Thursday, May 4, 2017

நீங்களும் ஜோதிடர் ஆக வேண்டுமா?



நமது நாட்டின் மக்கள்தொகை அடர்த்திக்கு இணையாக ஜோதிடர்களின் எண்ணிக்கை இல்லை;என்பது நம்மில் பலருக்கும் தெரியாது;(கணினி பழுதுபார்ப்பவர்களின் எண்ணிக்கையும் தான் ,மக்கள் தொகை அடர்த்திக்கு இணையாகவும்,கணினி,செல்போன்,மடிக்கணினியின் எண்ணிக்கைக்கு இணையாக இல்லை!!!)


அனுபவசாலிகளுக்கு எப்போதுமே மரியாதை உண்டு;


ஜோதிடத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன;
1.ஜோதிட அடிப்படை
2.ஜோதிடம் கணிப்பது;ஜாதகம் எழுத அறிந்து கொள்வது;
3.ஜாதகம் பலன் சொல்வது


இதில் இன்றும் கூட பலருக்கு ஜாதகப் பலன் சொல்லத் தெரியும்;ஆனால்,ஜாதகம் கணிக்கத் தெரியாது;
பலருக்கு ஜாதகம் கணிக்கத் தெரியும்;ஆனால்,ஜாதகம் பலன் சொல்லத் தெரியாது;
ஜாதகம் பலன் சொல்லும் டெக்னிக்குகளே 100 வித டெக்னிக்குகள் இருக்கின்றன;


ஜாதகம் கணிக்க அடிப்படையான பஞ்சாங்கங்கள் மட்டும் தமிழ்நாட்டில் 100 விதமான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

20 முதல் 25 வயது வரை பொழுதுபோக்காக ஜோதிடம் கற்பவர்கள்,40 வயதுக்குப் பிறகு முழுநேரஜோதிடராக ஆகிவிடுவது சர்வசாதாரணம்;


எண்கணிதம்,வாஸ்து,கைரேகை,சாமுத்ரிகா லட்சணம்,மந்திரஜபம்,மாந்திரீகம்(இதில் நல்ல மாந்திரீகம்,தீய மாந்திரீகம் என்று இரண்டு இருப்பது பலருக்குத் தெரியுமா?),மூச்சுப்பயிற்சியை சொல்லித்தரும் சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம் இவைகள் அனைத்தும் ஜோதிடக்கலையின் ஒரு அங்கங்களாகவே இருந்தன;


கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை,யாரெல்லாம் ஜோதிடம் கற்றார்களோ அவர்கள் இந்தக்  கலைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் தான் ஜோதிட அறிஞர் பட்டம் பெற முடியும்;


இன்று அப்படியல்ல;மனித மூளையைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது;இதனால்,ஜோதிடம் மட்டுமே கற்றுக் கொண்டு பொது மக்களுக்கு வழிகாட்டலாம்;

நேரடியாக வந்து ஜோதிடம் கற்றுக் கொள்ள பலருக்கு ஆசை இருக்கிறது.ஆனால்,செல்போனும்,இணையமும் வந்தப் பின்னர் அதற்குரிய அவசியம் பெருமளவு குறைந்துவிட்டது;


இணையம் மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருந்து ஜோதிடம் கற்கலாம்;தபால் வழியே ஜோதிடம் பயிற்றுவிக்கும் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;இவைகள் துவங்கி அதிகபட்சமாக 45 ஆண்டுகள் ஆகிவிட்டன;
ஒரு குரு,ஒரு சீடன் என்ற அடிப்படையில் இங்கே ஜோதிடம் பயிற்றுவிக்கிறோம்;


ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் வீதம் தினமும் நேரம் ஒதுக்கினால்,வெறும் 100 நாட்களிலேயே ஆர்வமுள்ள எவரையும் ஜோதிடராக்கிவிட முடியும்;


அடிப்படை,பலன் சொல்லுதல்,ஜாதகம் எழுதுதல் இம்மூன்றும் இப்பாடத்திட்டத்தில் உண்டு;நேரடியாக வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்தும் கொள்ளலாம்;ஜோதிடர் ஆனப் பின்னர் அடுத்த 5 ஆண்டுகள் வரையிலும் அனுபவங்களைப் பெற்று வெகுவிரைவாக பிரபல ஜோதிடர் ஆகலாம்;


கல்வித்தகுதி:(குறைந்த பட்சம்)பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;


வீட்டில் இருந்தவாறே ஜோதிடம் கற்க விரும்புவோர் தங்கள் ஜாதகத்தை   9092116990 என்ற இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும்;கூடவே Like to Learn Astrology என்று அனுப்பவும்;

ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம்!


கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!


யார் கடந்த மூன்று பிறவிகளாக ஈசனை மட்டும் வழிபட்டு வந்தார்களோ,அவர்களும்;
யார் கடந்த மூன்று பிறவிகளுக்குள் ஒரே ஒரு பிறவியிலாவது சித்தர் ஒருவரிடம் சீடராக இருந்தாரோ அவர்களும்;
மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பது சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் சித்தரின் வாக்கு ஆகும்;


அசைவம் சாப்பிடுவதும், மது அருந்துவதும்,புகை,போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தெய்வீக முயற்சிகளையும் தகர்த்துவிடும்;சுலபமாக பிறரின் பொறாமை அல்லது கருமார்க்கத்தின்(மாந்திரீகம்) தாக்குதலுக்குள் வர வாய்ப்புக்கள் அதிகம்;


எனவே,யார் இவைகளை நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும்     33 முறை பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;


 முதல் வாரத்தில் தினமும் 7 முறையும்,
இரண்டாவது வாரத்தில் தினமும் 14 முறையும்,
மூன்றாவது வாரத்தில் தினமும் 21 முறையும்,
நான்காவது வாரத்தில் தினமும் 28 முறையும்,
ஐந்தாவது வாரத்தில் இருந்து 150 வது வாரம் வரை தினமும் 33 முறையும் ஜபித்து வருவது நன்று;

இப்படிச் செய்து வருவதன் மூலமாக நேர்மையான வழியில் நமது வருமானம் பெருகிக்கொண்டே செல்லும்;

எவ்வளவுக்கெவ்வளவு பரம ரகசியமாக இவ்வழிபாட்டைச் செய்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது அனுபவ உண்மை!!!

ஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகம்

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!

தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.

 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண வாராகி வழிபாடு


தலைவாழை இலையில் 5 படி நெல்லை பரப்பி அதன் மீது மற்றொரு இலையை வைத்து அதில் 5 படி பச்சரிசியைப் பரப்ப வேண்டும்;அதன் மீது 27 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;ஸ்ரீஅரசாலையை சொர்ண வராகியாக எண்ணி வழிபட வேண்டும்;ஸ்ரீசொர்ண வராகி பொற்குடத்துடன் அதில் எழுந்தருளி பக்தர்கள் வேண்டும் செல்வங்களை வாரி வழங்குவாள்;

இதே முறையில் தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் வழிபட வேண்டும்;இதற்கு இடைப்பட்ட நாட்களில் தினமும் காலை,மதியம்,இரவு மூன்று வேளையும் கீழே காணும் சொர்ண வராகி மந்திரத்தை 108 முறை கூறிவர வேண்டும்;


பக்கம் 81 இல் இருக்கும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;
ஆதாரம்;வல்லமை தரும் வாராஹி வழிபாடு
எழுதியவர்:அச்சுத நாதர்,
சங்கர் பதிப்பகம்,15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி,2வது தெரு,இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம்,சென்னை 49.
தொலைபேசி: 26502086

தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் இருக்கும் கடைகளிலும் இது கிடைக்கின்றது;



நம் ஒவ்வொருவரையும் ஜீனியஸ் ஆக்கும் புத்தக வாசிப்பு பாகம் 2


அறிவே சக்தி;வலிமையே வாழ்க்கை என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார் ஒருவர்;அது இன்றும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் பொருந்திவருகிறதா?

இணையத்தின் பரவல்,செல்போனின் கட்டணக்குறைப்பு போன்றவை புத்தகவாசிப்பை இளைஞர்களிடையே குறைத்துவிட்டாலும்,இணையம் மூலமாக வாசிப்பது அதிகரித்துள்ளது;இங்கேதான் ஒரு சிக்கல்?

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சுதந்திரமான நிலை உருவாகிவிட்டதால்,இணையத்தில் எழுதுபவர்கள் அனுபவத்தைத்தான் எழுதுகிறார்களா? அல்லது சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதுகிறார்களா?

