Thursday, April 27, 2017

ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் வழிமுறை!!!








சித்தர்களின் தரிசனத்துக்கு ஏங்கித் தவிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தினத்தந்தியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அகத்தியர் ஜீவநாடி என்ற தொடர் வெளிவந்தது.சென்னையில் வாழ்ந்து வந்த அகத்திய மைந்தன் திரு.ஹனுமத்தாஸன் அவர்கள் தமது கடந்த 30 ஆண்டுகால அகத்திய ஜீவநாடி அனுபவங்களை அதில் தொடர்ந்து எழுதினார்;அதே காலகட்டத்தில் தினத்தந்தியில் இலவச இணைப்புகளில் ஒன்றில் அதிசய சித்தர்கள் என்ற பெயரில் சதுரகிரியில் நிகழ்ந்த சித்தர்கள்+சதாசிவன் சார்ந்த புராண அதிசயங்களையும் தொடராக எழுதினார்;2008க்கும் முன்பாக சக்திவிகடனில் சதுரகிரியின் பெருமைகளை குடந்தை ஸ்யாமா என்பவர் தொடராக எழுதினார்;இவைகளெல்லாம் பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குவதற்கான முன்னோட்ட விழிப்புணர்வு என்றே கூறலாம்.


சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்;சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்களாக இருந்தாலும்,சித்தர்களின் எண்ணிக்கை சிலபல ஆயிரங்களைத் தொடும்;அஷ்டமாசித்துக்களை தமது மனப் பயிற்சியாலும்,தகுந்த குருவின் வழிகாட்டுதலாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்களே சித்தர்கள் ஆவார்.அஷ்டமாசித்துக்களைப் பற்றி அறிய புத்தகங்கள்,வலைப்பூக்கள்,இணையதளங்கள் என்று இருந்தாலும் தகுந்த குரு இல்லாமல் இந்த அஷ்டமாசித்துக்களை அறிய முடியாது;



அகத்தியருக்கும் முற்பட்ட சித்தர் ஒருவர் இருக்கிறார் எனில்,அவரே ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.பல கல்பகோடியுகங்களாக இமயமலையில் வசித்து வந்த இவரை தமிழ்நாட்டுக்கு வர வைத்தவர்கள் சித்தர்களே! இவர் இன்றைய மதுரையை ஒட்டியுள்ள திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வெகுகாலமாக தவம் செய்திருக்கிறார்;இதனால்,திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் ஆத்மத்துடிப்புடன் இயங்கிவருகின்றன;இன்னும் பல மகான்களின் நடமாட்டம் இன்றும்,என்றும் இருக்கிறது;இவரது அருளால் உயர்ந்த சிவநிலையை எட்டியவர்கள் ஏராளம்.நமக்குத் தெரிந்து என்று பார்த்தால் சூட்டுக்கோல் சுவாமிகளைச் சொல்லலாம்;



இன்றும் திருப்பரங்குன்றம் தியாகராஜ பொறியியல் கல்லூரிக்கு அருகில் சூட்டுக்கோல்மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று ஒரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரலாம்;அவ்வாறு சில வருடங்கள் ஜபித்து வந்தால் சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் நேரடி தரிசனத்தைப் பெறலாம்;சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது;இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார்.இந்த இடத்தில் தான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பல ஆண்டுகள் தவமிருந்து ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற்றார்.


ஸ்ரீகாக புஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் இங்கே வருகை தந்து சூட்டுக்கோல் மாயாண்டுசுவாமிகளின் ஜீவசமாதி அல்லது அவர் பல ஆண்டுகளாக தியானம் செய்த குகையில் ஒரு மணி நேரம் வரை சிவாய நம என்று ஜபித்து வர வேண்டும்.பூர்வ புண்ணியம் உள்ளவர்கள் ஆயில்யம் நிற்கும் நாளில் இங்கே இரவில் தங்கி,தூங்காமல் ஒரு இரவு  முழுவதும் சிவாய நம ஜபித்து வரலாம்;இவ்வாறு மாதம் ஒரு நாள் வீதம் விடாமல் ஜபித்துவர அவரவர் பூர்வஜன்ம மனவலிமைப்படி ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசி கிட்டும்.ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரமே பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம் ஆகும்.


மதுரையைத் தவிர,தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது.அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்:

1.சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம்.இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது.இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.


