூன்று முறை ஓத வேண்டிய பதிகம்




சுந்தரமூர்த்தி சுவாமிகள்,காஞ்சிபுரத்தில்,சர்வ தீர்த்தங்கரையில் உள்ள ஓணன்,காந்தன் என்ற இரு அசுரர்கள் தரிசித்துப்பெற்ற ஓணகாந்தந்தளி என்னும் சிவாலயத்திற்கு ஒருமுறை சென்றார்.

அங்குள்ள ஈசுவரனிடம் உரிமையுடன் தோழமையால் பெருகும் அடிமைத்திறம் பேசி,பொன் பெற வேண்டி இப்பதிகத்தைப் பாடினார்.ஈசுவரனும் சுந்தரருக்கு பொன்னை அளித்து அருளினார்.


நாம் வாழ்வதோ கலியுகம்;நாம் பொன்னை உடனடியாகப் பெறும் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோமா? ஆனாலும்,தினமும் காலை(அதிகாலையில் எனில் மிகச்சிறப்பு!!!)யில் காலைக்கடமைகளை முடித்துவிட்டு,இந்த பதிகத்தை மூன்று முறை(முடியாதவர்கள் ஒரு தடவையாவது) பாடிட ஆரம்பகாலத்தில் பணம் கிடைக்கும்;போகப்போக பொன் கிடைக்கலாம்.

நெய்யும் பாலுந் தயிருங்கொண்டு
  நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
 கழலடி தொழு துய்யினல்லால்
ஐவர் கொண்டிங்கு ஆட்ட ஆடி
 ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யுமா றொன் றளுளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியுளீரே                   -1

திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
 திரைகள் வந்து புரளவீசும்
கங்கை யாளேல் வாய்திறவாள்
 கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
 தேவியார் கோற்றட்டி யாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம்
  ஓண காந்தன் தளியுளீரே                  -2

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
 பேணி உம்கழல் ஏத்துவார்கள்
 மற்றோர் பற்றிலர் என்றிரங்கி
 மதியுடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆபற்காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் தளியுளீரே                 -3

வல்லதெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய்திறந் தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பதென் நீர்
பல்லை உக்க படு தலையிற்
பகல் எலாம் போய்ப் பலிதிரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன் தளியுளீரே               -4

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறை படாமே
ஆடிப்பாடி அழுது நெக்கங்
கன்புடையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓணகாந்தன் தளியுளீரே                -5

வாரிருங் குழல் வாள் நெடுங்கண்
மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
தாரிருந் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர் போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே
ஓணகாந்தன் தளியுளீரே              -6

பொய்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றாலும் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மையன்றே எம்பெரு மான்
ஓண காந்தன் தளியுளீரே           -7

வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தை யாலே
திருவடி தொழுதுய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்ற
குரோத லோப மதவரூடை
உலை அமைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளியுளீரே          -8

வாரமாகித் திருவடிக்குப்
பணி செய் தொண்டர் பெறுவதென்னே
ஆரம்பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓண காந்தன் தளியுளீரே           -9
ஓவணம் மேல் எருதொன்றேறும்
ஓண காந்தன் தளியுளார் தாம்
ஆவணஞ்செய் தாளுங் கொண்டு
அரை துகிலோடு பட்டுவீக்கிக்
கோவணம் மேற் கொண்ட வேடம்
கோவையாக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ்ப் பத்தும் வல்லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே      -10

அழுகண்ணி சித்தர் ஜீவசமாதி,நிலாயதாட்சி கோவில்,நாகப்பட்டிணம்


கதைதான் இந்துவின் கண்ணைத் துடைக்க!




ஐரோப்பாவில் கோடிக்கணக்கில் பிணங்கள் விழுந்த ‘உலக மகா யுத்தங்களும்’ , முஸ்லீம் & கிறிஸ்தவ சிலுவைப் போர்களும் ஜிஹாத்களும்,குறிப்பாக கிறிஸ்தவ ஹிட்லர் யூதர்கள் மீது நடத்திய இன அழிவுக் கொடூரமும்,சீன ரஷ்ய கம்யூனிஸ கசாப்புகளும் மனித குலத்திற்கு ஒரு வேலை வைத்தன.(முடிந்தவரைக்கும்) பிணப்பட்டியல் தயாரிப்பதுதான் அந்த வேலை!