எது உண்மை?எது பொய்? எது பாதி உண்மை? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.அதே சமயம் அந்த குழப்பம் பற்றி எதுவும் அறியாமலேயே கண்டதையும் வாசித்துவிட்டு செயலில் இறங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இதனாலும் ஆன்மீகத்தின் மீதான நாட்டம் பலருக்கு வெறுப்பாக மாறிவருகிறது;குரு தொட்டுக்காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியே நம்மில் பலருக்குத் தெரியாது.


எனவே புத்தங்கள் எழுதி வெளியிடுவதில் 90% உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,வாஸ்து போன்றவற்றில் புத்தகவாசிப்பு இருப்பது அவசியம்;

1980க்கு முன்பு வெளிவந்த வார,மாத இதழ்களில் உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,தியானம்.ஜோதிடம் போன்றவைகளில் 1940க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும்,1915க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும் ஏராளமான பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கின்றன;இவைகளைத் தேடி அலையும் கூட்டம் ஒருபுறம் தமிழ்நாட்டில் அதிகரித்தாலும்,அவர்களுக்கு இவைகளை எங்கே தேடுவது? என்று தெரியாமல் தேடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்;அனைத்து பழைய புத்தகக்கடைகள்,கன்னிமரா நூலகம்,சென்னை,     பென்னிங்க்டன் நூலகம்,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவைகளில் தேடலாம்;


லண்டனில் நூலகராக வாழ்ந்து வந்த ஒரு ஆங்கிலேயர் ,லண்டனின் பழைய புத்தகக்கடையில் ஒரு நூலைக் கண்டெடுத்தார்;அந்த நூல் நமது பாரத நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கக் காரணமாக இருந்தது;


சீனப் பெருஞ்சுவரைப் போல நமது பாரத நாட்டில் கி.பி.1700களில் உப்பு வேலி ஒன்றை அன்றைய ஆங்கிலேயன் 2500 கி.மீ.தூரத்திற்கு நிறுவினான்;இந்த உப்புவேலி இன்றைய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே துவங்கி டெல்லி,மத்தியப்பிரதேசம்,ஒரிஸா வரை நீண்டிருந்தது;இந்த உப்புவேலியின் மூலமாக நமது பாரத நாட்டில் பலமுறை செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கினான் ஆங்கிலேயன்;இந்தப் பஞ்சங்களால் நமது தேசம் பல கோடி இந்தியர்களை பலி கொண்டது;இது தொடர்பாக அந்த ஆங்கிலேயர் தொடர்ந்து ஆய்வு செய்து,நமது நாட்டிற்கும் வருகை தந்து அந்த உப்புவேலியின் மிச்ச சொச்சத்தை 18 ஆண்டுகளாகத் தேடி அலைந்தார்;பூலான் தேவி வாழ்ந்து வந்த புந்தேல் கண்டு என்ற வனப்பகுதியில் சில நூறு மீட்டர்கள் தொலைவுக்கு வனத்திற்குள் இருந்ததைக் கண்டுபிடித்தார்;அதைப் படம் பிடித்து உப்புவேலி என்ற புத்தகமாகவும் வெளியிட்டார்;மார்ச் 2015 இல் தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது;நமது பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த உப்புவேலி என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பது அவசியம்;


வெறும் உப்புக்கு வரிவிதிக்கிறேன் பேர்வழி என்று நமது நாட்டின் அப்பாவி மக்கள் கோடிக்கணக்கானவர்கள் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி கொன்றான் ஆங்கிலேயன்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த தொடர் வந்தார்கள்;வென்றார்கள்;கி.பி.1000 முதல் கி.பி.1992 வரை நமது நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை பல ஆங்கில நூல்களை வாசித்து அதில் இருந்து தொகுக்கப்பட்டு வெளிவந்த தொடர் இது;ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய அற்புதமான வரலாற்றுத் தொடர்;கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நமது நாட்டின் வரலாற்றை வாசிக்க ஒரளவு இந்த புத்தகம் உதவும்;


பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள் என்ற தலைப்பில் விநாயக தாமோதர சாவர்க்கர் ஐந்து பாகங்களாக எழுதியிருக்கும் இந்த நூல் பழமையான நூலகங்களில் மட்டுமே காணப்படுகிறது.கடந்த 10,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் எப்படியெல்லாம் வாழ்ந்தது? என்பதை சாவர்க்கர் எழுதியிருக்கிறார்;

இதையே நமது பள்ளியின் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும்;அந்த அளவுக்கு ஆழமாக ஆராய்ந்து நமது பாரத தேசத்தின் பெருமைகளை விவரித்து எழுதியிருக்கிறார்;நமது தேசம் பற்றிய பெருமைகளையும்,சாதனைகளையும் இவரைப் போல வேறு எவரும் எழுதியிருப்பார்களா? என்பது சந்தேகமே!!