2.கடலூர் மாவட்டம் சிதம்பரம் டூ கடலூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.


3.காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.


4.விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி.இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்தான்!!!


5.நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும்.இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக(யுகங்களாக) தவம் செய்திருக்கிறார்.இங்கே தான் உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.


6.ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை ஆகும்.வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார்.இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.


7.திருப்பரங்குன்றம்மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே.இங்கே ஏராளமான சித்தர்கள்/துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.


8.நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன.இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.(பொழுதுபோக்காகச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்;விபரீத விளைவுகள் உண்டாகும்.ஜாக்கிரதை!!)


9.இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.


10.புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.


11.சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர்.இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி.பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவராக அருள்பாலித்து வருகிறார்.இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது.ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும்  இங்கே பரவிக்கிடக்கிறது.


12.அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம்.ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்கசுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.


13.கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கே சென்றும்    சிவாய நம ஜபித்து வர,ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.


14.கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது.தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து  சிவாய நம ஜபிக்க,வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.


15.சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.
16.நாகநாத சித்தரும்,அவரது சீடர் யோகி குமரகுருவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆலயத்தை கொழும்பில்(இலங்கை) கட்டியுள்ளனர்.தற்போது திரு.குமரகுரு என்பவரின் குடும்பம் அந்தக் கோவிலை நிர்வகித்துவருகிறது.இதோ மேலே இருக்கும் படம் இலங்கையில் இருக்கும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் புகைப்படம் ஆகும்.

ஆதாரம்:சற்குரு ஸ்ரீகாகபுசுண்டர்,பெருநூல்காவியம் 1000,மூலமும் உரையும்.எழுதியவர் பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி,ஸ்ரீமனோன்மணி ஞான சித்தர்பீடம்,சீர்காழி.

ஹேவிளம்பி வருடத்தின் ஆயில்யம் நட்சத்திர நாட்கள் பட்டியல்:

3.5.2017 புதன்கிழமை காலை 9.45 முதல் 4.5.2017 வியாழன் காலை 9.11 வரை

30.5.2017 செவ்வாய் மால 5.53 முதல் 31.3.2017 புதன் மாலை 5.15 வரை

27.6.2017 செவ்வாய்

24.7.2017 திங்கள் காலை 10.08 முதல் 25.7.2017 செவ்வாய் காலை 9.14 வரை

20.8.2017 ஞாயிறு மாலை 6.07 முதல் 21.8.2017 திங்கள் மாலை 5.10 வரை

17.9.2017 ஞாயிறு

14.10.2017 சனி

11.11.2017 சனி

8.12.2017 வெள்ளி

4.1.2018 வியாழன்

1.2.2018 வியாழன்

28.2.2018 புதன்

27.3.2018 செவ்வாய்





தொடர்ந்த ஆத்மசாதகம் செய்பவர்கள் மட்டும் இந்த நாட்களில் இரவில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி அல்லது பிற மலைப்பகுதியில் இரவில் தங்கி சிவாய நம என்று ஜபித்து வரலாம்; ;மற்றவர்கள் பகலில் ஒரு மணி நேரம் மட்டும் சிவாய நம என்ற சிவமந்திரத்தை ஜபித்துவந்தாலே போதுமானது;

*படங்களில் காணப்படுவது திருப்பரங்குன்றத்தில் காணப்படும் ஜீவசமாதிகள் ஆகும்.தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு அருகில் இவை அனைத்தும் அமைந்திருக்கின்றன.

தானம் பெறுவதில் கவனம் தேவை!!!




தினமலர் வாரமலரில் வைரம் ராஜகோபால் எழுதும் ஒருபக்க ஆன்மீகக் கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் பரவாயில்லை;இன்றிலிருந்தாவது வாசியுங்கள்;நாம் கவனக்குறைவாகச் செய்யும் ஒரு சிறு பிழையானது நமது வளர்ச்சியைத் தடை செய்யலாம்;

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது உண்மை;அதே நேரம் நமது தினசரி வாழ்க்கையில்  உயர்ந்தது நிதானம்.ஆம்,நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் நிதானமாக இருக்கப் பழக வேண்டியிருக்கிறது;நிதானத்தை பேச்சிலும்,சிந்தனையிலும்,வாகனம் ஓட்டுவதில்,படிப்பதிலும் பின்பற்ற வேண்டியிருக்கிறது;இல்லாவிட்டால்,நமது இழப்புகளை ஈடு செய்யவே இயலாது;