பாரதத்தில் இந்த வேலை நடப்பதேயில்லை என்று பிரஞ்சுப்பத்திரிகையாளரும்,இந்துத்துவ ஆதரவாளருமான பிரான்ஷ்வா கொத்தியே போன்றவர்கள் ஆதங்கப்படலாம்.இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர் குஷ்வந்த்சிங் அதுபோல ஏதோ ஒன்றை செய்து புண்ணியம் கட்டிக்கொண்டார்; Train to Pakistan என்ற ஆங்கில புனைக் கதை வாயிலாக நிறைய இந்துக்களின் பிணங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததையும் சுவடு தெரியாமல் அவற்றை மண்ணில் புதைத்தும்,சட்லஜ் நதி வெள்ளத்தில் தள்ளியும் அரசியல் தலைமை சுதந்திர பாரத இந்துக்களை உண்மை தெரியாத அசடுகள் ஆக்கும் விபரீத முயற்சியில் இறங்கியதையும் வெகு சன்னமான கதைப்போர்வை போர்த்தி வழங்கியிருக்கிறார் குஷ்வந்த்சிங்!

அகண்ட இந்து ராஷ்டிரம் சிதைந்தபிறகும், பல பத்தாயிரம் மக்கள் ஜிகாதிகளின் குண்டு வெடிப்புகளால்,காஷ்மீரக் ‘களையெடுப்பால்’ பிணமான பிறகு அவரது அந்த ரயில்  கதையை இன்று தமிழாக்கி வெளியிட்டுள்ளது கிழக்கு பதிப்பகம்.
எனவே,நூலின் பின் அட்டை விளம்பர வாசகம்,
“எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வலுவாக நம்முன் நிற்கிறது இந்தக் கதை”
என்று சுட்டிக்காட்டுவது வெகு பொருத்தம்.
என்ன நோக்கத்துக்காக இந்தியாவின் காங்கிரஸ்இஸ்லாமியர்களை தாஜா செய்கிறது என்பதற்கான காரணங்களை இந்த நூலை வாசித்ததும் புரிந்து கொள்ளலாம்.

நூல்:பாகிஸ்தான் போகும் ரயில்
நூலாக்கம்:குஷ்வந்த் சிங்
தமிழாக்கம்:ராமன் ராஜா
வெளியிட்டோர்:கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்:272
விலை:ரூ.200/-

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கான ஆதாரங்கள்!!!



தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.


குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)

என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).


வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். 

போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.

பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)

இயேசுவின் மரணம் காஷ்மீரிலே!!!






ஏசுநாதரின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ரகசியம்



இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் அகமதியா என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் உலகெங்கும் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களில்  பல நாடுகளில் தூதராக வாழ்ந்த ஒருவர்,உலக நாடுகளின் ரகசிய ஆவணங்களை ஆராய்ந்து,ஏசுநாதரின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட 20 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமாகவே எழுதி,திருநெல்வேலியிலிருந்து வெளியிட்டனர்.வெளியிட்ட ஆண்டு 1974.வெளியிட்ட பிரதிகள் 1000! அதிலிருந்து சில பகுதிகள்:



யூத இனத்தில் பிறந்த ஈசா தனது 13 வயது ஆனபோது,இந்தியாவுக்குச் செல்லும் ஐரோப்பிய வர்த்தகர்கள் கூட்டத்தோடு இணைந்து, நடந்தே இந்தியா வந்தடைந்தார்.அப்படி அவர் இந்தியாவுக்கு வந்தடைய 3ஆண்டுகள் ஆயின.ஆம்! அவர் தனது 16 ஆம் வயதில் இந்தியாவில் தற்போதைய ஒடிசா மாநிலத்தில் இருக்கும் புவனேஸ்வரத்தை வந்தடைந்தார்.