கண்சிமிட்டும் விண்மீன் கள் என்ற பெயரில் ஒரு நாவல் மராத்தி மொழியில் இருந்து தமிழில் 1980களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.சுசீலா கனகதுர்கா என்பவர் மொழி பெயர்த்துள்ளார்;வேற்றுகிரக மனிதர்களை சந்தித்து பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையை மனிதர்கள் பேசித் தீர்க்கும் விதமாக மராத்திய மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியிருக்கிறார்;


டீன் ஏஜ் குழந்தைகளிடையே அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.
ஆன்மீகத்தில் தேடல் உள்ளவர்கள் கோட்டயம் புஷ்பநாத் எழுதியிருக்கும் அனைத்து நூல்களையும் ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்;அவர் எழுதியிருக்கும் ஆன்மீக,ஜோதிட,மாந்திரீக விஷயங்கள் நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்கினாலும்,உண்மையை,உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களையே அவர் எழுதியிருக்கிறார்;

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய நாவல் கூடு;ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார்;நிர்வாகத்தில் நாசமாகிப் போன ஒரு நாட்டை வெறும் 48 மணி நேரத்தில் எப்படி சீரமைக்கிறார் என்பதை அவரது சொந்த ஸ்டைலில் நாவலாக எழுதியிருக்கிறார்;ஒரு நாட்டை ஆளும் மன்னன் கெட்டவனாக இருந்தால்,அந்த நாட்டில் பெண்கள் நிலை என்னவாகும்? அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்கள்? என்பதை அப்பட்டமாகவும்,சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார்;இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே ஆன்மீகத்தின் மீது ஒரு தாகத்தை உருவாக்கும் என்பது எனது அனுபவம்.

புத்தக வாசிப்பு என்பது இலக்கில்லாத பயணம்;இந்த பயணத்தில் தொடர்ந்து வருபவர்களால் மட்டுமே தமது சொந்த வாழ்க்கையில் சாதனையாளராக முடியும்;ஏனெனில்,மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரமானது;அதை ஏற்றுக் கொள்ள ஒவ்வொரு நொடியும் நாம் தயாராக இருக்க வேண்டும்;


இன்னும் தொடரும். . .

இப்படிக்கு


உங்கள் கை.வீரமுனி. . .

கூட்டுப் பிரார்த்தனைக்கு உதவும் சிவமந்திரம்


ஹரே ராம,ஹரே க்ருஷ்ண என்ற மந்திரம் இன்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும்,எல்லா நேரங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது;இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிப்பதன் மூலமாக விஷ்ணுவின் அருளைப் பெற்றவர்கள் பல்லாயிரம் பேர்கள் இன்றும் இருக்கிறார்கள்;


இதற்கு இணையான சிவமந்திரம் இருக்கிறதா? என்று நம்மில் பலர் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்;

அந்தத் தவிப்பை ஈசனின் அருள் இன்று தீர்த்துவிட்டது; 

இதோ:


ஓம் நமசிவாய சிவாயநம ஓம்




வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!

காலப்பிரகாசிகை கூறும் ஜோதிட வைரங்கள்!