அன்னதானம் செய்கிறோம்;அதன் மூலமாக நமது கர்மவினைகளைக் குறைத்துக் கொள்கிறோம்;வீடு வாசல் இல்லாத அனாதைகள்,சாதுக்கள்,துறவிகளுக்கு இலவசமாக உணவு கொடுத்தால் தான் அது அன்னதானம் எனப்படும்;அசைவ உணவு கொடுத்தால்,அது அன்னதானமாக கருத முடியாது;நள்ளிரவில் அன்னதானம் செய்தால்,அது மஹாபாவம் ஆகும்.இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேல் நாமாக வலியச் சென்று அன்னதானம் செய்யாமலிருப்பது நல்லது;(அதே சமயம்,பசிக்கிறது என்று யார் எப்போது எந்த நேரத்திலும்,எந்த சூழ்நிலையிலும் கேட்டாலும்,உடனே அவர்களுக்கு நம்மால் ஆன உணவை வாங்கித் தராமல் இருப்பது பாவம்;)அன்னதானம் செய்பவர்,அவரே நேரடியாக செய்ய இயலாத போது,தனது ரத்த உறவுகளைக் கொண்டோ,தனது நம்பிக்கைக்குரியவர்களைக் கொண்டோ செய்யலாம்;


அன்னதானம் செய்பவரின் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் அவரோ,அவரது ரத்த உறவுகளோ,அவரது நம்பிக்கைக்குரியவரோ எவர் மூலமாகவும் அன்னதானம் செய்யலாம்;அல்லது எந்த கோவிலில் அன்னதானம் செய்கிறோமோ அந்தக் கோவிலின் மூலவரது ஜன்ம நட்சத்திர நாள் அல்லது திருவிழாக் காலம் அல்லது நமக்கு வசதிப்பட்ட நாட்களில் அன்னதானம் செய்யலாம்.அன்னதானம் செய்யும் முன்போ,செய்த பின்னரோ அதை விளம்பரப் படுத்தக்கூடாது;அன்னதானம் தானே என்று மலிவான உணவுப்பொருட்களைக் கொண்டு அன்னதானத்துக்கு உணவு சமைக்கக் கூடாது;மனதார அன்னதானம் செய்தால் மட்டுமே அதற்குரிய பலன்/பலன்கள் அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் நம்மை வந்து சேரும்.


அன்னதானம் செய்வதற்கு ஏற்ற இடங்கள்:உலக அளவில் முதலிடம் பெறுவது நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே அமைந்திருக்கும் அண்ணாமலை தான்!!! இதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது காசி என்ற வாரணாசி,கேதார்நாத்,பத்ரிநாத்,திருக்கையிலாய மலை ஆகும்.
இரண்டாம் இடத்தைப் பிடிப்பவை: தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயங்கள் அனைத்துமே!
மூன்றாம் இடத்தைப் பிடிப்பவை:அனாதை இல்லங்கள்,முதியோர் இல்லங்கள்
நான்காம் இடத்தைப் பிடிப்பவை:சித்தர்களின் ஜீவசமாதிகள்,மற்றும் துறவிகளின் ஜீவசமாதிகள்
ஐந்தாம் இடத்தைப் பிடிப்பவை: பசி என்று கேட்பவர்களின் இடங்கள்

அன்னதானம் செய்ய இயலாதவர்கள்,ஒரே ஒரு பழம் உடனே வாங்கிக் கொடுத்தாலும் அது அன்னதானத்துக்குரிய பலனைத் தரும்.பழம் கிடைக்காவிட்டால்,சாப்பிடக் கூடிய எந்த ஒரு தின்பண்டமாகவும் இருக்கலாம்;


வஸ்திரதானம் என்பது ஆடை தானம் ஆகும்.சாதுக்களுக்கு காவி நிற ஆடைகள்,துண்டுகள்,வேட்டிகள்,கனமான மற்றும் குளிர் உட்புகாத ஆடைகள் ஆகும்.நாம் தானம் தரும் ஆடையை அந்த சாது பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் நமது கர்மவினைகள் குறைந்து கொண்டே வரும்;