(*யூத சம்பிரதாயப்படி ஒரு யூதன் தனது 13 ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.)



புவனேஸ்வரத்தில் சுமார் 15 ஆண்டுகள் வரையிலும் இந்து ஜோதிடம்,மாந்திரீகம் எனப்படும் அஷ்டகர்மா,பிராணயாமா,யோகா போன்றவைகளைக் கற்றார்.அப்படிக் கற்றவற்றை தனது 31ஆவது இந்தியாவிலேயே பிரச்சாரமும் செய்ய ஆரம்பித்தார்.இது இந்து பிராமணர்களுக்குப் பிடிக்காததால்,அவர்கள் இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த (மன்னர் வம்சத்தில் பிறந்து துறவியான) புத்தரை பிரபலப்படுத்திவிட்டனர்.இதனால்,இயேசு தனது 33 வது வயதில் இந்தியாவிலிருந்து தனது பிறந்த நாட்டுக்குத் திரும்பினார்.



தனது பிறந்தநாட்டில் மூன்றுகடவுள் கொள்கையைத் தவிர,(படைப்பது பிரம்மா,காப்பது விஷ்ணு,அழிப்பது சிவன்) மற்ற அனைத்தையும் பிரச்சாரம் செய்தார்.அவருக்கு 13 சீடர்கள் கிடையாது.14 சீடர்கள் உண்டு.அந்த 14 வது சீடரின் பெயர் மகதலினா மரியாள்.அந்த பெண் சீடரை இயேசு திருமணம் செய்து கொண்டார்.குழந்தைகள் பிறந்தன.(இன்று இயேசுவின் வழிவம்சத்தவர்கள் ஒரு மாநிலம் முழுக்க வாழ்ந்து வருகின்றனர்.இதுபற்றி வாடிகனுக்கும்,அமெரிக்க நிர்வாகத்திற்கும் தெரியும்)



அக்காலத்தில் அரசனே கடவுளின் அவதாரம் என ஜெருசேலம் பகுதியில் நம்பப்பட்டதால்,அவரை சிலுவையில் அறைய உத்தரவிட்டான் அந்தப்பகுதி மன்னன்.ஆனால்,இயேசுவின் சீடர்கள்,சிலுவையில் அறையப்பட்ட பகுதியில் காவல் இருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுத்து,இயேசுவைக் காப்பாற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பினர்.

இந்தியாவுக்கு வந்த இயேசு இன்றைய காஷ்மீர் மாநிலத்தில் 120 வருடங்கள் வரை வாழ்ந்து இயற்கையான முறையில் இறைவனடி சேர்ந்தார்.

அந்த புத்தகத்தின் பெயர் இயேசுவின் மரணம் காஷ்மீரிலே!!!

இதல்லவோ இந்துத்துவம்!!!




மதுரையை அடுத்த மேலூர் தெற்குத் தெருவில் மந்தைவீரன் கோயில் இருக்கிறது.இது அந்த ஊரின் கிராம தேவதை கோயில் ஆகும்.நான்கு வழிச்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அரசு அதிகாரிகள் கோயில் இருக்கும் நிலப்பகுதியை கையகப்படுத்த வந்தார்கள்.தங்களின் கிராம தேவதையின் இருப்பிடத்துக்கு ஆபத்து என்று தெரிந்ததும்,ஊர் மக்கள் அதிகாரிகளிடம் சீறினார்கள்.

பிறகு இருவரும் கலந்து பேசியதில்,மாற்று வழியில் சாலையை விரிவாக்க 100 வீடுகள் இடிக்கப்பட வேண்டிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.உடனே,அதை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு, தங்களின் வீடுகளை தாங்களே இடித்தார்கள்.தங்களின் குலதெய்வத்தின் இருப்பிடத்திற்காக(கோயிலுக்காக) தங்களின் 100 வீடுகளை தியாகம் செய்திருக்கிறார்கள்.

நன்றி:தினமலர் 9.2.2007. 
விஜயபாரதம்,பக்கம் 11,16.12.11