லக்னத்தில் குரு இருக்கும் போது(கோசாரத்தில் தான்) தங்கம்,ரத்தினம்,தானியங்கள் வாங்கினால் அது பெருகும்;(அட்சய திரிதியை வரை காத்திருக்கத் தேவையில்லை)


சந்திரன் உச்சமாகி,அதை லக்னமாக்கி அதற்கு ஏழாமிடத்தில் குரு இருக்க செல்வங்களைச் சேமித்தால் தங்கம்,வெள்ளி,ரத்தினங்கள் ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருகும்;


கார்த்திகை,மகம்,அஸ்தம்,அனுஷம்,மூலம்,சதயம் நட்சத்திர நாட்களில் தங்கம்,ரத்தினம் போன்றவைகளை பிறருக்கு இரவல் தரக்கூடாது;அப்படித் தந்தால் கொடுத்தவன் தரித்திரனாகிறான்;வாங்கியவன் செல்வங்கள் நிறைந்து காணப்படுகிறான்;


குரு வர்கோத்தமம் ஆகி,புதனும்,சுக்கிரனும் கேந்திரத்தில் இருக்கும்படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கி சேமித்தால் ஒன்று கோடி மடங்காகப் பெருகும்;


வியாழக்கிழமை,லக்னத்தில் குருவும்,11 இல் சூரியனும் 6 இல் சனியும் இருந்தால் அது சமயம் பணியாளர்களை நியமனம் செய்து வைப்பது உத்தமானது;

வெளியீடு:தஞ்சை சரபோஜி நூலக வெளியீடு


ஜோதிடம் கற்றுக் கொடுப்பவர்:கை.வீரமுனி. . .9092116990

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;


கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;


கடன் என்பதும் கர்மவினையே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;


மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;


இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;


மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;


சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(28 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)


சதுர்முகி & ஹேவிளம்பி வருட மைத்ர முகூர்த்தங்கள்;

3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40

18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24

2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52

18.3.17 சனி இரவு 10.15 முதல் 12.15

25.3.17 சனி காலை & இரவு 7.44 முதல் 9.44;மதியம் 1.44 முதல் 3.44

30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04

14.4.17 வெள்ளி இரவு 8 முதல் 10

26.4.17 புதன் காலை 6 முதல் 7.08

11.5.17 வியாழன் மாலை 6.16 முதல் 8.16

12.5.17 வெள்ளி மாலை 6.18 முதல் 8.18

22.5.17 திங்கள் காலை 5.03 முதல் 6.28

23.5.17 செவ்வாய் காலை 4.32 முதல் 6.32

8.6.17 வியாழன் மாலை 4.28 முதல் 6.28

20.6.17 செவ்வாய் விடிகாலை 1.16 முதல் 3.16

5.7.17 புதன் மதியம் 2.48 முதல் 4.48

16.7.17 ஞாயிறு நள்ளிரவு 12 முதல் 2

2.8.17 புதன் மதியம் 1.04 முதல் 3.04

5.8.17 சனி காலை 6 முதல் 6.48;காலை 10.48 முதல் 12.48;மாலை 4.48 முதல் 6.48;

13.8.17 ஞாயிறு இரவு 10.16 முதல் 12.16

19.8.17 சனி காலை & இரவு 10.08 முதல் 12.08;மாலை 4.08 முதல் 6.08

29.8.17 செவ்வாய் காலை 11.10 முதல் மதியம் 1.10

9.9.17 சனி இரவு 8.32 முதல் 10.32

25.9.17 திங்கள் காலை 7.30 முதல் 9.30

26.9.17 செவ்வாய் காலை 7.34 முதல் 9.34

7.10.17 சனி மாலை 6.48 முதல் இரவு 8.48

23.10.17 திங்கள் காலை 6.20 முதல் 8.20

3.11.17 வெள்ளி மாலை 4.56 முதல் 6.56

19.11.17 ஞாயிறு காலை 6.15 முதல் 8.15

30.11.17 வியாழன் மதியம் 3 முதல் மாலை 5

16.12.17 சனி அதிகாலை 4.07 முதல் 6.07

28.12.17 வியாழன் மதியம் 1.10 முதல் 3.10

30.12.17 காலை & இரவு 7.11 முதல் 9.11;மதியம் & நள்ளிரவு 1.11 முதல் 3.11

12.1.18 வெள்ளி நள்ளிரவு 2.08 முதல் 4.08

25.1.18 வியாழன் காலை 11.20 முதல் மதியம் 1.20

8.2.18 வியாழன் இரவு 12.20 முதல் 2.20

20.2.18 செவ்வாய் காலை 9.24 முதல் 11.24

8.3.18 வியாழன் இரவு 10.28 முதல் 12.28

20.3.18 செவ்வாய் காலை 8.20 முதல் 10.20

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது; 

ஓம் அகத்தீசாய நம;ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;