நீங்கள் எந்த ஒரு கோவிலுக்குச் சென்றாலும்,செல்லும்போதும், வழிபட்டுத் திரும்பும்  போதும்= உங்களோடு வருபவரே உங்களுக்கு ஒரு டீ/காபி/பழச்சாறு/குளிர்பானம்/உணவுப்பொருள் வாங்கித் தந்தால் அதற்குரிய பணத்தை நீங்களே தந்துவிடுங்கள்;அப்படித் தந்தால் தான் நீங்கள் அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டதற்கான பலன்கள் உங்களோடு வரும்;இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் சிறிதும் இரக்கமே படாதீர்கள்; அதே சமயம்,உங்கள் மீது பிரியப்பட்டு உங்கள் நண்பர்/உறவினர் ஒரு கோவிலுக்கு உங்களை அவரது வாகனத்தில் இலவசமாக அழைத்துச் சென்றால் அது தப்பில்லை;அப்படிச் செல்வதால் உங்கள் வழிபாட்டின் புண்ணியப்பலன்கள் அவரைச் சேராது;

ஒருவர்  தமது பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது பதவி உயர்வுக்கான மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நமக்கு ஆடை அல்லது துணிமணி எடுத்துத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம்;அந்த ஆடையை நாம் பயன்படுத்தும் வரையிலும்,நமக்குப் பரிசாக அளித்தவருக்கு நாம் செய்யும் புண்ணியம் போய்ச் சேராது;ஏனெனில்,அவர் நமக்கு அளித்திருப்பது தானம் அல்ல;பரிசு;அவரது மகிழ்ச்சியின் வெளிப்பாடு;


ஆனால்,ஒருவர் நமக்கு தூங்குவதற்கான போர்வை அல்லது படுக்கை அல்லது கட்டில் தானமாகக் கொடுத்தால் மட்டும் அதை ஒருபோதும் வாங்கக்கூடாது;கூடவே கூடாது;தானத்தில் வாங்கக் கூடாத தானம் படுக்கை தானம் மட்டுமே! நாம் தூங்கும் இடமான கட்டில் அல்லது போர்வை அல்லது படுக்கையை நாமே நமது உழைப்பின் மூலமாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால்,நமது புண்ணியச் சேமிப்பு கரைந்து போய்விடும்.நகரம்,கிராமம்,வெளிநாடு,சிறு நகரங்களில் வாழும் பலர் படுக்கை தானம் செய்துவருகிறார்கள்;எப்படி?


நாம் வாழும் கலியுகத்தில் கணவன்,மனைவியாகச் சேர்ந்து வாழ்பவர்களை விடவும்,பிரிந்து வாழ்ந்து வருபவர்களே அதிகம்;மேலும்,திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் ஆண்களும்,பெண்களும் பல லட்சம் பேர்களை எட்டுகிறது;மாநகரங்களில் தான் இந்த எண்ணிக்கை என்று இல்லை;ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் இந்த சூழ்நிலையே நிலவுகிறது.இந்த சூழ்நிலையில்,தனித்து வாழும் ஆண்களில் பலர் ஆன்மீகம்,ஜோதிடம் தெரிந்த பலரை தம்மோடு தமது இருப்பிடமான வீடு/ப்ளாட்/அறையில் சில நாட்கள் தங்க வைக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.அப்படி தங்க வைக்கும் நாட்களில் அவர்களை ஒரு குருவுக்குரிய மரியாதையுடன் நடத்தி,இரவு உணவை வாங்கித் தருகிறார்கள்;அப்படி வாங்கித் தந்த கையோடு தமது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று இரவில் தங்கவும் வைக்கிறார்கள்.இதுவும் ஒருவித நவீனமான படுக்கை தானமே! ஒரே ஊரில் வசித்துக் கொண்டு,நெருங்கிய நண்பர்களாகிய பின்னர்,தமது வீட்டில் தூங்காமல் ஒரு ஜோதிடர் தனது நெருங்கிய நட்பு வீட்டில் தூங்கினால்,அந்த நாள் முழுவதும் சேகரித்த புண்ணியம் படுக்கை தானம் செய்தவருக்கு உடனே போய்ச் சேரும் என்பது கடந்த ஏழு ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டறிந்த உண்மை ஆகும்.

ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ

தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!



டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.

மனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமே!மேம்பட்ட நிலையில்  உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.

‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.

ஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

ஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.

மகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.

உலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.

மகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது சிவாய நம மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை!!!


ராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வேண்டிய பைரவ வழிபாட்டு முறைகளும்!!!



விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)

 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)

17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:

17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி


விரையச்சனி காலத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும்;வருமானத்திற்கும்,செலவிற்குமான இடைவெளி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்;அவ்வாறு அலைச்சல்கள் வருவதற்கு நமது கவனக்குறைவே காரணமாக அமையும்.


ஜன்மச்சனி காலத்தில் உயிரைத் தவிர அனைத்தையும் இழக்கும்(தற்காலிகமாகத்தான்!) சூழ்நிலை படிப்படியாக உருவாகும்;சேமிப்புகள் கரைந்துவிடும்;கணவன் மனைவிக்குள் தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு பிரியவேண்டியிருக்கும்;அடிக்கடி சண்டைகள் வரும்;நிரந்தரமான பிரிவோ,நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கையோ இருப்பது அரிதாக இருக்கும்;இந்த கால கட்டத்தில் சுயதொழில் துவங்கிடக் கூடாது;ஏற்கனவே செய்துவரும் தொழிலை விரிவு படுத்தாமல் இருப்பதும் அவசியம்;குருப்பெயர்ச்சி ஓரளவு நிம்மதியைத் தரும்;ஆனாலும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவோம்;நிரந்தரமான வேலை அமைவது அரிது;அலைந்து திரிந்து பார்க்கும் வேலையைத் தேர்வு செய்வது நன்று;நமது தனித்திறமை நமது மேலிடத்திற்குத் தெரியாமல்,வேறு யாரோ ஒருவர்/ள் தன்னுடையதாகக் காட்டி முன்னேறுவார்;நம்மால் எதுவுமே செய்ய முடியாது; தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்ளும் குணத்தின் மீது ஆளுமைத்திறன் தாக்குதல் நடைபெறும்;அவமானத்தின் முழுப்பரிமாணத்தையும்,புறக்கணிப்பின் அர்த்தத்தையும் உணரும் சூழ்நிலை இந்தக் கால கட்டம் ஆகும்.பலர் கடனால்/நோயால்/தேவையற்ற எதிர்ப்புகளால் படாத பாடு படுவர்;எப்போதும் அகலக்கால் வைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்;

வாக்குச்சனி காலத்தில் நாம் எதைப் பேசினாலும்,அது பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்;ஜன்மச்சனிகாலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;ஒரு சிறு செயலைக் கூட ஒரே தடவையில் செய்து முடிக்க முடியாமல் 900 நாட்கள் நகர்ந்தால் எப்படி இருக்கும்? அதே போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தொடரும்;பண வரவு கொஞ்சம் அதிகரிக்கும்;

அஷ்டமச்சனி காலமானது ஏழரைச்சனி முடிந்த 13 வது ஆண்டில் துவங்கும்;இரண்டரை ஆண்டுகளில் ஏழரைச்சனிகாலத்தில் தந்த அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும்;இதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.விதி விலக்காக ஒரு சிலருக்கு மட்டும் பொருந்தாது;ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணத்தில் சனி இருக்க ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் நன்மைகளை மட்டுமே செய்யும்.இவர்கள் முற்பிறவிகளில் ஸ்ரீகால பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக வழிபட்டவர்கள் ஆவர்.

ஏழரைச்சனி 16.12.2017 அன்றுடன் துலாம் ராசிக்காரர்களுக்கு நிறைவடைந்தாலும்,மறுநாளே அவர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவான் தந்துவிட மாட்டார்;அந்த நாளில் இருந்து குறைந்தது ஒரு வருடம் கழிந்தப் பின்னரே,அவரது வயது,கல்வித்தகுதி,திறமை,தனித்திறமை,பேச்சாற்றல்,யூகிக்கும் சாமர்த்தியம் இவைகளுக்குப் பொருத்தமான வேலை/தொழில் அல்லது இரண்டையும் தருவார்;

ஏழரைச்சனி காலத்தில் சாதாரண வேலை அல்லது தொழிலில் இருக்கலாம்;ஏழரை முடிந்த ஒரு வருடத்துக்குள் சிறந்த வேலையில் சேர வேண்டும்;சேமிக்கத் துவங்க வேண்டும்;தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும்;ஒரு போதும் பிறருக்குத் தீங்கு தரக் கூடாது;ஒரு போதும் பிறர் மனதை நோகடிக்கக்கூடாது;ஒரு போதும் தவறான வழியில் சம்பாதிக்கக் கூடாது;தவறான வழியில் சொத்து சேர்க்கக் கூடாது;தவறான வழியில் பெண்களை(ஆண்களும்)/ஆண்களை(பெண்களும்) அணுகக்கூடாது;அப்படி தவறான வழியில் செல்பவர்களுக்கு தண்டனை அஷ்டமச்சனி காலத்தில் கடுமையாக இருக்கும்;அதுவரையிலும் நம் ஒவ்வொருவரின் செயல்களும்,பேச்சும்,சிந்தனையும் நமது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் பதிவாகிவரும்;

எனவே,அடுத்த 13 ஆண்டுகளுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விதமான சனிப்பெயர்ச்சிகள் வர இருக்கின்றன என்பதை தெரிவித்துவிட்டோம்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானைச் சரணடைந்து நிம்மதியும்,பணக்கஷ்டமும் இல்லாத வாழ்வைப் பெறுவீர்களாக!!!

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Tuesday, April 18, 2017

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!


ஹேவிளம்பி,சித்திரை மாதம்,18.4.2017 செவ்வாய் காலை 11.48 முதல் 19.4.2017 புதன் மதியம் 12.46 வரை
செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 வரை அமைந்திருக்கின்றது;ராகு காலம் மதியம் 3 முதல் 4.30 வரை அமைந்திருக்கின்றது;

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை துதிக்கலாம்;இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
35.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

36.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;திருநெல்வேலி மாவட்டம்.
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அடுத்த தேய்பிறை அஷ்டமி:

வைகாசி மாத  தேய்பிறை அஷ்டமி 18.5.2017 வியாழக்கிழமை மதியம் 1.56 முதல் 19.5.2017 வெள்ளி மதியம் 1.53 வரை அமைந்திருக்கின்றது;

Sunday, March 19, 2017

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!

20.3.2017 திங்கள் காலை 7 மணி முதல் 21.3.2017 செவ்வாய் காலை 8 மணி வரை இருக்கின்றது;
இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;
(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
35.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அடுத்த தேய்பிறை அஷ்டமி:
ஹேவிளம்பி,சித்திரை மாதம்,18.4.2017 செவ்வாய் காலை 11.48 முதல் 19.4.2017 புதன் மதியம் 12.46 வரை

Wednesday, March 15, 2017

செல்வ வளத்தையும்,செல்வாக்கையும் அள்ளித் தரும் சிவராத்திரி கிரிவலம்!!!


உலகத்தை வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரத நாடுதான் பூஜை அறையாக இருக்கும்;அந்த பூஜை அறையில் சுவாமி படங்கள்,விக்கிரகங்கள் இருக்கும் இடமாக நமது தமிழ்நாடு இருக்கும்;பூமியில் அனைத்துவிதமான கடவுளின் திருவிளையாடல்களும் நிகழ்ந்தது நமது தமிழ்நாட்டில் தான்;

நாம் எவரும் ஆகாயத்தில் இருந்து குதித்துவிடவில்லை;ஈசனின் அம்சமாகிய ஒரு ஆண்;சக்தியின் சிறுவடிவமான ஒரு பெண்;இருவரின் இணைப்பால் தான் நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்திருக்கின்றோம்;மனிதப் பிறவி மிகுந்த போராட்டம் மற்றும் புண்ணியச் சேர்க்கையால் தான் நமக்குக்கிடைத்திருக்கின்றது;

இப்பிறவியில் தமது ஆயுளில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு தினமும் நெற்றியில் யார் விபூதி/குங்குமம்/திருநாமம் அணியவில்லையோ அவர்கள் மறுபிறவியில் மரம்/செடி/கொடியாகத்தான் பிறப்பார்கள் என்பது அகத்தியர் கூறும் தேவரகசியம்!

விண்ணுலகில் நமது முன்னோர்கள் கடுமையாக விரதம் இருந்து வரம் பெற்றால் மட்டும் தான் இங்கே நம்மால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும்;இல்லாவிட்டால் ஒருமுறை கூட அண்ணாமலை என்ற ஊருக்குக் கூட செல்ல முடியாது;சதுர்த்தசி திதி வரும் நாளைத்தான் சிவராத்திரி என்று நாம் கொண்டாடுகின்றோம்;

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மாதப்  பிறப்பு அன்று கிரிவலம் செல்வதுதான் மரபாக இருந்துவந்தது;தற்போது அண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;நம்மில் பலர் அண்ணாமலையை பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றோம்;இது அறியாமையின் வெளிப்பாடு;எல்லா நாட்களிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக அண்ணாமலை கிரிவலம் வந்தது ப்ரபஞ்ச அன்னையான பார்வதி தேவியே! அன்னைக்கு துணையாக சென்றது பார்வதி தேவியின் அருந்தவப் புதல்வனும்,நமது ஆதி முன்னோருமாகிய அகத்தியரும் கிரிவலம் வந்தார்கள்;அப்படி அவர்கள் கிரிவலம் வந்தது ஒரு சிவராத்திரி அன்றுதான்;அதனால் தான் பவுர்ணமி கிரிவலத்தை விடவும் சிவராத்திரி கிரிவலம் மிகவும் சர்வசக்தி வாய்ந்ததாக இருக்கின்றது;

தொடர்ந்து 36 சிவராத்திரி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வந்தாலே போதும்;நமது அனைத்து கர்மவினைகளும் கரைந்து நலமான,வளமான,சக்தி வாய்ந்த வாழ்க்கை இப்பிறவியிலேயே கிட்டிவிடும்;


தொடர்ந்து முடியாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வரலாம்;நமது முயற்சியை நமது கர்மவினைகள் தடுக்கத் தான் செய்யும்;அதனால்,தொடர்ந்து சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்ல இயலாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரிகிரிவலத்தை நிறைவு செய்து வளமோடு வாழ்க!


அடுத்த ஓராண்டு சிவராத்திரி நாட்கள் பட்டியலை             ( அண்ணாமலையாரின் ஆசிகளோடும்,அகத்திய மகரிஷியின் அருளாலும்) உங்களுக்கு வழங்குகின்றோம்.

26.3.2017 ஞாயிறு காலை 11.05 முதல் 27.3.2017 திங்கள் காலை 10.03 வரை

24.4.2017 திங்கள் இரவு 10.05 முதல் 25.4.2017 செவ்வாய் இரவு 8.10 வரை

24.5.2017 புதன் காலை 6.44 முதல் நள்ளிரவு 3.46 வரை

22.6.2017 வியாழன் மதியம் 2.05 முதல் 23.6.2017 வெள்ளி காலை 11.36 வரை

21.7.2017 வெள்ளி இரவு 8.54 முதல் 22.7.2017 சனி மாலை 6.36 வரை

19.8.2017 சனிக்கிழமை பின்னிரவு(மறுநாள் விடிகாலை)3.48 முதல் 20.8.2017 ஞாயிறு பின்னிரவு 2.24 வரை

18.9.2017 திங்கள் மதியம் 1.25 முதல் 19.9.2017 செவ்வாய் மதியம் 12.11 வரை

17.10.2017 செவ்வாய் இரவு 12.42 முதல் 18.10.2017 புதன் இரவு 12.26 வரை

16.11.2017 வியாழன் மதியம் 3.07 முதல் 17.11.2017 வெள்ளி மதியம் 3.57 வரை

16.12.2017 சனி காலை 8.16 முதல் 17.12.2017 ஞாயிறு காலை 10.05 வரை

15.1.2018 திங்கள்

13.2.1018 செவ்வாய் இரவு 11.24 முதல் 14.2.2018 புதன் இரவு 1.14 வரை

15.3.2018 வியாழன் மாலை 5.36 முதல் 16.3.2018 வெள்ளி மாலை 6.24 வரை

அருணாச்சலம் என்ற அண்ணாமலையில் சிவராத்திரி கிரிவலம் வரும் போது சில சித்தர்களது தரிசனம் நம் ஒவ்வொருவருக்கும் கிட்டும்;அந்த சித்தர்களது வம்சாவழியில் நாம் பிறந்திருக்கின்றோம் என்று அர்த்தம்;

அண்ணாமலை கிரிவலத்தின்போது உங்களுக்கு கிட்டும் தெய்வீக அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தாதீர்கள்;அது தவறு;

சிவராத்திரி கிரிவலத்தின் போது,அன்னதானம்,ருத்ராட்ச தானம்,ஆடை தானம்,பழதானம்,கோதானம்,சொர்ண தானம்,பழச்சாறு தானம் செய்வது நன்று;இந்த தானங்கள் அனைத்தும் செய்ய முடியாவிட்டாலும்,இதில் ஏதாவது ஒரு தானத்தைச் செய்துவருவது நன்று;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